கோகி-ரேடியோ மார்கோனி: “இந்தியாவில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் இன்னும் 4ஜி(4G) லைசென்ஸ் வழங்கப்படவில்லை."

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, August 11, 2017

“இந்தியாவில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் இன்னும் 4ஜி(4G) லைசென்ஸ் வழங்கப்படவில்லை."

“இந்தியாவில் யாருக்குமே அதாவது எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் இன்னும் 4ஜி(4G) லைசென்ஸ் வழங்கப்படவில்லை." மக்களை ஏமாற்றும் விதத்தில் பொய்யான விளம்பரம் செய்துகிட்டிருக்காங்க. ஆனால் ஒரு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அப்படி செய்ய முடியாது. அப்படிச் செய்பவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கனும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டால் `4ஜி லைசென்ஸ் யாருக்கும் இல்லை’ என்றே பதில் வரும். என்கிறார் பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் திரு சிவகுமார். 

தொலைத்தொடர்புத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் ஆசிர்வாதம் ஆச்சாரியிடம் `உண்மையிலேயே இந்தியாவில் 4ஜி லைசென்ஸ் இருக்கிறதா இல்லையா?’என்று கேட்டோம்.

“4ஜி உரிமம் இந்தியாவில் யாரிடமும் கிடையாது. BWA தான் இருக்கு. பிராட்பேண்ட் வயர்லெஸ் ஆக்சஸ் என்னும் இந்தத் தொழில் நுட்பம் இன்டர்நெட் வசதியை வேகப்டுத்துகிறது. இது இதற்கு முன் இருந்த 2ஜி, 3ஜியை விட அதிகம் அவ்வளவுதான்; சர்விஸ் ப்ரொவைடர்கள் இதைத்தான் 4ஜி என்று சொல்லுகிறார்கள். ஜியோ வைப் பொறுத்தவரை அவர்கள் வாய்ஸ் காலுக்கு அனுமதி பெறவில்லை. அவர்களுக்கும் BWA(Broadband Wireless Access) மட்டுந்தான் தரப்பட்டுள்ளது. தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்கள் இணைய வழி தொடர்பை ஏற்படுத்தி வாய்ஸ் கால் கொடுக்கிறார்கள். உலகம் பூராவும் வாய்ஸ் காலுக்குக் கட்டணம் கிடையாது. அவர்கள்(வெளிநாடுகளில்) இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மட்டுந்தான் காசு வாங்குகிறார்கள்.

அதற்குக் காரணம் மக்கள் இப்போது பேசுவது குறைந்து இமெயில், வாட்சப், பேஸ்புக், ட்விட்டர் என மாறிக் கொண்டிருப்பதுதான். இங்கேதான் (இந்தியாவில்) போன் பேசுவது இன்னும் அதிகமாக உள்ளது. அதனடிப்படையில் உலகம் இந்தியாவை `வாய்ஸ் மார்க்கெட்’ என்று சொல்லுகிறது. இப்ப அதுவும் குறைந்து கொண்டே வருகிறது” என்று டெக்னிக்கலாகச் சொன்னார்.....

இந்த உலகத்த்தில் மிக உயர்ந்த சிகரமான "எவரெஸ்ட்" சிகரம் நம்ம நாட்டில்தான் உள்ளதா? .... மேற்கண்ட செய்திகளையும் செயல்களையும் பார்த்தால், நம்ம நாட்டுக்காரங்க உலகத்தின் மிக உயரமான சிகரத்தையே தூக்கி சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறதே .... கோகி.
Post a Comment

FREE JOBS EARN FROM HOME