FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, December 21, 2022

ஸ்ருதி பிசகாமல் ஜால்ரா தட்டுபவர்களால் கச்சேரி களைகட்டும். ஆனாலும்... ஜால்ராக்காரர்கள் ஒரு போதும் வித்வான்கள் ஆவதில்லை..

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 


*🎶ஸ்ருதி பிசகாமல் ஜால்ரா தட்டுபவர்களால் கச்சேரி களைகட்டும். ஆனாலும்... ஜால்ராக்காரர்கள் ஒரு போதும் வித்வான்கள் ஆவதில்லை..🎶*🤣

செம்பு மற்றும் வெள்ளீயக் கலவையால் தாளம் செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். உலோகத்தை நீராக உருக்கி அதை வார்க்க வேண்டும். தாளம் வார்க்க வண்டல் மண் அவசியம். இந்த நாச்சியார் கோவில் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வண்டல் மண்ணைச் சலித்து சாக்கில் கட்டி விற்பனைச் செய்கிறார்கள். அந்த மண்ணை வாங்கி மரச்சட்ட அச்சில் தாளத்தின் வடிவத்தை வைத்து அந்த மண்ணால் நிரப்பி தட்டிக் கெட்டிப்படுத்த அச்சு தயார். பின்பு  அடுப்பில் கொதிக்கும் உலோகத்தைக் கரண்டியில் அள்ளி ஊற்றி ஆர வைக்கிறார்கள். 10 நிமிடம் கழித்து மண்ணைக் கொட்டினால் கொத்தாக வந்துவிடுகிறது தாளம். பிறகு ஓரத்தைத் தட்டி கடைசல் பட்டறையில் கடைந்து பாலிஷ் போட தாளம் தயார். 40 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை போகிறது.

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🤣🤣சின்ன வயதில்.. மார்கழி மாத பஜனைக்கு தாத்தா வாங்கி வாசித்த மிருதங்கம் .. தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு போய் ரெண்டு தட்டு தட்டினால் கூடுதலாய் கொஞ்சம் பொங்கல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால்.. கைவலி ரெண்டு அமிர்தாஞ்சன் பாட்டில் காலி. இந்தக் கூத்தெல்லாம் அடிக்க முடியாதென்று திரும்பவும் ஜால்ரா மாஸ்டரானேன்.  கொஞ்சம் ஆள் வளர வளர .. கவனம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. கோவிலில் மொத்தம் பத்து செப்பு ஜால்ராக்கள் தான் வைத்து இருப்பார்கள். தாளம் தெரிந்தவர்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி.  ஜால்ராக்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாரும் விஷயம் தெரிந்தவர்கள் மாதிரி பந்தா விட்டுக்கொள்வார்கள்...*🎶🤣*

*🎶ஆடாத மனமும் உண்டோ.. நடை அலங்காரமும்.. அழகு சிங்காரமும் கண்டு.. ஆடாத மனமும் உண்டோ..🎶*

Movie Name:-Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்), Music:- Viswanathan Ramamoorthy, Singers:- T. M. Soundararajan, M.L.Vasanthakumari, Lyrics:- A. Maruthakasi

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶கரையாத மனமும் உண்டோ... தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு... கரையாத மனமும் உண்டோ.... ஆ……கரையாத மனமும் உண்டோ…....🎶*

Movie: Varusham(16) Padhinaaru,(1989), Music by : Ilayaraaja, Singers : K. J. Yesudas and K. S. Chithra, Lyricist: Vaali.

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶....மிருதங்கத்தை தூக்கிக்கொண்டு உலா வரமுடியவில்லை என்றதும் அப்பா ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார்(சினிமாவிலெல்லாம் ஒரு ஏழை தாத்தா தாடி வைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் தத்துவப் பாடலெல்லாம் பாடிக்கொண்டு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பாரே அது மாதிரி இருக்கும் கஞ்சிரா)*

*எனக்கு ரொம்ப ஆச்சரியம்... "என் திறமையை பார்த்துட்டு கை காசெல்லாம் போட்டு அப்பா வாங்கி குடுத்திருக்காராக்கும்" என்று பக்கதிலிருந்தவனிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தேன்.*

*"திறமையைப் பார்த்துட்டு ஒன்னுமில்ல... ஏற்கனவே பஜனைக்கு கூட்டம் குறைந்து கொண்டிருக்கே... நீ இதத் தட்டினாலாவது அதக் கேட்டு நாலு பேர் வந்து கூட்டம் கூடாதான்னு தான்" - சமயம் பார்த்து குட்டை உடைத்து மானத்தை வாங்கினார் ....🎶*🤣

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶தேனே தென்பாண்டி மீனே... இசைத் தேனே இசைத் தேனே... மானே இள மானே.. நீதான் செந்தாமாரை ஆரீராரோ... நெற்றி மூன்றாம்பிறை... தாலேலலோ…....🎶*

Movie Name : Udhaya Geetham 1985, Singer : SP Balasubrahmanyam, Music Composed by : Ilayaraja

Lyrics written by : Vaali

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶..........பஜனை எப்ப முடியும் ???  பிரசாதம் வாங்க பெரிய வரிசைவேற ..  நேக்கு... நாக்குல... இச் ..இச்.. சீக்கரமா பிரசாதம் கிடைக்காதா ????  அது என்னமோ வீட்டிலே வெங்களப் பானை நிறைய பொங்கல் செய்தாலும் சாப்பிட பிடிக்காது... ஆனா ஒரு கையளவு.... சுட சுட.... பொங்கல் பிரசாதம் ... ஆஹா என்ன அருமை ... "ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கும்"*

