"டெங்கு" என வீண் பயம் பீதி வேண்டாம்!!!! வைரஸ் காச்சலாகவும் இருக்கலாம்.:- பயத்தைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவமனைகள், ஒரு ஸ்பெஷல் ரிபோர்ட்:-
புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட மாநிலப் பகுதியில் அமைந்திருக்கும் பல (பிரபல) தனியார் மருத்துவமனையில், பொதுமக்களின் பயத்தையும் படபடப்பையும் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவ வியாபாரக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
எனது மகனுக்கு ஜுரம் என்று கல்லூரியிலிருந்து தொலைபேசி வந்தபோது நானும் முதலில் இப்படி பயமும் பதற்றமும் அடைந்தேன், கல்லூரி பேரூந்திலிருந்து இறங்கிய எனது மகன் மிகவும் சோர்ந்து களைப்படைந்து காணப்பட்டான். உடனே எனது வீட்டின் அருகே இறுக்கும் அந்த பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். சிறப்பு மருத்துவர் ஒருவர் உடனே இரத்த பரிசோதனை செய்யும்படி அந்த மருத்துவமனையில் அமைந்திருந்த இரத்த பரிசோதனைக் கூடத்திற்கு செல்லுமாறு ( FBC-Full blood count ) எப். பி. சி -என எழுதி அனுப்பினார். நிறைய கூட்டம் நிரம்பி வழிந்தது, வந்திருந்த அனைவருமே ஜுரத்திர்க்கான இரத்த பரிசோதனை செய்ய காத்திரூந்தனர். அந்த தனியார் மருத்துவமனையில் வந்த கூட்டம் அனைத்திற்குமான இரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் அங்கு பரிசோதித்த அனைவரையும் அந்த தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க விழைந்ததை பார்த்தபிறகு எனக்கு சிறிது சந்தேகம் ஏற்ப்பாட்டது சரியாகவே இருந்தது.
எனது மகனின் இரத்த பரிசோதனை முடிவை பார்த்த மருத்துவர் இரண்டு இடங்களில் வட்டமிட்டு மகனின் இரத்தத்தில் சிலவகையான இரத்த தட்டுக்கள் குறைவாக இருப்பது "டெங்கு" நோய்க்கான அறிகுறியாகவும் இறக்கலாம் ஆகவே உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்குமாறு கூறினார். நல்லவேளையாக நான் டெங்கு ஜுரத்திர்க்கான இரத்த பரிசோதனைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதாக கூறி அதற்க்குண்டான இரத்த மாதிரியை தந்துவிட்டு மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன், அப்போது எனக்கு மிகவும் பழக்கமான ஒரு குடும்ப மருத்துவர் அந்த மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் விவரம் கூறினேன் உடனே அவர் மருந்து குறிப்பு சீட்டில் ஒவ் ஒரு நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை "எலக்ட்ரால்"ORS-என்னும் உடனடி சக்தியைத் தரக்கூடிய பல்வேறு வைடமீன்கள் அடங்கிய பானத்தைக் (தற்போது இது ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பானமாக, மாஜா-மாம்பழ ஜூஸ் போல டப்பியில் குழலை சொருகி உடனே குடிக்கலாம்) குடிக்கவேண்டும் என எழுதித்தந்தார்.

அன்று இரவு ஜுரத்திற்கு பாராசிட்டமைல் மாத்திரையும் அதோடு அந்த எலக்ட்ரால்/ORS-பானத்தையும் பருகியதில் மறுநாள், ஜுரம் இல்லாமல் நேற்றைப்போல சோர்வாக இல்லாமல், புத்துணர்வாகவும் தெம்பாகவும் இருந்தான். அன்று டெங்கு ஜுரத்திர்க்காக இரத்த பரிசோதனை செய்த முடிவை பார்த்தபோது அவனுக்கு டெங்கு ஜுரம் இல்லை என்பது தெரிந்தது, முடிவைப்பார்த்த மருத்துவர் டெங்கு ஜுரம் இல்லை ஆகவே டைப்பாய்டு ஜுரமாக இருக்குமோ என்று இரத்த பரிசோதனை செய்யச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையும் செய்துவிட்டு அதன் முடிவிற்காக காத்திருந்தோம்.
மறுநாள் டைப்பாய்டு ஜுரம் இல்லை என இரத்த பரிசோதனை முடிவு வந்தபோது. அந்த சிறப்பு மருத்துவர் கூறினார் இது எதோ வைரல் ஜுரமாக இருக்கும் என்பதால் அதற்க்குண்டான சோதனைகளை செய்யச்சொன்னார். இதைப்பார்த்த எனது மகன் அங்கேயே சண்டைக்கு வந்துவிட்டான் எனக்குத்தான் இப்போது ஜுரம் இல்லையே வைரல் ஜுரம் இருக்கலாம் என்றால் அதற்குண்டான மருந்து மாத்திரிகளை எழுதித் தரலாமே என்றான். மருத்துவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு மருந்து மாத்திரைகளை எழுதித் தந்தார்.
அந்த தனியார் மருத்துவமனையில் இருந்த இரத்த பரிசோதனை நிலையத்தின் மீது சந்தேகம் எழுந்ததால், வேறொரு பிரபல இரத்த பரிசோதனைக் கூடத்தில் என் மகனின் இரத்தம் பரிசோதித்தபோது, அந்த குறிப்பிட்ட இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை தேவையான அளவிலும் சென்ற பரிசோதனை முடிவைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது தெரியவந்தது.
எனக்கு என்ன சந்தேகமென்றால். இரத்த பரிசோதனையைக் கூடவா மருத்துவமனைக்கு சாதகமாக அமையுமாறு பரிசோதனை முடிவு என சான்றளிக்கப்படுவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. விவரம் கேட்டபோது அந்த மருத்துவமனையில் இரத்த பரிசோதனைகள் செய்வது வேறு ஒரு பிரபல இரத்த பரிசோதனை செய்யும் குழுமம் என்பது தெரியவந்தது. இதில் கூடவா கொள்ளை லாபம் அடிக்க கூட்டு முயற்சியில் ஈடுபடுவார்கள். விவரம் தெரியாத பலர் தமது குழந்தைகளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் மருத்துவம் என்கிற பெயரில் நிறைய பணம் செலவு செய்கிறார்கள். மருத்துவம் எப்படியெல்லாம் வியாபரமாகிக்கொண்டு போகிறது என்று பார்க்கையில் மனம் பட படக்கிறது.
இது குறித்து நிறைய விவரங்கள் தெரியவந்தது நேரமின்மையால் பிறகு வேறு ஒரு பதிவில் தெரிவிக்கிறேன்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment