கோகி-ரேடியோ மார்கோனி: விழிப்போமா?....நெஞ்சே உன் ஆசை என்ன....

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, April 11, 2015

விழிப்போமா?....நெஞ்சே உன் ஆசை என்ன....

விழிப்போமா?..... நெஞ்சே உன் ஆசை என்ன....

# ."அகத்துள் ஆமை புகுந்தால்"... என்பதை தவறாக திரித்துக் கூறப்பட்டு   “ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” என்கிற பழமொழியாக மாறியது. 

அகத்தில் ஆமை புகுதல் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் "அகம்" என்றால் உள்ளே அதாவது உள்ளத்தின் உள்ளே  அல்லது மனதினுள்ளே என்பதாக பொருள்படும்.  இங்கு ஆமை என்பது இல்லாமை, இயலாமை, முடியாமை, தெரியாமை, பொறாமை போன்ற இன்னும் பலவித ஆமைகளில், ஏதாவது ஒரு ஆமை மனதுக்குள் புகுந்துவிட்டாலே போதும்,  அவனது மனதோடு சேர்ந்து அவனும் கெட்டுப்போவான். 

கை இழந்த ஊனமுற்றவர்கள் கூட மாற்றுத்திரனாளிகலாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள், ஆனால் கை இருந்தும் நம்பிக்"கையை" இழப்பவர்களுக்குத்தான் பல ஆமைகள் மனதினுள் புக சிறந்த வழியாக அமைகிறது. அப்படி நம்பிக்கையை இழக்கும்போது...அதனுடன் அடங்காமை, அறியாமை, இயலாமை, இல்லாமை, கல்லாமை, தீண்டாமை, தெரியாமை, பொறாமை, முடியாமை, முயலாமை,  போன்ற இன்னும் பல ஆமைகள் மனதிற்குள் புகுந்துவிட்டாலே, அந்த "தற்கொலை" என்கிற கோழைத்தனம் வந்துவிடுகிறது ... எனது 50 வருட வாழ்க்கையில்,  பள்ளிப்பருவத்தில் என் வகுப்பு நண்பன் (20வயதில்- ஒருவன்) மற்றும் நான் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றியபோதும் என் வகுப்பு மாற்றுத்திரனாளியான மாணவி ஒருவள் என....மேலும் சிலரின் "தற்கொலை" என்கிற கோழைத்தனத்தை போக்க நான் எடுத்த சில முயற்சிகளும் கூட தோல்வியில் முடிந்தபோது... விதி வென்றதா? என்கிற கேள்விக்கு இன்னமும் எனக்கு விடை கிடைக்கவில்லை. 

ஒன்றுமட்டும் நிச்சயம்... என்ன ஆனாலும் ஆகட்டும் ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற வைராக்கிய எண்ணங்களை மனதில் விதைத்து மிகப்பெரிய மரமாக வளர்த்துக்கொள்வதே சிறந்த வழி....அப்படிப்பட்ட வைராக்கியத்தை  இளம் வயதிலிருந்தே மனதில் விதைப்பது மேலும் சாலச் சிறந்தது. 

#....நெஞ்சே உன் ஆசை என்ன?  நீ நினைத்தால் ஆகாததென்ன,  இந்த பூமி, அந்த வானம், இடி மின்னலை தாங்குவதென்ன ........

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 
Post a Comment

FREE JOBS EARN FROM HOME