கையில் வெறும் ரூபாய் 3000/- மட்டுமே மிச்சமிருந்தது. வேலை செய்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள், உத்தியோகமும் இல்லை, சம்பளமும் இல்லை (It's gone)போயேபோச்சு...... மாதாமாதம் செலவு செய்யவேண்டிய 5-ம் தேதி வருவதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது, வழக்கமாக ஒவ்வொரு மாத வீட்டுச் செலவு, வாடகை செலவு உட்பட குறைந்தபட்சம் ருபாய் 25,000/- தேவை. .... எப்படி? எங்கிருந்து பணம் புரட்டுவது?.... என்கிற மனக்குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன்........ மனக்குழப்பம் என்றாலே எனக்கு இந்தப் பாடல் ஞபகம் வரும். " மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா... வாழ்க்கையில் நடுக்கமா?"
நான் வீட்டின் உள்ளே வருவதைப் பார்த்த என் மனைவி எனக்கு மேலும் எரிச்சலூட்டும் வகையில் குழந்தைகளிடம்...... "அப்பா ஆபிசிலிருந்து வந்தாச்சு... அப்பாகிட்ட ... 'வீடு வாங்கப் போகலாம் வாங்க' என்று கூறுங்கள்..... அப்போதுதான் குழந்தைகள் நச்சரிப்பு தாங்காமல், வங்கிக் கடனாவது வாங்கி, சொந்தமாக ஒரு வீடு வாங்குவார்... இந்த வாடகை வீட்டுத் தொல்லை தாங்கமுடியவில்லை" என குழந்தைகளை தூதுவிட்டுக்கொண்டிருந்தார்.... . எங்கோ வானொலியில் இந்தப் பாடல் வழிந்தோடியது,.... பாடல் :- "தள்ளுமடல் வண்டி இது தள்ளிவிடுங்க, எண்ணெய் விலை ஏறிபோச்சு மாட்டைப் பூட்டுங்க... போற இடம் எங்கப்பா? போனப்புறம் சொல்றேம்ப்பா?" ...
சட்டேன்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை வந்தது.... எங்கே அவர்களுக்கும் இப்படி என்னைப்போல வேலை செய்யும் நிறுவனம் மூடுவிழா கண்டு, என்ன செய்வது என்று, கையை பிசைந்துக்கொண்டு...திக்குத்தெ ரியாமல் நிற்கவேண்டுமா? ஆகவே குழந்தைகள் இருவருக்கும் எனக்கு ஏற்ப்பட்ட இக்கட்டான, இப்படிப்பட்ட பிற நிறுவனங்களில் வேலை வாய்ப்பை சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல். .. அவர்கள் தனது சொந்தக்காலில் நிருக்கும்படி ஒரு நல்ல சுய தொழிற் பயிற்சிக் கல்வி அறிவைத் தரும் பாடப் பிரிவில் சேர்த்து படிக்கவைக்கவேண்டும்... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்..... அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பசங்க இருவருக்கும் காலாண்டுக்கான பள்ளிக்கூட கட்டணம் வேறு கட்டவேண்டியிருந்தது. இந்த நிலையில்தான் ஏதோ இழுத்துப் பிடித்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிறுவனம், மேலும் தாக்குப்பிடிக்கமுடியாமல் கடன் கொடுத்த வங்கி நிறுவனமே, நான் பணியாற்றிக்கொண்டிருந்த எனது நிறுவனத்திற்கு மூடு விழா செய்தது. நீதிமன்றம் முடிய கதவின் பூட்டிற்கு அரக்கு சீல்வைத்தாலும், வேலையை விடமாட்டேன் என சிலர் பூட்டிய கதவின் அருகேயே காத்துக்கிடந்து....தினமும் வருகைப் பதிவேடு பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள்............. ....... பக்கத்து டி கடையின் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது - "மாடி மேலே மாடி கட்டி...கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே... ஹலோ ஹலோ கமான் கமவுட்.. சீமானே... விஸ்வநாதன் வேலை வேணும்...."
