FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, May 11, 2017

மாணவர்கள்-"தற்கொலை", கட்டாயக் கல்விச் செலவு செய்யவேண்டிய சுமை.

'தற்கால மாணவர்களின் கல்வியின் தரத்தினை உயர்த்துகிறார்களோ இல்லையோ, வருடா வருடம் கல்வி நிறுவனங்கள் கல்விக்காக வாங்கும் கட்டணங்களை உயர்த்தி விடுகிறார்கள்'..... 


6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை) குழந்தைகளின் ஆரம்பக் கல்வி ஒன்றாம் வகுப்பு  முதல்  8ம் வகுப்பு பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்??. என்கிறது  இந்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009. அந்த விதிப்படி, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களைத் தண்டிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று, ஆகவே அரசின் இலவச ஆரம்ப கல்வியை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொண்டாலும், 10ம் வகுப்பு வரையிலான உயர்கல்வி மற்றும் 12ம் வகுப்புகளான மேல்நிலைக்கல்வி மற்றும்,  பட்டய அல்லது பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு என ஓரளவு ஒரு பட்டப்படிப்புவரை படிப்பை படித்துமுடித்தால் மட்டுமே மாணவர்கள் தனது வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களது வாழ்க்கையை வாழமுடியும் என்கிற நிலையில், இந்த படிப்பிற்காக பெற்றோர்கள் செய்யும் கட்டாய கல்விச் செலவு என்பது தற்காலத்தில்  மூச்சு முட்டி, விழி பிதுங்கும் நிலைக்கு மாணவர்களும் பெற்றவர்களும் தள்ளப்படுகிறார்கள் என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.   

"இரட்டைச் சம்பளம் வந்தாலும் போதாது என" ....ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாய் புற்றீசல் போல.....  "அதை" வாங்கிவரவேண்டும், "இதை" வாங்கி வரவேண்டும்,.... என பல் புதிய செலவுகளையும் அள்ளித்தெறிக்கிறார்கள். கல்விக்கட்டணம் என்கிற பெயரில் கல்விக்கான கட்டாய செலவுகளை கட்டாயம் செய்தாகவேண்டும், இல்லையென்றால் பெற்றவர்களுக்கு மனதளவில் "உதை"விழும் என கட்டாயக் கல்விச் செலவு செய்யவேண்டிய கல்விச் சுமை உள்ளது. 

மாணவர்களுக்கோ அவர்களின் பாடங்களை படிப்பதற்க்கே நேரமில்லை, இந்நிலையில் அவர்களது கல்விக்கட்டண சுமைக்காக, வங்கிக்கடன் பெறுவதற்கு அங்கும் இங்கும் அலைவதற்கு நேரம் எங்கே இருக்கிறது? பெற்றவர்களுக்கு இப்படிப்பட்ட அதீத கல்விச் செலவு செய்ய கட்டாயப்படுத்த மனமில்லாமல், அவர்களையும் கல்விக் கடன் கேட்டு அலையவிடுவதற்கு மனமில்லாமல், மாணவர்கள் தாங்களாகவே "தற்கொலை" என்கிற தவறான முடிவுக்குப் போகிவிடுவார்களோ?... என்கிற புதிய அச்சம் ஒன்று தற்ப்போதைய நாளேடு செய்திகளால் பெற்றவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது ...... 



கடந்த மாதம் 9ம் தேதி அன்று புதுச்சேரி அருகே, தற்கொலை செய்து கொண்ட மாணவன், மணிகண்டன் மற்றும், தற்கொலை செய்துகொண்ட ராஜஸ்தான் மாணவி பூஜாவின் தந்தை காய்கறி விற்பனை செய்பவர். அவரால் தன மகளின் கல்விச்செலவை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பூஜா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கட்டாய இலவசக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமையாக்கப்பட்டிருப்பினும் இன்று இந்தியாவில் கிட்டத்த்தட்ட 70% மாணவர்கள் கட்டணம் செலுத்தித் தனியார் பள்ளிகளில்தான் பயின்றுவருகின்றனர் எனும் செய்தி சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் படம்பிடித்துக்காட்டுகிறது. தற்போதைய சட்டத்தின் குறைபாடுகள் நீக்கப்படும்வரை தனியார் சுயநிதிப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏழைகளுக்கு இலவச இடங்கள் ஒதுக்கீடு என்பது வெறும் கானல்நீரே!

அன்புடன் ரேடியோ-கோகி. புது தில்லி 

No comments:

FREE JOBS EARN FROM HOME