How to Remove Bad Luck by Prayer. பிரார்த்தனையால் எனது கெட்டகாலத்தை நீக்குவது எப்படி?
மனம் புலம்புகிறது "உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது. மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது". என்னுடைய கெட்டகாலம் என்னை பாடாய் படுத்துகிறது... விடிவுகாலம் எப்போது பிறக்கும்? இந்தக்கேள்வி பலரது எண்ணங்களில் ஏக்கமாக நிறைந்துகிடக்கிறது.
பிரார்த்தனை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பதும் தவறு. முதலில் பிரார்த்தனை என்றால் என்ன என்று முழுவதுமாக நாம் புரிந்துகொள்வது மிக மிக முக்கியம்....
"நான் நடந்துகொண்டிருக்கும்போது எனது கால் இடறி நான் கீழே விழப்போகிறேன்" என்று எனது மனம் நினைக்கின்ற அந்த நிமிடத்திலேயே எனது கால்கள் தானாக இடறி என்னை கீழே விழவைப்பது உறுதி. அதற்க்கு முக்கிய காரணம், கால் இடறி நான் கீழே விழப்போகிறேன் என்கிற பயமானதொரு எண்ணம் எனது மனம் முழுவதும் பரவிடும்போது, எனது மூளை என் உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடுவதற்கு முன்பாகவே எனது மனம் அனிச்சை செயலாக என்னுடைய காலை இடரச்செய்து என்னை கீழே விழவைத்துவிடும்".
இங்கு உடல் உறுப்புகள் செயல்பட எனது மூளையின் கட்டளை பயனற்றுவிடும் நிலையே எனது மனதின் தியான நிலை அல்லது பிரார்த்தனை, செய்துவிடுகிறது. மனம் எதை முழுமையாக நம்புகிறதோ அதுவாக நாம் மாறிவிடுகிறோம், அல்லது அதை ஏற்றுக்கொள்ள தயாராகிவிடுகிறோம்... என்பது உங்களுக்கு முழுமையாக புரியவரும்.
ஒரு விளையாட்டு தாயக்கட்டைகளை உருட்டுங்கள். உங்களது மனம் தாயக்கட்டையின் எந்த எண்களை முழுமையாக நம்புகிறதோ, உங்களின் மனம் முழுதும் அந்த எண்களே விழவேண்டும் என்று நினைக்கிறதோ, அந்த எண்கள் நீங்கள் உருட்டிய தாயக்கட்டையில் விழுவதை கண்கூடாக காணலாம். ஆனால் முழுமையான சிந்தனை அல்லது மனதின் பிரார்த்தனை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இது கண்கூடாக நிருபிக்கப்பட்ட ஒரு உண்மை சோதனை.
மேற்கண்ட உதாரணம் உங்களுக்கு புரியவில்லை என்றால் திரும்ப திரும்ப படித்துக்கொண்டே இருங்கள். அதை அப்படியே உங்களின் செயலிலும் சோதித்துப்பாருங்கள்.... நிச்சயம் உங்களுக்கு பிரார்த்தனையின் உண்மையான பொருள் விளங்கும்.
எப்போது உங்களுக்கு முழுமையாக புரிகிறதோ அப்போது..... முதலில் உங்களின் தேவைகளுக்கான பிரார்த்தனையை செய்து வெற்றி பெறுங்கள். அதன்பிறகு மற்றவர்களுக்கும் உங்களது பிரார்த்தனை உதவும் நிலைக்கு நீங்கள் உயரலாம். தயவு செய்து நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று என்னை கேள்வி கேட்காதீர்கள்? எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
உங்களுக்கு தெரியுமா? பத்தடி தூரத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒருவரை நீங்கள் நின்றுகொண்டிருக்குமிடத்திலிருந் தே மிக எளிமையாக உங்களின் மனத்தால் அவரை கீழே தள்ளிவிடமுடியும். (இது ஒருவகையான டெலிபதி போன்றதொரு தியான பயிற்சி விளையாட்டு). இது எனக்கு மலேசியாவில் நடந்த தியான பயிற்சியில் கிடைத்த அனுபவம். நல்லது செய்வதற்குத்தான் நமது மனதிற்கு நிறைய பயிற்சி தேவை.... !!!!
நான் சிறுவனாக இருந்தபோது 9ம் வகுப்பு படிக்கும்போது பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம தியானப்பயிற்சி, அதன்பிறகு சிவயோகி ஆசிரமத்தில் எனக்கு கிடைத்த தியானம் மற்றும் குண்டலினி யோகா பயிற்சி, சிங்கப்பூரின் சீனர்களின் ஆசிரம தியான பயிற்சி இறுதியாக நான் பெற்ற மலேசிய ஜோகூர் தியான யோகா பயிச்சி. இவை அனைத்துமே முழுமனதோடு ஒரு ஆவலினால் தூண்டப்பட்டு விரும்பி ஏற்றுக்கொண்ட எனது பயிற்சி அனுபவங்கள். இத்தனைக்கும் நான் எளிமையான குடும்பவாழ்க்கை பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் மிக மிக சாதாரணமானவன்.
இப்போது என்னுடைய மனதின் "மைண்ட் வாய்ஸில்" இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது .......
"சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்… செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது"…திரைப்படம்: சொர்கம், பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன், இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பாடியவர்: டி.எம். சௌந்தர்ராஜன்.
மீண்டும் வேறு ஒரு சிந்தனைப்பதிவில் சந்திப்போம்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment