FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 17, 2017

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! A picture is worth a thousand words!

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! A picture is worth a thousands of words!

இந்த ஓவியப்படத்தைப் பார்த்த உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ...... 

வாழ்க்கையில் அனைவருக்கும் இது ஒரு உதாரணம்.

இந்த ஓவியம் கூறும் கருத்து!!!!

@பெரிய படகு (கம்பெனி) மூழ்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட நலன்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பெரிய படகை (கம்பெனி) காப்பாற்ற யாரும் முயற்சி செய்யவில்லை. அவர்களது சொந்த தனிப்பட்ட இலாபங்களைத்தான், தன்னகப்படுத்தும் முயற்சியை செய்கிறார்கள். 

அவர்களால் அந்த பெரிய மூழ்கும் கப்பலை (மோசமான நிலையிலிருக்கும் நிறுவனத்தை) காப்பாற்றமுடியும். ஆனால் அவர்கள் தங்களுடைய சிறிய படகான சுய லாபத்தை பெறுவதே தனது  முழுமையான நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். 

பெரிய படகு (கம்பனி) மூழ்கிவிட்டால் அவர்கள் சிறிய படகில் ஓடிவிடுவார்கள் ... இது பெருநிறுவன அரசியலா அல்லது குறுகிய எண்ணம் கொண்ட தொழிலாளர்களின் என்னமா? 

பெரும்பாலான பொதுநிறுவனங்கள்கூட  இதுபோல் செயல்படுகின்றன. பல தனியார் நிறுவனத்திலும் சில மேலாளர்கள் இப்படித்தான் சுய நலம் கருதி வேலை செய்கின்றனர்.

@ மக்கள் ஒரு அணியாக திரண்டு மிகப்பெரிய அரசு கப்பலை இயக்கி பயன்பெற நினைக்கிறார்கள் ஆனால் சில சுயநலவாதிகள் அந்த அரசுக்கப்பலை உடைத்து சிறு சிறு படகுகளாக்கி பாழ்படுத்திவிடுகிறார்கள்.  

@ ஒரு அரசியல் கட்சியை (கப்பல்), உடைத்து தனித்தனியாக செல்லும் சுயநலவாதிகளின் அரசியல் (படகுப்) பயணம். 

@ பொதுவாழ்க்கையில் சில சுயநலவாதிகளின் சூட்சமம் இது.

@ சுயநலத்தோடு விளையாடும் ஒரு விளையாட்டு அணிகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு நிறுவனம் நிலைத்து நிற்கவோ அல்லது நிர்மூலமாவதோ அந்த நிறுவனத்தின் நிர்வாக மேலாளரின் கையில் இருக்கிறது. அவரின் அந்த நிறுவனத்தை, மிகச் சிறந்த நிலைக்கு உயர்த்தும் அவரது  எண்ணத்தை, அவரோடு சேர்ந்த அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களின் மனங்களிலும் விதைக்கவேண்டும்... அப்படி அனைவரோடு சேர்ந்த அவரது சிறந்த எண்ணம்தான் அவரையும் அவரது நிறுவனத்தையும் உயர்த்தும். 

ஆகவே உங்களோடு சேர்ந்த மற்றவர்களையும் உயர்த்துங்கள் நீங்களும் உயர்வீர்கள்.... 

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி.

No comments:

FREE JOBS EARN FROM HOME