FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, August 29, 2019

*திரைப்பட பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*

[2/14, 10:48] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் நாளைய நிகழ்ச்சியில் வேறொரு இசைக்கருவியின் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/14, 14:36] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*💖🎼திரைப்பட பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*
*அல்லி பெட்ரா பிள்ளை என்ற திரைப்படத்தில்... ‘நல்ல நாளு, ரொம்ப நல்ல நாளு நல்ல பலன் நமக்கெல்லாம்  தரும் நாளு - இந்தத் திருநாளு’  என்று மருதகாசி எழுதிய பாடலை, டி. எம். சவுந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரை அழைத்துப் பாட வைத்தார் மகாதேவன்.*

*குதிரை வண்டிகளின் ஓட்டத்தோடும் ரயில்வண்டியின் ஜிகுஜிகு ஓட்டத்தோடும் பொருந்தும்படி, பாடலை விறுவிறுப்பான நடையிலே  மகாதேவன் அமைத்தார். எஸ்.வி. சகஸ்ரநாமம் (டி.எம்.எஸ்), வி. எம். ஏழுமலை (சீர்காழி கோவிந்தராஜன்), பி.டி. சம்பந்தம் (திருச்சி லோகநாதன்) ஆகியோர், தங்கள் வண்டிகளை ஓட்டிக்கொண்டு பாடுவதாக அமைந்த பாடலில் ஓரளவு அழகு இருந்தது.*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/14, 14:41] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*💖🎼பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*

.*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/14, 14:48] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*💖🎇ன்றய இறவுநேர இன்னிசை பாடல்களில்... திரைப்பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்... மற்றும் திரைப்படங்களில் ராயில்வண்டி காட்சிகள் பற்றிய நினைவுகளோடு... பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் மறந்துவிடாதீர்கள் தினமும் இரவு 9.00 மணிக்கு. இறவுநேர இன்னிசை கீதங்கங்கள்.. நிகழ்ச்சியில்.*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/14, 14:56] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚞🚉1950களில் திரையில் ரயில் வருவதை பார்த்து விட்டு பயந்து போய் ரசிகர்கள் திரையரங்கை விட்டு தலைதெறிக்க ஓடிய ரசமான சம்பவத்திலிருந்து தொடங்குகின்றது திரைப்படங்களில் ரயில் வண்டிகளின் வருகை. பல திரைப் படங்களில் ரயில் வண்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.. பல திரைப்பாடல்களில் ரயில் வண்டி சப்தத்தையே பின்னணியிசையாக வைத்து பாடலை இயற்றியிருக்கிறார்கள். வாங்க இன்றய நிகழ்ச்சியில் அவற்றையெல்லாம் கேட்டு ரசிக்கலாம்*🚞🚉
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/14, 18:59] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞உங்களுக்கு பிடித்த மறக்கமுடியாத திரைப்பட இரயில் பயண காட்சிகள் பற்றி கூறுங்களேன். அதோடு உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான இரயில் பயண குட்டி அனுபவங்களையும் எனது தனிப்பதிவில் பதிவு செய்யுங்களேன்....*

*அந்தக்காலங்களிலெல்லாம் ரயில் பயணம் என்றாலே பித்தளை அல்லது வெள்ளியிலான தண்ணீர் கூஜாவில் குடி தண்ணீர் எடுத்து செல்வது வழக்கம். ஒருமுறை காஞ்சிபுரம் புகைவண்டி நிலையத்தில் ரயில் நின்றபோது காலியாக இருந்த தண்ணீர் கூஜாவை யாரோ முகம் தெரியாத நபரிடம் குழாயில் தண்ணீர் பிடித்துத்தர கொடுத்தனுப்பியதும்... பாட்டி என்னிடம்... "அடே அது வெள்ளி கூஜாடா, எடுத்துண்டு போயிட்டான்னா என்ன பண்றது?" என்று கேட்க, பாட்டி நான்தான் கூஜாவின் மூடியை தரலையே ஆகவே மூடி கேட்க வருவான் இல்லையா என்று அசட்டுத்தனமாக கூற... பிறகு கூஜா மூடி மட்டும்தான் எங்களோடு இருக்க,  ரொம்பநாள் அந்த மூடியை பார்க்கும்போதெல்லாம்... ஏமாந்தாயா? எனறு கேலிபேசியத்தை மறக்கமுடியாத ஞாபகம்..*🚞🚉
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/14, 19:04] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞இரயில்வண்டி விளையாட்டை விளையாடாதவர்கள் உண்டா?  கூ.. சிக்கு புக்கு... சிக்கு புக்கு... ரயில் வண்டி கிளம்பிவிட்டது.. ஒருவர் பின் ஒருவராக சட்டையை பிடித்துக்கொண்டு குழந்தைகளின் அந்த ஆனந்தத்தை பார்ப்பதற்க்கே கொடுத்துவைத்திருக்கவேண்டும்...

