FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, March 28, 2017

கடவுள் உங்கள் முன்னம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை

திடீர் என கடவுள் உங்கள் முன்னம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை, அனைவரும் யோசிக்க முனைந்தார்கள், அனைவருக்கும் தெரியும் "தொட்டதெல்லாம் பொன் ஆகவேண்டும் என்கிற வரம் பெற்ற கதை".....

ஒருவர் நன்கு யோசித்தபிறகு இப்படி கேட்டார் "மன சாந்தி" வேண்டும் என கேட்பேன் என்றார் ..அதாவது எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் மனம் சாந்தி அடையாது என்கிற நோக்கில் அப்படி வரம் கேட்டார் ..
அதற்கு கடவுள் சிரித்தபடியே வரம் தந்தேன் என்றார். அவரது சிரிப்பிற்கு காரணம் இருந்தது ...தேவை என்று ஒன்று இல்லாத "சாதுக்கள்" மற்றும் சில "ஞானிகள்-சாதுக்கள்" "சாந்தம்" நிறைந்த மனம் பெற்றவர்கள்..
   
சாதுக்கள் என்று அழைக்கப்படும் ஒருவர் சாலையோரம் நடந்து வந்துக்கொண்டிருந்தார். பார்பதற்கு எத்தனை நாட்கள் குளிக்காமல் இருந்திருப்பாரோ? அவ்வளவு தூசுக்கள் படிந்த உடலும் அழுக்கு உடைகளையும் அணிந்திருந்ததால், அவரின் அருகே செல்லக்கூட மக்கள் அஞ்சி, விலகி சென்றுக் கொண்டிருந்தனர், அவரின் கண்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக இருந்தது அதில் அவருக்கு, தனது வெளிப்புற தூய்மையின்மை மற்றும் தனது நிலையைப்பற்றிய எந்த நினைப்பும் இருக்கவில்லை, அடுத்தவேளை உணவு இருப்பிடம் போன்ற எந்த கவலையும் அவரிடம் இருக்கவில்லை. மொத்தத்தில் அவரின் மனம் சாந்தமாக... "மன சாந்தி நிறைந்தவராக" தெரிந்தார்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் வரம் கேட்டபோது கடவுள் ஏன் சிரித்தபடியே "வரம் தந்தோம்' என்று கூறினாரே அதற்க்கான காரணம் இது தான் " தேவை என்று ஏதுமின்றி ஆசையை தொலைத்தாலே "சாந்தி" கிடைத்துவிடும். ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் இதை, எதற்கு கடவுளிடம் வேண்டி வரமாக பெறவேண்டுமா?

கனவில் வந்த கதை -நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

சொந்தமாக "சிக்கு புக்கு -இரயில் வண்டி* வைத்திருந்த தமிழரைப் பற்றி.....

சொந்தமாக "சிக்கு புக்கு -இரயில் வண்டி* வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா? சென்னையில் ஒரு ரயில் நிலையம், சேத்துப்பட்டு என்ற பெயரில் உள்ளதே; அதை தெரியுமா?

தனி மனிதர் ஒருவர் சொந்தமாக கார், பேருந்து, விமானம் ஏன் கப்பல் கூட வைத்திருப்பார்கள், ஆனால் சொந்தமாக ரயில் வைத்திருக்கிறார்களா? ஆம், தமிழர் ஒருவர் வைத்திருந்திருக்கிறார்.
அவர் தான் சென்னையைச் சேர்ந்த தாட்டிகொண்ட "நம்பெருமாள் செட்டியார்" (Thaticonda Namberumal Chetty 1856--1925). தற்போது சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியின் வரலாற்றுக்கு சொந்தக்காரரான இந்த நம்பெருமாள் செட்டியார், சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பல சிவப்பு நிற கட்டிடங்களை உருவாக்கியவர். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.
18 ஆம் நூற்றாண்டில் பிரபலமான பில்டிங் காண்ட்ராக்டராக இருந்த இவர் வாழ்ந்த வீடு ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர்.மேத்தா மருத்துவமனையின் பின்புறம் உள்ளது. 3 மாடிகள், 30 அறைகள் கொண்ட இந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில், சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
Chennai எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு நம்பெருமாளுக்கு சொந்தமாக இருந்தது. அதன் காரணமாகவே அப்பகுதி, ‘செட்டியார் பேட்டை’ என அழைக்கப்பட்டது. நாளடைவில், ’செட்டிபேட்டை’ என மருவி, தற்போது ‘செட்பெட்’ என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித்தந்த நம்பெருமாளின் வீட்டில் தான், கணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்து போய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார். அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர்.
ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி ( தற்போது SBI ) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் ( பிரெஞ்ச் டிட்கன் ) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்‌ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார் மல்லையா. தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வட சென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன.
சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது. இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார். தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இவரது பெயரையே இன்று, சென்னை ‘செட்பட்’ Chennai CHETPET தாங்குகின்றது.


