FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, December 21, 2022

ஜலதரங்கம் பின்னணி இசையாக கொண்ட பாடல்கள்

ஜலதரங்கம் பின்னணி இசையாக கொண்ட பாடல்கள்



*🎶ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார்..*🎶

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- அடி பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..*

*பாடலின் ஆரம்பைசையில் தபேலா இசையோடு ஜலந்தரங்கள் இசைவர.. பாடலின் இடையிசையில் மற்றும் பாடலின் பின்னணியில் மெல்ல சிணுங்கல்களோடு வரும் ஜலந்தரங்கள் இசை...*


🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- இதழ் மொட்டு விரிந்திட..*


*பாடலின் அதிகமாக தொடர்ந்துவரும்    ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் ஒவ்வொரு சரணத்திலும் வியாபித்திருக்கும்  பாடலின் இடையிசையில் அவ்வப்போது வரும் ஜலந்தரங்கம் இசையும், பாடலில் இறுதியிலும் தொடர்ந்து வரும்  ஜலந்தரங்கள் இசை...*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை   - பணத்தோட்டம் 1963 - பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி*

*ஜலதரங்கம் , வயலின் முன் இசையுடன் ஆரம்பிக்கும் இந்த இனிமையான பாடல் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த மிகச் சிறந்த பாடல் என்று சொல்லலாம்.அனாயாசமான நுண்சங்கதிகள் கொண்ட இந்த பாடல் இதமான வளைவுகளையும் ,இனிய மென் சுழிப்புகளையும் சுமந்து செல்கின்ற பாடலாகும்.*

*பாடலின் பல்லவியின் பின்னணியில் மின்னி மின்னி மறைந்து ஜாலம் காட்டும் ஜலதரங்க ஒலியும் , பல்லவி முடிவில் மேண்டலின் இசையுடன் கைகோர்த்துவரும் ஜலதாங்கமும், அதை அள்ளிச் சென்று அரவணைத்து வரும் வயலின் சேர்ந்திசையும் ,அதை ஆற்றுப்படுத்தி இனிமை சேர்க்கும் குழலிசையும் , மீண்டும் ஒருமுறை மேண்டலின் குழைந்து வர வயலின் அதை உயரே எடுத்து நெஞ்சை அள்ள ,சாரங்கின் மதுரநாதம் குளிர்ந்த காற்றாய் நுளைந்து மனத்தைக்   கனிய வைக்க அனுபல்லவி [ திரு நாள் கூடி ….என்ற வரிகள் ] ஆரம்பிக்கிறது.அனு பல்லவி முடிந்து வர நறுமணம் பரவுவது போல சாரங்கியின் இனிய இசை படர்கிறது.அதை தொடர்ந்து " இரவில் உலவும் திருடன் அவன் என்றான் " வரிகளில் பாடலின் இனிமை உச்சம் வருகிறது.*

*பாடிய முறையும் ,இசையமைப்பும் , பாடல் வரிகளும் , வாத்தியங்களும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே ... .*

*பாடலின் ஆரம்பத்தில் தொடர்ந்து வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும்    ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒரே பாடல் ஒன்று.. ராகம் ஒன்று..*


*பாடலின் ஆரம்பத்தில் ஆ..ஆ.பிறகு வரும்     ஜலந்தரங்கம் இசை, ஒவ்வொரு பல்லவியிலும் ஆரம்பத்தில்  வியாபித்திருக்கும் ஜலதரங்கம் இசை பாடலின் இடையிசையில் ஷெனாய் இசையோடு கூடி வருவதும் சிறப்பு......*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மாஞ்சோலை கிளித்தானோ மான்தானோ ... .*

*பாடலின் ஆரம்பத்தில் தபேலாவும் மிருதங்கமும் போட்டி போட  தொடர்ந்து ஜலதரங்கம் வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும் இசை...  பாடல் முழுதும் அங்கங்கே சிறு சிறு இடைவெளியில் ஜலதரங்க இசை வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶இப்போதெல்லாம், பல இசைக்கருவிகள் காணக் கிடைப்பதில்லை. இந்திய இசைக் கருவிகளுள் இனிமையான ஒலி எழுப்பக்கூடிய ஒன்று, ஜலதரங்கம் எனப்படும் கருவி. 'ணிங்கி ணங்கி…' என்று அது எழுப்பும் இசை, ஒரு தந்தி வாத்தியத்தின் ஒலியைப் போலவே கேட்கும். இதை வைத்து, முழுப் பாடலை வாசித்துக் காட்டும், கச்சேரி செய்த வித்வான்களும் இருந்தார்கள்.*🎶
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

*குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்...*

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*இசைச்சக்கரவர்த்தி என்றும் நாதஸ்வர மேதை என்றும் போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம்பிள்ளையிடம் வானொலி பேட்டி ஒன்றில் வாத்திய இசை பெரிதா ? பாடுவது பெரிதா ? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு " வாத்தியம் என்பது உயிரற்ற ஜடம் , மனிதரின் குரல் என்பது உயிர் உள்ளது ; மனிதக்குரலே சிறப்பானது. வாத்தியம் போல பாடினார் என்றால் பெருமையில்லை, பாடுவது போலே வாசித்தார் என்று சொல்வதே பெருமை " என்ற கருத்து வெளிப்படும் வண்ணம் கூறியிருந்தார்.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛


QUICK AND EARLY MARRIAGE OPPORTUNITY.. VISIT NEW DELHI MANGALYAM 

FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY 


No comments:

FREE JOBS EARN FROM HOME