FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, May 4, 2017

திடீரென்று "ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது'?????

திடீரென்று வேற்றுக்கிரக உயிரினமான ராட்சஸ ஏலியன்கள் நமது உலகில் புகுந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்???

"ஏலியன்கள் பூமியை தாக்கினால் என்ன செய்வது' புரிந்துணர்வு கொண்ட மனிதர்களுக்காக ஒரு பார்வை:- இது எறும்புகளின் உலகம்...இந்த எறும்பு உலகத்தின், ஏலியன்கல்தான் மனிதர்கள் என்கிற கோணத்தில், உலக மக்கள்தொகை ஒன்று என்றால் அதற்க்கு சமமாக ஆயிரம் எறும்புகள் உள்ளது என கணக்கிட்டால் அதிக எண்ணிக்கை கொண்ட எறும்புகளின் உலகமாகவும் அதில் வாழும் சிறுபான்மையின மனிதன் என்று பார்க்கும்போது, பெரும்பான்மையான உயிரின எண்ணிக்கைகளைக் கொண்ட எறும்புகளுக்கு, அவைகளின் உலகத்தில் வாழும் மனிதன் என்கிற ஏலியனால் தொந்தரவு ஏற்ப்பட்டும், எறும்புகள் சிறுபான்மையின மனித ஏலியன்களை ஒழிக்க முர்ப்படவில்லை என்பதும், அதற்காக சிறிதளவும் முயற்சி கூட செய்யவில்லை என்பதும் நன்கு தெரிகிறது....

இந்த பூ உலகத்தை போலவே இன்னும் பல வெவ்வேறுவகையான உலகம் உள்ளது என்பது அறிவியல் கூற்று. ஒரு மனிதன் மற்றும் ஒரு எறும்பு இருவரும் 1000 அடி உயரத்திலிருந்து கிழே விழுவதாகக்கொண்டால் மனிதன் தரையை அடைந்ததும் சிதறி உயிர் இழக்கிறான், எறும்பு தரையை அடைந்ததும் அதன் இனத்தையும் உணவையும் தேடி ஓடுகிறது..... 

இதைப்போலவே மனிதன் எறும்பைப்போல மிக இலகுவான (எடை)கணத்துடன், பெரிய இராட்சத ஏலியன்கள் நிறைந்த மற்றொரு, வாழத்தகுந்த உலகம் ஒன்று, நிச்சயம் எங்காவது இருக்கும்.  அங்கு நீங்கள் பிறப்பதற்கு எறும்புகளின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள்.

நாம் சாலையில் நடந்துசெல்லும்போது நமது பார்வையை சற்று கீழே நடைபாதை வழியை கவனித்து நடந்துசெல்லுமாறு,  எறும்பு போன்ற சிறு உயிரினங்களுக்கும் தீங்கிழைக்காமல் வாழ பழகுவோம். 


இறைவன் படைத்த உலகை எல்லாம்...மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்....இறைவன் வாழுகின்றான்
திரைப்படம்: வா ராஜா வா, இயற்றியவர்: நெல்லை அருள்மணி, இசை: குன்னக்குடி வைத்தியநாதன், பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்... http://youtu.be/M2vE0KQ4MMU

No comments:

FREE JOBS EARN FROM HOME