FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, February 17, 2016

வெறும் ருபாய் 251/- விலையில் அதி நவீன கைத் தொலைப்பேசி 4-ஜி ஸ்மார்ட்போன் "இந்தியாவின்-அடிக்கிறது மணிகள்" நிறுவனம் வழங்க உள்ளது.

வெறும் ருபாய் 251/- விலையில் அதி நவீன கைத் தொலைப்பேசி 4-ஜி ஸ்மார்ட்போன்"இந்தியாவின்-அடிக்கிறதுமணிகள்"Ringing Bells  நிறுவனம் வழங்க உள்ளது. 

நாட்டில் வளர்ந்து வரும் நான்காம் தலைமுறைத் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அதி நவீன கைத்  தொலைப்பேசிக்கான சந்தையில் மிகப்பெரிய புரட்சியையும்,  மற்ற தயாரிப்புகளுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் வகையில் ஒரு புதிய அதிநவீன கைத்தொலைப்பேசியை நாட்டின் உள்நாட்டு கைபேசி தயாரிப்பாளரான, "இந்தியாவின்-அடிக்கிறது மணிகள்"   (Ringing Bells) என்கிற நிறுவனம்  உலகிலேயே மிக மலிவு ஸ்மார்ட்போன் விலையில் வெறும் ரூ 251/- விலையில் வழங்க முன்வந்துள்ளது. 

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு மனோகர் பாரிக்கர், திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையில் ஒரு நிகழ்வில் ஸ்மார்ட்போன் 'சுதந்திர 251' தொடங்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட்போன் 'சுதந்திர 251' என்கிற நான்காம் தலைமுறையைச் சேர்ந்த 4ஜி  தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பாட்ட  4 அங்குல திரைக் காட்சி கொண்ட 1.3GHz Quad-core செயலி, 1 ஜிபி ரேம் மற்றும் 8GB உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளமுடியும்), 3.2-மெகாபிக்சல் என்கிற உயர்தர பெரிய  பிம்பக் குவியம் கொண்ட  பின்புற புகைப்படக் கருவி/கேமரா, மற்றும் 0.3 மெகாபிக்சல் சிறு பிம்பக் குவியம் கொண்ட முன்புறக் புகைப்படக் கருவி/ கேமரா, மற்றும் ஒரு 1450 mAh திறன் கொண்ட மின் சேமிப்பு கலன்/பேட்டரி ஆகியவைகளை கொண்ட உயர்தர  தொலைபேசியாக  வெளிவர இருக்கிறது என்று கூறியுள்ளார்.
  .
இந்த "சுதந்திர 251" என்கிற அதி நாவீன தொலைப்பெசியைப் பெற, நிறுவனத்தின் "http://www.ringingbells.co.in/" என்கிற வலைப்பதிவில் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே தொலைப்பெசியைப் கொள்முதல் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது, இதற்க்கான முன்பதிவு செய்ய,  வருகிற  பிப்ரவரி 18 திகதி காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரை, தொடர்ந்து  பிப்ரவரி 21 ஆம் திகதியன்று முடியும் வகையில் நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் தேவையான  முன்னேர்ப்படுகள்  செய்துள்ளதாக இந்தக் கைத்தொலைப்பேசி தயாரிப்பு நிறுவனம் "அடிக்கிறது மணிகள்" தெரிவித்துள்ளது.  அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த நிறுவனம் ஜூன் 30- 2016 முன்பாக வினியோகம் செய்து முடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்றும் இது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திய ஒரே நபர் இவர் மட்டுமே என்று பறைசாற்றும் வகையில் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும் திட்டம் என்று நிகழ்ச்சியில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.    

எது எப்படியோ நமக்கு விலைமலிவான கைத்தொலைப்பேசி கிடைக்கிறது. இனி நம் குழந்தைகள் விலை அதிகமான கைத் தொலைப்பேசியை உடைத்துவிட்டார்களே என 'பகீர்' என்று அடித்துக்கொள்ளும் மனசுக்கு விடுதலை கிடைத்ததை எண்ணி மகிழ்வோம்.  

முக்கியக் குறிப்பு:- இந்த திட்டம் இன்றைய தேதியில் இன்னும் பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் உள்ளது ... அதாவது முன்பதிவில் இடம் கிடைத்து, தரமான தொலைப்பேசி நமது கையில் தவழும்வரை... சாதனை என உணர்ச்சிவசப்படாமல்..... பொறுமையாக இருக்கவேண்டும். 

உங்களின் மேலான விமர்சனங்களை மேற்கண்ட தொலைப்பேசியை பெறுவதற்குமுன்.... பெற்றபின் என்கிற தலைப்பில் தொடருங்கள் ...இப்படிக்கு நட்புடன் ரேடியோ-கோகி, புதுதில்லியிலிருந்து. 

No comments:

FREE JOBS EARN FROM HOME