FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, July 12, 2017

ரேடியோ, நாய், சைக்கிள் வரி:- ஒரு மாநகராட்சியின் கதை...

ரேடியோ, நாய், சைக்கிள் வரி:- ஒரு மாநகராட்சியின் கதை 

வானொலி பெட்டி (ரேடியோ) வரி:-

அந்தக்கால கட்டத்தில்(1960-70) வால்வு ரேடியோ என்னும் குமிழ் மின்னூட்ட வானொலி கேட்கும் கருவிகள் பிரபலமாக இருந்த காலம். 1970களில் சென்னை, செங்கல்பட்டு  மற்றும் அதன் சுற்று வட்ட பகுதியில் ரேடியோ வரி மிகவும் பிரபலம். வீட்டில் ரேடியோ இருந்தால் அவசியம் ரேடியோ வரி கட்டவேண்டும்  , அந்த வரித் தொகையை அருகிலிருக்கும் தபால் நிலையத்தில் ஒரு கையடக்க புத்தகத்தில் வரித் தொகைக்கான தபால் தலை ஒட்டிய, தபால் நிலைய முத்திரையோடு தரப்படும் புத்தகத்தை பத்திரமாக வைத்திருக்கவேண்டும். ரேடியோ வரியை வருட வாரியாகவோ அல்லது மாதாந்திர தவணைத் தொகயாகவோ  கட்டலாம். இருந்தும் பலர் இந்த ரேடியோ வரியை கட்டமல் இருந்ததால். வரி கட்டாதவர்களின் வானொலிப்பெட்டியை பறிமுதல் செய்ய அதிகாரிகள் ஒவொரு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். பலர் வானொலிப்பெட்டியை மாட்டுக் கொட்டகையில் இருக்கும் வைக்கோலில் மறைத்து வைத்துவிட்டு, எங்கள் வீட்டில் ரேடியோ இல்லை என்று பொய் சொல்லுவார்கள், ஆனாலும் பக்கத்து வீட்டுக்காரர் அவர்கள் வீட்டில் ரேடியோ இருக்கிறது தினமும் நாங்கள் ரேடியோ சத்தத்தை கேட்க்கிறோம் என்று உண்மையை போட்டு உடைத்துவிடுவார்கள். விளைவு சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் ரேடியோ வரியை அபராத தொகையோடு கட்டவேண்டிய நிலை ஏற்ப்படும்.  1980-க்குப் பிறகு வானொலி ரேடியோ வரி நீக்கப்பட்டுவிட்டது.   

நாய் வரி:-

அந்தக்காலங்களில்1970களில் சென்னை நகரத்தில் வசிப்பவர்கள் அவர்களின் வீட்டில் பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்ப்பது வழக்கமாக இருந்தது. அதேபோல சென்னை நகரத்திற்கு அருகாமையில் அமைந்த மாவட்ட நகரங்களில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களிலும் விலை குறைவான வீட்டு மனைகள் வாங்கி வீடுகட்டிக்கொள்வதோடு அவர்களின் வீட்டு காவலுக்காக நாய்கள் வளர்ப்பது வழக்கமாக இருந்தது. 

ஒரு கட்டத்தில் நாய்க்கடிக்காக பலர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை   பெறவேண்டிய நிலை ஏற்ப்பட்டதோடு,  (அப்போதெல்லாம் நாய் கடிக்கு வயிற்று தொப்புள் குழியை சுற்றி 26 ஊசிகள் போடவேண்டும்)  இரவுநேரங்களில் தெருவில் நடமாடமுடியாமல் நாய்களின் தொல்லை அதிகமாகிவிட்டதால் மாநகராட்சியும், சில சென்னைக்கு அருகே அமைந்த கிராம பஞ்சாயத்து, நகராட்சி நிர்வாகமும், நாய்களுக்கு கட்டாய வருட வரி கட்டி அதற்கான அத்தாட்சி லைசென்ஸ் எண் தகடுகளை நாய்களின் கழுத்து பட்டையோடுகட்டவேண்டும்  என்று அறிவித்தது. அப்படி நாய் வரி காட்டாத நாய்களை பிடித்து கொன்றுவிடவும் கட்டளை பிறப்பித்தது.  