பொதுவாக மனைவியிடம் வீட்டிற்குள் வந்ததுமே மனதில் உள்ள எல்லா கஷ்டங்களையும் கொட்டித் தீர்க்கக் கூடாது. அப்படிச் செய்வதால் சிலநேரம் நமக்கு மனபாரம் குறையலாம்... ஆனால் பல நேரங்களில் நமது மனபாரம் இரட்டிப்பகிவிடும். காரணம் மனைவியின் பங்குக்கு அவரும் சேர்ந்து...."என்னங்க இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறீங்க!!!!! உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை????, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்னசெய்வது????, கொஞ்சமாவது யோசித்துப்பார்த்தீர்களா????.." ... இப்படி இன்னும் பல கொக்கியை ???? நம் மனதில் மாட்டிவிட்டு, அதைப்பிடுத்துக்கொண்டு தொங்குவார்..... ஆகவே அமைதியாக உடுப்புக்களை மாற்றிக்கொண்டு,.. குளியலறைக்கு சென்று கை,கால் கழுவி முகம் துடைத்தபடி.....நிதானமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு........ இரவு படுக்கைக்கு செல்லும்போது பேசலாம் என்று முடிவுசெய்துகொண்டு ... இரவுநேரம் வானொலி கேட்க எனது கைத் தொலைப்பேசியில் பண்பலை அலைவரிசையில் தொட ... சட்டேன்று இந்தப்பாடல் ஒலித்தது "அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா அவ த்துக் காரர் சொல்லுறத கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணாச் சேர்ந்துக்கறா... ஆனா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு புடவையா வாங்கிக்கறா, பட்டுப் புடவையா வாங்கிக்கறா"…....
அனைத்து சமையலறை வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி மெல்ல பேச ஆரம்பித்தாள்..."என்னங்க ஆச்சு எதுவும் பேசாம, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல"... என்றாள். விவரம் சொன்னதும் ... இதமாக என் மனதிற்குள் பல கொக்கியை ???? மாட்டித் தொங்கினாள்...... மனம் கனமாகி தானாக அதன் (மைண்ட் வாய்சில்) உல் மனதுக்குள் பாடல் ஒலித்தது .... "நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி -அதில் வாழ்வதில்லை நீதி......."
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சில விசயங்களை நின்று நிதானமாக அசைபோட வேண்டியிருக்கிறது..... எப்படி சம்பாதிக்கின்ற ஆண்களுக்கு அலுவலகப் பிரச்சனைகளோ, அதேபோலவே வீட்டை நிர்வகிக்கும் மனைவிக்கும் பல அன்றாட வீட்டுப் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பல இல்லத்தரசிகள் பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொள்ளாமல் தானும் பயந்து தனது கணவணனின் பதற்றத்தை பெரிதாக்கிவிடுகிரார்கள். அதனால் தான் பல கணவன்மார்கள் தமது மனைவியிடம் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசித் தீர்த்துக்கொல்வதில்லை. பொதுவாகவே அனைத்துத் திருமணமான மேலான கணவன்மார்களின் மனதில் அவர்களின் மனைவிக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். இருந்தும் இப்படித்தான் பொய்க்கோபம் கொண்டு.... ஊடல்... கூடல் எல்லாம் இருந்தால்தான் அது சிறந்த இல்லறவாழ்க்கையாக இருக்கும்..... அதாவது "இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா" என்று பிரச்சனைகளை எளிமைப்படுத்த தெரிந்து வைத்திருக்கவேண்டும்..... அதைவிடுத்து எதிரும் புதிருமாக சண்டைப்போட்டால் வாழ்க்கை வண்டி எப்படி ஓடும்....... கவியரசரின் கூற்றைப்போல சரியான நேரம்பார்த்து வானொலியில் மிதந்து வந்த அந்தப் பாடல் :- "நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே, என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது, இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது, இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது.... பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?"
எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை... விழித்தெழுந்தபோது குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர்... மனைவி சமயலறையில் எதோ செய்துகொண்டிருந்தாள்..... வழக்கம் போல பல்தேய்த்து...காப்பிகுடித்து ........ "எதையாவது செய்" என்று மனது துடித்துக்கொண்டிருந்தது, என்ன ஆகுமோ என்கிற பயம்தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை நினைத்தபோது... பள்ளிப் பருவத்தில் எனது ஆசிரியர் கூறியது ஞபகம் வந்தது....மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பயம் என்பது துளிகூட கிடையாது என்பதை சில வீர வரிகளில் எடுத்துக்கூறினார்...
