கோகி-ரேடியோ மார்கோனி: ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, October 6, 2016

ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...


பெரு மதிப்பிற்குரிய திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை - தமிழம்.பண்பலை) அவர்களுக்கு, பணிவான வணக்கங்களுடன்...  

திருக்குறள் பயிற்சி பற்றிய உங்களது சேவை மிகவும் பாராட்டத்தக்கது, தமிழகம் அல்லாத பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மூன்றாம் தலைமுறையினரிடையே திருக்குறளை பயிற்றுவிக்க மிகவும் எளிய முறையை உருவாக்கி தமிழ் தாய்மொழியை தழைத்திடச் செய்த அறிய செயலை பாராட்டும் உள்ளங்கள் பல. 

மேலும்  "திருக்குறள் படித்தல் - (ஒரே நாளில் 300 திருக்குறளை அறிதல்)" http://win.tamilnool.net/tkl300/index.html ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...என்கிற இனைய வலைப்பக்கத்தை, புது தில்லியின் வைசாலி (தமிழ்) வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

நன்றிகளுடன்
கோபால் கிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி 
புது தில்லியிலிருந்து. திரு பொள்ளாச்சி நசன் - (தமிழம்.வலை - தமிழம்.பண்பலை) :-
  
ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க... திருக்குறள் பயிற்சி, 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க...

http://win.tamilnool.net/tkl300/index.html

கடந்த இரண்டு திங்களாக திருக்குறளை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்கிற ஒரு பயிற்சிக் கட்டகம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இயங்கினேன். திரு பழனிச்சாமி சேரிபாளையம் தமிழாசிரியர், திரு.கல்லை அருட்செல்வன் திரு பல்லடம் முத்துக்குமரன் திரு. அய்யாசாமி, திரு கணேசன் போன்ற நண்பர்களின் உதவியோடு, 1330 திருக்குறளையும் ஆய்வு செய்து மாணவர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய திருக்குறளை வரிசைப்படுத்தி, அதிலுள்ள கடினச் சொற்களுக்கு
உரிய பொருளை அருகில் இணைத்து, படவடிவக்கோப்புகள் உருவாக்கி, மாணவர்களுக்குக் கொடுத்து ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 300 குறள்களுக்கான இசை வடிவை வெட்டி ஒட்டி இணைத்து அதனை இணைய பக்கமாக உருவாக்கி திரு கார்த்திக் உதவியுடன் தமிழம் இணையதளத்தில் இணைத்து, மாணவர்கள் கற்க உதவுகிற கட்டகத்தை இணையத்தில் இணைத்துள்ளேன்.

http://win.tamilnool.net/tkl300/index.html

இந்தப் பயிற்சிக் கட்டகத்தைப் பயன்படுத்துவது எப்படி ?

1) பொது மக்கள் நாள் ஒரு பக்கமாக படித்து உள்வாங்கலாம். 

2) மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் எனக் 
காட்டி அவர்களையே உரை எழுத ஊக்குவிக்கலாம். 

3) ஒரு முழுநாளை இதற்காக ஒதுக்கி விருப்பம் உடைய நண்பர்களை இணைத்து 21 பக்கங்களையும் இசைத்துக் காட்டி, பக்கங்களைக் கொடுத்து, அவர்களையே உரை கூற வைத்து, திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தலாம். 

இணையத்தில் பார்த்து இது தொடர்பாக இயங்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்ய அணியமாக உள்ளேன். 

நம் மக்களும், மழலையர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் வரலாற்றைச் சொல்லுகிற திருக்குறளைப் படித்து உணர்ந்து உள்வாங்கித் தம் வாழ்முறையைச் செப்பமுற அமைத்துக் கொள்ள வழி வகுப்போம். 

அன்புடன் 
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை - தமிழம்.பண்பலை 
மின்னஞ்சல் :- pollachinasan@gmail.com 
http://win.tamilnool.net/tkl300/index.html

Post a Comment

FREE JOBS EARN FROM HOME