கோகி-ரேடியோ மார்கோனி: திரைப்படப்பாடல்களில் "மவுத்தார்கன்- (Mouth Orgon)" ஹார்மோனிகா :- வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-03 / 108 (Episodu-03 of 108) :-

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, March 14, 2017

திரைப்படப்பாடல்களில் "மவுத்தார்கன்- (Mouth Orgon)" ஹார்மோனிகா :- வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-03 / 108 (Episodu-03 of 108) :-

"மவுத்தார்கன்-(MouthOrgon)"ஹார்மோனிகா:- திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு பகுதி-03 / 108 (Episodu-03 of 108) :- 

"மவுத்தார்கன்- (MouthOrgon)" என்று அழைக்கும் வாய் உதடுகளின் நடுவில் வைத்து ஊதும் துளை இசைக்கருவி  பற்றிய சிறப்பு பகுதியையும், திரையிசையில் மவுத்தார்கன் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவு. "மவுத்தார்கன்" இதற்க்கு ஹார்மோனிகா என்கிற மற்றொரு பெயரும் உள்ளது. 
திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- "மவுத்தார்கன்- (MouthOrgon)"ஹார்மோனிகா பகுதி-03 / 108 (Episodu-03 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

மவுத்-ஆர்கன்(Mouth-Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா:-
நமது பழைய தமிழ் திரைப்படங்களில் 1950 கலீல் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் வாத்திய இசைக்கருவியாக திரைப்படத்திலும் பிரபலப்படுத்தப்பட்ட எளிமையான கையடக்க வாத்தியம் மவுத்-ஆர்கன் (Mouth Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாகி, ஆப்ரகாம் லிங்கன், சேகு வேரா போன்ற தலைவர்களாலும் வாசிக்கப்பட்ட வாத்தியம்.

மவுத்-ஆர்கன்(Mouth-Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா பற்றிய கூடுதலான ஒரு செய்தியாக:- 
1. இந்தியாவில் வழக்கொழிந்த வாத்தியங்களில் ஒன்றான ஹார்மோனிகாவைச் சிறு வயதிலிருந்தே நேசிக்கவும் வாசிக்கவும் தொடங்கிவிட்டவர் பபிதா பாசு. கொல்கத்தாவில் இருக்கும் இவர், இன்றைக்கு வட கிழக்காசியாவிலேயே பெயர் சொல்லும் ஹார்மோனிகா வாத்தியக் கலைஞராக பிரகாசித்துக்கொண்டிருப்பவர்.
இந்திய ஹார்மோனிகா அமைப்பின் சார்பாக ரவீந்திர சங்கீதம், திரையிசை, மேற்கத்திய இசை என மூன்று பிரிவுகளிலும் சிறந்த கலைஞருக்கான விருதைப் பெற்றிருப்பவர். ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு பிறந்த நாளுக்காக, தாகூரின் புகழ்பெற்ற பாடல்களை ஹார்மோனிகாவில் வாசித்து ஒரு இசை ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுதவிர, கன்ஃபுளுயன்ஸ், ஹார்மோனிகா ஆஃபரிங் போன்ற இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

2. தமிழகத்தின் திருநெல்வேலியச் சேர்ந்தவர் திரு.பட்டாபிராமன் மவுத்தார்கன்னும் அவரும் எப்போதும் சேர்ந்தேயிருப்பார்களோ என்று என்னத்த தோன்றுமளவுக்கு,  அவருக்கு மவுத்தார்கன் வாசிப்பது என்பது அவரின் உயிர் மூச்சுக்காற்றில் கலந்துவிட்ட ஒன்று. நிறைய திரைப்படப்பாடல்களை தனது மவுத்தார்கன்னில் பாடி அவரது யூடுப் சானல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். http://tamilbloggersunit.blogspot.in/


3. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் திரு முருகன் கோவிலில் "ஒளவை"  என்கிற பெயர் கொண்ட கோவில் யானை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டது அந்த கோவில் யானை தினமும் மவுத்தார்கன் வாசிக்கும் திறன் கொண்ட கோவில் யானை என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.4. இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு மவுத்தார்கன் வாசிப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்காக கொண்டவர் அவரை  மவுத்தார்கன் களைஞன் என்றும் கூறுகிறார்கள்.

5.    "மவுத்தார்கான் எனும் இசைக்கருவி எங்கள் பால்யத்தின் ஈரஉதடுகள் பதியாத இடமில்லை". என்று சொல்லுமளவுக்கு சிறுவயதிலிருந்தே நம்மோடு இணைந்துவிட்ட ஒரு எளிமையான இசைக்கருவி இது.

6. ஹார்மோனிகா என்னும்  மவுத் ஆர்கனை வாசிப்பது என்பது அத்தனை எளிதான செயல் அல்ல. உதடுகளில் பொருத்தி, மூச்சை அடக்கி வாசிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். நாதஸ்வரம் போல். இதற்குள் ஒரு இலக்கணத்துடன் ஸ்ருதியுடன் சப்தம் (ஒலி) நாதம் எழுப்புவது என்பது மிகவும் சிரத்தையுடன் முழுப்பயிற்சியுடன்கூடிய விடா முயற்ச்சியும் வேண்டும்.  

7. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூர் பகுதியில்  2015 அக்டோபர் மாதம்,  ஒரே இடத்தில் ஒன்று கூடி வாசித்து, 200 மவுத் ஆர்கன் இசைக் கலைஞர்கள் உலக சாதனை படைத்தனர்.
இந்திய ஹார்மோனிகா  சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் திரு. ராஜேந்திரசிங் பன்கூரா கூறுகையில், ‘‘இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் மவுத் ஆர்கன்  வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற 200 இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் கூடி வாசி்த்தனர். ஏழு இந்தி் பாடல்களை மூன்று நிமிடங்கள் மவுத் ஆர்கனில் வாசித்து கலைஞர்கள் சாதனை படைத்தனர்’’ என்றார். இந்நிகழ்ச்சியை பல நகரங்களிலிருந்து வந்த  ஏராளமானவர்கள் கேட்டு ரசித்தனர்.

திரையிசையில் ஹார்மோனிகா என்னும் மவுத்தார்கன் இசைக் கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் ஹார்மோனிகா இசையின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

பழைய பாடல்கள் வரிசையில்:-
1) 1959 ஆம் ஆண்டு வெளியான "கைதி கண்ணாயிரம்" திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புலவர் மருதகாசி அவர்களின் இந்தப்பாடலில் இசையமைப்பாளர்  கே.வி. மஹாதேவன் அவரால்  "மவுத்தார்கன்" இசைக்கருவியை பாடலிலும்,  படத்தின் பாடல் காட்சியிலும் வருமாறு பாடலை சிறப்பித்திருப்பார்.  பாடல்:- கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும். வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்... பாடலைப் பாடியவர்கள்  பி. சுசீலா அவர்களும், அவருடன் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் பாடியுள்ளனர். https://youtu.be/uso_r4Sz3tM

2) காதலனின்  உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே கவியரசு கண்ணதாசன் சொல்லிவிடுவார். அதற்க்கு மெருகூட்டும் வண்ணன் இசை மன்னர்  விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்கள் பாடலின் ஆரம்பத்திலேயே புல்லாங்குழல் ஊதி ஆரம்பித்து தொடர்ந்து "மவுத்தார்கன்" கிட்டார், வயலின் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். இப்பாடலைக் கேட்கும்போது அந்த நேரத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை
பாடல்:-காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
படம்: பாவ மன்னிப்பு, இசை :-விஸ்வநாதன், ராமமூர்த்தி, பாடல் வரிகள்:- கவியரசு கண்ணதாசன், பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
 https://youtu.be/lEcwt7nnw0U

3) கண்ணதாசனின் வரிகளில், விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில், கவலையில்லாத மனிதன் திரைப்படத்தில் அமைந்த இந்த சோகமான பாடலிலும் மவுத்தார்கன் இசையில் சந்திரபாபு அவர்கள் பாடி நடித்த காட்சிகள் பாடலோடு மிக அருமையாக நமது மனங்களையும் வருடிக்கொண்டு போகும் இந்தப்படத்தில் அமைந்த அனைத்துப்பாடலும் மிக அருமையாக, இதமான பாடலாக மைந்திருக்கும். 
பாடல் பிறக்கும்போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய்,. ஒரு நாளேனும் கவலையை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே.  https://youtu.be/2Goazija6-k

4) பாடல்:-“வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” என்கிற இந்தப் பாடலில் மவுத்தார்கன் இசையை மிக நேர்த்தியாக கையாண்ட விதம் இசையரசர்  M.s.விஸ்வநாதன் அவர்களுக்கு கைவந்தக்கலை... இந்தப்  பாடல் இடம்பெற்ற படம் : மூன்று முடிச்சு, பாடல் வரிகள் : கண்ணதாசன், குரல் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & m.s.விஸ்வநாதன்.. இத் திரைப்படத்தில் கமல் ஸ்ரீதேவி இருவரும் காதலில் மயங்கி கிடைக்கும் போது வரும் பாடலாதலால் 13 இடங்களில் 'கள்' என்று போதை தரும் வார்தையைப் பிரயோகித்திருப்பார் கவிஞர் கண்ணதாசன்.(காதலும் போதை தருவதனால் தானோ) https://youtu.be/7Q55nVGOofo

இடைக்காலப் பாடல்கள் வரிசையில்
5) திரிசூலம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்  
இந்தப்பாடல் "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா என்கிற இசைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த பாடலும், பாடல் காட்சியும் மிகப்பொருத்தமாக நடிகர்திலகத்தின் நடிப்பில், விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் கவிஞ்சர் கண்ணதாசன் பாடல் வரிகளில் உருவான பாடலைப் பாடியவர்கள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம். https://youtu.be/7LyOJWJgSzI


6) மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து 1975 ஆம் வருடம் வெளியான மாபெரும் வெற்றிப்படமாக "நாளை நமதே" படத்தின் முதல் பாடலில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் "மவுத்தார்கன்" வாத்தியக்கருவியை பாடலில் இடம்பெறச்செய்து மிக நேர்த்தியாக இந்தப்பாடலுக்கு இசையமைத்திருப்பார்,  பாடலை இயற்றியவர் வாலி , பாடலை பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்த இந்தப் படமும் பாடலும் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் 
பாடல்: அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே... https://youtu.be/02ouCegMfY8

7) ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இளையராஜாவின் இன்னிசை. இப்படத்தின் பாடலான குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. 
பாடல்:- தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
https://youtu.be/TZ-R2OArfIc


புதிய படப்பாடல்கள் வரிசையில்:-
8) நடிகர் மோகன் அவர்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் எப்போதும் உண்டு. அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு ரசிகர்களின் மனதில் என்றும் நீக்காத இடத்தைப்பிடிக்கும் அந்தவகையில்  "மவுத்தார்கன்" என்னும்  ஹார்மோனிகா இசையில் ஆரம்பித்து கங்கை அமரன் அவர்களின் பாடல் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் மற்றும் இந்தப் படம் முழுதும் ஒரு வசீகரத்தை கொடுக்கும்  இசைக்கருவியை இளையராஜா அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதம் இனிமையான அனுபவம். இந்தப்படத்தையும் இந்தப்பாட்டையும் சிறப்பு செய்த "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா இசைக்கருவி இசைத்த பாடல்களில், இந்தப்பாடலை மிகவும் சிறப்புவாய்ந்த பாடலாக முன்னிறுத்துகிறது 
பாடல்:- நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை.. படம் : குங்கும சிமிழ், இசை : இளையராஜா, பாடலாசிரியர்: கங்கை அமரன், பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  https://youtu.be/qjnorxdJ2J8

9) வாலி (1999) படத்தில் வரும் ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ டா ,   என்கிற பாடலில் "மவுத்தார்கன்" இசையைப் இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடலின் மிக அருமையான சூழலில் நேர்த்தியாக இந்த இசையை பயன்படுத்தியிருப்பார்  படத்தில் கதாநாயகனாக (தலை) அஜித் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ். ஜே. சூர்யா அவர்கள்  இயக்கியுள்ளார். https://youtu.be/bmnQo4-iRKg 

10) பாடல் "பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே"
படம் வேட்டையாடு விளையாடு , ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பு நன்றாக உள்ளதாக பாடலை கேட்ட அனைவரும் இந்தப்பாடலை மனதில் முனுமுனுக்க அரம்பித்தனர்.. அப்படிப்பட்ட  அந்தப் பாடலை சிறப்பான பாடலாக மகுடம் சூட்டவைத்த "மவுத்தார்கன்" ஹார்மோனிகா இசை அனைவரது அடிமனதில் ஆழ ஊறிப்போன பால்ய காலத்து நினைவுகளை அவர்களுக்கு தெரியாமலே இந்தப்பாடலின்"மவுத்தார்கன்"  இசையினால்  மனதை சுண்டி இழுத்தது என்று சொன்னால், பாடலைக் கேட்ட அனைவருமே தமது பால்ய வயதில் "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா இசையை வாசித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது .. படத்தில் நடிகர்கள்: கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், இசை: ஹாரிஸ் ஜெயராஜ், இயக்கம்: கௌதம் மேனன், பாடலாசிரியர்: தாமரை, பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ ..https://youtu.be/chcMmxBMKDM

11) சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் அவர்கள் நடித்த படையப்பா படத்தில் "மவுத்தார்கன்" இசையை வைத்து  படத்தின் மிக முக்கிய கட்சியை நகர்த்தியிருப்பார்கள். அந்தப்படத்தில் இந்தப் பாடலில் நடிகர் ரஜினிகாந்த அவர்கள் "மவுத்தார்கன்" வாசித்து நடிப்பதாக இருக்கும் இந்தப்பாடலில்  "மவுத்தார்கன்" இசைக்கருவியின் இசையை A.R ரகுமான் அவர்கள் பாடலுக்கு சிறப்புசேர்க்குமாறு இசையமைத்திருப்பார் "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு, என்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா"  https://youtu.be/IunsCffBuZU

12)  நான் ஈ படத்தில் வரும் இந்தப்பாடலில்  "மவுத்தார்கன்- (Mouth Orgon)" ஹார்மோனிகா :- இசையும் பாடலோடு சேர்ந்து இழையோடுகிறது ..
பாடல் :-வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.
அட அடடடடா – ஓ ஹோ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பாடலுக்கு இசை : மரகதமணி, இயக்கம் : ராஜமௌலி, பாடியவர்கள் கார்த்திக், சாஹிதி. https://youtu.be/fLsxFTZw63U

இப்படி "மவுத்தார்கன்" என்கிற ஹார்மோனிகா என்னும் இசைக் கருவியின் அற்புதமான இசையை மற்ற வாத்தியத்திற்கு தகுந்தாற்போல் பல பாடல்களில் இசைக்கப்பட்டு, திரைப்படப் பாடல்களை மேலும் மேலும் மெருகு சேர்த்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. காலங்களைக்கடந்த இந்த இசைக்கருவிக்கு ரசிகர்களின் மத்தியில் என்றைக்கும் நிரந்தரமான ஒரு இடம் இருக்கும் என்பது திண்ணம். 


