திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- பகுதி-01 / 108 (Episodu-01 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம். வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன். நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- நாதஸ்வரம், பகுதி-01 / 108 (Episodu-01 of 108):-
பண்டைத் தமிழர்கள், இசைக்கருவிகளை, 1)தோல் கருவி, 2)நரம்புக்கருவி, 3)துளைக்கருவி, 4)கஞ்சக்கருவி என்று நான்கு வகைகளில் பிரித்து பயன்படுத்தியிருக்கிறார்கள். காலப் போக்கில் சில இசைக்கருவிகளும், இசைக்கலைஞ்சர்களும், இசைக் கலைகளும் வழக்கொழிந்து போவதற்கான சாத்தியங்களைத் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதேநேரத்தில், அப்படிப்பட்ட பண்டையகால இசைக்கருவிகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தற்கால சூழலுக்கேற்ப தங்களது அற்புதக் கலைகளை உலகம் ரசிப்பதற்கு ஏதுவாக, தொழில்நுட்பப் புரட்சியில் பங்கேற்க, சினிமா, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை உரிய முறையில் பயன்படுத்தி பண்டைய இசைக்கருவிகளின் மேன்மையை உணர்ந்து, அக்கலைகளை ரசித்துணரும் தன்மையை, இனிவரும் தலைமுறையினர் பயனடையும் பட்சத்தில், பண்டைய இசைக்கருவிகளுக்கும், இசைக்கலைகளுக்கும் என்றும் அழிவில்லை!
பண்டைத் தமிழர்கள், இசைக்கருவிகளை, 1)தோல் கருவி, 2)நரம்புக்கருவி, 3)துளைக்கருவி, 4)கஞ்சக்கருவி என்று நான்கு வகைகளில் பிரித்து பயன்படுத்தியிருக்கிறார்கள். காலப் போக்கில் சில இசைக்கருவிகளும், இசைக்கலைஞ்சர்களும், இசைக் கலைகளும் வழக்கொழிந்து போவதற்கான சாத்தியங்களைத் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதேநேரத்தில், அப்படிப்பட்ட பண்டையகால இசைக்கருவிகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தற்கால சூழலுக்கேற்ப தங்களது அற்புதக் கலைகளை உலகம் ரசிப்பதற்கு ஏதுவாக, தொழில்நுட்பப் புரட்சியில் பங்கேற்க, சினிமா, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை உரிய முறையில் பயன்படுத்தி பண்டைய இசைக்கருவிகளின் மேன்மையை உணர்ந்து, அக்கலைகளை ரசித்துணரும் தன்மையை, இனிவரும் தலைமுறையினர் பயனடையும் பட்சத்தில், பண்டைய இசைக்கருவிகளுக்கும், இசைக்கலைகளுக்கும் என்றும் அழிவில்லை!
பல்வேறுவிதமான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, பல இசைப்பிரியர்களின் மனங்களை விட்டு அகலாமல், அவர்களின் மனங்களில் ஆழமாக பதிந்துவிட்ட பாடல்களுக்கு சிறப்பு சேர்த்த இசைக்கருவிகள் பற்றிய நிகழ்ச்சி தொகுப்புப்பாக உருவானதுதான் இந்த திரைப்படப் பாடல்களில் இசைக்கருவிகளின் பங்கு என்கிற தொடர். இந்த இசைக்கருவிகளின் இசைத்தொகுப்புத் தொடரில், முதலில் நாதஸ்வரம், தவில் என்று தொடங்கி, மேள-தாளம், கடம், கஞ்சிரா, மிருதங்கம், தபேலா அல்லது தப்லா- தமிழில் இருமுக முழவு, தாரை தப்பட்டை, பறை, முரசு கொட்டல், வாடிப்பட்டி மேளம், உறுமி மேளம், ஜால்ரா, மோர்சிங் (யூத யாழ்), உடுக்கை, கிளுகிளுப்பை, டோலக்கு, சலங்கை, சல் சல் -டோலா, மணி, மவுத்தார்கன், ஜலதரங்கம், தம்புரா, பியானோ, வயலின்-யாழ், புல்லாங்குழல், ஆர்மோனியம், புல் புல் தாரா- புல்புல் தாராங்,வயலின், வீணை, கிடார், சித்தார், ஷனாய்இசை, சாக்ஸ்போன் இசை, ட்ரம் செட், மாண்டலின், மகுடி, உடுக்கை, மேற்கத்திய சந்தூர் யாழிசை, மேற்கத்திய குழலிசை போன்ற மேலும் பல இசைக்கருவிகளின் இசையை தனித்தனியாக பிரித்து ரசித்து உணரக்கூடிய வகையில் அவைகளின் சிறப்புக்களைக் கொண்ட இசைப் பாடல்களை வரிசைப்படுத்தும் தொடர் இது.
திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- நாதஸ்வரம், பகுதி-01 / 108 (Episodu-01 of 108)
நாதஸ்வரம் :- நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது உண்டு. இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால் அனைத்துவிதமான மங்கள சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த இசை இசைக்கப்படுவது வழக்கம். இந்த இசைக்கருவியின் இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது. பண்டைய கால வரலாற்றில் 17ம் நூற்றாண்டில்தான் இசைக்கருவிகளின் "நாதஸ்வரம்" பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைத்துள்ளது. இவ்வகை இசைக்கருவி "ஆச்சா" என்கிற மரக்கட்டையில் செய்யப்படுகிறது. இந்த இசைக்கருவியின் குறுகிய மேற்பகுதியில் "கொறுக்கைத் தட்டை" என்கிற "நாணல் புல்" ஒன்றை சுருட்டி, ஊதும் வகையில் பொருத்தப்படுகிறது இதைத் தான் "ஜீவ வளி-அழுத்த காற்று ஊதுதல்" என்பது மருவி "சீவாளி" என்ற பீப் பீ- ஊதல் பொருத்தப்பட்டு "நாதஸ்வர" இசைக்கருவியாக முழுமைப்பெறுகிறது.
