11-12-2015 இன்று காலை 7.30மணி அளவில் நமது ஆகாசவாணி FM ரெயின்போ ஹிந்தி வானொலி ஒலிபரப்பில் நமது மஹாகவி பாரதியார் பிறந்த நாள் குறித்து விவரங்களை கூறி அவர் எழுதிய ஒரு பாடலையும் 7.40AM ஒலிபரப்பியது. உத்திராகன்ட் மாநில மலைப்பகுதியில் காலையில் லேசான மழை, மேகமூட்டமாக நல்ல குளிர் காற்று (6 டிகிரிக்கும் கீழ்) வீசிக் கொண்டிருந்த அந்தக் காலை வேளையில் ஒலிபரப்பான மஹாகவி பாரதியாரின் பாடல் இமயமலை அடிவாரத்தின் எல்லைப் பணியிலிருந்த தமிழக ராணுவ வீரர்கள் உட்பட உத்திராகன்ட் மாநில திட்டப்பனியிலிருக்கும் நானும் கேட்டு மகிழ்ந்தேன். மாஹாகவி அவர்களின் புகழ் தமிழகம் மட்டுமல்லாது பலமொழிபேசும் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிறப்பு பெற்றிருப்பது பெருமையடையச் செய்கிறது......வாழ்க பாரதம்.....
......................ஜெய ஜெய ஜெய .. பாரத சமுதாயம் வாழ்கவே!.................
No comments:
Post a Comment