"எங்கே நமது தலை வேட்டப்பட்டுவிடுமோ என்பதுதான் பயத்தின் உச்சகட்டம், அப்படி வெட்டப்ப்படும்வரை நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை.... அப்படியே வேட்டுபட்டாலும் அதன் பிறகு நீ அங்கு இருக்கப்போவதில்லை....ஆகவே எதற்க்காக பயப்படவேண்டும்"...... "மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?" என்று ஒரு வீர பாடம் ஒன்றை சொன்னது இன்னமும் என் நினைவுகளில் ஓடிக்கொண்டிருந்தது... "மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்...... ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை", "அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!"... என்கிற, இது போன்ற பல வாக்கியங்கள் நமது மூலைக்கு, காச்சிய இரும்பை சமட்டியால் அடித்து வளைத்து உறுதிப்படுத்தும் வார்த்தைகள். நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!........ உங்களின் கண்கள் கண்ணீரால் உங்களை காட்டிக்கொடுத்தாலும், உங்களின் அழகிய புன்னகையை உதிர்த்து அதை எதிர்கொள்ளுங்கள்!.... ஆகவே கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கவலைப்படுவதை விடுத்து அடுத்து என்ன செய்யவேண்டும் என காரியத்தில் கண்ணாக இருக்க கணினியை நோக்கி ஓடினேன்..... மடிக்கணினியை திறந்து இணையத்தில் இணைந்து.... முதலில் வேலைதேட மனசு நினைத்தாலும் எனது கை அந்தக் குறிப்பிட்ட இனைய பக்கத்தை சொடுக்கியது, மெல்ல அந்த இனைய முகப்புப் பக்கத்திற்கு வந்தேன்......இனைய வானொலியில் பாடலைக்கேட்க மனம் விரும்பியதால்.... பாடலைக் கேட்டபடி கணினியில் எனது பணியைத் தொடர்ந்தேன் .....பாடல்:- "வாழும் வரை போராடு வழியுண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே!"........
"எங்கே நமது தலை வேட்டப்பட்டுவிடுமோ என்பதுதான் பயத்தின் உச்சகட்டம், அப்படி வெட்டப்ப்படும்வரை நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை.... அப்படியே வேட்டுபட்டாலும் அதன் பிறகு நீ அங்கு இருக்கப்போவதில்லை....ஆகவே எதற்க்காக பயப்படவேண்டும்"...... "மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?" என்று ஒரு வீர பாடம் ஒன்றை சொன்னது இன்னமும் என் நினைவுகளில் ஓடிக்கொண்டிருந்தது... "மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்...... ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை", "அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!"... என்கிற, இது போன்ற பல வாக்கியங்கள் நமது மூலைக்கு, காச்சிய இரும்பை சமட்டியால் அடித்து வளைத்து உறுதிப்படுத்தும் வார்த்தைகள். நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!........ உங்களின் கண்கள் கண்ணீரால் உங்களை காட்டிக்கொடுத்தாலும், உங்களின் அழகிய புன்னகையை உதிர்த்து அதை எதிர்கொள்ளுங்கள்!.... ஆகவே கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கவலைப்படுவதை விடுத்து அடுத்து என்ன செய்யவேண்டும் என காரியத்தில் கண்ணாக இருக்க கணினியை நோக்கி ஓடினேன்..... மடிக்கணினியை திறந்து இணையத்தில் இணைந்து.... முதலில் வேலைதேட மனசு நினைத்தாலும் எனது கை அந்தக் குறிப்பிட்ட இனைய பக்கத்தை சொடுக்கியது, மெல்ல அந்த இனைய முகப்புப் பக்கத்திற்கு வந்தேன்......இனைய வானொலியில் பாடலைக்கேட்க மனம் விரும்பியதால்.... பாடலைக் கேட்டபடி கணினியில் எனது பணியைத் தொடர்ந்தேன் .....பாடல்:- "வாழும் வரை போராடு வழியுண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே!"........