Thursday, March 23, 2017

இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை! விநாயகர் ஆதியேந்திரப் பிரபுவாக - இந்தக்கோவிலில் பிண்டப்பிரதான வேண்டுதல்களை செய்து பாவ நிவர்த்தியடைகிறார்கள்.

நான் (2002 முதல்) ஆயுள் கால சந்தா தாரர் / உறுப்பினராக உள்ள .... சென்னை மத்திய கைலாஷ் ஆலயம் இது.

சென்னை அடையாறில் மத்திய கைலாஷ் திருக்கோயிலிலே இந்த அற்புத விநாயகர், ஒரு பகுதி ஆஞ்சநேயராகவும் , மறு பகுதியிலே விநாயகராகவும் உருவம் கொண்டு ஆதியேந்திரப் பிரபுவாகக் காட்சி தருகின்றார்.


பல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்! முதலில் “மகா கணபதிம்” என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, “ராமச்சந்த்ராய ஜனக” என்று மங்களம் பாடி முடிப்பார்கள்! பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு! பிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை! இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!

இந்தக்கோவிலில் பிதிரர்களுக்கு-திதி-பிண்டதானம் என்னும் பிண்டப்பிரதானத்தை பிள்ளியாரே நேரடியாக பெற்று (கைலாசம் சென்று சேரும் என) பிதிர் கடன்களை தீர்க்கிறார் என்பது ஐதீகம். ஆகவே புத்திர தோஷம், பூர்வ புண்ணிய தோஷம் உடையவர்கள், விபத்து அகாலமரணமடைந்தோர் மேலும் தனது மூதாதையர்களுக்கு முறையாக திதி காரியம் செய்யமுடியாதவர்கள் இந்தக்கோவிலில் பிண்டப்பிரதான வேண்டுதல்களை செய்து பாவ நிவர்த்தியடைகிறார்கள்.

பிள்ளையார் சதுர்த்தி நாளில் சூரியனின் கதிர்கள் இப்பிள்ளையாரின் மேல் விழுவது இக்கோவிலின் சிறப்பு.

அடையாறில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் சாலை முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது. மத்திய கைலாஷ் வெண்பளிங்குக் கற்களில் உருவாக்கப்பட்ட அமைதி தவழும் ஆன்மிக அடையாளம் இது. வலப்புறத்தின் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறhர். தந்தை பரமேஸ்வரன் அம்மை உமையவள் ஆதித்யன் மற்றும் திருமால் ஆகியோர் எழுந்தருளியுள்ளார்கள். இங்கு அனுமனுக்கும் பைரவனுக்கும் சன்னதிகள் தனியே உள்ளன. மரங்களின் பசுமையில் பக்தி தழைக்கிறது.

கோவில் அமைவிடம் சர்தார் பட்டேல் சாலை அடையாறு சென்னை - 600 020. நேரம் காலை 5.30-12 மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 22350859.

Tuesday, March 14, 2017

திரைப்படப்பாடல்களில் "மவுத்தார்கன்- (Mouth Orgon)" ஹார்மோனிகா :- வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-03 / 108 (Episodu-03 of 108) :-

"மவுத்தார்கன்-(MouthOrgon)"ஹார்மோனிகா:- திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு பகுதி-03 / 108 (Episodu-03 of 108) :- 

"மவுத்தார்கன்- (MouthOrgon)" என்று அழைக்கும் வாய் உதடுகளின் நடுவில் வைத்து ஊதும் துளை இசைக்கருவி  பற்றிய சிறப்பு பகுதியையும், திரையிசையில் மவுத்தார்கன் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவு. "மவுத்தார்கன்" இதற்க்கு ஹார்மோனிகா என்கிற மற்றொரு பெயரும் உள்ளது. 
திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- "மவுத்தார்கன்- (MouthOrgon)"ஹார்மோனிகா பகுதி-03 / 108 (Episodu-03 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

