FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, January 26, 2017

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது... ....

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...  

ஒரு நாள் குருகுலத்தில் "ஜென்" குருக்களில் முதன்மையானவர் என்று கூறப்படுகிறது "கன்பூசியஸ்" என்ற குருவானவர், தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து சில அறிவுரைகளைக் கேட்டான்.

‘"ஒருவரது ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், எது எது தேவை?’.

‘ஆட்சி சிறப்பாக அமைய மூன்று விஷயங்கள் முக்கியம். 
முதல் தேவை.. போதிய உணவு இருப்பு. 
இரண்டாவது மக்களின் பாதுகாப்புக்கு பலமான ராணுவம். மூன்றாவது, மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருக்க வேண்டும். 

இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றிருப்பதே சிறப்பான அரசு  நிர்வாகம்’ என்றார் குரு.

மாணாக்களிடமிருந்து மீண்டும் கேள்வி.. ‘இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால், முதலில் விட வேண்டியது எது?’

குரு :- ‘ராணுவம்’

மாணவர் :- ‘இரண்டாவதாக ஒன்றை விட வேண்டும் என்றால்..?’

குரு :- ‘உணவு இருப்பு’

மாணவர்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.!!! சாப்பிடாமல் எப்படி????.... அவர்களின் ஆச்சரியத்தைக் கண்ட குரு,  அதற்கான விளக்கத்தை அளிக்க முன்வந்தார்.

‘மாணவர்களே! உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிய நேரிடும். மனித சமுதாயத்திற்கு இதுபோன்ற நிலை பலமுறை வந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் மனித சமுதாயம் அதில் இருந்து மீண்டிருக்கிறது. ஆனால் ஒரு அரசின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், அந்த நாட்டின் நிலை அதோகதியாகிவிடும்’ என்றார் கன்பூசியஸ்- குரு.

மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். 

குருவின் அறிவுரை மாணவர்களின் மண்டைக்குள் புகுந்துவிட்டது..., 
ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...   ஓட்டுப்போட்ட  உங்களுக்குத் புரிந்ததா? 

"வால் மட்டும்... இன்னும் உள்ளே நுழையவில்லை"

..... கோகி-ரேடியோ-மார்கோனி..... 

No comments:

FREE JOBS EARN FROM HOME