FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, July 12, 2018

மாணவியை பேரிடர்(Disaster) பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக

நண்பர்களே தோழர்களே, வணக்கம்.

தாய்லாந்தில் உள்ள குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரையும் அந்நாட்டு ராணுவ பேரிடர் மேலாண்மை (Disaster) குழு பத்திரமாக மீட்டெடுத்த சத்தம் ஓய்வதற்குள் ....

*கோவை தனியார் கல்லூரியில் பேரிடர்(Disaster) பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசு ஆலோசனை என தகவல்* 

மாணவியை பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அனுமதி அளித்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பயிற்சிப்பட்டறையில் 2012 வருடமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் Hazard என்ற இடர் மேலாண்மை எத்தனை முக்கியமானது என்பது குறித்து பல விழிப்புணர்வு நிலைகளை குறிப்பிட்டிருந்தேன். Hazard என்ற இடர் மேலாண்மை வேதியியல் பொருட்களை கையாள்வதில் மற்றும்  Disaster என்ற பேரிடர் மேலாண்மை, அதனால் ஏற்படும் இடர்களிலிருந்து எப்படி அதை எதிர்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பன போன்ற  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மிக மிக முக்கியப்பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். 

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பயிற்சியாளரின் ஆர்வக்கோளாறு மற்றும் போதிய அனுபவமின்மையையும், அதோடு  உரிய அரசு மற்றும் காவல்துறை,  மருத்துவக்குழு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது என பல விவரங்களை முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. 

ஒருமுறை கேரளாவில் நடந்த இட்டிலி தின்னும் போட்டியிலும், தில்லி தல்கோத்ரா அரங்கில் ஏற்பட்ட மாம்பழம் சாப்பிடும் போட்டியிலும் நடந்த உயிரிழப்பு சம்பவங்களிலும் இதே தவறை சுச்சுட்டிக்காட்டி அந்த துயர சம்பவத்தைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.  http://programmedirector.blogspot.com/2014/10/blog-post.html

$நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.

நிகழ்ச்சியின் போட்டியாலருக்கோ அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவருக்கோ எந்தவித ஆபத்தும் நேராதபடி அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

1. காவல்துறை மற்றும் தீ அனைப்புத்துறை போன்றவர்களிடம் நிகழ்ச்சி பற்றி முகூட்டியே தெரிவித்து, அதற்க்கான அனுமதி பெறுவது அவசியம்.

2. முதலுதவி மருத்துவ சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டும் அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் மருத்துவ நிலையத்தின் தொலைப்பேசி மற்றும் முதலுதவி சேவை பெற தேவையான அனைத்து விவரங்களையும் பெற்று தயார்நிலையில் வைத்திருப்பது முகவும் அவசியம்.  

3. போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள், வசிப்பிடம் போன்ற விவரங்களுடன் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பவர்கள் முழுமையாக உடல் மற்றும் மனதளவில் தகுதியானவர என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விவரங்கள் போட்டியாளருக்கு தெரியப்படுத்தி, அந்த  விவரங்களை போட்டியாலரிடமிருந்து எழுத்துபூர்வமாக எழுதி பெறுவது மிக முக்கியமான ஒன்று.     

$ நிகழ்ச்சியானது அரசாங்க மற்றும்  சமுதாய விதி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

$ நிகழ்ச்சியில் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்துகொல்வதகவோ அல்லது தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தால், நிகழ்ச்சியை அரசு முறைப்படி நடத்தவேண்டும் ..  அதாவது நிகழ்ச்சியில் தேசியகீதம் மற்றும் தேசப்பற்று பாடல்கள் முறைப்படி அமையுமாறும் அரசாங்க வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நிகழ்ச்சி அமையுமாறு ஏற்ப்பாடு செய்வதோடு,  அந்த விதி முறைகள் சரிவர கடைபிடிக்குமாறு நிகழ்ச்சியை நடத்திச்செல்லுவதும் மிக முக்கிகம்.

$ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்கள்,  பார்வையாளர்கள் அல்லது பொதுமக்கள் போன்றவர்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டியது அவசியம்.

இப்படி இன்னும் பல விதி முறைகள் இருப்பதை முழுமையாக அறிந்து அதற்க்கேற்றபடி நிகழ்ச்சியை தயாரித்து திறம்பட வழங்குவது ஒரு சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் அல்லது நிகழ்ச்சி அமைப்பாளரின் கடமையாம்..... ஒரு நிகழ்ச்சி நிர்வாகிக்கே இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றால் பேரிடர் மேலாண்மையாளர் மேலும் விழிப்புடன் இருக்கவேண்டியது எத்தனை அவசியம்.    
  
பேரிடர் மேலாண்மை Disaster Management:- 


பேரிடர் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடமும் மற்றும் பள்ளி கல்லூரி  ஆசிரியர்களிடத்தும், மாணவர்களிடத்தும் ஏற்படுத்துதல். இடர் மற்றும் பேரிடரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவைப்படும் உத்திகளை அறிதல் பேரிடர் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் உயிர் காத்தல் போன்றவை அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதத் தவறுகளினாலும் பல்வேறு இடர்களும் பேரிடர்களும் ஏற்படுகின்றன. இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்பு, உயிரிழப்பு, சுகாதாரக் கேடுகள், உடைமைகளின் சேதம், சமுதாய மற்றும் பொருளாதாரச் சீர்கேடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த இடரானது, உச்சநிலையை அடையும்போது பேரிடராக (Disaster) மாறுகிறது. மக்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டுப் பெருமளவில் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வைப் பேரிடர்” என்கிறோம்.

பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளைச் செயல்படுத்துவதே பேரிடர் மேலாண்மை ஆகும்.

DM 1 பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகள்
பேரிடரின் தன்மை, தீவிரம், தாக்கும் இடங்கள் மற்றும் இழப்புகளை அறிதல்
பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல் மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல்
தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல்
பாதுகாப்பு அமைப்புகளை ஏற்பாடு செய்தல் பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாதோர்களைக் காக்கும் உத்திகளை வகுத்தல் உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் (சமையல் வாயு), குடிநீர், உயிர்காக்கும் மருந்துகள், துணிமணிகள், முதலுதவிப் பொருள்கள் முதலியவற்றைப் பேரிடர் காலங்களில் சேகரித்து வைத்தல்

DM 2 எச்சரிக்கை
எச்சரிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளல்
வதந்திகளைப் பேரிடர் காலத்தில் நம்பாதிருத்தல்
உரிய முன்னெச்சரிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுதல் இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவை வெகுவாகக் குறையும்)

DM 3 பாதிப்பு ஏற்படுத்தும் நிலை
பேரிடர் தாக்க இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுதல்
உயிர், உடல் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது பற்றிய பயம் மற்றும் பீதி அடையாதிருத்தல்
பதற்ற நிலை, பரிதவிப்பு நிலையைத் தவிர்த்தல்
அபாய அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை மேற்கொள்ளல்
பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல்

DM 4 பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் (Rescue operation)
தாமதமின்றி மீட்புப் பணிகளில் ஈடுபடுதல் மற்றும் மீட்புப் பணிக் குழுவினர்களுக்கு உதவுதல்.
பேரிடர்களில் சிக்குண்டு தவிப்பவர்களைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை பாதுகாப்பு கருவிகள், உணவு, உயிர்காக்கும் மருந்துகளைப் பயன்படுத்துதல்.
மீட்கப்பட்டவர்களுக்கு முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மூலமாக முதலுதவி உடனடி மருத்துவச் சிகிச்சையளித்தல்.

DM 5 பேரிடருக்குப்பின் மேற்கொள்ளப்படும் மீட்பு உதவிகள் (Rescue)
ஒருங்கிணைந்து செயல்படுதல்.
தற்காலிகப் புகலிடம் அமைத்துத் தேவையான பொருள்களைத் தொடர்ந்து வழங்குதல்.
மின்சாரவசதி, தொலைதொடர்புக் கருவிகளை அமைத்துக் கொடுத்தல் சேத மதிப்பீடு செய்தல்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு I பிற தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்றுத் தருதல்.

DM 6 புனர்வாழ்வளித்தல் (Rehabitation)
பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல்
பாதிப்படைந்தவர்கள் மீண்டும் தன் பழைய வாழ்க்கை நிலைப்பாட்டை அடையத் தேவைப்படு வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருதல்

DM 7 மறுசீரமைத்தல்:-
பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளானவை மீண்டும் தாக்காதவாறு மறுசீரமைத்தல்.
இடிந்த கட்டடங்களைப் புதுப்பித்தல், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைச் சீரமைத்தல்.

DM 8 பேரிடரைத் தவிர்க்க நீண்டகாலத் திட்டம் தீட்டுதல் (Long term Planning)
பேரிடர் மேலாண்மைக் குழுக்களுக்கான குறிக்கோள், செயல் திட்டம், தேவை செலவினங்கள்முதலியவற்றைத் தெளிவாக வரையறுத்தல்
பேரிடர்கள் ஏற்படும்முன், ஏற்படும்போது, ஏற்பட்டபின் மேற்கொள்ள வேண் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த முன்னேற்பாடுகளை வரையறுத்தல்.
பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, முன்னெச்சரிக்கை உத்திகளைத் திட்ட சேதாரத்தை மதிப்பீடு செய்தல்.
பேரிடர், மீண்டும் தாக்கும் இடங்களை இனங்கண்டு கொள்ளல்.
பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவைப் பரப்ப ஒருங்கிணைப்பு செயல்திட்டம் தீட்டுதல்.

DM 9 திட்டச் செயலாக்கம்:-
பேரிடர் தவிர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல்.
மத்திய, மாநில, மாவட்ட வட்டார கிராம மற்றும் உள்ளூர் இடர் பாதுகாப்புக் குழுக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்தல். 
பேரிடர் தவிர்ப்புத் திட்டச்செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்துதல்.

அனைத்திற்கும் மிக முக்கியம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளவேண்டும் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

Wednesday, July 11, 2018

NEW DELHI MANGALYAM "புது தில்லி மாங்கல்யம்"

NEW DELHI MANGALYAM "புது தில்லி மாங்கல்யம்" 

NEW DELHI MANGALYAM "புது தில்லி மாங்கல்யம்" என்ற மணமக்கள் தேவை என்கிற வாட்சப் குழு கிழக்கு தில்லியிலிருந்து செயல்படுகிறது ஆரம்பத்தில் புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியிலிருக்கும் திருமணமாகாதவர்களுக்காக உருவாக்கப்பட்டது. போகப்போக இது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதற்கும் அல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, UK, USA போன்ற நாடுகளிலிருந்தும் தமிழர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து வரன் பதிவுகளை பட்டியலிட்டார்கள். 

மேலும் முழு விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்திற்கு சென்று பார்க்கலாம் https://newdelhimangalyam.blogspot.com/

NEW DELHI MANGALYAM "புது தில்லி மாங்கல்யம்" முழுவதும் இலவச சேவை வழங்குகிறது. இங்கு பதிவு செய்பவர்களுக்கு மட்டும். உரிய அனுமதியோடு மணமக்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு. அவர்களின் பின்புலம் நன்கு ஆராய்ந்து அறிந்தபின்பே தொடர்புகொள்ளும் விலாசம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் பெற்றோர்கள் வரன்கள் பற்றிய மேலும் பல விவரங்களை தெரிந்துகொண்டு, அதன்பிறகு  திருமண பேச்சை தொடங்க வலியுறுத்தப்படுகிறார்கள். பதிவு செய்யும் அனைவரது விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். 

*பெண் வரன்களுக்கு தொலைப்பேசி  எண்கள் பொதுவில் பகிரப்படமாட்டாது.  தொலைப்பேசி மற்றும் முகவரி புது தில்லி மாங்கல்யம் வாட்சப் குரூப் அட்மினிடம் பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்தாள் மட்டுமே வரன்களுக்கு தெரிவிக்கப்படும். பதிவு செய்தவர்களது அவர்கள் கூறிய விவரங்கள் சரிபார்க்க சம்மதம்  தெரிவிக்கும் வரன்களுக்கு மட்டுமே மணமகள் பெற்றோர்களது தொலைபேசி எண் வழங்கப்படும். முக்கியமாக பதிவுசெய்தவர்களுக்கு மட்டும் இந்த இலவச சேவை கிடைக்கும்*

*All registered VARAN, If you are not mentioned your full details of DOB:-Date of Birth, TOB-Time of Birth. and POB-Place of Birth,  You are not eligible to getting,  benefit of free Horoscope Analysis & Our Horoscope Matching repot.*

*பதிவு செய்த வரன்கள் தங்களது, பிறந்த தேதி, நேரம், இடம் குறிப்பிடாமல் விடுபட்டிருந்தால் எங்களது இலவச ஜாதகம் பொருத்தம் பார்க்கும் சேவையை பெறமுடியாது. ஆகவே உங்களது முழுவிவரங்களையும் பதிவு செய்யுங்கள்.*


விருப்பமுடையவர்கள் *NEW DELHI MAANGALYAM* 
*Gopalakrishnan+91-9717236514* 
பதிவு எண்ணை குறிப்பிட்டு தொடர்புகொள்ளவும்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*பதிவு செய்வது எப்படி என்று சொல்லுங்கள்?*
🙏👍 Please provide your Name, DOB , Edu. & Nature of Job/Business, all details. To my whatsapp in box🙏👍

*How do I register with *NEW DELHI MANGALYAM* 

Please fill up the following form. Required details.

