கின்னஸ் சாதனை படைத்த, 96 மணி நேரத்தில் தயாரித்து நிறுவப்பட்ட, உலகின் மிகப்பெரிய புத்தகத்தின் - காணொளிக்காட்சி இது.... இந்த "விஸ்வரூப (மெகா சைஸ்) புத்தகம்" இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் சமண மதத்தைச் சார்ந்த புரட்சிகர துறவி மற்றும் முனிவர் என்று அழைக்கப்படும் (உடலில் ஆடைகள் ஏதும் அணியாமல் "அம்மணமாக" அருளாசி வழங்கும்- புரட்சிகர துறவி) ஸ்ரீ ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய விஸ்வரூப புத்தகம் ஒன்றை 2000 கிலோ எடையிலும் 33 அடி உயரம் மற்றும் 22 அடி ஆகலமும் கொண்ட இந்த உலகத்தின் மிகப் பிரும்மாண்டமான புத்தகம் 25 தொழிலாளர்களைக்கொண்டு, இந்திய ரூபாய் 5,00,000/- ஐந்து லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்புத்தகம் தற்போது ஹரியான மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பி ஜே பி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் தலைமை ஏற்று புது தில்லிக்கு அருகே அமைந்த "பரிதாபாத்" என்கிற நகரத்தில் சென்ற மாதம் புத்தகத்தை வெளியிட்டதோடு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பிரிய புத்தகமாகையால் கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் இது இடம்பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. .... இப்படிக்கு கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து https://youtu.be/4uGmkJNaL3A https://youtu.be/4uGmkJNaL3A
GOOGLE-1
Monday, August 31, 2015
Saturday, August 22, 2015
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையில், காப்பி தயாரிப்பதைப் பற்றிப் பார்ப்போம், நிகழ்ச்சியின் முதலில் காப்பி குடிக்க தருவதுகூட விருந்தோம்பல் போன்று, காப்பி -என்பது எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சிறப்பம்சமாகவே கருதப்படுகிறது.
காபி தயாரித்தல்தான் ஆண்கள் எல்லோரும் முதலில் கற்கும் அடுப்படி அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.
ம்...ம் காபி போடுறது மட்டுமா ? புருஷ லட்சணம்..
இக்கரைக்கு அக்கரை பச்சை
சக்கரைக்கு அக்கறை இச்சை
இதுதான் டபரா டம்பளர் இல்லாமல் வெறுங்கையில் "டி ஆத்துவது"என்பது.
காபி என்றாலே அது பில்டர் காபிதான்!
பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
பில்ட்டர் காபியே காபி மற்றெல்லாம் வெறும்
பில்ட் அப் கொடுத்தவை.
ஒரே நிமிடத்தில் காபி தயார் செய்து, அதை மூன்று நிமிடங்கள் ஆனந்தமாக, ருசித்துச் சாப்பிடலாம்.
காபியில் பாலா? பாலில் காபியா? சிலபேர் சுவருக்கு அடிக்கும் பெயின்ட் போல் திக் காபி பேர்வழி என்று காபி போடுவார்கள். எங்கள் வீட்டில் காபி சாப்பிட அழைக்கும் போது, "வேண்டாம் மாமி" என்று அலறி ஓடிய நண்பன்
ஒருவழியா ....காப்பி ,பேஸ்ட் அல்லது டபரா-டம்பளர் ,ப்ரஷா?
பெயர்க்காரணம் ...? TUMBLE ஆவதால் அது தம்ப்ளர்?
டம்பளர் கீழே டம்பள் ஆகாமல் இருக்க டபரா என்று ஒன்று கொடுக்கிறார்களே!
கல்யாணம் பண்ணிப்பார் :- டம்பளர் டபரா செட், தட்டு முதலியன காணாமல் போனாலும் நாம் தான் தண்டம் அழ வேண்டும்....
மண்ணெண்ணெய் ஸ்டவ் காப்பி
மறக்கமுடியாத அந்தக்கால காப்பி
(குமுட்டி)கரியடுப்புக் காப்பி
அது பாட்டி போடும் காப்பி
நாக்கு சுட்டுக்கொண்டு குடித்த ஞாபகம்.
பாட்டி உபயோகித்த பித்தளை பில்டரினால் காப்பிக்கு சுவையும் மணமும் கூடுவது பற்றி யாரோ ஒரு பேப்பர் கூட எழுதியிருப்பதாகக் கேள்வி.
