FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, March 16, 2016

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை.

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை. நன்கு சிந்தியுங்கள் மாற்றம் வேண்டும் என்று கூறி அவர்களுக்குத்தேவையான மாற்றத்தை உங்களை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முதலில் நீங்கள் உங்களின் அலுவலத்தில் உங்களின் வேலையை செய்கிறீர்களா அல்லது பிறரது வேலையை செய்கிறீர்களா என்று நீங்களே உங்களைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.   உலகின் 96 % மக்கள் அவர்களது பணியை செய்யாமல், மற்றவர்களின் பணியை செய்து உழைக்கிறார்கள். எப்போது ஒரு மனிதன் தன்னைப்பற்றி உணர்ந்து தனது முன்னேற்றத்திற்கு உழைக்கிறானோ அப்போதுதான் அவன் உயர்வான ஒரு நிலையைப் பெறுவான். 

நிர்வாகிகள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட செயலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட்டால் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இதைத்தான் நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்..... அப்படி முன்னோர்கள் கூறிய அந்தக்கதைதான் என்ன?


ஒரு ஊரில் துணிகளை துவைக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர் அவரது வீட்டில் அவருக்கு உதவியாக இருக்க ஒரு கழுதையையும், அவரின் வீட்டு காவலுக்கு என ஒரு நாயையும் மிக அன்போடு பராமரித்து வளர்த்துவந்தார்.

ஒருநாள் இரவு ஒரு திருடன் அந்த சலவைத் தொழிலாளியின் வீட்டில் இருக்கும் பொருளை திருடுவதற்காக சிறிது தொலைவில் மறைந்திருந்து, இரவு அனைவரும் தூங்கட்டும் பிறகு திருடலாம் என காத்திருந்தான்.

இதைப்பார்த்துவிட்ட சலவைத் தொழிலாளியின் வளர்ப்புக் கழுதை, தமது எஜமானர் வீட்டுக்கு திருடன் திருட வந்திருப்பது தெரிந்து மனம் பதறியது, கழுதையின் அருகே அமைதியாக படுத்திருக்கும் அந்த வீட்டு நாயிடம், கழுதை தனது பதற்றத்தை கூறி அவர்களது எஜமானரை எழுப்பி நடக்கவிருக்கும் திருட்டை தடுக்க உதவுமாறு கூறியது. அதற்க்கு நாயும் அந்த திருடன், திருட ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டதாகவும், திருடனை பிடித்து திருட்டை தடுக்கவேண்டியது இந்த வீட்டு நாயான தன்னுடைய வேலை எனவே நான் பார்த்துக்கொள்கிறேன், கழுதையே நீ சற்று அமைதியாக உன்னுடைய வேலையை கவனி என்றது.

பதற்றமாக இருந்த கழுதை, எப்படியாவது திருடன் வந்திருப்பதை தமது எஜமானருக்கு தெரியப்படுத்தவேண்டும் என தனது சக்தியை எல்லாம் திரட்டி உரக்க கத்தியது .....

கழுதையின் கத்தலைக் கேட்ட சலவைத் தொழிலாளி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான், இந்தக் கழுதை ஏன் இப்படி நாடு இரவில் எனது தூக்கத்தைக் கெடுத்து கத்துகிறது என்று வீட்டின் கூரையில் சொருகி இருந்த உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்தான், அங்கு கத்திக்கொண்டிருந்த கழுதையின் முதுகில், தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரு அடி அடித்து, கழுதையே உனக்கு என்ன வந்தது வாயை மூடி அமைதியாக படுத்துக்கிட, ஏன் எனது தூக்கத்தைக் கெடுக்கிறாய் என்று கூறி மேலும் ஒரு உருட்டுக்கட்டை அடியை கழுதைக்கு தந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான். 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாய், கழுதையைப் பார்த்துக் கூறியது. நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் என "அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் உதய் விழும்" என்றது.....        

இது அலுவலக மேலாண்மைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற, சிறந்த இடத்தைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  

மேலும் ஒரு உதாரணத்திற்கு... வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும், யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும்.

"பாடல்:- இந்த மாநிலத்தைப் பாராய் மகனே! உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே! இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா! முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா!!!! ...."

முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 

உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த முயற்சிக்கான, உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).

பாடல்:- "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்பதை நேரம் + நிர்வாகம் = வெற்றி என்கிற நூலாக்கி, நேரத்தை நமது நிர்வாகத்தில் வைப்பதன் முக்கியத்துவத்தை மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார் கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள்....

மேலும் தற்போது உங்களின் மாத ஊதியம் 10000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 20000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.

"பாடல்:-உள்ளத்திலே உரம் வேண்டுமடா, உண்மையிலே திறம் காணுமடா,  ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா..........ஏட்டுச சுரைக் காயெல்லாம், மூட்டை கட்டியாகணும், நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்....." 
ஆகவே அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது "நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும்". 

நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு, இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.

"பாடல்:-புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...."

இப்போது நாம்,  நமது உயர்விற்கான தலைவிதியை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்..... இதற்க்கு நாம் நமது அனைவரது வாழ்விலும் உள்ள ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். வழக்கமாக நாம் அலுவலகம் செல்ல பேரூந்து நிறுத்தத்தில் பலமணி நேரம் காத்துக்கிடந்தும் நமக்குத் தேவையான அந்த பேரூந்து உடனே வருவதில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இருந்தாலும் அரை மணிநேரமாகியும் எந்த ஒரு பேரூந்தும் வாராதது நமது தலைவிதி என்று நினைப்போம். மறுநாள் நமக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியமிருக்காது, நாம் வேறு வேலையாக நேற்று நின்றிருந்த அதே பேரூந்து நிலையத்தைக் கடக்கின்றபோது, நேற்று எந்த பெரூந்திர்க்காக வெகுநேரம் காத்திருந்தோமோ அதே பேரூந்து ஒன்றன்பின் ஒன்றாக காலியான இருக்கைகளுடன் இரண்டு மூன்று பேரூந்துகள் செல்வதைப்பார்க்கலாம்.

"பாடல்:- சொல்லாதே யாரும் கேட்டால், எல்லோரும் தாங்கமாட்டார்... ....விதி என்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கையில்லை ...." 

ஆகவே ஒன்று நிச்சயமாக தெரிகிறது, எது நமக்கு வேண்டுமோ அது நமக்கு கிடைக்காது, எது நமக்கு வேண்டாமோ அது நிறைய கிடைக்கும்" இதுதான் நமது தலைவிதி என்று தெரிந்துவிட்டதால் இனி நாம் நமது வாழ்க்கையை எது கிடைக்கிறதோ அதை நோக்கி அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். அது எப்படி என்று மேலும் தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.  

பாடல்: "மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு, அதை தாவ விட்டால், தப்பி ஓட விட்டால்... நம்மை பாபத்தில் ஏற்றிவிடும்..."

பொதுவாக மனிதனின் மனம், "இது" இருந்தால் நான் இன்னும் சிறப்பாக இருப்பேன் என்கிற மனநிலையில் "இது (அல்லது) அது" என்பவற்றிற்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக இன்னும் அதிக சம்பளம் கிடைத்தால் நான் இன்னமும் அதிக நேரம் கடுமையாக உழைக்கத் தயார் என்கிற கூற்று அனைவரின் மனதிலும், அதோடு சொல்லிலும், செயலிலும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம், ஆகவே மனிதனின் மனம் "பணம்" என்கிற ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் "கோழை" என்று சொன்னால் எத்தனை உள்ளங்கள் இது சரியான கூற்று என்று ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறது??????. 

"பாடல்:- மயக்கமா? கலக்கமா?...மனதிலே குழப்பமா?... வாழ்க்கையில் நடுக்கமா?......." 

வேறு ஒரு உதாரணத்தையும் சொல்கிறேன்.... ஒருவர் மற்றவரை ஒப்பிட்டு தனது நிலையைப் பற்றி நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார். நான் செய்யும், அதே பணியை செய்யும் அவருக்கு என்னைவிட அதிக சம்பளம் என்பார்... "எனக்கு ஒருநாளைக்கு ரூ300 என்றால் அதே வேலையை செய்யும் அவருக்கு ரூ400 ஏன்?" என்பார்... 

அதற்க்கு நான் அவரிடம் ..... "நீங்கள் ரூ600 க்கு தகுதியுடையவர் பின்பு ஏன் ரூ 400ஐப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்???? என்றேன்".... 

அப்படிஎன்றால் எனக்கு ரூ 600 கிடைக்கவேண்டுமல்லவா ஏன் கிடைக்கவில்லை? என்கிற அவரின் கேள்விக்கு நான் தந்த பதில்.... "அது உங்களின் கையில் அல்லவா இருக்கிறது... முதலில் ரூ 600க்கு உண்டான வேலையை, திறமையை செயலில் காட்டுங்கள். பிறகு என்னை வந்து பாருங்கள்.... என்றேன். 

"பாடல்- உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீதான் நீதிபதி... மனிதன் எதையோ பேசட்டுமே.... மனச பார்த்துக்கோ நல்லபடி உன் மனசை பார்த்துக்கோ நல்லபடி....." 

ஆகவே ஒரு ரகசியத்தை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.... நீண்ட ஒரு வரிசையில் நிர்ப்பவர்களில், முதலில் யார் நிற்கிறார்களோ அவர்களை மட்டுமே நாம் பார்க்கமுடியும். அவர்களின் பின்னால் நிர்ப்பவர்களை நம்மால் பார்க்கமுடியாது.  உலகத்தின் பார்வை யார் முதலில் இருக்கிறார்களோ அவர்களின் மீது மட்டுமே இருக்கும், அதாவது, நல்ல சம்பளம், நல்ல வாய்ப்பு என ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நீங்கள் நின்றுகொண்டிருந்தாள்... பின்னல் நின்றுகொண்டிருக்கும் உங்களை யாருக்கும் தெரியாமலே போய்விடும். அடுத்த 10 வருடங்கள் ஆனாலும் நீங்கள் முன்னேறமுடியாது. ஆகவே ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நிற்கும் உங்களின் முடிவை விட்டுவிடுங்கள். குறைவான சம்பளம் அல்லது சம்பளமே இல்லையென்றாலும் சிறப்பாக எந்த வேலையையும்  செய்து முடிப்பேன் என்கிற முடிவோடு செயல்பட்டு, முதலிடத்தில் நில்லுங்கள்..... பிறகு பாருங்கள்... உங்களின் சிறப்பான செயலை பாராட்டி பதவியும் பணமும் உங்கள் பின்னால் வரும்..... உங்களுக்கு எது தேவையோ அனைத்தும் உங்களின் பின்னால் வரும்... உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உங்களின் பின்னல் வரும் அவைகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால் உங்களின் அதிகாரிக்குப் பின்னால் செல்லும் உங்களைத்தான், அவரது முன்னேற்றத்திற்கு அவர் பயன்படுத்திக்கொள்வார். 

"பாடல்:- பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே ...கருடன் சொன்னது.... அதில், அர்த்தம் உள்ளது..."

முதலில் உங்களின் முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் தேவை என்பதை தேர்ந்தெடுத்து அதற்க்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், படிப்படியாக நீங்கள் உயர்ந்தநிலை அடைந்தபிறகு, அந்த உயர்நிலையை சரியானபடி தக்கவைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.....  பலர் மகாபாரத அபிமன்யுவைப் போல வேகமாக உயர்வான நிலையை எட்டிப்பிடித்து பிறகு அந்த உயர் பதவியை த்க்கவைத்துக்கொள்ளமுடியாமலும், அந்தப்பதவிக்கு கீழ் நிலைக்கு வரமுடியாமலும், தட்டுத் தடுமாரிவிடுகிரார்கள்... ஆகவே நீங்கள் பெற்ற உங்களின் உயர்நிலையை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதைப்பற்றி  பார்ப்போம் ....தொடரும் 

"பாடல்:- துணிந்து நில், தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி... உள்ளதை சொல், நல்லதை செய்... தெய்வம் இருப்பதை நம்பி...."

.... அன்புடன் கோகி -ரேடியோ மார்கோனி.   

No comments:

FREE JOBS EARN FROM HOME