....அந்த இணையதள நிறுவனத்தை தொடர்பு கொள்ள முகவரியை தேடி..... தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ரூபாய் 15000/- ஆகும் என்றார்கள், தொடர்ந்து பேசியதில் இறுதியில் ருபாய் 2000/- வெறும் 3 பக்கங்களில் பிறகு ஒவ்வொரு மாதமும் ருபாய் 5000/- கட்டணம் என்று பேசி முடிவானது... நேரில் வருவதாகக் கூறி... மடிக் கணினியைக் கூட மூடாமல் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். ....."ஏங்க.. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்லுங்கள்"... என்று என் மனைவி கூறியது காதில் விழுந்தும், விழாததுபோல..... வேகமாக வீட்டைவிட்டு வெளியில்வந்து... வாகனம் பொருந்தி....அடுத்த அரைமணியில் அவர்களின் அலுவலகத்தில் இருந்தேன். வழியில் வாகனத்தில் செல்லும்போதும் பண்பலை வானொலி நிகழ்ச்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது .... "சென்று வா மகனே ! சென்றுவா ! - அறிவை...வென்று வா மகனே ! வென்று வா !....அறிவுலகம் உன்னை அழைக்கின்றது - ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது....."
மனதிற்குள் ஒரு ஆர்வம் வந்துவிட்டால், கால நேரம் கடந்து, எத்தனை உயரமானாலும் எட்டிப்பிடிக்கும் சக்தி கிடைத்துவிடுகிறது. அதனால்தான் கஷ்டப்பட்டு உழைக்காமல் இஷ்டப்பட்டு உழைத்தால் கிடைக்கும் பலனுக்கு ஈடு இணை இல்லை என்பதை அதன் அனுபவத்தால் மட்டுமே உணரமுடிகிறது. பலநாட்களாக இணையத்தில் எனது எண்ணங்களை விதைத்து அறுவடை செய்து காட்டவேண்டும் என்கிற அந்த எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால், இணையத்தில் ஒரு பெரிய வாய்ப்பை உருவாகவேண்டும் என பல விவரங்களை எனது மின்னஞ்சல் பெட்டியில் சேர்த்து வைத்திருந்தேன். (எங்கொ வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடல் எனது காதுகளில் நுழைந்தது :- ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்.....).
கையில் இருந்த ருபாய் மூவாயிரத்தில் ருபாய் 2000/- கட்டணமாக செலுத்தி, இணையத்தில் தேவையான பதிவு முறைகளை முடித்து, என்னுடைய சொந்த இனைய பக்கத்தை வடிவமைத்தேன். அதன் முகப்புப் பக்கத்தில்...முன்பே நான் உருவாக்கி வைத்திருந்த எனது கூகள் விளம்பர (கூகள் ஆட்சென்ஸ்-Google Adsense) கணக்கை இணைத்தேன். மேலும் (Paypal) பே-பால் மற்றும் (E-Commerce & On line Payment Gate Way) என்கிற வங்கியின் இனைய வழிப் பணப் பரிவர்த்தனைகளுக்கான H.T.M.L என்கிற கணினி மென்பொருள். (Click)சொடுக்கு (Button)பொத்தான்களை நிறுவி எனது இணையப்பக்கம் தயாரானது. வெற்றி பெற்ற பெருமிதம்... கைகளுக்கு நன்றி சொன்னேன்.... இந்தக் கைகள் என்னவெல்லாம் ஜாலம் செய்கிறது.... அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, நமது வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிறது... இப்படி மனம் நினைத்துக்கொண்டிருக்கையில் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது..... "உழைக்கும் கைகளே,.... உருவாக்கும் கைகளே,... உலகை புது முறையில்,.... உண்டாக்கும் கைகளே.... உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)"
இப்படித்தான் சில வேளைகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்போது, நேரம் போனது தெரியவில்லை. தொலைப்பெசியைப் பார்த்தபோது, தொலைபேசி மனியாடிக்காமல் ஓசை குறைக்கப்பட்டு இருந்ததால் அதில் வீட்டிலிருந்து பல அழைப்புக்கள் வந்திருந்தது தெரிந்து, உடனே வீட்டிற்கு தொடர்புகொண்டு பேசியபோது.... என் மனைவி சற்று கலவரப்பட்டு.... வேலை போய்விட்டதால் கணவருக்கு என்ன கோபமோ?, எங்கு போனாரோ?.... என மறு முனையில் அழாதகுறையாக..... "என்ன ஆச்சுங்க?? எங்கே இருக்கீங்க???" என்று என் மனம் நிறைய கொக்கியை ???மாட்டினார்......... ஏம்ப்பா கோகி- ரேடியோ மார்கோனி... சூழ்நிலைக்குத் தகுந்த ஒரு பாட்டைப் போடுப்பா ...." நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே....நீங்கிடாத துன்பம் பெருகுதே" ..... :(திரு. ஜி. ராமநாதன் அவரோட இசையப்பில் வந்த அழகான பாடல் இது... படம் -சதாரம்) ...
அடித்துப் பிடித்து...ஓடோடி வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் மகிழ்ச்சியான செய்தியை சொன்னதும் " நீங்க ரொம்ப மோசமான ஆளுங்க, உங்களைக் காணும் என்று எவ்வளவு பயந்துவிட்டேன் தெரியுமா?..." என்று கண்களில் நீர் தளும்ப என் கைகளை ஆறுதலாக பிடித்து... அவளது நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்..... எத்தனை வயதானால் என்ன தினம் தினம் கணவன் மனைவி இருவரும் புதிதாக திருமணமான தம்பதிகள் போல.... பிறகென்ன வானொலியில் பாட்டுதான்..... வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற படத்தில் " ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..... ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது...... நாளை வருவது கல்யாணம், இன்று வெள்ளோட்டம்....இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்..... https://youtu.be/3TLmnL2QQqU
"என்னால் நம்பமுடியவில்லை... இத்தனை வேகமாக ஆரம்பித்த முதல் வாரத்திலேயே எனது வங்கிக் கணக்கிற்கு ருபாய் 50,500/- கிடைத்திருப்பது குறித்து பெருமையாக இருந்தது.. எதோ சொல்லுவார்களே "வயறு காய்ந்த மாடு கம்பங் கொல்லையில புகுந்த மாதிரி".... என்பதுபோல மனம் பரபரப்பானது.... பெருமையை ஊர் அறிய தெரியப்படுத்த மனம் உணர்சிவசப்படலானது ... அடுத்தது .... அனைவருக்கும் தெரியப்படுத்த.... எங்கே நமது வலைப்பதிவர் கையேடு?..... உடனே தேடி எடுக்கவேண்டும்.......என்னைவிட என் மனம் ஒரே நேரத்தில் என்வீட்டின் வெவ்வேறு இரண்டு அறைகளில் என் நினைவுகளை, விரட்டித் தேடியது......வழக்கம்போல வானொலியில் பாடல் ஒலித்தது... "சத்தியம்.... இது சத்தியம்.... எல்லாம் வல்ல இறைவனின் ஆணை, சொல்லப் போவது யாவையும் உண்மை, சத்தியம்... இது சத்தியம்".........
அடுத்தது..... நமது வலைப்பதிவர்கள் கையேட்டில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய இனைய முகவரியை தந்து, ...... நீங்களும் கைநிறைய சம்பாதிக்க வேண்டுமா? பலருக்கும் பொருலீட்டித்தரும் வகையில் அமைக்கப்பட்ட எனது இணையப்பக்கம்... கைநிறைய அள்ள அள்ள குறையாத ஒரு அட்சயப் பாத்திரம் என்பதை தெரியப்படுத்தி நானும் பயன்பெறவேண்டும் என்பதால்..... அதற்காக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பும் வேலையை தொடங்கினேன்....இனைய வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பாடல் ஒலித்தது "நான் அனுப்புவது கடிதம் அல்ல,.... "உள்ளம்".... அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல ...."எண்ணம்"... உங்கள் உள்ளமதைக் கொள்ளை கொள்ள...... நான் அனுப்புவது கடிதம் அல்ல".....