*வீடியோ கேம், டேப், லேப்டாப், கம்ப்யூட்டர், செல்போன் என உட்கார்ந்த இடத்தில் மனதையும் உடலையும் வலுவிழக்கச் செய்யும் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்டு, வியர்க்க விறுவிறுக்க உடலுக்கும் மூளைக்கும் பயிற்சி தரும் விளையாட்டுகளை விளையாடச் செய்த அவசியமான நிகழ்ச்சி ஒன்று கோவில்பட்டியில் நடந்து முடிந்திருக்கிறது.*

*நகரம் முழுவதும் `ரயில் வண்டி’ என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் நம்மை ஈர்க்க நிகழ்ச்சி நடந்த மண்டபத்துக்குச் சென்றோம்.*

*அங்கு சுமார் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒருவரின் பின்புறம் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு ரயில் வண்டி போல் சத்தமிட்டபடி சுற்றிச் சுற்றி வந்தனர். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் உற்சாகம் தழும்பியது. உடன் வந்த பெற்றோரும் ரசிக்க நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. நிகழ்ச்சியை நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் உதயசங்கரை சந்தித்துப் பேசினோம்.*

*“இப்போதுள்ள சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களால் கல்வி தொடர்பான அழுத்தம் இருந்து கொண்டே உள்ளது. விளையாட்டு என்பது இல்லாமல் போய்விட்டது. அதிலும் கூடி விளையாடும் முறை அறவே இல்லை. கதை சொல்ல தாத்தா, பாட்டி கிடையாது. எப்போதும் மனஅழுத்தத்தில் ஆழ்ந்து இருப்பதால் குழந்தைகளுக்கு விரக்தி, வெறுமை ஏற்படுகிறது. இதனை போக்குவதற்காக தமுஎகச சார்பில் ரயில் வண்டி அமைப்பை தொடங்கியுள்ளோம்” எனக் கூறினார்.*

*குழந்தைகளை சுதந்திரமாக இருக்க விட வேண்டும், இஷ்டம் போல் இங்கே அமர அனுமதிக்க வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்த பெற்றோருக்கு கட்டளையிடப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக ரயில் வண்டி ஓட்டப்பட்டது. மன இறுக்கத்தில் இருந்த குழந்தைகள் இலகுவாகினர். தொடர்ந்து குழந்தைகளின் பெயரையும் சொல்ல வைத்து அனைவரைப் பற்றி அறிமுகப் படலம் நடத்தப்பட்டது. மேலும் வெவ்வேறான பல விளையாட்டுக்கள் குழந்தைகள் விளையாட, பெரியவர்கள் ஆனந்தமாக வேடிக்கை பார்த்தார்கள் அன்றய ஒருநாள் பயனுள்ள ஒரு நாளாக நகர்ந்தது வாழ்வில் மறக்கமுடியாத நானாக ஆனது....*🚞🚉
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/14, 19:05] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் ரயில் நிலையம் மற்றும் ரயில் வண்டி நகைச்சுவைக் காட்சிகள் மிகச் சிறப்பானவை. இந்திப் படத்தின் தழுவலான நாளை நமதேயின் ரயில் காட்சிகள் பரபரப்பை உண்டாக்கின. நீலகிரி எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ரயிலில் நடைபெறும் கொலையை வைத்துத் தான் மர்மக்கதை எழுதியிருப்பார் சோ.ராமசாமி. சிறந்த மாநிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி கே.ஆர்.விஜயா இணையில் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரயில்வண்டியின் புறப்படும் வேகத்தோடு இசையைத் தொடங்கி மயக்கியிருப்பார்.*🚞🚉
🙏👇👇👇👇👇🙏
[2/14, 19:23] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞சிக்கு புக்கு சிக்கு புக்கு இரயில் வண்டி பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்...🚞🚉*
*வெறும் புது முக நடிகர்களை வைத்து கல்லூரியைக் கதைக் களமாக்கி பாடல்களால் தமிழகத்தையே ஆட வைத்த ஒரு தலை ராகம் படத்தில் ரயில் வண்டி ஒரு கதாபாத்திரமாகவே வந்தது. இது போலவே கிளிஞ்சல்கள் படத்திலும் ரயில் காட்சிகள் ரசமானவை. முரட்டுக்காளை படத்தில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் திரையில் இடம்பெறும் ஓடும் ரயில்வண்டி சண்டைக்காட்சி வித்தியாசமான கேமிராக் கோணங்களில் ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. இந்த பாடல்  "💖கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்துருச்சு...💝"*
🙏👇👇👇👇👇🙏
[2/14, 19:35] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🐪சிக்கு புக்கு சிக்கு புக்கு இரயில் வண்டி பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்...🚞🚉*

