ஆதரவும் அங்கீகாரமும்:- வாருங்கள் பாராட்ட தொடங்குவோமா????
ஆதரவளிப்பது, அங்கீகரிப்பது என்பது ஒருவருக்கு தன்னம்பிக்கையைத்தரும் முக்கியமான செயலாக போற்றப்படுகிறது. எந்த ஒரு முயற்சி அல்லது செயலுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் மனதிற்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது ஆகவே அதற்குப்பின்னால் தொடர்ந்து அந்த செயலை செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அதோடு மனதிற்கு ஏராளமான சக்தியும் கிடைத்துவிட்டாற்போல ஒரு புது உத்வேகத்துடன் அந்த செயலை மீண்டும் மீண்டும் செய்ய மனம் விரும்புகிறது.
வாருங்கள்.... நமது வாழ்க்கையில் "அங்கீகாரம்" என்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை இரண்டு உதாரணங்களில் நாம் தெரிந்துகொள்ளலாம்:-
இளம் தம்பதியர்கள், அவர்களின் குழந்தையை பள்ளியில் ஆரம்ப கல்வியில் சேர்த்து 6 மாதம் தான் ஆகிறது. அவர்களின் குழந்தைக்கு 1,2,3,4 என எண்களை சரியாக சொல்லத்தெரியாமல் பாதியிலேயே நிறுத்திவிட, குழந்தையின் பெற்றோர்களுக்கு கோபம் வர, அன்று குழந்தையுடன் பள்ளி ஆசிரியரை சந்தித்து அதுபற்றி விவரம் கேட்டார்கள்.
அதற்க்கு அவரின் குழந்தைக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியரோ. உங்களது குழந்தை மிகவும் கெட்டிக்காரர் நன்றாக படிப்பவர், தொடர்ந்து 1முதல் 100 வரையிலான எண்களை வரிசையாக பிழையின்றி கூறக்கூடியவர் என்று கூறி ஆசிரியர் அவரின் குழந்தையிடம் எங்கே ஒன்று இரண்டு என 100 வரை விடாமல் சொல்லு என்று கேட்க.
அதற்க்கு குழந்தையும் 1-ஒன்று என்று ஆரம்பித்து ஒவ்வொரு எண்களை சொல்லும்போதும் ஆசிரியர் அதற்க்கு ம், ம் , ம்,.சரியாகச் சொல்கிறாய் ... என்று தொடர்ந்து சொல்லி அந்தக் குழந்தையை ஊக்கப்படுத்தியபோது, குழந்தையும் 100 எண்கள் வரை சரியாக பிழையின்றி கூறி முடித்தது.
அப்போது அந்த ஆசிரியர் குழந்தையின் பெற்றோர்களிடம் ... "குழந்தைகளிடம் நாம் எதை எதிர்ப்பார்த்தாலும் அவர்களை உற்சாகப்படுத்துவிதமாக அதற்குண்டான அங்கீகாரத்தை அவர்களுக்குத் தந்தால்தான், அவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் எந்த பதிலும் நமக்கு கிடைக்கும். அதை விடுத்து கேள்வியை கேட்டுவிட்டு, அவர்களை கவனிக்காமல் நீங்கள் உங்களது வேளைகளில் கவனமாக இருந்தால்... குழந்தையிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது". என்று கூறினார்.
இப்போது மற்றுமொரு உதாரணமாக....
அவர் நன்கு படித்த அறிவில் சிறந்த ஒரு கல்லூரி பேராசிரியர், அன்றய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கூட்டத்தில் உரையாற்றிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவர், நான் எப்படி பேசினேன்? நான் சிறப்பாக உரையாற்றினேனா? என்று தம்முடன் பணியாற்றும் வேறு ஒரு பேராசிரியரிடம் கேட்க.
அதற்க்கு அவருடன் பணியாற்றும் பேராசிரியரும், நீங்கள் சிறப்பாக பேசினீர்கள். இன்று உங்களது உரையில் அனைவருக்கும் பயன்தரும் வகையில் பல அபூர்வமான விவரங்களை குறிப்பிட்டீர்கள். மேலும் அதுபோன்ற ஒரு பேச்சை கேட்ப்போம் என்று நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை, நீங்கள் கூறிய விவரங்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது என்று கூற.
நன்கு படித்த அறிவில் சிறந்த ஒரு கல்லூரி பேராசிரியருக்கே தனது செயலுக்கு ஒரு அங்கீகாரமும் பாராட்டும் தேவை என்று எதிர்பார்க்கின்றபோது இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ஒரு அங்கீகாரத்தையும், ஆதரவையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கின்றன என்பதில் சிறு துளியும் சந்தேகமில்லை.
எனவே நாம் நமது வாழ்க்கைக்கு அவசியம் தேவையான அங்கீகாரத்தையும் ஆதரவையும், பாராட்டையும் பிறருக்கு தரும்போதுதான் அவைகள் நமக்கும் கிடைக்கும். அப்படிப்பட்ட அங்கீகாரத்தால் கிடைக்கும் அனுமதியும் ஆதரவும் பெருகும்போது, ஒரு புது உத்வேகத்துடன் எந்த செயலையும் நாம் விரும்பி செய்து முடிக்கமுடியும்.
ஆகவே எப்போதும், பிறரின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்கின்றவகையில் சிறந்த, தரமான, உண்மையான செயல்களையே செய்யுங்கள். அதேப்போல பிறரது திறமைகளையும் எப்போதும் அங்கீகரிக்க தவறாதீர்கள்.
வாருங்கள் பாராட்ட தொடங்குவோமா????
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எழுதிய குட்டிக் கவிதை இது.
"அதிகாரமும்
அங்கீகாரமும்
ஏழைகளுக்கு கிடைக்காத
எள்ளுருண்டைகள்...
அனுமதியும்
ஆதரவும் தரக்கூட
அழுக்குச்சட்டைக்கு
இடமில்லை...கோகி"
உங்களது பாராட்டுக்களுக்கு நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment