FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, March 23, 2017

இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை! விநாயகர் ஆதியேந்திரப் பிரபுவாக - இந்தக்கோவிலில் பிண்டப்பிரதான வேண்டுதல்களை செய்து பாவ நிவர்த்தியடைகிறார்கள்.

நான் (2002 முதல்) ஆயுள் கால சந்தா தாரர் / உறுப்பினராக உள்ள .... சென்னை மத்திய கைலாஷ் ஆலயம் இது.

சென்னை அடையாறில் மத்திய கைலாஷ் திருக்கோயிலிலே இந்த அற்புத விநாயகர், ஒரு பகுதி ஆஞ்சநேயராகவும் , மறு பகுதியிலே விநாயகராகவும் உருவம் கொண்டு ஆதியேந்திரப் பிரபுவாகக் காட்சி தருகின்றார்.


பல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்! முதலில் “மகா கணபதிம்” என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, “ராமச்சந்த்ராய ஜனக” என்று மங்களம் பாடி முடிப்பார்கள்! பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு! பிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை! இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!

இந்தக்கோவிலில் பிதிரர்களுக்கு-திதி-பிண்டதானம் என்னும் பிண்டப்பிரதானத்தை பிள்ளியாரே நேரடியாக பெற்று (கைலாசம் சென்று சேரும் என) பிதிர் கடன்களை தீர்க்கிறார் என்பது ஐதீகம். ஆகவே புத்திர தோஷம், பூர்வ புண்ணிய தோஷம் உடையவர்கள், விபத்து அகாலமரணமடைந்தோர் மேலும் தனது மூதாதையர்களுக்கு முறையாக திதி காரியம் செய்யமுடியாதவர்கள் இந்தக்கோவிலில் பிண்டப்பிரதான வேண்டுதல்களை செய்து பாவ நிவர்த்தியடைகிறார்கள்.

பிள்ளையார் சதுர்த்தி நாளில் சூரியனின் கதிர்கள் இப்பிள்ளையாரின் மேல் விழுவது இக்கோவிலின் சிறப்பு.

அடையாறில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் சாலை முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது. மத்திய கைலாஷ் வெண்பளிங்குக் கற்களில் உருவாக்கப்பட்ட அமைதி தவழும் ஆன்மிக அடையாளம் இது. வலப்புறத்தின் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறhர். தந்தை பரமேஸ்வரன் அம்மை உமையவள் ஆதித்யன் மற்றும் திருமால் ஆகியோர் எழுந்தருளியுள்ளார்கள். இங்கு அனுமனுக்கும் பைரவனுக்கும் சன்னதிகள் தனியே உள்ளன. மரங்களின் பசுமையில் பக்தி தழைக்கிறது.

கோவில் அமைவிடம் சர்தார் பட்டேல் சாலை அடையாறு சென்னை - 600 020. நேரம் காலை 5.30-12 மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 22350859.

No comments:

FREE JOBS EARN FROM HOME