FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, February 3, 2017

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...
நிறுவனர்:- நீங்க எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்த்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? 

விண்ணப்பதாரர்:- "தெரியும்... அலுவலக மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்து, தற்போது அதற்கான நேர்காணல் தேர்விற்கு வந்திருக்கிறேன்" ...

நிறுவனர்:- உங்களது தலைமையின் கீழ் உள்ள ஒருவர், நீங்கள் கூறும் எந்த வேலையும் செய்யமாட்டேன்,  என்று 'அடம்' பிடிக்கிறார் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 

விண்ணப்பதாரர்:- அவரை நேரில் அழைத்து, அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, அதை நிவர்த்திசெய்து, அவரை சிறப்பாக செயல்படுமாறு வழிநடத்துவேன். 

நிறுவனர்:- அதன்பிறகும் அவர் உங்களது பேச்சை கேட்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- அவரை கண்டித்து வேலையை செய்ய நிர்பந்திப்பேன்.

நிறுவனர்:- அதன்பிறகும், அவர் உங்களது கட்டளையை மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

விண்ணப்பதாரர்:- எனது கட்டளையை மதிக்காத அவரை வேலையிலிருந்து நீக்குவதற்காக உங்களிடம் முறையிடுவேன்...

நிறுவனர்:- என்னிடம் முறையிடுவதற்கு உங்களை நான் எதற்க்காக மேலாளராக தேர்வுசெய்யவேண்டும் ... ஆகவே நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிசெய்யுங்கள்... நீங்கள் போகலாம்....
xxxxxxxxxxxxxx-------xxxxxxxxxxxxxxxxxx-----xxxxxxxxxxxxxxxxx

ஆகவே அதிகாரியின் கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?... என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்றால் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கட்டளைக்கு அடிபணிந்து உங்களுடன் பணியாற்றும் உங்களது குழுவிலிருப்பவர்கள் அனைவரும்  உங்களோடு சேர்ந்த ஒரு அங்கத்தினர் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். 

அப்படி உங்களது குழுவின் அங்கத்தினராக இருக்கும் எவரையும், உங்களது ஆணையை மதிக்கவில்லை என்று வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றால், அது உங்களுக்குத்தான் பெரிய இழப்பு. ஆகவே, முதலில் நீங்கள்தான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்படவேண்டியவர்,  காரணம் நீங்கள் நிர்வாக அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவராகிறீர்கள்.  

உதாரணமாக ... உங்களது அங்கத்தின் கைவிரல்,  உங்களது பேச்சைக் கேட்க்காமல் எரியும் விளக்கில் கைவிரலை வைத்தால் அது விரலுக்கு ஏற்படும் கேடு அல்ல,  விரல் பேச்சைக்கேட்காமல் போனதற்குத் உங்களது தலை தான் காரணம், அதாவது தலைமை வகிக்கும் மூளைதான் காரணம். அந்த மூளைக்கு அனுபவமோ அறிவோ இல்லை என்பதாகப் பொருள். 

ஆகவே உங்களது ஆணைக்கு அடிபணியாதவரை வேலையிலிருந்து நீக்குவது என்பது,  உங்களது விரலை / கையை நீங்களே வெட்டிக்கொள்வதற்குச் சமம். 

அப்படியென்றால் ஆணைக்கு அடிபணியாதவரை எப்படித்தான் திருத்தி வழிக்கு கொண்டுவருவது என்றால் அதற்குப் பலவழிகள் உள்ளது....

வருகை தாருங்கள்.. எளிமையான, அருமையான, அனுபவப்பூர்வமான வழியில், திறமையாக செயல்படுவது எப்படி என்பதை எனது வலைப்பூவிற்குள் வலம்வந்து, எனது பதிவுகளை படித்துப் பயன்பெறுங்கள்.  
உங்களது அன்பான வருகைக்கு "http://gopalkrishnaniyer.blogspot.in" என்கின்ற இணையப்பக்கத்தின் முகவரியை சொடுக்கினால், எனது வலைதளத்தின் வரவேற்பறைக்கதவு திறக்கும்.   
....அப்போது நான் ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டா-திருப்பதி விமான தளம் அமைக்கும் திட்டப்பணியில் இருந்த நேரம்... என்னுடைய திட்டப் பணிக்குழுவில் ஒரு இளம் பொறியியல் பட்டதாரி மிகவும் மிடுக்கான தோற்றத்துடன்,  கலெக்டெர் ஒருவரது சிறப்பு சிபாரிசின் பெயரில் புதிதாக வேளையில் சேர்ந்தார்.

வேளையில் சேர்ந்த அன்றே அவர் தனக்கு இப்படிப்பட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பிடிக்கும் என்று பட்டியலிட்டு தந்தபோதுதான்... புரிந்தது  "இவரைப் பற்றி நன்கு தெரிந்துதான் எனது தலைமையின் திட்டப்பனிக் குழுவில் சேர்த்திருக்கிறார்கள் என்று" 

முதல் இரண்டு நாட்கள் .. திட்டப்பணிமனையை சுற்றிப்பார்த்து உங்களுக்கு என்ன புரிந்தது, அல்லது புரியவில்லை என்பதைக் கூறுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன். சுற்றுவட்டார மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசினார், அதிலும் அவருக்கான பிடிவாதம் தெரிந்தது..... (நான் பல இடங்களுக்கு  சென்று பணியாற்றியதால் எனக்கு 7 மொழிகள் பேசுவது என்பது கட்டாயமாக எனது மண்டையில் புகுத்தப்பட்டிருந்தது..... இருந்தும் சங்கீத ராகங்களில் எனக்கிருந்த ஈடுபாட்டால் தியாகராய கீர்த்தனைகளை அர்த்தம் புரிந்து ரசித்திட மூன்றேமாதங்களில்  நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்ட தெலுங்குமொழி, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பெயர்ப்பலகையை படிக்கவும் மேலும் பல இடங்களில் தெலுங்கு மொழி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.)      