ஆணை பிறப்பித்தும் பலர் நாய் வரி காட்டாமல் இருந்ததால் நகராட்சிக்கு வரி காட்டாத அனைத்து நாய்களையும் பிடிக்க உத்தரவு போட்டு, பல இடங்களில்  நாய் வண்டிகளை வைத்து கழுத்தில் பட்டை(லைசென்ஸ்) காட்டாத நாய்கள் அனைத்தையும் பிடித்து அழித்தார்கள். பிறகுதான் தெரிந்தது நாய்களுக்கு வரி கட்டண வசூலைவிட நாயை பிடிப்பதற்கான செலவு அதிகம்ஆனதால் அந்த நாய் வரி திட்டம் நிறுத்தப்பட்டது. 


சைக்கிள் வரி என்கிற பழையகால மிதிவண்டி வரி:- 

சென்னை போன்ற பெருநகரங்களில் அப்போதெல்லாம் 1970களில் அலுவலகம் செல்லும் பலர் மிதிவண்டிகளையே உபயோகித்தனர். ஆகவே நகர சாலைகளில்  மிதிவண்டிகள் அதிகமானதோடு, மிதிவண்டிகளுக்கு என்று எந்தவித சாலை கட்டுப்பாடும் இல்லாமல் சென்றதால், சாலை விபத்துக்கள் பல ஏற்ப்பட்டதாலும், மாநகராட்சி நிர்வாகம் மிதிவண்டிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அதை கண்காணிக்கும் செலவாக மிதிவண்டி வரியையும் விதித்தது. சென்னை மாநகராட்சியும், சில சென்னைக்கு அருகே அமைந்த கிராம பஞ்சாயத்து, நகராட்சி நிர்வாகமும் சைக்கிளுக்கு வரி விதிக்கும் ஆணையை பிறப்பித்து நடைமுறைப்படுத்தியது. அதிலும் விளக்கு இல்லாத மிதிவண்டிகள் (சைக்கிள்) மற்றும் விளக்கு பொருத்திய மிதிவண்டி(சைக்கிள்) என இருவேறு வரிவிதிப்புக்களை விதித்து வசூல் செய்தார்கள். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் மிதிவண்டிவரி செலுத்துபவர்களைவிட,  வரி செலுத்தாதவர்கள் செலுத்திய அபராத தொகை அதிகமாக வசூலானது. அதோடு பல இடங்களில் சாலை பாதுகாப்பு காவலர்கள் மிதிவண்டி வரி வசூலிக்கப்பட்டது கணக்கில் காட்டப்படாமல் இருட்டடிப்பும் செய்தார்கள். பல இடங்களில் மிதிவண்டியில் விளக்கு இல்லை என்று கூறி வசூல் வேட்டைகளும் நடந்தன.   ஒரு கால கட்டத்தில் மிதிவண்டிகள் சாலையில் செல்வது முற்றிலும் குறைந்துபோனதால் நகராட்சி நிர்வாகம் மிதிவண்டி வரியை ரத்து செய்தது.  


"சாம்பார்" என்ற பெயர் கொண்ட இரயில்:-

அந்தக்காலத்தில்(1975) மதராஸ் என்கிற சென்னையில் "சாம்பார்" என்ற பெயரில் ஒரு இரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது, அப்படி அந்த   வண்டிக்கு பெயர் வந்த காரணம் என்ன என்று தெரியுமா? 

1975இல் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு "சாம்பார்" என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட, தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் ஒரு இரயில் வண்டி கிட்டத்தட்ட 15வருடங்களுக்கு மேல் ஓடியது. 

ஆரம்பத்தில் இது புகைவண்டியாகவும், பின்னாளில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுவரை புகைவண்டியாகவும் பின்னர் மின்சார வண்டியாகவும் 1985க்கு பிறகு முழுவதும் மின்சார இரயில் வண்டியாகவும் இயங்கியது.

இதுகுறித்த மேலும் பல சுவையான விவரங்களுக்கு எனது அடுத்த பதிவில் காணலாம்.

நன்றிகளுடன் 
கோகி-ரேடியோ மார்கோனி.
   



No comments:

FREE JOBS EARN FROM HOME