FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Sunday, September 20, 2015

.....மாப்பிள்ளைதான்:-"A DAY BEFORE MY LIFE START "

மாப்பிள்ளைதான்:-"A DAY BEFORE MY LIFE START" பழைய புகைப்படம்........ தேடி எடுத்ததா!?  இல்லை இல்லை, அதுவா நம்ம கண்ணுல பட்டுது....அப்புறம் என்ன?....நிறைய விஷயங்கள் ஞாபகம் வருது.......... ஆரம்பத்துல சிதம்பரம்(நடராஜர்) ஆட்சிதான் போகப் போக மதுரை(மீனாட்சி) ஆட்சிக்கு கொண்டு வந்துடறாங்கப்பா!!!!... திருமண வாழ்க்கையில் விட்டுக்குடுக்குற மனப்பான்மை முக்கியமா புருசனுக்கு இல்லாம போச்சின்னா,  சமூகம் பெண்களை திட்டுவது இருக்கட்டும், ஆண்களைக்கூட  "ஒரு பெண்ணை கட்டி குடும்பம் நடத்த துப்பிலையே உனக்குன்னு' மனைவி கோபித்துக்கொண்டு அவங்க அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால'  நமக்குத்தான் டோஸ் ...அசிங்கமப்பா" ......அதனால, எல்லா ஆண்பிள்ளைகளும் இப்படித்தான் எதுக்கு வம்புன்னு அவங்க சொல்லறது சரிதான்னு தலைய ஆட்டிடுறாங்க.....அப்புறம் என்ன? மதுரை(மீனாட்சி) ஆட்சி ஏற்ப்படுகிறது....... இருந்தாலும் இந்த விஷயத்தை பெண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.....ரொம்ப அடம் பிடிக்கிறாங்கப்பா!!!!.....

எங்கள் வீட்டில் நாங்கள் 6 குழந்தைகள் 2அக்கா பிறகு நான் அடுத்தது என் தம்பி, அதற்க்கு பிறகு 2 தங்கைகள்.... ஆகவே இரண்டு தங்கைகளுக்கு  திருமணம் முடியட்டும் பிறகு எனக்கு பார்க்கலாம் என்று அப்பா,அம்மா  சொல்லவில்லை... நானே முடியாது என்றேன்..... அதான் 2 தங்கைக்கும் கல்யாணம் ஆயிடுத்தே உனக்கு பொண்ணு பார்க்கலாமா? என்ற அம்மாவிடம் இன்னும் 2 வருடம் போகட்டும் தங்கைகளுக்கு தலை தீபாவளி, பொங்கல்... வளைகாப்பு சீமந்தம் மற்றும் ஒரு குழந்தை பிறக்கட்டும்... காது குத்தல் எல்லாம் ஓரளவு முடிந்திருந்த நேரம் .....  "கல்யாண பொருத்தம் ரொம்ப அருமை,  நீயும் பெண்ணைப் பாக்கணும் (பின்.குறிப்பு:-பெண்ணிற்கு ஹிந்தி பேச தெரியுமாம்) சீக்கிரம் புறப்பட்டு சென்னைக்கு வா" என்று அம்மாவின் அழைப்பு (பெண்ணின் புகைப்படம் அனுப்பியிருந்தார்...அம்மாவுக்கு மிகுந்த நம்பிக்கை எப்படியும் பையன் விழுந்துடுவான்... புகைப்படத்தில் பொண்ணு  "பேஷா" இருக்கா..!!!)

ஆகவே... நான் தில்லியிலிருந்து உடனே கிளம்பி சென்னைக்கு நேரிலேயே வந்துவிட்டேன்... எப்போது பெண் பார்க்க போகிறோம்???, எதுக்கு திரும்ப திரும்ப நிச்சயதார்த்தம் அது இது என்று அடிக்கடி தில்லியிலிருந்து வரவேண்டும், நிச்சயதார்த்த புடவையும் வாங்கிக்கொண்டு பெண் பார்க்கும்போதே நிச்சயமும்  செய்துவிட்டு வரலாமே, நேரடியாக திருமண தேதி குரித்துவிடலாமே என்றேன்.......பரவாயில்லையே நல்ல ஐடியா என்று கூறியதோடு அப்படியே செய்தோம்.... (என் மைண்ட் வாயிஸ் :- உன் மூஞ்சிக்கு ஒரு பெண் கிடைத்ததும் அப்படியே அமுக்கிடலாம்னு தானே...நான் நாசூக்காக என் மனதை - "கம்முனு கட" என்றேன் ... உண்மையை சொல்ல விடமாட்டேங்கிறாங்கப்பா.....).

பெண்வீட்டில் அனைவருக்கும் சகஜமாகப் பேசிப் பழகும் என்னைப் பிடித்திருந்தது. மாப்பிள்ளைக்கு "ஒகே" என்றனர்....... எங்கோ வானொலியில் பாட்டு பாடுவதுபோல எனது மைண்ட் வாய்ஸ்  "மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய், மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்" ...........

சினிமா பார்க்கும்போது பாட்டு முடிந்ததும் என்ன நடக்குமோ என்பதுபோல மனசுக்குள்ள ஒரு டக் டக் ...அதுபோல என் மனது சொன்னது ...பொறுமையா இரு, "மாப்பிள்ளை பிடித்திருக்கிறது" என்று பொண்ணு சொல்லணுமில்ல..... எங்கே இந்தப் பெண் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால்.... எனவே சற்றும் யோசிக்காமல் "பெண்ணிடம் நான் தனியாக பேசவேண்டும் என்றேன்" என்னுடைய அம்மா மற்றும் அக்காவும் மாமாவும் டேய் என்னடா இது என்றார்கள்?

....... புரிந்துகொண்ட எனது மாமியார்வீட்டினர் சம்மதம் என்றார்கள்..... சென்னை IIT-குடியிருப்பு வளாகத்தின்.... வீட்டின் பின் பகுதி என நினைக்கிறேன்... நான்தான் நிறைய பேசினேன்- எனக்கு  மனைவியாகப்போகும் கல்யாணப் பொண்ணு எதுவும் பேசவில்லை.. ஆனால் திருமணத்திற்குப் பிறகு இது மாறிவிட்டது-மனைவி அதிகம் பேசினார்.... அட வீட்டுக்கு வீடு வாசப்படி.... இது எல்லாம் சகஜமப்பா". 

"மனிதன் தனது வாழ்க்கையை அவனது திருமணத்திற்குப் பிறகுதான் தொடங்குகின்றான்" எதோ புத்தகத்தில் படித்தது..... ஆகவே நான் எனது வாழ்க்கையை தேடங்கவிருக்கும் நாளுக்கு முந்தய நாள் மாலை நேரம் "A DAY BEFORE MY LIFE START" (தலைப்பு புரிந்துவிட்டதல்லவா?) அன்று மாப்பிள்ளை அழைப்பு...... அந்த நேரத்தில் என் மனதில் எங்கோ வானொலியில் பாட்டு பாடுவதுபோல, எனது மைண்ட் வாய்ஸ் "மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்... கல்யாணம்..ஹ ஹ ஹா கல்யாணம், கல்யாணம்"...  

கோவிலிலிருந்து கல்யாண மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன்.  திருமண மண்டபத்தை நெருங்கிவிட்டோம் மண்டபத்திலிருந்து மணமகள் அழைத்துவரப்படுகிறாள் என்னோடு மாப்பிளை அழைப்பு வாகனத்தில் இருவரும் சேர்ந்து அமர எங்களை சுற்றி இருக்கும் சுற்றமும், நட்பும் கேலி பேசிக்கொண்டதை மேலும் பல பக்கங்கள் எழுதலாம் இருந்தாலும் சுற்றத்தினர்கள் அவரவர் கைக் குழந்தைகளை மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் மடியில் அமர செய்து புகைப்படம் எடுப்பது என்பது தற்போது பாரம்பரிய செயலாகிவிட்டது. எனக்கும் குழந்தைகள் என்றால் மனதுக்கு பிடிக்கும் என்பதால் எனது மடியில் அமர சற்றும் யோசிக்காமல் இடம் கொடுத்தது...(புகைப்படத்தில் இருப்பது எனது மடியில் என்னுடைய தாய்மாமாவின் மகளின் குழந்தை அதாவது எனது தாய்மாமாவின் பேத்தி) ........குழந்தைகள்  "சு-சு" பண்ணிவிட்டால் அதுவேற கேலி கூத்து என்று... எனது மனைவி மிகவும் கவனமாக அதை தவிர்த்தார் என்று  பிறகுதான் தெரிந்தது....

மாப்பிள்ளை அழைப்பு நடந்த அன்று இரவு கல்யாண மண்டபத்தில் பெரிய சண்டை "மாப்பிள்ளைக்கு" இரவு தூங்க தலையணை தரவில்லை என்று ...
அடடா அப்புறம் என்னாச்சு....
 (தொடரும்)...

வாழ்க்கையில் விடாமல் முயலுங்கள்....
(முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்...முயலாமை வெல்லாது).
விரும்பியதைப் பயிலுங்கள், 
தொடர்ந்து சிந்திப்போம், 
மீண்டும் சந்திப்போம் ,
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி-புது தில்லியிலிருந்து.


No comments:

FREE JOBS EARN FROM HOME