Reg.No:- XXXX (to be allotted)
We seeking alliance for our Son/Daughter/Etc.,
Name : 
Gender :
Cast.Sect &Subsect: 
Gothram : 
Star : 
Rasi:*
DoB,Tob & Pob :

Education :
Occupation: Working in 
Location:
Height : 
Weight:     kg
Complextion : 
Father's Name : 
Mother's Name : 
Siblings:
Expectations: 
Contact - 
If any Spl info:-
விருப்பமுடையவர்கள் 
*NEW DELHI MANGALYAM* 
*Gopalakrishnan+91-9717236514*  
பதிவு எண்ணை குறிப்பிட்டு தொடர்பு கொள்ளவும். 💐🙏
🙏🚻🚻🚻🚻🚻🚻🚻🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மேலும் முழு விவரங்களுக்கு இந்த வலைப்பக்கத்திற்கு சென்று பார்க்கலாம் https://newdelhimangalyam.blogspot.com/

Monday, July 9, 2018

பயிற்சி விளையாட்டு:- அறிவுக்கு வேலைகொடு புதிர் போட்டி பரிசுகள்.

பயிற்சி விளையாட்டு:- அறிவுக்கு வேலைகொடு புதிர் போட்டி பரிசுகள்.

தினமும் காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும், மாநகர வாரியம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.

அது ஒரு வீட்டின் மேற்பகுதியில் பொருத்தப்பட்ட தண்ணீர் தொட்டி. 
அதன் கொள்ளளவு 300 லிட்டர்.

அந்த தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்காக ஒரு மாநகர குடிநீர் வழங்கும் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. 

தினமும் காலை மாலை இரண்டு நேரமும் இரண்டு மணி நேரத்தில் அந்த தண்ணீர் தொட்டி முழுவதும் நிரம்பி வழிவதுண்டு. 

தண்ணீர் தொட்டியை நிரப்பும் குழாய் பழுது ஏற்பட்டதால் அந்தக்குழாயிலிருந்து ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் எப்போதும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது.  

தண்ணீர் குழாயின் நேர் கீழே ஒரு 300 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட விவரங்களை கவனமாக படித்து நன்கு புரிந்துகொண்டு கீழ் கண்ட  வினாக்களுக்கு விடையைக்கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

1. அந்த தண்ணீர் தொட்டி எத்தனை மணி நேரத்தில் முழுவதும் நிரம்பும்.

2. பழுது ஏற்பட்ட குழாயிலிருந்து ஒரு நாளைக்கு வெளியேறும் நீரின் அளவு என்ன?

3. வீணாக வெளியேறிய தண்ணீரின் அளவு என்ன?

4. நீர் வீணாகாமல் தடுக்க என்ன வழி?

5. வீணாகும் நீரை எப்படி பயன்படுத்தலாம்?

சரியான விடையை அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.

எங்கே நீங்கள் உங்களின் திறமையை உபயோகித்து கேள்விக்கான பதிலை கூறுங்கள் பார்க்கலாம்.

போட்டியில் பங்குகொள்ள நினைக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள். 

இப்படிக்கு கோகி-ரேடியோ மார்க்கோனி.



Monday, April 23, 2018

உண்மைதான் பலவிவரங்கள் பள்ளியில் சொல்லித்தருவதில்லை....

உண்மைதான் பலவிவரங்கள் பள்ளியில்  சொல்லித்தருவதில்லை அந்த விஷயத்தில் (நாங்கள் 6 குழந்தைகள் உடன்பிறந்தவர்கள்) எங்களுடைய தந்தை எங்களுக்கு சொல்லித்தந்த சிறு சிறு பயிற்சி விளையாட்டு இன்றும் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக திகழ்கிறது. 
பயப்படாமல் இருக்க சிறு பயிற்சி விளையாட்டு.. இரவு காற்றில் வீட்டு சன்னல் கதவு ஆடுவதைக்காட்டி பூதம் வருகிறது என்று சொல்லி அதை எப்படி எதிர்கொள்வது என்பதை எடுத்துக்கூறுவார், ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ளும் சிறு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார், எளிய வழியில் மனப்பாடம் செய்வது எப்படி என்று சிறு பயிற்சி விளையாட்டில் சொல்லித்தந்திருக்கிறார், கணித பாடங்களுக்கும் முறுக்கு, சீடை, மிட்டாய்களை பயன்படுத்தி கணக்கு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார், ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும் பல பயிற்சி விளையாட்டையும் சொல்லிக்கொடுத்தார், தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டை விளையாட சொல்லித்தந்திருக்கிறார், அறிவியல், சரித்திரம், பூகோளம் என ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார். 

இப்படி பல கசப்பான பாடங்களையும் விரும்பி படிப்பது எப்படி என்று அதை ஒரு விளையாட்டாக மாற்றி அந்த விளையாட்டை எப்படி விளையாடவேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறார். இவை மட்டுமில்லாமல் இசையில் அப்பாவுக்கு அதிக ஆர்வம் புல்புல்தரங்கா என்கிற  இசைக்கருவியை வாசித்து பாம்பு மகுடி இசையை அதில் வாசித்துக்காட்டுவார். "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுதே மற்றும் உன்னை கண்தேடுதே" போன்ற பாடல்களை வாசித்து காட்டுவார். அதோடு அவர் தமது வாயில் விசில் ஊதுவதை போல வாயால் நாதஸ்வரம் வாசித்து காட்டுவார். அவரது நாதஸ்வர கச்சேரியை கேட்பதற்காகவே ஒவ்வொரு கல்யாணம் போன்ற விஷேஷ வைபவங்களில் அவர் கலந்துகொள்ளும்போதெல்லாம் குட்டி கச்சேரி நடத்திவிடுவார்கள்.    

எங்கள் அப்பா "மணி" என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி வைத்திருந்தார். எதற்க்கெடுத்தாலும் மணி என்று பெயர் கூறி ஆரம்பிப்பார்... அந்த அளவில் மணி என்பவன் மிக புத்திசாலியான பையனாக வலம்வந்தான். எங்கள் அப்பாவுக்கு பிடித்த அந்த "மணி" என்பவன்மீது எங்களுக்கு கோபம் கோபமாக வரும் மணி மட்டும் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்று எங்கள் அப்பா அவரின் கற்பனை பாத்திரமான மணி மீது வைத்திருந்த பாசத்தினால் பொறாமை கொண்டோம். ஆனால் எப்போதும் என் அப்பா மணியைப்பார் ரொம்ப நல்லப்பையன் நீயும் இருக்கிறாயே என மணியை உயர்த்தி எங்களை தாழ்த்தி என்றும் மணியோடு எங்களை ஒப்பிட்டு பேசியதில்லை.  

பல படிப்பினைகளைத்தரும் சிறு சிறு பயிற்சிகளை பல விளையாட்டுக்களாக மாற்றி அந்த விளையாட்டின் வழியே சொல்லித் தந்ததை  இன்றளவும் நானும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அந்த விளையாட்டுக்கள்தான் பலரும்  என்னை விரும்பும் ஒரு உன்னத நிலையை எனக்கு பெற்றுத் தந்தது.  வானொலியில் நான் வழங்கிய நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் அவர் காட்டிய வழியே எனக்கும் வழிகாட்டியாக அமைந்த அருமையான விளையாட்டுக்கள் அவை. 

அருமை சுட்டீஸ்கள் அனைவருக்கும்,  எனது தந்தையும் மற்றும் எனது வகுப்பாசிரியரும் எனக்கு சொல்லித்தந்த வாழ்க்கை கல்விக்கு அவசியமான சிறு சிறு பயிற்சி விளையாட்டுக்களைத்தான் நான் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கும் பயிற்சி விளையாட்டாக சொல்லித்தருகிறேன். வாருங்கள் பல்வேறு பயிற்சி விளையாட்டுக்களை விளையாடப்போகலாம். 

