FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 29, 2019

வைஷாலியில் விநாயகர் :- வைஷாலி இது கிழக்குதில்லிப் பகுதியில் உத்திரப்பிரதேச எல்லையில் அமைந்த இடம்.

வைஷாலியில் விநாயகர் :- வைஷாலி இது கிழக்குதில்லிப் பகுதியில் உத்திரப்பிரதேச எல்லையில் அமைந்த இடம். பொதுவாக தில்லிநகருக்குள் மூச்சுமுட்டுமளவுக்கு தண்ணீர் காற்று என வாழ்க்கைக்கு அவசியமான அனைத்தும் சீர்கெட்டபோதுதான் மக்களுக்கு தில்லி நகரைவிட்டு வெளியில் அமைதியான ஒரு வீடு தூய்மையான நீர், நிலம் வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த இடம்தான் தில்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்த வைஷாலி நகரம். 

வைஷாலியில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழர்கள் அனைவரது வீட்டிலும் கண்திருஷ்டி பிள்ளையார் படம் வாசல் கதவின் மேற்பகுதியில் வரவேற்கும். 2000 ம் வருட வாக்கில் வைஷாலியில் எங்கும் விநாயகர் கோவில் பார்த்திருக்கமுடியாது. சிவன் கோவில் இருந்ததே தவிர பெயருக்கு ஒரு விநாயகர் சிலையைக்கூட பார்க்கமுடியாது.  ஒவ்வொருவரிடமும் பிள்ளையார் சதுர்த்தி வரும்போதுதான் பிள்ளையார் கோவில் இல்லை என்கிற நினைப்பே அனைவருக்கும் வரும். பிள்ளையார் சாதிருத்திக்கு மட்டும் சிவன்கோவிலில் ஒரு பெரிய மண் பிள்ளையார் இரண்டுநாளைக்கு தரிசனம்தந்துவிட்டு போவார். 

அப்படிப்பட்ட சூழலில்தான் வைஷாலியின் செக்டர் -2இல் திரு பட்டாபி மாமா அவர்களின் இல்லத்தில் ஒரு குட்டிப்  பிள்ளையார் விக்கிரகத்தை அவரது வீட்டு கேட்டின் தூண்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.  அதற்க்கு முக்கிய காரணமாக அவரின் வீட்டு எதிரில் இருந்த காலி வீட்டுமனையில் அவர்களது தெருவுக்கும் பக்கத்து தெருவுக்கும் இடையே அந்த காலிமனை ஒரு ஷாட் கட் பாதை வழியாகவே அமைந்துவிட்டதால் வீட்டு வாசலுக்கு எதிரில் மக்கள் சென்றுவரும் பாதை மைந்ததால் உருவான கேட்டுப்பிள்ளையார் உருவானார். அந்த பிள்ளையாருக்கு மற்றுமொரு கதையும் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த கேட்டுப்பிள்ளையார் மூர்த்தி சிறிதாக இருந்தாலும் அவரின் கீர்த்தி அதிகம் ஆகவே அந்த விநாயகர்தான் வைஷாலி நகருக்கு முதலும் மூத்த விநாயகராக அமைய,  முக்கியமான விநாயகர் விசேஷங்களுக்கு அவர்களது வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையாரை தரிசனம் செய்ய வைஷாலி நகர வாசிகளான நாங்களெல்லாம் கூட்டமாக கூடிவிடுவோம். அபிஷேகம் பூஜை முடியும்வரை அவரின் வீட்டு தெருவில் பாதியை நாங்களே ஆக்கிரமித்துக்கொள்வோம். எங்களைப்பார்த்த அந்த தெருவில் வசிக்கும் வடநாட்டுக்காரர்களும் கூட்டமாக கூடிவிடுவார்கள். 

