....அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (24+6=30). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம்.. புரிந்ததா?????
நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு, இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள். எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.
உதாரணத்திற்கு வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பெரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும் .
முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும்.
உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் பணிநிரந்தரம் மற்றும் பதவி உயர்வு பெற்றிட தேவையான முயற்சிகளையும், உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம் என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு 6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு 6 மணி = மொத்தம் 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது இது உங்களுக்கு, பணம்பழம போன்ற நெல்லிக்கனி" (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).
மேலும் தற்போது உங்களின் ஊதியம் உதாரணமாக 1000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 2000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.
பாடல்:- "பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே"...
....அப்படி நீங்களும் பயனடையும்போது அவசியம் உங்களது அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment