FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 4, 2016

2016 ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து கிரகணங்கள் நிகழும்.

2016 ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து கிரகணங்கள் நிகழும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புது தில்லி, மார்ச்-9 -2016 அன்று நடக்கவிருக்கும் பகுதி சூரிய கிரகணத்தை சிங்கப்பூரர்கள் முழுமையாக காணலாம். மிக அரிதான நிகழ்வாகக் கூறப்படும் இந்தக் கிரகணத்தில் உச்சநிலையின்போது கிட்டத் தட்ட 90% விழுக்காட்டுச் சூரியனைச் சந்திரன் மறைக்கும் இந்த சூரிய கிரகணம்  இந்தியாவில் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் இறுதிகட்ட நேரத்தில் மட்டுமே காணக்கூடிய சூரிய கிரகனமாகும், மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதியில் இந்த  சூரிய கிரகனத்தை பார்க்கமுடியாது. மலேசியா, சிங்கப்பூருக்கு இந்த சூரிய கிரஹனம் முழு சூரிய கிரஹனமாக எளிதில் பார்க்ககூடியதாக இருக்கும்.  

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில், கிரகணம் தொடக்கப் பகுதி தெரியாது, கிரகனத்தின் இருதிகட்டாத்தில் சூரிய உதயம் அதாவது ஓரளவு ஒளிமங்கச்செய்யும் சூரிய உதயத்திற்கு முன் இருக்குமாறு தெரியும்.

இந்த சூரிய கிரஹனம் இந்திய நேரப்படி அதிகாலை 4.49 மணிக்கு தொடங்கி முழு கிரகன நிலையை 5.47மணிக்கும் பிறகு காலை 6.48 மணியளவில் இருதிகட்டநிலையை அடையும். 


பித்ரு தர்ப்பணம் என்னும் மூதாதையர்களுக்கு செய்யும் சூரிய கிரகன கால தர்ப்பணம் என்பது சூரிய உதயத்திற்கு முன்பு செய்யவேண்டிய சடங்கு ஆகவே உங்களின் பகுதியில் காலை (5அம டு 6.50அம) 5மணியிலிருந்து  6.50மணிக்குள்  சூரிய உதயம் இருக்குமானால் சூரிய உதயத்திற்கு முன்பு செய்யலாம். நீங்கள் வசிக்கும் பகுதியில் காலை 6.50மணிக்கு மேல் சூரிய உதயம் இருக்குமானால் கிரகண தர்ப்பணம் செய்யத் தேவையில்லை.  
சூரிய கிரகனத்தைப் பார்க்கலாமா? விஞ்ஞன முறைப்படி சூரியவிட்டத்தை சந்திரன் கடக்கும் நிகழ்வான அதாவது சூரியனுக்கும் பூமிக்குமிடையில்  சந்திரனின் வருவதால் ஏற்ப்படும் இந்த நிகழ்வைப் பார்க்கலாம் தவறில்லை,  மெய்ஞான முறைப்படி இப்படிப்பட்ட கிரகனத்தின்போது தாறுமாறான சூரிய கதிரானது நேரடியாகவோ அல்லது நவ கோள்களின் மீது பட்டு பிரதிபலிப்பு தாறுமாறான கதிர்களாக உயிர்களின் மீது விழுவதால் உயிர்களின் சக்திக்கு ஊரு விளைவிக்கும் நிலையை உண்டாக்குகிறது என்பது பண்டைய புராண காலத்திலிருந்து கூறப்படும் கூற்று. அறிவியல் முறையிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.  

ஜோதிடம்:- சூரியனின் கதிர்கள் நேரடியாக உயிர்களின் மீது படுவது சிறப்பானது அதைவிட சிறப்பாக அதன் பிரதிபலிக்கும் ஒளிக் கதிரானது இரண்டுமடங்கு சிறந்தது, அது உள்ளத்திற்கும் உணர்வுகளுக்கும் புதிய தேம்பைத்தருகிறது.... அதாவது சூரிய ஒளிக் கதிரானது சந்திரன் மற்றும் பிற கோள்களின் மீது பட்டு பிரதிபலிக்கும் ஒளிக் கதிராக நம் மீது படும்போது  உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகப்பெரிய சக்தியை தருகிறது அதைத்தான் நாம் 9-நவ கோள்களின்  சக்தியாக (கோள்களின் பார்வை என)  உணருகின்றோம். 

அடுத்த சூரியகிரஹன  வரும் 09-மே-2016 திங்கள் அன்று புதன் கோளானது சூரிய விட்டத்தை கடக்கும்போது ஏற்ப்படுகிறது. இது மாலை 4மணியிலிருந்து சூரியன் (அஸ்தமிக்கும்) மறையும் வரை  இந்தியாவின் அனைத்துப்பகுதியிலும் தெரியும். 


இந்த சூரிய கிரஹனம்  பூரட்டாதி நட்சத்திரத்தில் ஏற்ப்படுகிறது,  இந்த சூரிய கிரகன தோஷ நட்சத்திரங்கள்:-சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம். என இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகன கதிர்களினால் உடலும் மனமும் தாக்கப்படாமல் தம்மை காத்துக்கொள்ள, கிரகன தோஷ சாந்தி செய்துகொள்வது சிறந்தது  

1. சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை வழிபட்டால், எப்படிப்பட்ட கிரகன தோஷங்களின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம். 


2. பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் கிரகன காலத்தில் தீர்த்தமாடி, சுத்தமாய் அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றவும். பிறகு முடிந்தால்  கிருஷ்ணன் கோவில் சென்று பெருமாளை சேவிக்கவும்.

3) கிரகன காலத்தில் (ஆண்கள்) தீர்த்தமாடி காயத்ரி ஜபம், அஷ்டாக்ஷரம், த்வயம், சர்மா ஸ்லோக ஜெபங்களை முடிந்தவரை செய்யவும். இக்காலங்களில் ஜபம் செய்வது பத்து மடங்கு ஜபம் செய்யும் பலனை அளிக்கும்.

4) பெண்கள் குழந்தைகள் ஸ்லோகம், ச்தோற்ற பாடம் முதலியவைகளை பாராயணம் செய்யலாம்.

5) அனைவரும் காலை 7.00 மணிக்கு மேல் தீர்த்தமாட வேண்டும்.

6) கிரகணம் விடியற்காலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கின்றது. எனவே கிரகணம் முடிந்த பின் தீர்த்தமாடி, சமையல் செய்து சாப்பிடலாம். அதாவது காலை 7.00 மணிக்கு மேல்.

7) நேற்று இரவு சமைத்த உணவை மீதம் வைத்து சாப்பிட வேண்டாம்.

8) ஊறுகாய், தயிர் போன்றவற்றில் தர்ப்பம் (நுனி கிள்ளிப் போட்டு ) போட்டு வைக்கவும். தர்ப்பைப்புல்லானது கிரகன கதிர்களை நெருங்கவிடாமல் காக்கும் சக்திபடைத்தது. 

9) இங்கே குறிப்பிட்டவை தவிர வேறு சந்தேகங்கள் இருந்தால் வாட்சப்பில் தொடர்புகொள்ளுங்கள்.

நன்றிகளுடன் ரேடியோ-கோகி. 

No comments:

FREE JOBS EARN FROM HOME