மூன்றாம்நாள் என்னிடம் வந்த அவர்,  எந்த அளவுகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளாமல்,  வெறும் வாய் வார்த்தையால் அளந்துக்கொண்டிருந்தார்.  ஒரு சிறு வேலையைத் தந்து அதை செய்யுமாறு  கூறி அனுப்பிவைத்தேன் ... அது தனக்கு பிடிக்கவில்லை "அதை செய்யமுடியாது" என்று கூறி போன வேகத்தில் திரும்பிவந்துவிட்டார்.  திட்டக் குழுவினர்களோடு இணையாமல் தனித்தே இருந்ததால் எந்த வேலையையும் அவரால் செய்யமுடியவில்லை.... அதோடு எதற்க்காக செய்யவேண்டும் என்கிற இறுமாப்போடு இருந்தார். 

திட்டப்பணியிடத்தில் பொருட்களைவைக்கும் ஒரு "குடோன்" பட்டறை ஒன்று இருந்தது அதில் எனது கட்டளைக்கு அடிபணியாத அந்த இளம் பொறியாளருக்கு ஒரு மேஜை நாற்காலி போட்டு அங்கு அவருக்கு எந்த வேளையும் தராமல் வெட்டியாக  உட்காரவைத்துவிட்டேன். 

ஒரு 10 நாட்களாக கூட அவரால் வெட்டியாக உட்கார்ந்து பொழுதை போக்கமுடியவில்லை. அதற்க்கு அடுத்தநாள் என்னிடம் வந்த அவர்... மன்னிப்பு கேட்டதோடு, எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்தயார்...!!! என்று வழிக்கு வந்தார்... அன்று அந்த பொறியியல் பட்டதாரி செய்யத் தொடங்கிய முதல் வேலை "எடுபுடி-சிமெண்ட் கலவையை தூக்கும் சித்தாளு வேலை"...

அதை அவர் கஷ்டப்பட்டு செய்யவில்லை, இஷ்டப்பட்டுதான் செய்தார்.. என்பது பிறகு ஒரு நேரத்தில் அதேநபர் புதுதில்லி T3 விமானநிலைய திட்டப்பணியில்.... நான் விப்ரோவின் சார்பில் பணியிலிருந்தபோது, அவர்  ஜி எம் ஆர்(GMR) நிறுவனத்தில் அதிகாரியாக என்னை சந்தித்தபோது... மெழுகாக மனம் உருகிவிட்டார்..... இன்றளவும் எனது தொடர்பிலிருக்கிறார்...   

ஆக...திருவள்ளுவரின் கூற்றான  "அவர் நான நன்னயம் செய்துவிடில்.."  நன்றாக வேலைசெய்தது. 

என் கட்டளைக்கு அடிபணியாதவர்களிடம் " ஒழுங்காக நான் சொல்வதைக்கேட்டு வேலை செய், இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடு" என்று கோபமாக சண்டை போட்டிருக்க முடியும். சிலர் நம்மை கோபமூட்டி கொதிப்படையச்செய்ய முயற்சிப்பார்கள், அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை சரியாக எதிர்கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள். அவர்களது கோபமான சண்டையால் பெயரையும் மதிப்பையும் இழக்கநேரிடுகிறது.  உதாரணமாக கோபமான ஒரு நாய் நமது எதிரே வந்து குறைக்கிறது என்றால், நாமும் அதற்க்கு எதிராக நாயைப்போல் குறைக்கும்போது, நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருவரும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.   ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் என்பது, சிறந்த அனுபவமாக கருதப்படுகிறது.  

இது ஒரு சிறு உதாரணம்தான், இதைப்போல் பல் நேரங்களில் பல அனுபவங்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்திருக்கிறது... பலநேரங்களில் முரடர்கள் கூட பொட்டிப்பாம்பாக என் கட்டளைக்கு  அடங்கி அடிபணிந்து வேலைசெய்திருக்கிறார்கள். ... அவை அனைத்துமே "ஆடற மாட்டை ஆடி கறக்கணும், பாடற மாட்டை பாடிதான் கறக்கணும்" என்கிற நமது முன்னோர்களின் கூற்றைத்தான் நாம் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்வதில், நமது திறமையை நாம் உணரமுடியும். 

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 
எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதி வழங்கியதை புத்தகமாக "கோகிலாவின் 108 நேர்காணல் அனுபவங்கள்" 

அன்பு நேயர்களே நண்பர்களே, இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? வாருங்கள் நிகழ்ச்சிக்கு செல்வோம்... 

பாடல்:- போடச்சொன்னா ...... போட்டுக்கறேன் ...... போதும்வரை ......... கன்னத்திலே..பாடலின் திரைப்படம்:- பூவா தலையா (1969) பாடலை இயற்றியவர் கண்ணதாசன், பாடலை பாடியவர் TMS, இசை MSV.

வாய்ப்பிற்கு நன்றி 
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு  கோகி-ரேடியோ மார்கோனி. 


No comments:

FREE JOBS EARN FROM HOME