மவுத்தார்கன், ஹார்மோனிகா வாத்தியக்கருவியில் மேலும் பல திரைப்படப்பாடல்கள் பழைய பாடல் புதிய பாடல் என வரிசைப்படுத்தப்பட்டு எனது சங்கீத சாம்ராஜ்யம் என்கிற முகநூல் பதிவில் கண்டு ரசிக்கலாம். 


இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு என்ற பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "ஷெனாய் அல்லது செனாய்" வாத்திய இசைக் கருவி என்பது நாதஸ்வரம்  போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி. வட இந்தியாவில் திருமணம் போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.

உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். 
ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா, ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும் இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய் வாசித்தார்.

திரையிசையில் ஷெனாய் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம்.  
பண்டைய திரைப்படப் பாடல்களில் ஷெனாய் இசையை அதிகமாக துயரமான, சோகமான பாடல்களுக்கே அதிகம் பயன்பட்டுள்ளதாக தெரிகிறது ....  

செனாய் / ஷெனாய் வாத்திய இசைக்கருவியின் இசையில் இணைந்து ஹிந்துஸ்தானி இசையில் அமைந்த சிறந்த தமிழ் திரைப்படப் பாடல்களின்  இனிய இசையை   நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

1) இந்தப்பாடலில் பல இசைக்கருவிகளுக்கு இடையே ஷெனாய் இசைக்கருவியின் இசை மிக அருமையாக கலந்து பாடலை சிறப்பு செய்திருக்கும்.  பாடல்:- மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும் கவி மன்னவர் காவியம் பொங்கும் அதைக் காதலர் உள்ளம் வணங்கும்..
திரைப் படம்: பார் மகளே பார்,  பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா மற்றும் குழுவினர், இசை எம் எஸ் விஸ்வநாதன், நடிப்பு: முத்துராமன் – விஜயகுமாரி. https://youtu.be/vvJDcqvvVA0 

2) இந்தப்பாடலில் செனாய் இசை பாடலோடு பின்னிப்பிணைத்திருக்கும் அழகே தனி அந்த இசையை மட்டும் தனித்து உணர்ந்து ரசிக்கும்போது அதன் இனிமை மிக ரம்மியமானது.. பாடல்வரிகளோடும் பாடலின் காட்சிகளோடும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு இசைக்கோர்வை இந்தப்பாடல். பாடல்:- மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் - நீயும் அச்சத்தோடு விலகி... பாடலின் திரைப்படம்: சாரதா (1962) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன், இசை: கே.வி. மஹாதேவன். https://youtu.be/_WqwmxjP1R0

3) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
திரைப்படம்: பாலும் பழமும் (1961), பாடியவர்:டி.எம்.எஸ்- பி.சுஷீலா,  இசை :எம்.எஸ்.விஸ்வநாதன், வரிகள்: கவிஞர் கண்ணதாசன்.  https://youtu.be/AtrOLDpmaT8


4) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது - எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது. பாடல் இடம்பெற்ற படம்:- நினைத்ததை முடிப்பவன் (1975), பாடலை இயற்றியவர் கவிஞ்சர் கண்ணதாசன், இசை எம் எஸ் வி அவர்கள், பாடலைப்  பாடியவர்  டி.எம். எஸ்  அவர்கள்,  https://youtu.be/csBahBsXvaA


4) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் (உன் பேர்...) திரைப்படம் : மின்சாரக் கண்ணா, இசை: தேவா, பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன். பாடலை இயற்றியவர்  நா.முத்துகுமார்.  https://youtu.be/PxSiOkrTSdM


5) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா,  அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா.. திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,   இசை: டி.இமான், பாடல் வரிகள்: யுகபாரதி, பாடியவர்:-ஜெயமூர்த்தி.  https://youtu.be/33-EhS2zclI


....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்.... கோகி-ரேடியோ மார்கோனி.


Post a Comment

FREE JOBS EARN FROM HOME