பித்தளை டபரா டம்பளர் சில சமயம் ஒரு மாதிரி வாசனை வரும். எனவே காபி குடிக்க எவர் சில்வர் டபரா டம்ளரே சிறந்தது.
காபியின் பரம பக்குவம் அதில் கலக்கும் சர்க்கரையின் அளவைப்பொறுத்து இருக்கும். அவரவருக்கு சரியான அளவில் சக்கரை போடுவது ஒரு கலை. அது அன்பான அம்மா, மனைவி, அக்கா தங்கை இவர்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு ஏன்? என் காபிக்கு எவ்வளவு சர்க்கரை என்று என்னை விட என்னுடைய திருமதிக்கு தான் சரியாகத் தெரியும். ஆனா எங்காத்து மாமிக்கு மட்டும் காபி பாயாசம்.
பில்ட்டர் காபி டிகாசன் முதலில் வடிகட்டியபிறகு, இரண்டாவது டிகாசனில் கலக்கு காப்பிக்கு சண்டை மண்டை உடையும்.....
அம்மாவின் specifications-ல் அரைக் கொட்டை, முழுக்கொட்டை, வறுக்க, அரைக்க உபயோகப்படும், சாதனங்களும், முறைகளும், அரைத்த பொடியின் grain size, இவற்றுடன், பில்டரில் போடப்படும் பொடியின் அளவு, குடை எனப் படும் distributor உபயோகம், முதலில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு, அதன் வெப்ப நிலை, அது ஊற்றப் படும் விதம், இவை தவிர, பவுடர் பால், பசும் பால், எருமைப் பால், பதப் படுத்தப் பட்ட பால் இவற்றின் தன்மை கொண்டும், போடப்படும் சர்க்கரையின் அளவு, கலக்கப் படும் விதம் [ஆற்றல், கலக்கல்] நுரை வேண்டுமா வேண்டாமா என்ற வாதங்களை எல்லாம் தாண்டி, அம்மா எப்போ காப்பி தருவா என்று ஏங்க வைக்கும் பானம் எங்கள் அம்மாவின் காப்பி.
எதுவானாலும் காபி போடறது ஒரு கலைதான்! அது சிலபேருக்குதான் கைவந்த கலையாகிறது!
காபி தயாரித்தல்தான் ஆண்கள் எல்லோரும் முதலில் கற்கும் அடுப்படி அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.
ம்...ம் காபி போடுறது மட்டுமா ? புருஷ லட்சணம்..
இக்கரைக்கு அக்கரை பச்சை
சக்கரைக்கு அக்கறை இச்சை
இதுதான் டபரா டம்பளர் இல்லாமல் வெறுங்கையில் "டி ஆத்துவது"என்பது.
காபி என்றாலே அது பில்டர் காபிதான்!
பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
பில்ட்டர் காபியே காபி மற்றெல்லாம் வெறும்
பில்ட் அப் கொடுத்தவை.
ஒரே நிமிடத்தில் காபி தயார் செய்து, அதை மூன்று நிமிடங்கள் ஆனந்தமாக, ருசித்துச் சாப்பிடலாம்.
காபியில் பாலா? பாலில் காபியா? சிலபேர் சுவருக்கு அடிக்கும் பெயின்ட் போல் திக் காபி பேர்வழி என்று காபி போடுவார்கள். எங்கள் வீட்டில் காபி சாப்பிட அழைக்கும் போது, "வேண்டாம் மாமி" என்று அலறி ஓடிய நண்பன்
ஒருவழியா ....காப்பி ,பேஸ்ட் அல்லது டபரா-டம்பளர் ,ப்ரஷா?
பெயர்க்காரணம் ...? TUMBLE ஆவதால் அது தம்ப்ளர்?
டம்பளர் கீழே டம்பள் ஆகாமல் இருக்க டபரா என்று ஒன்று கொடுக்கிறார்களே!
கல்யாணம் பண்ணிப்பார் :- டம்பளர் டபரா செட், தட்டு முதலியன காணாமல் போனாலும் நாம் தான் தண்டம் அழ வேண்டும்....
மண்ணெண்ணெய் ஸ்டவ் காப்பி
மறக்கமுடியாத அந்தக்கால காப்பி
(குமுட்டி)கரியடுப்புக் காப்பி
அது பாட்டி போடும் காப்பி
நாக்கு சுட்டுக்கொண்டு குடித்த ஞாபகம்.
பாட்டி உபயோகித்த பித்தளை பில்டரினால் காப்பிக்கு சுவையும் மணமும் கூடுவது பற்றி யாரோ ஒரு பேப்பர் கூட எழுதியிருப்பதாகக் கேள்வி.
பித்தளை டபரா டம்பளர் சில சமயம் ஒரு மாதிரி வாசனை வரும். எனவே காபி குடிக்க எவர் சில்வர் டபரா டம்ளரே சிறந்தது.
காபியின் பரம பக்குவம் அதில் கலக்கும் சர்க்கரையின் அளவைப்பொறுத்து இருக்கும். அவரவருக்கு சரியான அளவில் சக்கரை போடுவது ஒரு கலை. அது அன்பான அம்மா, மனைவி, அக்கா தங்கை இவர்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு ஏன்? என் காபிக்கு எவ்வளவு சர்க்கரை என்று என்னை விட என்னுடைய திருமதிக்கு தான் சரியாகத் தெரியும். ஆனா எங்காத்து மாமிக்கு மட்டும் காபி பாயாசம்.
பில்ட்டர் காபி டிகாசன் முதலில் வடிகட்டியபிறகு, இரண்டாவது டிகாசனில் கலக்கு காப்பிக்கு சண்டை மண்டை உடையும்.....
அம்மாவின் specifications-ல் அரைக் கொட்டை, முழுக்கொட்டை, வறுக்க, அரைக்க உபயோகப்படும், சாதனங்களும், முறைகளும், அரைத்த பொடியின் grain size, இவற்றுடன், பில்டரில் போடப்படும் பொடியின் அளவு, குடை எனப் படும் distributor உபயோகம், முதலில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு, அதன் வெப்ப நிலை, அது ஊற்றப் படும் விதம், இவை தவிர, பவுடர் பால், பசும் பால், எருமைப் பால், பதப் படுத்தப் பட்ட பால் இவற்றின் தன்மை கொண்டும், போடப்படும் சர்க்கரையின் அளவு, கலக்கப் படும் விதம் [ஆற்றல், கலக்கல்] நுரை வேண்டுமா வேண்டாமா என்ற வாதங்களை எல்லாம் தாண்டி, அம்மா எப்போ காப்பி தருவா என்று ஏங்க வைக்கும் பானம் எங்கள் அம்மாவின் காப்பி.
எதுவானாலும் காபி போடறது ஒரு கலைதான்! அது சிலபேருக்குதான் கைவந்த கலையாகிறது!
Saturday, August 15, 2015
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு)
வானொலியின் "கதையும் பாடலும" நிகழ்ச்சிக்கு நான் உருவாக்கிய (32-வார தொடர்) எனது முதல் விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சி தயாரிப்பு..... 2003 ல் நான் எழுதிய இந்த தொடர் 2010 ஜூலை மதத்தில் தொடங்கிய எனது இந்த வானொலி தொடரின் ஏழாவது பகுதி, வானொலி நிலையத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க புதுப்பட பாடல்களை எனது கதையின் இடையில் பொருத்தி (அந்த வருடத்தின் ஆகஸ்ட் 15 ஞாயிறு அன்று) ஒலிபரப்பான நிகழ்ச்சி இது.....நிகழ்ச்சி தலைப்பு "உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை - சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு -கதாநாயகியின், தங்கையின் கதை தொடக்கம்-பள்ளிக்கூடம்.) (13 -பாடல்கள் )
"உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" இந்த பாடல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது சிறிது ஒலிபரப்பாகும். தொடர்ந்து கதையை கனடா பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் வாசிப்பார் கதையின் இடையில் பாடல்கள் வரும்.
# நானும் (சுந்தர வடிவேல்) எனது நண்பனும் (கிருஷ்ணனும்) எப்போதும் இணைந்தே இருப்போம். 2 ம் வகுப்பிலிருந்து நண்பர்கள், ஒன்றாகவே படித்து வருகிறோம், தற்போது 12 ம் வகுப்பில் படிக்கும் எங்களுக்கு அது முக்கியமான வருடம் என்பதாலும் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் கல்லூரியில் நாங்கள் எதிர்பார்க்கும் பாடப் பிரிவில் இடம் கிடைக்கும் ஆகவே படிப்பில் அதிக கவனம் வைத்து படித்துவந்தோம்.
பாடல்:-1. முஸ்தப்பா முஸ்தப்பா... (#song-Mustafa Mustafa dont worry - Kadhal Desam).
அன்று எங்களது பள்ளியின் கால அட்டவணைப்படி முதல் வகுப்பு தமிழ்... மாணவ மாணவியர் அனைவரும் தமிழ் ஐயா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்...... இன்று அரையாண்டு பரிட்சை விடைத்தாள்கள் அனைத்து மாணவர்க்கும் வகுப்பில் வழங்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பில், ....பின் வரிசையில் ஒரு சிலருக்கு ஏன்டாப்ப பள்ளிக்கு வந்தோம் என்றும், மற்றும் பலருக்கு சற்று பயம் கலந்த இறுக்கமான சுழலில் இருப்பது போல்... அமைதியாக ஆசிரியரின் வருகைக்காக காத்திருந்தோம். பாடல் 2. நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது (Nanbane Enathuyir Nanbane-படம் சட்டம்)
நானும் எனது நண்பனும் எப்போதும் இணைந்தே இருப்போம், நாங்கள் உட்காருவது வகுப்பின் முதல் வரிசை, வகுப்பின் பாதியளவு மாணவிகளின் வரிசைக்கு அடுத்த சற்று இடைவெளிவிட்டு எங்களின் வரிசை ஆரம்பம், நாங்கள் தேர்வை நன்கு எழுதி இருந்ததால் மிகுந்த மகிழ்ச்யுடன் ஆசிரியரின் வருகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தோம், எங்களுக்கு முதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் அவ்வப்போது மாணவிகள் பக்கம் கண்கள் திரும்பிப்பார்க்க, முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.ஸ்டைலாக சற்று சட்டை காலரை உயர்த்தலாமா? வேண்டாம்..வேண்டாம்...முதலில் விடைத்தாள் கையில் வரட்டும் பிறகு பார்த்துகொள்ளலாம். இந்த மாணவிகள் ரொம்ப மோசம், விடைத்தாளில் ஏதாவது ஒரு மதிப்பெண் குறையை காண்பித்து, ஆசிரியரிடம் அழுது மன்றாடி தமது மதிப்பெண்களை சற்று உயர்த்திக்கொண்டு அதனால் முதலிடத்திற்கு முன்னேரிவிடுகின்றனர்... இருக்கட்டும், இந்தமுறை நாமும் முயற்சிப்போம், முதலிடம் நமக்குதான்........ பாடல் 3. மனமே நலமா, உந்தன் மாற்றங்கள் நிஜமா? .(Song-MANAMAE NALAMA. ... AUTOGRAPH)...
தமிழ் ஐயா (ஆசிரியர்) வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம், வகுப்பை ஒரு முறை சுற்றிப்பார்த்த ஆசிரியர், நான் இன்னும் உங்களது அரையாண்டு விடைத்தாள்களை திருத்தவில்ல என்றார்..... அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சு வெளிவந்தது. அப்போது ஆசிரியர் எனது நண்பன் கிருஷ்ணனை அழைத்து எங்கள் வகுப்பின் அரையாண்டு விடைத்தாள் கட்டை அவனிடம் தந்து, உங்கள் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களையும் நியே திருத்தி, சரியான மதிப்பெண் வழங்கி, நாளைக்குள் திரும்ப என்னிடம் ஒப்படைக்கவேண்டும், உனது நண்பன் வடிவேலையும் உனக்கு உதவியாக சேர்த்துக்கொள் என்று கூறி, அவர் அந்தப்பளியின் உதவி தலைமை ஆசிரியராக இருந்ததால், பள்ளியின் முக்கிய அலுவலக வேலை இருப்பதாக கூறி, உடனே வகுப்பை விட்டு சென்றுவிட்டார். (செல்வதற்கு முன் எங்களிடம் "கவனமாகவும் வகுப்பில் ஒருவரும் குறை சொல்லாத அளவில் சரியாக விடைத்தாள்கள் திருத்தப்படவேண்டும் என கட்டளையிட்டார் ) பாடல் 4. #படம் : கர்ணன் இசை : விசுவனாதன் ராமமூர்த்தி, பாடலை இயற்றியவர் : கண்ணதாசன் பாடல் "என்னுயிர் தோழி கேளொரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி.."
!!!!அவ்வளவுதான் வகுப்பில் அனைவரது கண்களும் எங்கள் பக்கம் திரும்ப, நாங்கள் மிகப்பெரிய உருவம் பெற்றதுபோல்...(விஸ்வரூபம்)... காற்றில் மிதக்கலானோம். எங்களுக்கு இப்படி ஓர் வாய்ப்பா? சற்றுநேரம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... திக்குமுக்காடிப்போனோம். பாடல் 5.(song-Indha Nimidam -Movie Pallikoodam) இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா, இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொட...ராதா....
அரையாண்டு விடைத்தாள் கட்டு எங்கள் கையில் வந்தபோது மிகப்பெரிய பொறுப்பு வந்துவிட்டதுபோல் உணர்ந்தோம். சில மாணவிகள் எங்கள் பக்கம் ஓடி வந்து, நாங்கள் "கோனார் தமிழ் உரைநடை" பாட நூலின்படி தேர்வு எழுதிள்ளோம், ஆகவே நீங்கள் எங்களது விடைத்தாள்களை இதைபார்த்து படித்து திருத்துங்கள் என்றார்கள்.... இன்னும் சிலர் வேறு பல உரைநடை விடைத்தாள் நூலையும் தந்து கவனமாக திருத்தும்படி கூறினார்கள்..... கையிலும், மனதிலும் மிக அதிக கணம்...... நிரம்பியது போல் உணர்தோம்...... (அன்று இரவுமுழுதும் தூங்காமல் (கண்ணில் விளக்கெண்ணை தடவிக்கொண்டு என்பார்களே... அதுபோல) பெருமுயற்சியின் விளைவாக ஏற்றுக்கொண்ட பணியை விடியற்காலை 3 மணியளவில் முடித்தோம்.)
பாடல் 6. தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சஞ்சிகனும் - (singer சித்ரா, Movie-Paandavar Bhoomi)
மறுநாள் திருத்திய விடைத்தாள் கட்டுக்களுடன், சரியாக பள்ளிமனியாடிக்கும்போதுதான் வகுப்புக்குள் நுழைந்தோம். வழக்கம்போல ஆசிரியர் தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம். தமிழ் அய்யா அழைப்பதற்கு முன்பே நாங்கள் அவரிடம் சென்று திருத்திய விடைத்தாள்களை தந்தோம். பாடல் 7. ஒரு நண்பன் இருந்தான் ("Oru Nanban Iruntha" from movie "Enakku 20 Unakku 18")
ஆசிரியர் ஒவொருவராக பெயர் கூறி அழைத்து அவரவர் விடைத்தாள்களை வழங்கினார். எங்களது பெயர் கூப்பிட்டதும் நாங்களும் எங்களது விடைத்தாளை பெற்றுக்கொண்டோம். நாங்கள் எங்களுடைய விடைத்தாளை திறந்து பார்க்காமல் மற்றவர்களின் முகங்களைத்தான் பார்த்தவண்ணம் இருந்தோம். பெற்றுக்கொண்ட அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது ( மதிப்பெண்களை வாரி வழங்கியிருப்பதால் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்) பாடல் 8. ஓ நண்பனே நண்பனே....(actor vikaram-Movi Dhil-Oh Nanbane Nanbane)
எனக்கும் என் நண்பனுக்கும் சற்று வருத்தமே, காரணம் நாங்கள் திருத்திய விடைத்தாளுக்கு நாங்களே எங்களுக்கு முதல் மதிப்பெண் போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது என்பதால் இந்தமுறை வகுப்பில் இரண்டாவது மற்றும் முன்றாம் நிலைக்கான மதிப்பெண்தான் பெறமுடிந்தது மேலும் அதிகப்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலை, இருந்தும் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களும் எங்களால் திருத்தப்பட்டது என்கிற பெருமை எங்களின் மனம் முழுவதும் பரவிக்கிடந்தது. பாடல் 9. இனி ஜல்சா பண்ணுங்கடா ....(Movie Name : Chennai 600028 Song : Jalsa Pannungada Singers : Ranjith, Tippu, Premji Amaran, Haricharan & Karthik).
