உங்களின் அனுபவத்தைக்கொண்டு எளிமையாக சம்பாதிக்க:- (அனுபவம் வாய்ந்த ஆலோசகராகவும் புத்தகம் எழுதியும் சம்பாதிக்கலாம்) நான் புத்தகம் எழுதுவது, புத்தக வியாபாரத்திர்க்காகவோ, புத்தகத்தை விற்று சம்பாதிக்கவோ அல்ல. இதில் மிகப் பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது. அதாவது என்னையும் எனது பெயரையும் பிரபலப்படுத்தி அதன்மூலம் எனக்குத் தேவையான பொருளாதாரப் பயனைப் பெறுவதற்கான முயற்சிகளின் முக்கியகட்டத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறேன். அதாவது எனது புத்தகங்களின் மூலம் நான் பல கல்வி நிறுவனங்களுக்கு அறிமுகமாகும்போது, பல மேலாண்மைப் பட்டய மற்றும் பட்ட மேற்ப்படிப்பு கல்வி நிறுவனங்கள், எனது அனுபவத்தை அவர்கள் கல்விநிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு அனுபவக் கல்வி பெற உதவுமாறு அழைப்பு விடுப்பதன் மூலமாகவும், அதற்காக அவர்கள் தரும் மதிப்பூதியத் தொகையானது, வாழ்க்கை முழுவதற்கும் தேவையான மிகப்பெரிய ஊதியமாக இருக்கும். (அதாவது ஒரு ஆண்டிற்கு ஒரு கல்வி நிறுவனத்திற்கு ஒருநாள் ஒரு முறை என்றால் ஒரு ஆண்டில் நூறு கல்வி நிறுவனங்களிலிருந்து பெரும் தொகையானது மிகப்பெரிய தொகையாக இருக்கும்.) பிறரிடம் கை கட்டி வேலை பார்க்கவேண்டியதில்லை, தள்ளாடும் வயதிலும் சம்பாதிக்கலாம். இபாடிக்கு கோகி என்னும் ரேடியோ கோபால கிருஷ்ணன்- தற்போது புது தில்லியிலிருந்து.
No comments:
Post a Comment