[ஆரோகணம்: S G3 PA N2 S அவரோகண்ம்: S N2 PA G3 S]
(# நாரதர் நாரதர்கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)!
இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் சங்கீத வித்வான் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியதோடு இந்த ராகத்தை முதன் முதலில் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராகத்தினை அறிமுகம் செய்தார்.
இந்தக் கச்சேரியில் இவர் பாடிய "மஹதி" ராகப் பாடலான " மஹனீய மதுர மூர்த்தே " என்ற பாடல் இவரின் கர்னாடக கச்சேரியில் மிகப் பிரபலமானது.
அபூர்வமான இந்த ராகத்தில் அமைந்த ஒரே ஒரு திரைப்பாடல் 'அபூர்வ ராகங்கள்' தமிழ்த் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இயக்குநர் பாலசந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு வித்தியாசமான, ஒரு அபூர்வ ராகத்தில் பாடல் வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தற்செயலாக பாலமுரளி கிருஷ்ணாவைச் சந்தித்திருக்கின்றாராம். அப்போதுதான் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தனது உருவாக்கமான மஹதியைப் பற்றிக் கூறியிருக்கிறார்.
அப்போது உருவானதுதான், மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான "அதிசய ராகம்; ஆனந்த ராகம்; அழகிய ராகம்" என்ற பாடல்.
இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறிவிடுகின்றது
(ராகமாலிகை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் ஒரு பாடலில் பல ராகங்களும் தொடர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலிகை )
No comments:
Post a Comment