*💖😃சிறுவயதில் இரயில் விளையாடியது மறந்துபோகுமா...???? இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு திரைப்படத்திற்கே கிழக்கே போகும் ரயில் என்று பெயர் வைத்து படம் முழுவதும் ரயில் வண்டியை ரசனை பொங்கப் பயன்படுத்தியிருப்பார் இணைந்த கைகள் மற்றும் காதல் கோட்டை ரயில் கிளைமாக்ஸ்கள் மறக்க முடியாதவை. நடிகர் விஜயகாந்த் பல படங்களில் ரயில் ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டியிருப்பார் செந்தூர பூவே படத்தில் கலங்கவும் வைத்திருப்பார். பாடல்:- பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதி வந்தாச்சு...*🚞🚉
🙏👇👇👇👇👇🙏
[2/14, 19:45] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞ரயில் வண்டி சம்பந்தப்பட்ட பாடல்களைப் பொறுத்த வரையில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம் சௌந்தர்ராஜனின் கம்பீரக் குரலில் பச்சை விளக்கு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ‘கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்ற கவியரசர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத பாடல் இன்றும் திசையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ, அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ, என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று, இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு’ என்ற அற்புதமான வரிகள் கொண்ட பாடல் அது.*🚞🚉
🙏👇👇👇👇👇🙏
[2/14, 19:52] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞ஜென்டில்மேன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்  கற்பனையில் விரிந்த சிக்கு புக்கு ரயிலே... பாடல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஏ.ஆர். ரகுமானின் மிகச் சிறப்பான மேற்கத்திய நவீனகால இசை பாணி தமிழுக்கு புதிய வரவானது. ஒரு மனித ஸ்பிரிங் போல பிரபுதேவாவின் மைக்கேல் ஜாக்சன் நடன அசைவுகள் தமிழக ஆச்சரியங்களில் ஒன்றாகப் பதிவானது. பாடலில் இடம் கிராபிக்ஸ் மற்றும் ராஜு சுந்தரம் பிரபுதேவா போட்டி நடனம் என்று தமிழ்த் திரையிசை வரலாற்றில் மறக்கமுடியாத பக்கமானது இந்தப் பாடல்.*🚞🚉
🙏👇👇👇👇👇🙏
[2/14, 19:58] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞அக்னி  நட்சத்திரம் படத்தில் இசைஞானி இளையராஜா புதுமையான கணினி தாள இசையில் பாடல் முழுதும் மேற்கத்திய இசையின் பார்ட்ஸ் எனப்படும் இசையிலக்கணம் பயன்படுத்தி ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்ற பாடல் மூலம் தமிழகத்தையே துள்ள வைத்தார். பி.சி.ஸ்ரீராமின் கேமிரா மற்றும் வித்தியாசமான ஒளியமைப்பு பிரமிக்க வைத்தது நடன இயக்குனர் சுந்தரத்தின் வேகம் தெறிக்கும் அசைவுகளுக்கு நடிகர் கார்த்திக் அசத்தலாக ஆடி இளைஞர்களின் ஐகான் ஆனார்.*🚞🚉
🙏👇👇👇👇👇🙏
[2/14, 21:01] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🙏🦚சுபம்🦚🙏*
*💖🎼மீண்டும் நாளைய நிகழ்ச்சியில் தொடர்ந்து இரயில் வண்டி சப்தம் பின்னணியிசையில் அமைந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம்... நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்க்கோனி. புது தில்லியிலிருந்து...*🎼💖
🙏🎻🎻🎻🎻🎻🙏
[2/14, 21:14] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞💖🌹ஹிந்தி பாடல் Hoga Tumse Pyara Kaun ஹிந்தி பாடல்..*