(அ)ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள (மறதியை போக்க) பயிற்சி விளையாட்டு.
(ஆ) மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு.
(இ) பயத்தை போக்க பயிற்சி விளையாட்டு. 
(ஈ)கணக்குப் பாடங்களுக்கான (முறுக்கு, சீடை, மிட்டாய்களைக்கொண்டு) பயிற்சி விளையாட்டு.  
(உ) ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும் பயிற்சி விளையாட்டு. 
(ஊ) தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டு. 
(எ) அறிவியல் பயிற்சி விளையாட்டு. 
(ஏ) கசப்பான பாடங்களையும் விரும்பி படிப்பது எப்படி என்ற பயிற்சி விளையாட்டு. 
(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு. 
(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு.
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் (ஒரேநேரத்தில் 9வேலைகளை செய்யும்) பயிற்சி விளையாட்டு.
(ஒள) பணத்தின் மதிப்பை தெரிந்துகொள்ளும், விற்று வாங்கும் பயிற்சி விளையாட்டு.
(ஃ)பொது சேவை செய்யும் பயிற்சி விளையாட்டு. 
(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு.
(அஆ)தோட்டம் அமைக்கும் பயிற்சி விளையாட்டு.
(அஇ)வீட்டு வளர்ப்பு பிராணிகள் பராமரிப்பு பயிற்சி விளையாட்டு.
(அஈ)உடற்பயிற்சி விளையாட்டு. (நீச்சல், மிதிவண்டி, காத்தாடி செய்து பறக்கவிட அப்பா சொல்லித்தந்து)
(அஉ)சமையல் பழகும் ஆராய்ச்சி பயிற்சி விளையாட்டுக்கள். (அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஒவ்வொரு ஞாயிறு விடுமுறையிலும் சமையல் ஆராய்ச்சி??? தக்காளிக்கு பதில் ஆப்பிள் போட்டு ரசம் வைப்பது ஆராய்ச்சி சமையல்).       
(அஊ) வெவ்வேறு மொழிகளை கற்றுக்கொள்ளும் பயிற்சி விளையாட்டு. 

இப்படி இன்னும் பல விளையாட்டுக்கள் மேற்கண்ட தலைப்புகளில் விளையாடியிருக்கிறோம்.. இவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா? என்றால்...ஞாபகம் வரும்போதெல்லாம்... மேலும் பல தலைப்புகளில் தொடரும்.

எனது அடுத்த பதிவில், பயிற்சி விளையாட்டில் (அ)ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-பயிற்சி விளையாட்டு-01 எப்படி விளையாடுவது என்று விளையாடிப் பார்க்கலாம் வாருங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

பயிற்சி விளையாட்டு-01
(அ ) ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள என்னுடைய தந்தை சொல்லிக் கொடுத்த விளையாட்டுக்களில் வீட்டின் ஒரு அறையில் சில பொருட்களை வைத்துவிட்டு எங்களை அந்த அறையை சுற்றிப்பார்த்துவிட்டு வந்ததும், அந்த அறையினுள்ளே என்ன என்ன பார்த்தீர்கள்? என்று பட்டியலிடச்சொல்லுவார். 

அதேபோல   திரைப்படம் பார்க்க அழைத்துச்செல்லும்போதும் அந்த திரையரங்கில்  எத்தனை மின்விசிறிகள் இருந்தது? அவற்றில் எத்தனை சரியாக இயங்காமல் நின்றுபோயிருந்தது? போன்ற பல கேள்விகளை கேட்ப்பார் அதற்காகவே நாங்கள் போட்டிபோட்டுக்கொண்டு எங்கும், எதைப்பார்த்தாலும்   குறிப்பெடுத்துக்கொள்வோம். 

அவ்வளவு ஏன்.... இன்றைக்கும் நாங்கள் படித்த பள்ளியின் கரும்பலகையில் இருக்கும் ஓட்டை, உடைசல், குழிகளில் ஆசிரியர் வரைந்த படமும், எழுதிய பாடமும் எங்கள் மனதில் நன்றாக பசுமரத்தாணிபோல இன்றளவும் நினைவில் இருக்கிறது என்றால் அன்று எங்களின் தந்தையார் சொல்லித்தந்த பயிற்சி விளையாட்டுக்களே காரணம்.

வாருங்கள் அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது *பாடங்களை மனப்பாடம் செய்வது எப்படி? என்று ஒரு விளையாட்டு சொல்லிக்கொடுத்தார் பிறகு ஒரு பதிவில், சுட்டீஸ் உங்களுக்கு அந்த விளையாட்டையும் விளையாட சொல்லித்தருகிறேன்.*

நாம் ஒரு திரைப்படத்திற்கு செல்கிறோம். அந்த படத்தை ஒரே ஒரு முறைதான் பார்க்கிறோம். அப்படியிருந்தும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடலை மனப்பாடம் செய்யாமலே நாம்மால் எப்படி பாடமுடிகிறது?வாருங்கள் அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது *பாடங்களை மனப்பாடம் செய்வது எப்படி?

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து.

FREE JOBS EARN FROM HOME