"உங்களது வருமான வரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை திரும்ப உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்"
மேற்கண்ட படத்தில் உள்ள போலி மின்னஞ்சலை பாருங்கள். அப்படியே அச்சு அசலாக இந்திய வருமான வரித்துறையிலிருந்து வந்த மின்னஞ்சல் போலவே இருக்கும் ஒரு போலி மின்னஞ்சல் இது. "உங்களது வருமானவரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை உங்களுக்கு திரும்பி உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்" என்ற இப்படி ஒரு இ-மெயில் உங்களுக்கு வந்தால் மகிழ்ந்துவிடாதீர்கள். உணர்ச்சிவயப்பட்டு அவர்கள் சொடுக்க சொன்ன இனைய முகவரியில் சென்று உங்களைப்பற்றிய, தொலைப்பேசி, வங்கிக்கணக்கு போன்ற முழுவிவரங்களையும் தந்தால், உங்களது வாங்கிக்கணக்கிலிருக்கும் மொத்த பணமும் காணாமல் போகிவிடும்..
இந்திய வருமானவரித்துறை என்றிருக்கும் எழுத்துக்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் சொடுக்கு வலைதள முகவரி, வேறு ஒரு நாட்டின் போலி வலைதளத்தின் முகவரியாகும். மின்னஞ்சலில் தரப்பட்டிருக்கும் "இங்கே சொடுக்கவும்" என்கிற குறியீட்டின் பின்னால் நம் கண்களுக்கு தெரியாத அளவில் வேறு ஒரு நாட்டின் போலி இணையதள முகவரி தரப்பட்டிருக்கும். நீங்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை சொடுக்கியவுடன் அந்த வெளிநாட்டினரின் இணையத்தளத்திற்குள் சென்று அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் தந்ததும். அந்த வெளிநாட்டு போலி இனைய நிறுவனத்தினர் உங்களது வங்கியிலிருக்கும் பணத்தை முழுமையாக அவர்களின் போலி வாங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அந்த தொகையை வங்கியிலிருந்து எடுத்தபிறகு, அவர்களின் வாங்கிக்கணக்கை மூடிவிட்டு கம்ம்பிநீட்டிவிடுவார்கள். பணத்தை பறிகொடுத்த நீங்கள்தான் வெளிநாட்டிற்கு மாற்றப்பட்ட உங்களது பணத்தை பெறுவதற்கான எந்த வழி வகைகளும் கிடைக்காமல் ஏமாந்துபோக நேரிடும்....
ஆகவே எந்த இனைய வலைத்தள முகவரியை சொடுக்கும்போதும், நீங்கள் செல்லவேண்டிய சரியான முகவரியின் இணையதள வலைப்பக்கம் திறக்கிறதா என்று கணினி திரையின் மேற்பகுதியில் இணையதளத்தின் முகவரியைக்காட்டும் பகுதியில் http://xxxxxxx சரியாக முகவரியை காட்டுகிறதா என்பதை முழுமையாக உறுதிசெய்துகொள்ளுவது மிக மிக அவசியம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு வந்த மின்னஞ்சலின் சொடுக்கு பட்டனை சொடுக்கியபோது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இணையதள முகவரி மாறிக்கொண்டேயிருந்தது ஒருநாள் இங்கிலாந்து நாட்டின் www.xyz.co.uk இனைய முகவரியும் வேறொரு நாளில் நெதர்லாந்து நாட்டு www.xyz.nl இனைய முகவரியும், மற்றும் ரஷ்யாவின் இனைய முகவரி என்று... ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டேயிருந்தது.
ஆகவே உங்களது சொந்த விவரங்களை கேட்கும் எந்த ஒரு வலைத்தளத்தையும் உடனே நம்பி விவரங்களை பகிர்ந்துவிடாதீர்கள். போலியான முகவரி என்று எப்படி தெரிந்துகொள்வது என்பதற்கு பல வழிகள் உள்ளது அதற்காகவே சில கணினி செயலிகளும் உள்ளது அவைகளை பயன்படுத்தி எந்த ஒரு வலைதள முகவரியையும், மின்னஞ்சல் முகவரியையும், தொலைபேசி போன்றவைகளையும் உண்மைத்தன்மையை அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்ளமுடியும்.
@ போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிதல்:- ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிய நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள் அங்கே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முகவரி யாருடையது சரியானதா போன்ற விவரங்களைப்பெறலாம், போலியைக்கண்டறியும் அந்த இணையதளத்துக்கான லிங்க் : http://www.verifyemailaddress.org/
@ வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதாகவும், அந்த மெயிலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது பதிவு இறக்கம் செய்யவோ வேண்டாம் என்று இந்திய வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
@ உங்களுக்கு ஏதேனும் போலியான மின் அஞ்சல் வந்தால் வருமான வரி துறையின் தேசிய இணையதளத்தில் உள்ள >'ரிப்போர்ட் ஃபிஷிங்' பகுதியை பார்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி துறையின் >www.incometaxindia.gov.in இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வருமான வரி துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தவறாமல் பின்னூட்டமிடுங்கள். மேலும் விவரம் தேவைப்படுவோர்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment