FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, September 15, 2015

என் நினைவில் நிறைந்திருக்கும் "அண்ணா"....

இன்று  பேரறிஞர் அண்ணா என்று போற்றப்படும்  திரு.காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம்(செப்டம்பர்-15), இந்தியாவின் தென் மாநிலங்கள் சிறந்த கல்வித் திறன் பெற்ற மாநிலமாகத் திகழ முக்கிய காரணமாக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா. நமது தேசத் திருநாட்டின் அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க பள்ளிக்கூடம் வரவேண்டும் என்கிற சீரிய நோக்கில், ஒருவேளை உணவாவது அந்த ஏழை குழந்தைகளுக்கும் பள்ளியில் கிடைக்கும்படி செய்தால் அதற்காகவாவது  நிச்சயம் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு வருவார்கள் என்கிற ஆணித்தரமான நம்பிக்கையில், அவர் இயற்றிய திட்டமும், அந்த திட்டத்தை பிடிவாதமாக செயல் படுத்திய விதமும்தான் அவருக்கு சிறப்பான பெயரைப் பெற்றுத்தந்தது. "நேற்றைய முட்டாள்தனமான திட்டம் என்று தூற்றப்பட்ட பல திட்டங்கள் தற்கால சூழலுக்கு மிகவும் ஏற்றவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது". அதற்க்கு ஒரு உதாரணம்தான் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டம்.  இன்று உலகமே வியந்து போற்றக்கூடிய திட்டத்தை வகுத்தவர் என்கிற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்குப் பின்னால் எத்தனையோ சிரமங்களையும், எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு அவர் நிறைவேற்றிய திட்டம் தான் "மதிய உணவு திட்டம்". கல்யாணம் செய்துப் பார்... வீட்டைக்கட்டிப்பார்  என்கிற மனப்பான்மை கொண்ட மக்கள், பல ஆயிரம் மாணவர்களுக்கு தினமும் உணவு சமைப்பது என்பது 'தினம் ஒரு திருமணம்' செய்வது போல, மிகப்பெரிய செயலாயிற்றே, இது முடியக்கூடிய செயலா? இது என்ன முட்டாள் தனமான திட்டம் என்றெல்லாம் தூற்றினார்கள். 

ஓர் இடத்தில் மிகப் பிரும்மாண்டமான சமையல், பிறகு அது அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் எடுத்து சென்று விநியோகிக்கப்படும் என்கிற ஏற்பாட்டில் மிகவும் சிரமம் ஏற்பாட்டாலும்.. பின்னாளில் அதை சிறப்பாக செயல்படுத்திய பெருமை, மா மனிதர், கர்மவீரர்  காமராஜருக்கே சென்றடையும். 

அதன் பிறகு அந்த திட்டத்தை மேலும் சிறப்படைய செய்த பெருமை நமது எம் ஜி ஆர் என்கிற திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களைச் சேரும். இவரின் காலத்தில்தான் இந்த திட்டம் உலக அளவில் சிறந்த திட்டமாக செயல்படுத்தப்பாட்டது. 

ஆகவே இன்றைய தினத்தில் தென் மாநிலங்கள் சிறந்த கல்வித்திறன் படைத்த மாநிலமாகத் திகழ மிக முக்கிய காரனமாகத்திகழ்ந்த நமது மனங்களில் என்றும் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவை போற்றுவோமாக. 

இப்படிக்கு நன்றிகளுடன் 
கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.... புது தில்லியிலிருந்து .....

No comments:

FREE JOBS EARN FROM HOME