ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும். ...
வானொலியில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பை, புத்தகமாக........ பகுதி-100(Episode-100)- இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா?
....."மேலாளர்" பதவிக்காக நேர்காணல் தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "TOILET-கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.
இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.
# பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.
# நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.
# மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.
# அப்படியென்றால் இந்த கேள்விக்கான பதில் என்ன???? ஒரு .நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை (fingers edge information) வைத்திருக்க வேண்டமா?
ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துவித சேவைகளையும் பெறுவதற்கு தேவைப்படும் சேவை நிறுவன தொலைபேசி எண்கள், நபர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களே... விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பவர் என்பவர்"
இப்போது நீங்கள் உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை தந்து அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும்.
பாடல்:-...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்.. http://youtu.be/HlYJd-bLiPk "
அடுத்த நேர்காணல் விளையாட்டை நாளை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...
மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள். இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன்.
எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?...
வாய்ப்பிற்கு நன்றி ....
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்...
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
வணக்கம்... நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Contact:- GK India-New Delhi-+91-9717236514, E_mail:-GOPALKRISHNAN64@GMAIL.COM
Contact:- GK India-New Delhi-+91-9717236514, E_mail:-GOPALKRISHNAN64@GMAIL.COM
No comments:
Post a Comment