FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, October 7, 2015

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???


ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 5 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார். நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை... 


கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது, இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்...



கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா! 



உங்களை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்று கேட்டால், நீங்கள் 100% சதவீதம் என சொல்ல தயங்கி 99% சதவீதம் என்று கூறுவீர்களானால்... உங்களின் மதிப்பெண் "99" என்பது  உங்களுக்குத்தான் "99" என்று தெரியும், அதுவே உங்களின் எதிரில் இருப்பவர்களுக்கு "66" என்று தெரியும். ஆகவே இனி உங்களை நீங்கள் 66 என்று மதிப்பிட்டு, நூறு சதவீதத்தை எட்டுவதற்கு மேலும் நிறைய கற்றுக்கொள்ள நினைத்தால் அதுவே மற்றவர்களின் பார்வையில்  "99" என உங்களின்  மதிப்பை உயர்த்திக் காட்டும்.........அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

No comments:

FREE JOBS EARN FROM HOME