*சிக்கு புக்கு சிக்கு புக்கு இரயில் வண்டி பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்...*🚞🚉🌹💖
🙏👇👇👇👇👇🙏
[2/15, 19:12] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*💖🎼பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*

*💖🌹ஹிந்தி பாடல் Hindi song:-"Hum Dono Do Premi" - Rajesh Khanna, Zeenat Aman - Ajanabee..*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/15, 19:48] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*💖🎼பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*

*💖🌹ஹிந்தி பாடல் Mere Sapno Ki Rani Kab Aayegi Tu - Aradhana (1969)..*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/15, 19:53] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*💖🎼பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*

*💖🌹ஹிந்தி பாடல் Hindi song:-"Rail Gaadi - Ashok Kumar - Aashirwad..*🎼💖
🙏👇👇👇👇👇🙏
[2/15, 20:15] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*🚉🚞பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*
*மணிரத்தினம் இயக்கிய உயிரே படத்தில் ரகுமான் இசையில் சாருகான் நடிப்பில் தைய தைய பாடலின் இசையும் பாடல்காட்சிகளும் சூப்பர் ஹிட் பாடல்களே.🚞🚉*
🙏👇👇👇👇👇🙏
[2/15, 20:33] GopalKrishnan: 🙏🥁🥁🥁🥁🥁🙏
*🚉🚞பாடல்களின் பின்னணியிசையில் ரயில்வண்டி சப்தம்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி ஓசை கொண்ட பாடல்கள்...*

*சங்கே முழங்கு படத்தில், கவிஞ்சர் கண்ணதாசன் இயற்றிய பாடலுக்கு இரயில் வண்டி இசையை அழகாக இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன்.. பாடல்... நாலு பேருக்கு நன்றி! -அந்த நாலு பேருக்கு நன்றி! தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்... நாலு பேருக்கு நன்றி!...*🚞🚉
🙏👇👇👇👇👇🙏
[2/15, 20:40] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞தலைக்கு மேல் கடகடவென சப்தமெழுப்பிச் செல்லும் ரயில்வண்டி...குளிரக் குளிர சில்லென்று கடல் நீரின் வேகத்தில் வீசும் காற்று... முகத்தில் மோதும் நெல்லை மண்ணின் மாங்குடி, சேகர், ஷைலா பானு ஆகிய இருவருக்கும் சொந்த ஊர். அவன் பிறப்பால் இந்து...அவள் பிறப்பால் முஸ்லிம். ‘கண்ணாளனே’ என்று கண்களால் கட்டிப் போடுபவளின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான் சேகர். இரண்டு வெவ்வேறு வழித்தடங்களில் பாயும் நதிகள், ஒன்றிணைந்து எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு கடற்கரையின் ஓரத்திலிருந்து, தஞ்சமடையும் மற்றொரு கடற்கரைதான் ‘பம்பாய்...அந்த படத்தின் ஒரு பாடல்.. குச்சி குச்சி ராக்கம்மா*🚞🚉
🙏👇👇👇👇👇🙏
[2/15, 20:53] GopalKrishnan: 🙏🎻🎻🎻🎻🎻🙏
*🚉🚞*பாடல்:- அந்திநேர தென்றல் காற்று அள்ளித்தந்த  தாலாட்டு... 🎥திரை மேதை பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையில் கதையெங்கும் வந்து போகும் ஊட்டி மலை ரயில் கிளைமாக்ஸ் காட்சியில் கலங்க வைக்கும் காட்சிக்களமாகி  மனதைக் கனக்க வைக்கும். இதே போல பன்னீர்  புஷ்பங்கள் படத்திலும் தான். இயக்குனர் மணிரத்தினம் ரயில் காட்சிகளில் மாறாத காதல் கொண்டவர். அக்கினி நட்சத்திரம் படத்தில் ரயில் நிலையத்தில் அதிரடியான பாடல் காட்சியை அமைத்த அவர் உயிரே படத்தில் ஒரு முழு நீளப் பாடலையும் ஓடும் மலை ரயிலின் மேலே நடனக் காட்சி அமைத்து அசத்தியிருப்பார். தளபதி படத்தில் சரக்கு ரயிலை சோகச் சின்னமாக்கியிருப்பார் அலைபாயுதே மின்சார ரயில் காதல் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.*
*பாடல்:- அந்திநேர தென்றல் காற்று அள்ளித்தந்த  தாலாட்டு...🚞🚉*
🙏👇👇👇👇👇🙏

No comments:

FREE JOBS EARN FROM HOME