எனது இணையபக்கத்தின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், என்னுடைய இணையதளத்திற்குள் நுழைந்ததும், முகப்புப் பகுதியிலிருக்கும், "புது கணக்கு தொடங்க" என்கிற பொத்தானை (கிளிக்)/சொடுக்கியபிறகு தோன்றும் விண்ணப்ப படிவத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை குறிப்பிட்டு உங்களுக்கே உரிய உங்கள் கணக்கின் உல் நுழைவதர்க்கான் "பெயர்" மற்றும் "கடவுச் சொல்" போன்றவற்றை தனியாக குறித்துவைத்துக்கொண்டு, உங்களது பெயரில் ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும்.
மேலும் மிக எளிமையாக உங்களுக்கு புரியுமாறு கூறுகிறேன். அதாவது நீங்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை (Blogspot.com)என்கிற உங்களது இனைய பக்கத்தில் பதிவு செய்துவிட்டு அந்த இனைய பக்கத்தின் URL-முகவரியை என்னுடைய இனைய தளத்தில் உள்ள உங்களது கணக்கின் கீழ் பொருத்திவிட்டால். உங்களது கதை, கட்டுரை, கவிதையை யாராவது படிக்கும்போது திரையில் தோன்றும் விளம்பரங்களுக்கு கிடைக்கும் தொகையில் பாதி உங்களது கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது எனது இணையதளத்தில் உங்களது கதை படிப்பதினால் கிடைக்கும் விளம்பரப் பணம் ருபாய் 1000/- என்றால் அதில் பாதி ரூபாய் 500/- உங்களுடைய கணக்கிற்கும், மீதி ரூபாய் 500/- என்னுடைய கணக்கிற்கும் வந்து சேரும். ஆகவே உடானடியாக என்னுடைய இணையதளத்தில் உங்களை இணைத்துக்கொண்டு உங்களின் கதை கட்டுரை கவிதைகளுக்கு சிறப்பான ஒரு பெரிய சன்மானத்தைப் பெற, கீழ்கண்ட எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்......"என் கண்களுக்கு பச்சை விளக்கு தெரிந்தது"..... நிச்சயம் இது வெற்றிகரமான செயலாகவும், அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு நம்மோடு இணைந்து பயனடைவார்கள் என, என் மனம் எதோ சோதனையில் ஒரு சாதனை செய்ததுபோல நிம்மதியாக........ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப்போல.... மின்சார இருப்புப்பாதையில் புகை வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது .....பாடல்:-"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது...."
"ஏனுங்க....அட உங்களைத்தான் ...இன்னைக்கு முக்கியமா எதோ உங்க கம்பெனி மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே.... இப்படியா 7 மணி வரை தூங்குவது... சீக்கிரம் எழுந்து ஆபிசுக்கு கிளம்புங்க"...... என்று எனது மனைவியின் குரல் கேட்டு திடுக்கென்று கனவு களைய, சட்டென்று நினைவுக்கு வர குளியலறை நோக்கி ஓடினேன்.... அருமையான கனவு எப்படியும் ஒரு மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சியாக ஏதாவது ஒரு வானொலிக்கு விற்றுவிடலாம்........ உடனடியாக இந்த "வானொலிக் கதையும் பாடலும்" நிகழ்ச்சிக்கு சில விளம்பரதாரர்களைத் தேடவேண்டும்...... நீங்களே சொல்லுங்கள்... இந்தக் கதை, விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு போனியாகுமா?...... நேயர்களே நீங்களும் கூறுங்கள்..... இந்தக் கதையும் பாடலும் நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ஏதாவது குற்றம் குறை இருந்தால் எவ்வளவோ?.... அவ்வளவு குறைத்துக்கொண்டு மிச்சம் மீதியைத் தந்தாள் போதும்........மீண்டும் எங்கோ வானொலியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது அதைக்கேட்ட குளியறையிலிருந்த எனது மனதும் பாடலை முணுமுணுத்தது :-
"துணிந்து நில்,..ஹ ஹ... தொடர்ந்து செல், ..ஹ ஹ ஹ .தோல்விகிடையாது தம்பி..... உள் ளதை சொல், நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி"......... ....
No comments:
Post a Comment