சாஸ்திரிய சங்கீத சாம்ராஜ்யத்தில் பிரபல நாதசுவரக் இசைக் கலைஞர்கள் வரிசையில்:- திரு. டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திரு நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், திரு.நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, திருவாரூர் சாமிநாதப் பிள்ளை, திரு வி. கே. கானமூர்த்தி போன்ற மேலும் பலர் பிரபலமான சாஸ்திரிய சங்கீத வாத்திய வித்துவான்களாகத் திகழ்ந்தனர்.
திரையிசையில் நாதஸ்வர இசைக்கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
நாதஸ்வரம்:-
பழைய திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-
1). பாடல்:- சிங்கார வேலனே தேவா....." படம்: கொஞ்சும் சலங்கை, நடிகர்: திரூ.ஜெமினி கனேசன், சாவித்திரி, பாடியவர்: இசைக்குயில் எஸ்.ஜானகி, இசை: திரு. எஸ்.வி.சுப்பையா நாயுடு, நாதஸ்வரம்: திரு,காரைக்குறிச்சி அருனாசலம். https://youtu.be/AX0o-_EXA1I
2). பாடல்:- நலந்தானா…. நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா ...." படம் - தில்லானா மோனாம்பாள், பாடியவர் - பி.சுசீலா இசை - கே.வி.மகாதேவன், நடிகர்: திரூ.சிவாஜி கணேசன் மற்றும் பதமினி அவர்களுடன்... https://youtu.be/YoJBZYCZThg
3). பாடல்:- மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழவைப்பான் என்று…. ." திரைப்பட: பாசமலர், பாடியவர்- தி எம் சௌந்தரராஜன், இயற்றியவர்-கவிஞ்ர் கண்ணதாசன், இசை எம் எஸ் விஸ்வநாதன், நடித்திருப்பவர், திரு.சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் ஜெமினிகணேசன் அவர்கள் https://youtu.be/9P8Hynotz1M
இடைக்கால திரைப்படப் பாடல்களின் வரிசையில்:-
4). பாடல்:- அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…. ." திரைப்பட: கோவில் புரா (1981) || மொழி: தமிழ் || இசை: இளையராஜா || பாடியவர்கள்: பிசுசீலா, உமா ரமணன், வலம்புரி சாமிநாதன். நடித்திருப்பவர், திரு.ராஜபகதூர், சரிதா, ஜெய்ஷ்ங்கர், ஹரிணிக்குமார், விஷ்ணுச்சக்ரவர்தி போன்றவர்கள்... https://youtu.be/zX97xtTwtGY
5. பாடல்:- தலையைக் குனியும் தாமரையே, படம் :- ஒரு ஓடை நதியாகிறது ( Oru Oodia Nathiyaagirathu ),பாடியவர்:- திரு.S.P.பாலசுப்ரமணியம், ராஜேஷ்வரி அல்லது B.S.சசி ரேகா, இசை:- இசைஞானி இளையராஜா, இயக்குநர் : ஸ்ரீதர், நடிகர்கள் : ரகுவரன், சுமலதா https://youtu.be/a85uJh-1Ie4
தற்கால புதிய பாடல்களின் வரிசையில்:-
6. பாடல் ரகசியமாய் ரகசியமாய், படம் : டும் டும் டும் இசை : கார்த்திக் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார், பாடியவர்கள் : சதனா ஷர்கம் மற்றும் ஹரிஹரன் அவர்கள், நடிப்பு:- மாதவன், ஜோதிகா https://youtu.be/crw0T0gKL-k
7). பாடல் "காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்", திரைப்படம் : கோச்சடையான், இசை : ஏ.ஆர்.ரஹ்மான், வரிகள்: வைரமுத்து, குரல்: லதா ரஜினிகாந்த். ஆஹா என்ன ஒரு மென்மையான பாடல்… காதல் கணவனை நோக்கி பாடும் குரலில் : லதா ரஜினிகாந்த். உருகி உருகி மனைவி பாடும் / கொடுக்கும் சத்தியங்கள். நடு நடுவில் வரும் நாதஸ்வரம் நல்ல தேர்வு. இதுவரைக் கேட்டதில், இந்த ஆல்பத்தின் பெஸ்ட் பாடல் இது தான். ...https://youtu.be/R5Wa9J3Whis
இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "உறுமி மேளம்"
"உறுமி மேளம்" என்ற வாத்தியக் கருவி பற்றிய சிறப்பு பகுதியையும், திரையிசையில் உறுமி மேளத்தின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம். அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறும் உங்கள் நண்பன் கோகி-ரேடியோ மார்கோனி.
"உறுமி மேளம்" என்ற வாத்தியக் கருவி பற்றிய சிறப்பு பகுதியையும், திரையிசையில் உறுமி மேளத்தின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம். அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறும் உங்கள் நண்பன் கோகி-ரேடியோ மார்கோனி.
....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்....
No comments:
Post a Comment