சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்
*🎶வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.🎶*
🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻
![]() |
*🎶இன்றய நிகழ்ச்சியில் நாம் ரசிக்கவிருக்கும் பாடல்களில். சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்...🎶*
*🙏சிவா விஷ்ணு தரிசனம்🙏*
*🎶சித்தார் இசைக்கருவியை சிவ ரூபத்தைப்போல நேராக மேல் நிறுத்தி வாசிப்பவர்கள், அதுவே வீணை என்றால் பள்ளிகொண்ட பெருமாள் போன்று படுத்தநிலையில் வைத்து வாசிப்பதையும் பார்த்து பரவசமடையலாம்*🎶
*🎶நரம்பு வாத்தியங்கள், கம்பி வாத்தியங்கள் என்று சொல்லப்படும் தந்தி வாத்தியங்களை மூன்றாகப் பிரிக்கின்றனர்.🎶*
*வில் போட்டு வாசிக்கும் வாத்தியங்கள் - வயலின், சாரங்கி,*
*மீட்டி வாசிக்கப்படும் வாத்தியங்கள் - வீணை, சித்தார், கிட்டார், தம்புரா*
*தந்திகளைக் குச்சிகளாலோ அல்லது மரக்கட்டையாலோ தட்டி நாதத்தை உண்டாக்கும் வாத்தியங்கள் - கொட்டு வாத்தியம்.*
🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻
*சித்தார் வாத்திய உலகத்தின் முடிசூடா மன்னர், பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, மேற்கு வங்காள மாகாணத்தை சேர்ந்தவர்: 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012), பல விருதுகளை பெற்ற உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார். ஒரு இசை நிகழ்ச்சியில் இசையோடு கலந்து காலமாகிப்போனாலும் இன்னும் பலரது இசை நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..*
🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:-சிவசங்கரி ..சிவசங்கரி..சிவானந்தலாகரி.. சந்திரகளாதரி ஈஸ்வரி...*
*அருமையான பாடல், பாடலின் இறுதியில் முழுமையாக சித்தார் இசையை மட்டும் தனியே தபேலா மற்றும் மிருதங்க இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- சொன்னது நீதானா...சொல் சொல்..சொல்.. என் உயிரே...*
*அருமையான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் இசையை மட்டும் தனியே வயலின், தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:-
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...*
*பக்திமயமான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:-
பாடும் வானம்பாடி ஹா....மார்கழி மாதமோ.. பார்வைகள்.. ஈரமோ.*
*இனிமையான பாடல், பாடலின் இடையிசையில் சித்தார் இசை +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம்...*
*இனிமையான பாடல், பாடலின் முதல் இடையிசையில் சித்தார் மட்டும் தனியாக இசைக்க இளையராஜா இசையப்புக்கு ஒரு தனி ஓ..ஓ..போடலாம் சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- இசை கேட்டால் புவி அசைந்தாடும்...*
*இனிமையான பாடல், பாடலின் முதல் வரியிலிருந்தே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே..*
*இசை கோர்வை கொண்ட இனிமையான பாடல், பாடலின் முதல் நிலையிலேயே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை பாடல் முழுது இடையிடையே வருவது சிறப்பு பாடலில் கேரளா செண்டை மேளம்+ கிட்டார் +குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*
*🎶🎻பாடல்:- முத்த சம்பா பச்சநெல்லு குத்ததான் வேணும்...முத்து முத்தா பச்சரிசி அல்லத்தான்வேனும்*(பாடலின் இறுதி இசையை அவசியம் கேளுங்கள் இளையராஜாவுக்கு ஒரு ஜே போடலாம்)
*சிறந்த பாடல், பாடலின் இறுதியில்.. இது நம்ம வீட்டு கல்யாணம்.. என்று பாடல் முடியும்போது சித்தார் இசை மட்டும் தனியாக சிணுங்குவது உண்மையிலேயே ரசிக்கவேண்டிய இடம்...பாடலில் இடையிடையே சித்தார் சிணுங்குவது அற்புதம்.பாடலில் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல்+ஷெனாய் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*
🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻
*சித்தார் இசையில் ஹிந்தி பாடல்கள் நிறைய உண்டு... தமிழில் 32பழைய பாடல்கள், 50+(இளையராஜா) இடைக்கால பாடல்கள் 45+புதியபாடல்கள் தொகுப்பு உள்ளது. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். நன்றி கோகி ரேடியோ மார்கோனி, புது தில்லி.🎶🙏*
சிதார் இசையில் மற்றுமொரு பாடல்
பாடல்:-
இது குழந்தை பாடும் தாலாட்டு .ஒருதலைராகம்.
சிதார் இசையில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் சில..🎼🎼 "கன்னிப் பெண் " திரைப்படத்தில் வரும்
"பாடல்:-பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்.."
என்ற பாடலின் ஓபனிங் சிதார் இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..
"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் வரும் "அவள் ஒரு நவரச நாடகம்" பாடலின் bgm இல் சரணம் தொடங்கும் முன் வரும் மயக்கும் சிதார் இசை..
"அண்ணன் ஒரு கோயில்" திரைக் காவியத்தில் இடம்பெற்ற "
அண்ணன் ஒரு கோயில்" பாடல்..
No comments:
Post a Comment