"*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*
`நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்’ - என்பதுதானே நம் அனைவரின் ஆசை. ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே. நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். (இனிமையான சுவீட் கொடுத்து கொண்டாடுவார்கள்) மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, `இதைவிட இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே’ என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார் கள். இதைத்தான், `மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி என்பது அந்தந்த தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள். சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது பாசிட்டிவ் நேர்மறை எண்ணங்கள்தான்.
ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சித்தரும் எவையும் நமது மனதை நேர்மறைத்தன்மைக்கு கொண்டுவரும் சக்திகள்.
"*நேர்மறை சக்தி தரும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 12 வழிகள்!"*
1.நமது வீடுகளில் வரவேற்க பாசிட்டிவ் வார்த்தைகள்! வருக வருக, ஆனந்தம் ஆனந்தம், மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லாம் நன்மைக்கே, ஓம் நமச்சிவாய, நமோ நாராயணா, போன்ற வார்த்தைகளடங்கிய படங்களை வாசல் கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டிவைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் செருகிவைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இவைகள் நமது மனங்களையும் நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் மனநிலையையும் மகிழ்ச்சியாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது.
2.உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக, மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். அதை பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியான எண்ணங்கள் மனதில் தோன்றும். முகம் பார்க்கும் கண்ணாடி, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், போன்ற கண்ணாடி பொருட்களை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு மனநிலையை உருவாக்கும். கேட்ட சக்திகளை கண்ணாடி வெளிச்சம் ஓட ஓட விரட்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
3.பிடித்த நிறங்கள்:-வண்ண வண்ண நிறங்களில் அமைந்த கதவு மற்றும் சன்னல் திரைகள் உட்காரும் இறுக்கை மற்றும் மேஜை மற்றும் தரை விரிப்புக்கள். உடைகள் போன்றவற்றை உபயோகிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
4. வாசனை புகை மற்றும் வாசனை திரவியங்கள் ... ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர், சந்தானம், ஜவ்வாது போன்றவைகளை உபயோகிப்பது மனதுக்கு புத்துணர்ச்சியை தரும்.
5. மணியடிக்கும் ஓசை, சீன (பிங் சுயி) தொங்கும் காற்று மணியோசை குச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் மெல்லிய மணியோசை மனதுக்கு சுகம் தரும் ஓசை, அதன் அதிர்வுகள் கெட்ட சக்திகளை ஓடச்செய்யும்.
6.ஒவ்வொரு அறையாக சென்று கைதட்டுதல் அல்லது குத்தடி குத்து, கும்மாங் குத்து, புடிச்சிக்கோ குத்து. போன்ற விளையாட்டுக்களை ஒவ்வோர் அறைகளிலும் விளையாடுவது கையை கையால் குத்துவது ஒரு யோகாசனமாகும் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஓசையெழுப்பி விளையாடுவது துர் சக்திகளை விரட்டியடிக்கும் அதோடு நமது உடலின் சுரப்பிகளை சீராக இயக்கும் அற்புதமான யோகாசனமாகும்.
7.வீட்டில் இசைக்கருவிகளை விரிசையாக காட்சிப்படுத்துவதும்... மங்களகரமானது, புல்லாங்குழல் ஸ்ரீ கிருஷ்ணன், கண்ணன், ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகவே கருதப்படும், எளிய இசைக்கருவிகளான புல்லாங்குழல், மவுத்தார்கண், ஜாலரா, சலங்கை, சங்கு, சோழிகள் "கடம்" மண் பானைகள், கஞ்சீரா, தப்பட்டை, மேளம், போகி மேளம், சில ஊதல்கள்,போன்ற மிக அதிக விலையில்லாத இசைக்கருவிகளைகூட வாங்கி பூஜையறையில் வைப்பது நமக்கும் மற்றும் நமது வீட்டிற்கு வருகைதருவோர்களுக்கும் மகிழ்ச்சி தரும் பொருட்கள். ஆகவே நமது வீட்டின் சுற்றுச்சூழல் சுபமானதாக மாறிவிடும்.
8.சிலவகை நம்பிக்கைத்தரும் பொருட்களை, பிரமீடு, முத்து பவழம் போன்ற நவரத்தின கற்கள், ஸ்படிக விநாயகர், சிரிக்கும் பொம்மை, தலையாட்டி பொம்மை, பணத்தவளை, உலோக காசுகள், சாமி டாலர், சந்தன கிண்ணம், குங்கும சிமிழ், போன்ற மேலும் பல் பூஜையறையில் மற்றும் வரவேற்பறையில் வைப்பதும் நேர்மறை எண்ணங்களுக்கு வலிமை சேர்க்கும்.
9. உளர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, வேர்க்கடலை, மற்றும் ஆரஞ்சு மிட்டாய், இஞ்சி மிட்டாய், சிப்ஸ் மற்றும் பிஸ்கட்டுக்கள், போன்ற சாப்பிடக்கூடிய சிலவகை உணவுப்பொருட்களை சாப்பிடும் மேசையின் மீது அனைவரது பார்வையில் படுமாறு வரிசையாக வைக்கவேண்டும். இது வீட்டில் உள்ளவர்களுக்கு மனதளவில் ஒரு எழுச்சியை உண்டுபண்ணும் அதாவது உடலையும் மனதையும் சீராக வைக்க சில சுரப்பிகளை சுரக்கச்செய்யும் யுக்திகள்...
10. உற்சாகம் தரும் பாடல்களை அடிக்கடிக் கேட்கலாம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாக இருந்தால், பக்தி பாடல்களைக் கேட்கலாம். நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்; எதிர்மறை எண்ணங்கள் நீங்க வழி ஏற்படுத்தித் தரும்.
11.வீட்டில் அணில், குருவிகள் சப்தம் மற்றும் குழவி(கெட்ட அதிர்வு இல்லாத வீட்டில்தான் குழவி வீடுகட்டும்) சப்தம் சிறப்பானது. பூனை, நாய், மீன்கள்...(ஆடு, மாடு, குதிரை) என செல்லப்பிராணிகளை வளர்ப்பது பாசிட்டிவ் எண்ணங்கள் வளர உதவும். செல்லப்பிராணிகளை அக்கறையோடு வளர்ப்பது, நம் கவலைகளை மறக்க உதவும். அலுவகப் பணி முடிந்து, எப்போது நம் செல்லப்பிராணியைப் பார்ப்போம் என ஏங்க வைக்கும். இது நம் மனநிலையை மேம்படுத்தும். உடனே உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை, இப்போதே உங்கள் வீட்டின் புது உறுப்பினராக்குங்கள்.
12.வீட்டின் வாசல்பகுதி, வரவேற்பறை, பால்கனி அல்லது மொட்டைமாடியில் அழகான வாசனை மலர் செடிகளை வளர்க்கும் வாய்ப்பிருந்தால் உடனே அதைச் செய்யவும். இடம் இல்லை என்றால் ஜன்னல் ஓரங்களில்கூட பூந்தொட்டியை வளர்க்கலாம். தினசரி அதற்கு தண்ணீர் ஊற்றுவதையும் கவனிப்பதையும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதன் வளர்ச்சி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதால், அதன் மூலம் உற்சாகம் பிறக்கும். தெய்வீக சுக்கிர சக்திக்கு உயிர் செடிகொடிகள் தரும் ஒருவித உந்து சக்த்தியால் எண்ணங்கள் சிறப்படைகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள்...
மேற்சொன்ன 12ம் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீடு லக்ஷ்மிகரமான இல்லம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
No comments:
Post a Comment