அந்த கேட்டுப்பிள்ளையாரிடம் கேட்டு கேட்டுத்தான் சிவன் கோவில் கணபதி பிரசன்னமானார் ஆகவே அவரது பெயர் ஸ்ரீ பிரசன்ன கணபதியாகியது. வைஷாலி நகரில் சிவன் கோவிலுக்குள் பிரசன்னமான கணபதி  ஆரம்பத்திலிருந்தே எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவிலில் பிரசன்னமானபோதே கிழக்கு முகமாக பெரிய மேடையமைத்து அமர்ந்துவிட்டார் அதோடு இல்லாமல் வைஷாலி நகருக்கு விநாயகர் கோவில் இல்லாமலிருந்தால் இந்த ஸ்ரீ பிரசன்ன கணபதி வந்த மகிழ்ச்சியை கொண்டாட நமது தென்னக மக்கள் கூட்டமாக திரண்டுவர சிவன் கோவிலின் வடநாட்டு பகதர்கள் எங்கே இத்தனிக் கூட்டமும் சிவன்கோவிலை அவர்களது கோவிலாக ஆக்கிரமித்துவிடுவார்களோ என்று  மிரண்டுபோனார்கள். ஆகவே மனதிற்கு வேண்டாதவர்களாக கால் பட்டால் குத்தம் கை பட்டால் குத்தம் என தொந்தரவுகள் தொடங்கியது. அதன் பயனாக சிறு சிறு சண்டைகள் என பெரிய மேடையில் கிழக்கு முகமாக இருந்த விநாயகர் அந்தஇடத்திலிருந்து எதிர்ப்புற மேற்குமுகமாக சற்று குனிந்து கும்பிடவேண்டிய நிலையில் ஒதுக்கப்பட்ட ஓர் இடத்தில் சென்று அமரவேண்டியதாகியது. 

மேற்குமுகமாக அமைர்ந்திருந்த ஸ்ரீ பிரசன்ன விநாயகர் அருள்பாவித்துக்கொண்டிருந்தார் இருந்தும் ஆவருக்கு செய்யும் அபிஷேகம் சிவன் கோவிலை சுற்றிவரும் பக்தர்களுக்கு இடைஞ்சலாக தரை வழுக்குகிறது ஆகவே விநாயகருக்கு அபிஷேகம் கூடாது என்று முட்டுக்கட்டை வைக்க அபிஷேக நீரை ஒரு வாளியில் சேர்த்து வெளியில் காட்டவேண்டிய சூழலில் தொடர்ந்து விநாயகர் அருள்பாலி த்துக்கொண்டிருந்தார்.

அப்படிப்பட்ட சூழலில்தான் விநாயகரின் தந்தை பெயரில் இருந்த திரு சங்கரன் அவர்கள் அரசு வருமானவரித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், விநாயகரின் தம்பி பெயரில் இருந்த திரு செந்தில் (நாதன்) அவர்களும் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர், விநாயகரின் உறவினர்களது பெயர்கொண்ட திரு பட்டாபி மாமா, திரு முத்து மாமா, திரு ஹரிஹரன், திரு ரமேஷ், திரு ஐயப்பன்(இருவர்), திரு கங்காதரன், திரு கிருட்டிணன் போன்ற மேலும் பலரும் சேர்ந்து நமது ஸ்ரீ பிரசன்ன கணபதிக்கு ஒரு பெரிய கோவில் கோபுரம் உடனடியாக கட்டவேண்டும் என்று தீர்மானம் செய்தார்கள்.

கோவில் திருப்பணிக்கு நன்கொடை வாங்கிய கதையும் அதுவும் பாதி கோவில் கட்டுவதற்குள்ளாகவே மூச்சு முட்ட பாதி திருப்பணியில் நின்றுவிட ... தொடர்ந்து பெருமுயற்சி செய்து கோவில் கும்பாபிஷேகம் செய்யும் பொது யானையின் தலையில் கும்பம் வைத்து ஊர்வலமாக சென்றாலும் ... இந்திரன் யானையைக் கொண்டுவந்தாலும் வாயுபுத்திரனை மறக்கலாமா என்று பெரிய பலமான காத்துவீச யாககுண்டங்களுக்கு போடப்பட்ட மேற்க்கூரை பிய்த்துக்கொண்டு போக வருண பகவான் யாக குண்டலங்களுக்கு  மழையை பொழிய.... எத்தனையோ இடையூறுகளை சமாளித்து  கும்பாபிஷேகம் நடந்து முடிந்து... நிம்மதி பெருமூச்சு விட்டபோது... எந்த வித ஆரவாரமின்றி வைஷாலிக்கு மூன்றாவது ஸ்ரீ விஷ்ணு பிள்ளையார் பளிங்கு கல்லில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் அருள்பாலிக்கத்தொடங்கினார். 

மேலும் கோவில் ஷேத்திர வரலாறு   தொடரும் நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.                  

2 comments:

Maria Adney said...

one of the best post I have read today.

Indian Navy Recruitment
Indian Air Force Recruitment

Babi Roy said...

Thanks for sharing this nice stuff.
SarkariNaukriFinder.com is a Job portal to find Top Sarkari Jobs for Railway, Banking and Public Sectors. Sarkari Naukri 2020, Government Job 2020.

FREE JOBS EARN FROM HOME