*"டேய் சுண்டல் குடுத்தாங்கன்னா இதுல வாங்கு, சர்கரைப் பொங்கல் குடுத்தா இதுல...ரெண்டும் குடுத்தா இதுல சுண்டல் இதுல சர்கரைப் பொங்கல்" .*

*ஒரு நாள் அதிசயமாக சுண்டல், சர்கரைப் பொங்கலுடன் பஞ்சாமிர்தம் வேறு குடுத்தார்கள். இரண்டு பாத்திரம் குடுத்தவர்களுக்கு சர்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் ஒரே பாத்திரத்தில் வாங்கினேன். "ஏன்டா பிரக்ஸ்பதி..... ரெண்டையும் குழப்பிட்டையேடா...ஒரு ஆல இலைய நடுவில போட தெரியாது?" ....கோவில் என்று கூட பார்க்காம இலவசமா "பல்பு" கொடுக்கறாங்க.... பல்பு ...பீஸ்.. போயே... போயிடுச்சு IT'S GONE .....🎶*🤣

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶ஆஹா ஆஆ ஆஆஆ ததரினா னா ஆஆஆஆஆ... தேவி ஸ்ரீதேவி... தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா.. பாவி அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா…....🎶*

Movie Name : Movie: Vazhvey Maayam 1982, Singer : S.P. Balasubrahmanyam and Vani Jayaram, Music Composed by : Gangai Amaran,

Lyrics written by : Vaali

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶......அந்த கோவிலில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதவிகளும் பொறுப்புகளும்(?!) வர ஆரம்பித்தன. பழம் (பிரசாதங்க) கொடுப்பதிலிருந்து சுண்டல், சர்கரைப் பொங்கல் கொடுக்கும் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டியில் மெம்பரானேன்...*🤣 

*🤣அங்கிருந்து பார்த்த போது தான் அதுவும் நாய்ப் பொழப்புத் தான் என்று புரிய ஆரம்பித்தது. சில கட்டளைதாரர்கள் (அதாங்க சுண்டல் ஸ்பான்சர்) சில சமயம் சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள்.அன்றைக்குத் தான் இங்கே கூட்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும். அன்றைக்கு அனுபவஸ்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். கடைசியில் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டி மெம்பர்கள் சட்டியில் மணடையை விட்டு மோப்பம் மட்டுமே பிடிக்கமுடியும்....🤣🌶️*

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶சுக ராகமே சுக போகமே.. சுக ராகமே என் சுக போகம் நீயே... கண்ணே கலை மானே.. கதை பேச வருவாயோ …....🎶*

Movie Name: Kanni Rasi 1985, Singer : Vani Jayaram and Malaysia Vasudevan

Music Composed by : Ilayaraja, Lyrics written by : Kuruvikkarambai Shanmugam

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🤣🤣ஒரு முறை இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நானும் நண்பனும் தெரியாத்தனமாக கோவில் சுண்டல், பொங்கல் விநியோக பொறுப்பை எடுத்துக் கொண்டோம்.  எனக்கு தெரிந்த (எனது பக்கத்துவீட்டு) எனதுவகுப்பில்கூட படிக்கும்  பெண்ணுக்கு கொஞ்சம் கூடவும், பின்னால் வந்த பாட்டிக்கு ரெண்டு சுண்டல் குறைவாகவும் கொடுத்து விட்டேன்... அவ்வளவேதான் ....🤣🌶️ "ஏன்டா என்னை என்னனு நினைச்ச..உங்க அப்பனே என்ன பார்த்தா பயப்புடுவான், நீ சுண்டைக்கா பய... முன்னால் வந்த செவத்த குட்டிக்கு பல்ல இளிச்சுண்டு குடுக்ற நான் வந்தோடன பஞ்சப் பாட்டு பாடறியா..."* 

*ஹி...ஹி...ஹி...ஹி...... (அசடு வழிய)...."பாட்டி உங்களுக்கில்லாமலா??  எவ்வளவு வேணுமோ அவ்வளவு தருகிறோம்.......  மைண்ட்வாய்ஸ் ...."அடேய் மானம் போறது இந்த பாட்டிக்கு சீக்கிரம் பிரசாதம் குடுத்து அனுப்பிவை". ...அடியேன் கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி புது தில்லி ...*🎶🤣*

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶அலைபாயுதே கண்ணா… என்மனம் அலைபாயுதே… உன் ஆனந்தமோகன வேணுகானமதில்… அலைபாயுதே கண்ணா.. ஆ… ஆ…....🎶*

Movie Name : Alaipayuthey (2000)., Singer : பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி

Music Composed by :A. R. Rahman,  Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer.  

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

‘‘ஒரு காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த குமரேசன். விற்பனை இன்மை, அங்கீகாரம் இன்மை காரணமாக இசைக்கருவிகள் செய்து வந்த பலர் இப்பொழுது வேறு தொழில் நாடிச் சென்று விட்டார்கள். இப்போது தொழில் செய்யும் பலரும் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்க விரும்பவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை சார்ந்த தொழில்கள் அழிய விடாமல் காக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசாங்கம் இதைப் பற்றி எல்லாம் என்றுமே கலவலைப்படாது.


THANKS FOR WATCHING MY WEB BLOGS GOKI-RADIO MARCONI

ALL FREE SERVICE VISIT "NEW DELHI MANGALYAM GROUP"
FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY 

உடனடடி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு, வாழ்க்கையில் மேலும் உயர்வு பெற இலவச உப்பு சிகிச்சை பரிகாரம் முழு விவரங்களுக்கு +91-9717236514

























No comments:

FREE JOBS EARN FROM HOME