FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, October 8, 2015

"நிதான மந்திரம்" நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய "மந்திரம்"

"நிதான மந்திரம்" நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய  "மந்திரம்" 


"நிதானம்", (நிதானமே பிரதானம்)  என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

இந்த மந்திரம் உங்களுக்காக, நீங்கள் நினைவில் வைத்து சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல்லாகும். 

"நிதானம் என்பது வேகத்தோடு சம்மந்தப்பட்ட சொல்லாக இருந்தாலும், நான் இங்கு குறிப்பிட வந்தது உடல் நலம், அது சிறப்பாக இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க முடியும். 

அதாவது ஒவ்வொரு முறையும் நாம் நமது உணவை உட்கொள்ளும்போது நமக்கு நாமே நினைவில் நிறுத்தி சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல் இது. 

இந்த அவசர யுகத்தில் அவசர அவசரமாக சரியாக மென்று தின்று விழுங்காத உணவுப்பழக்கத்தினால் செரிமானம் கேட்டு, உடல் நலத்தோடு மனநலமும் கெட்டுப்போவதால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு ஒரு அளவு என்பது இல்லை. அது எப்படிப்பட்ட இழப்புக்களை உருவாக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.  ஆகவே ஒவொரு முறையும் நாம் நமது உணவை சாப்பிடத் தொடங்கியது முதல் உணவை உண்டு முடிக்கும்வரை இந்த "நிதானம்"....(நிதானமாக உணவை நன்கு மென்று விழுங்கவேண்டும்)  என்கிற மந்திரத்தை நினைவில் நிறுத்தி செயல்படவேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம். 

* உணவை நன்கு கடித்து மென்று சிறிது சிறிதாக விழுங்கவேண்டும். 

*சாப்பிட்டு முடிக்கும்வரை, இடையில் அவசியம் தேவை ஏற்ப்படாத நிலையில்,  தண்ணீர் பருகுவதை தவிர்க்கவேண்டும். சாப்பிட்டு முடித்தபிறகு தண்ணீர் பருகவது செரிமானத்திற்கு சிறந்தது.  

*வாயை மூடி பிறகு உணவை மென்று விழுங்கவேண்டும், வாயை திறந்தபடி மெல்லுவதால், உணவோடு காற்றும் சேர்ந்து விழுங்கப்படுவதால் வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்ப்பட்டு, செரிமானமும் அதோடு தூக்கமும் கெட்டுப்போகும்.  

*பேசிக்கொண்டே சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், அப்படி செய்வதால் உணவின் சுவை தெரியாமல் நமது கவனம் திசை திருப்பப்படுவதால், உண்ணும் உணவை செரிக்கத் தேவையான உமிழ் நீர் சுரப்பி தனது வேலையை செய்யாமல் நாம் சாப்பிடும் உணவை கேட்டுப்போகச் செய்யும். ஆகவே நாம் உண்ணும் உணவே விஷமாக மாற வாய்ப்புகள் உள்ளது.

*சாப்பிடுபவரின் கவனம் சிதறாமல், உணவை சுவைத்து ரசித்து உண்ணும் வகையில் மன நிலை இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். 

*உணவை சுவையாக சமைப்பதைவிட, மகிழ்ச்சியாக சாப்பிடும்படி பரிமாறுவது சிறந்தது.    

ஆகவே நிறுத்தி நிதானமாக மென்று விழுங்கவேண்டும் என்கிற இந்த "நிதான" மந்திரத்தின் தன்மையையும் அதன் சக்தியையும் நீங்களும் உணர்வீர்கள் என்றால், உங்களுக்கும் அது   மிகப்பெரிய பயனை பெற்றுத் தரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.  

விடாமல் முயலுங்கள், ....
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் ! நன்றி. 
அன்புடன்.... கோகி என்னும் கோபால கிருஷ்ணன் -ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து........... 

No comments:

FREE JOBS EARN FROM HOME