குழந்தைகளின் சொட்டைத்தலை "வழுக்கை" ஏற்படக் காரணமாகும் "சில்வர்ஃபிஷ்" என்னும் புத்தக அரிப்பான் பூச்சி:- இறக்கை இல்லாத சிறிய பூச்சி வகை, படுக்கையறை மெத்தைகள், அவற்றின் கட்டில்/தொட்டில் அடித்தளங்கள், சமையல் அறை மற்றும் புத்தக அலமாரி போன்ற இடங்களில் காணப்படும். இந்த பூச்சியின் விஞ்ஞான பெயர் "லெப்பிஸ்மா சக்காரினா" ஆகும். மீனை போல் வழுக்கும் தன்மையும், வெள்ளி அல்லது வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் இவை காணப்படுவதால் "சில்வர்ஃபிஷ்" என்று பெயர் பெற்ற இந்த பூச்சி, சர்க்கரையில் காணப்படும் "கார்போஹைட்ரேட்டை" உணவாக அருந்தும்.
பால் மனம் கமழும் குழந்தைகளையும், சக்கரை வியாதி இருப்பவர்களையும் இரவில் வேர்க்கும்போது அவர்களைக் கடிக்கக்கூடிய பூச்சி. இது மனிதனைக் கடிக்கும் இடத்தில் தனது உடலின் மீது சுரக்கும் வெள்ளியைப் போன்ற பொருளை தேய்க்கும் அதனால் கடிபட்டவருக்கு நீண்டநேரம் கடித்த இடத்தில் வீக்கமும், விஷத்தன்மையால் வின் வின் என்று ஒரு நமச்சல் வலி அவரது உடலின் எதிர்ப்பு சக்தியைப்பொறுத்து நீண்ட நேரம் தொடரும். இப்பூச்சிகள் குழந்தைகளின் தலையில் தனது சுரப்பிகளை தேய்த்தால் அவற்றின் விஷத்தன்மையால் தலை முடி வேர்கள்வரை பாதிக்கப்பட்டு சொட்டைத்தலை ஏற்பட காணமாகிறது. மேலும் இந்த பூச்சியின் உடல்சுரப்பியால் பருத்தி, பட்டு, "ஸின்தெட்டிக்" துணிகளையும், புத்தகங்களையும் இவை அரித்துவிடும் தன்மை கொண்டவை. இவ்வாறு வீட்டின் பொருள்களையும், உணவுகளையும் கபளீகரம் செய்வதால் "சில்வர்ஃபிஷ்" இல்லங்களில் கேடு விளைவிக்கும் பூச்சி வகையாக கருதப்படுகின்றன.
"சில்வர்ஃபிஷ்ஷை" ஒழிக்க சில வழிகள்:-
1) இவைகள் ஈரப்பதத்தில் வாழ்வதால், வீட்டை சுத்தமாக, ஈரமின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.
2) பசைத்தன்மையுள்ள உணவு வகைகளை, நன்கு மூடி வைத்திருங்கள்.
3) "சில்வர்ஃபிஷ்" புத்தகங்களை தாக்கும் அபாயம் இருந்தால், புத்தக அலமாரியில், சிறிது "டையாட்டம் மண்" தடவி வைய்யுங்கள். இவ்வாறு செய்தால், அங்கு ஈரப்பதம் இராது.
4) சிறிய மரப்பொறி செய்து, அதன் மீது "ப்லாஸ்டிக் டேப்பை" கொண்டு மூடி பாதிக்கபட்ட இடத்தில் நிறுவி விடுங்கள். எலிபாஷாணஙள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு பதிலாக வைக்கப்படும் இவ்வகை மரப்பொறிகள் கரப்பான், "சில்வர்ஃபிஷ்" மற்றும் இதர பூச்சிகளிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும்.
5) இரவில் மரப்பொறியை சுற்றி சிறிது "டால்கம்" பவுடரை தூவி, காலையில் பூச்சிகளின் சுவடுகளை காணலாம். இவ்வாறு செய்வதால், பூச்சிகள் வீட்டில் நுழையும் வழித்தடம் அறிந்து, அவைகளை அடைத்து விட ஏதுவாக இருக்கும்.
6) வீட்டை அவ்வபோது நன்கு கழுவி துடைத்து, உங்கள் குளியல் அறையையும் உலர்வாக வைத்திருங்கள். முடிந்தால், பூச்சிமருந்து தூவி வைக்கவும்.
7) துணி அலமாரிகள் மற்றும் "சிங்க்கில்" பாச்சாய் உருண்டை வைத்துவிட்டால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
8) விரிசல்கள், ஓட்டைகள் போன்ற பூச்சிகள் வரும் வாய்ப்புள்ள இடங்களை நன்கு அடைத்து வைக்கவும்.
இது போன்ற வழிகளை பின்பற்றினால் பூச்சிகள் தொல்லையிலுருந்து நிரந்தரமாக விடுபடலாம்.....
No comments:
Post a Comment