அன்றைய பாட வகுப்பு முடிந்ததும், தமிழ் அய்யா எங்கள் இருவரையும் தனியே வகுப்புக்கு வெளியே அழைத்துச் சென்று "கிருஷ்ணா, வடிவேல் நீங்கள் இருவரும் நன்கு படிப்பவர்கள், அனாலும் சென்றமுறை நீங்கள் சற்று குறைவான மதிப்பெண் எடுத்து சற்று கவனக்குறைவாக இருந்தீர்கள், எனவேதான் உங்களை வகுப்பின் அனைவரது விடைத்தல்களையும் திருத்தும்படிக்கூறினேன், நீங்களும் கவனமாக விடைத்தாள்களை திருத்தியதால் இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்களை மறக்கமாட்டீர்கள். மாறாக நான் உங்களுக்கு வினாத்தாளுக்கான விடையை நன்கு மண்டையில் நுழையட்டும் என்று நுருமுறை கட்டாயப்படுத்தி எழுத சொல்லியிருந்தால் நீங்கள் நிச்சயம் செய்திருக்க மாட்டீர்கள், அப்படி செய்திருந்தாலும் அது உங்கள் மனதில் பதிந்திருக்காது எனவேதான் இப்படி செய்தேன்" என்று கூறிக்கொண்டே போனார் ... எங்களுக்கு ஆசிரியர் "கீதையை" உபதேசம் செய்வதுபோல இருந்த்தது, எங்களது பெருமை என்ற மிகப்பெரிய மாய உருவம், அடங்கி , ஒடுங்கி மிகச்சிறிய உருவமாக மாறியதுபோல வெட்கித் தலைக் குனிந்தோம். பாடல் 10. # வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் Poompuhar - Vaazhkai Enum Odam by K.B Sundarambal
"இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!" (வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன் சார்ளி சாப்ளினின் இந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!) பாட்டு 11. :- #வாழ்ந்து பார்க்கவேண்டும் அறிவில் மனிதராகவேண்டு TMS & BP SRINIVAS- Sivaji Ganesan & S.S.R - Vaazhnthu Paarkkavendum - Santhi - http://youtu.be/YU-b1hNh0g0
குறிப்பு:- தப்போது 35 வருடங்கள் போயே போச்சு இருந்தும் பழைய ஞாபகங்கள்....இப்போது நான் அந்த நாட்களை நினைத்துப்பார்க்கிறேன்...... பாடல்-12. (மீசைக்கார நம்ப உனக்கு ரோசம் அதிகம்டா ..அதவிட பாசம் அதிகம்டா )...
நண்பா உனது நினைவுகளுடன் நமது வகுப்புத் தோழி கீதாவின் தங்கை ராதையையும் நினைத்துப்பார்க்கிறேன். எப்படிப்பட்ட போராட்டங்களுக்கிடையே உன்னுடைய காதல் திருமணம் நடந்தது பாடல்-13. உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே....(தொடரும்) மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுகிறேன் ....
வாழ்க்கையில் உயர...
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
பின்குறிப்பு:- வானொலி நிலைய நிகழ்ச்சி இயக்குனர் அவர்களுக்கு, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு அதிகமாகவே சில பகுதிகளில் ஒரு சில பாடல்கள் அதிகப்படியாக, கதையோடு அமைந்துவிட்டது, ஆகவே அதிகப்படியான அந்தப் பாடல்களை நீக்காமல் எனது நினைவில் நீக்கமற நிறைந்து இருக்க வேண்டுகிறேன். மேலு நீங்கள் கேட்டுக்கொண்டபடி பழைய பாடல்களை எடுத்துவிட்டு புதிய பாடல்களை புகுத்தியிருக்கிறேன்.
Friday, August 14, 2015
வெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்
வெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்:-
ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிசுகள், பாராட்டுக் கேடயங்கள், பொன்னாடைகள் கொண்டது)
1. குறும்படப் போட்டி, 2. ஆவணப்படப் போட்டி, 3. நூல்களுக்கான போட்டி
4. கவிதைப் போட்டி, 5. கதைப் போட்டி, 6. கட்டுரைப் போட்டி
1.குறும்படப் போட்டி – ரூ, 10,000./- 7,000./- 5,000./ மூன்று பரிசுகள் = ரூ.22,000/-
2. ஆவணப்படப் போட்டி- ரூ,10,000./- 7,000./- 5,000./- மூன்று பரிசுகள் = ரூ.22,000/-
தவிர ரூ. 2000./- வீதம் சிறந்த கதை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகை, குழந்தை நடிக நடிகைகள், படத் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர்களுக்கு என்று எட்டுப் பரிசுகள் 8 x2,000 = 16,000/-
3. நூல்களுக்கான போட்டி – ரூ,.30.000/-
போட்டிக்கு வரும் நூல்களில் கீழ்க்கண்ட துறைகளில் 10 துறைகளுக்கு மட்டும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு பரிசாக ரூ. 3,000./- வீதம் 10 x 3,000/- = 30,000/-
கவிதை, கதை, மொழியாக்கம், தமிழ் வளர்ச்சி, தனித்தமிழ் வளர்ச்சி, தமிழ் மருத்துவம்,நாட்டுப் புறவியல், தலித்தியம், பெண்ணியம் , அறிவியல், கணிணித் தொழில் நுட்பம்,அரசியல், வரலாறு, சமூகவியல் , பண்பாடு, வாழ்வியல், சூழலியல் , பல்சமய ஆன்மீகம்,பயணவியல் தன்முன்னேற்றம், திறனாய்வு பல்துறை விழிப்புணர்வுச் செய்திகள் போன்ற தலைப்புகளிலும் இன்ன பிற துறைகளிலும் இருக்கலாம்.
* இரண்டு படிகள் தேவை.
* ஒருவரே பல துறை நூல்களை அனுப்பலாம்.
4. கவிதைப் போட்டி - ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
5. கதைப் போட்டி - ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
6. கட்டுரைப் போட்டி - ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.00/0- = ரூ.6,000/-
* ஒரு படி போதும்.
* படைப்புகள் ஏ 4 அளவில் 5 பக்க அளவில் இருக்கலாம்.
* படைப்புகளை மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம். அவை யுனிகோடு தமிழ்ப் பாண்டில் செய்திருக்கப்பட வேண்டும்.
* சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
* இதுவரை எதிலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.
* ஒருவரே பல படைப்புகளை அனுப்பலாம்.
* படைப்புகளை திரும்ப அனுப்ப முடியாது..
* படைப்புகள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய முகவரி : கு.மாரிமுத்து, வழக்கறிஞர்,சென்னை உயர்நீதி மன்றம் , வெண்மணி அறக்கட்டளை / வெண்மணிப் பதிப்பகம், எண் 114 / 61, முதல் தளம், மூர் தெரு, சென்னை - 600 001, மின்னஞ்சல் முகவரி: kumarimuthu12@gmail.com
செல்பேசி எண் 93 45 34 61 08 க்கு அனுப்பப்பட வேண்டும்,
* அனைத்துப் போட்டிகளுக்கும் கடைசி நாள் : 31.10.2015 * பரிசளிப்பு : பிப்ரவரி 2016.
* தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் : பிற்பகல் 4 முதல் 10 மணியளவில்.
Wednesday, August 5, 2015
தல போல வருமா????
யோசனை...உனது பிம்பம் என் கண்ணில் பட்டபோது,
வாசனை ... என்னருகே நீ இருந்தபோதெல்லாம்...
சாதனை ... என் கன்னத்தில் உன் உதடுகள் பட்டபோது...
பாவனை ... என்னை நான் உணர்ந்துகொண்டபோது.
சோதனை ..தீராத நோயென என் காதுகள், மனதுக்கு சொன்னபோது.
காலனை .. கண்டதால் நீ முந்திக்கொண்டபோது..
வேதனை ...உனது இழப்பு, என் கைகள் கன்னத்தில் இருந்தபோது.
இத்தனை நடந்தபின்னும் இன்னும் ....
எத்தனை... நாட்கள் உடலை இழந்த தலையாய் நான்... (கோகி..லா)
யோசனை...உனது பிம்பம் என் கண்ணில் பட்டபோது,
வாசனை ... என்னருகே நீ இருந்தபோதெல்லாம்...
சாதனை ... என் கன்னத்தில் உன் உதடுகள் பட்டபோது...
பாவனை ... என்னை நான் உணர்ந்துகொண்டபோது.
சோதனை ..தீராத நோயென என் காதுகள், மனதுக்கு சொன்னபோது.
காலனை .. கண்டதால் நீ முந்திக்கொண்டபோது..
வேதனை ...உனது இழப்பு, என் கைகள் கன்னத்தில் இருந்தபோது.
இத்தனை நடந்தபின்னும் இன்னும் ....
எத்தனை... நாட்கள் உடலை இழந்த தலையாய் நான்... (கோகி..லா)
Sunday, August 2, 2015
Subscribe to:
Posts (Atom)