மவுத்-ஆர்கன்(Mouth-Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா:-
நமது பழைய தமிழ் திரைப்படங்களில் 1950 கலீல் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் வாத்திய இசைக்கருவியாக திரைப்படத்திலும் பிரபலப்படுத்தப்பட்ட எளிமையான கையடக்க வாத்தியம் மவுத்-ஆர்கன் (Mouth Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாகி, ஆப்ரகாம் லிங்கன், சேகு வேரா போன்ற தலைவர்களாலும் வாசிக்கப்பட்ட வாத்தியம்.

மவுத்-ஆர்கன்(Mouth-Orgon) என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா பற்றிய கூடுதலான ஒரு செய்தியாக:- 
1. இந்தியாவில் வழக்கொழிந்த வாத்தியங்களில் ஒன்றான ஹார்மோனிகாவைச் சிறு வயதிலிருந்தே நேசிக்கவும் வாசிக்கவும் தொடங்கிவிட்டவர் பபிதா பாசு. கொல்கத்தாவில் இருக்கும் இவர், இன்றைக்கு வட கிழக்காசியாவிலேயே பெயர் சொல்லும் ஹார்மோனிகா வாத்தியக் கலைஞராக பிரகாசித்துக்கொண்டிருப்பவர்.
இந்திய ஹார்மோனிகா அமைப்பின் சார்பாக ரவீந்திர சங்கீதம், திரையிசை, மேற்கத்திய இசை என மூன்று பிரிவுகளிலும் சிறந்த கலைஞருக்கான விருதைப் பெற்றிருப்பவர். ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு பிறந்த நாளுக்காக, தாகூரின் புகழ்பெற்ற பாடல்களை ஹார்மோனிகாவில் வாசித்து ஒரு இசை ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுதவிர, கன்ஃபுளுயன்ஸ், ஹார்மோனிகா ஆஃபரிங் போன்ற இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

2. தமிழகத்தின் திருநெல்வேலியச் சேர்ந்தவர் திரு.பட்டாபிராமன் மவுத்தார்கன்னும் அவரும் எப்போதும் சேர்ந்தேயிருப்பார்களோ என்று என்னத்த தோன்றுமளவுக்கு,  அவருக்கு மவுத்தார்கன் வாசிப்பது என்பது அவரின் உயிர் மூச்சுக்காற்றில் கலந்துவிட்ட ஒன்று. நிறைய திரைப்படப்பாடல்களை தனது மவுத்தார்கன்னில் பாடி அவரது யூடுப் சானல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். http://tamilbloggersunit.blogspot.in/


3. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் திரு முருகன் கோவிலில் "ஒளவை"  என்கிற பெயர் கொண்ட கோவில் யானை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டது அந்த கோவில் யானை தினமும் மவுத்தார்கன் வாசிக்கும் திறன் கொண்ட கோவில் யானை என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.



4. இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு மவுத்தார்கன் வாசிப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்காக கொண்டவர் அவரை  மவுத்தார்கன் களைஞன் என்றும் கூறுகிறார்கள்.

5.    "மவுத்தார்கான் எனும் இசைக்கருவி எங்கள் பால்யத்தின் ஈரஉதடுகள் பதியாத இடமில்லை". என்று சொல்லுமளவுக்கு சிறுவயதிலிருந்தே நம்மோடு இணைந்துவிட்ட ஒரு எளிமையான இசைக்கருவி இது.

6. ஹார்மோனிகா என்னும்  மவுத் ஆர்கனை வாசிப்பது என்பது அத்தனை எளிதான செயல் அல்ல. உதடுகளில் பொருத்தி, மூச்சை அடக்கி வாசிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். நாதஸ்வரம் போல். இதற்குள் ஒரு இலக்கணத்துடன் ஸ்ருதியுடன் சப்தம் (ஒலி) நாதம் எழுப்புவது என்பது மிகவும் சிரத்தையுடன் முழுப்பயிற்சியுடன்கூடிய விடா முயற்ச்சியும் வேண்டும்.  

7. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூர் பகுதியில்  2015 அக்டோபர் மாதம்,  ஒரே இடத்தில் ஒன்று கூடி வாசித்து, 200 மவுத் ஆர்கன் இசைக் கலைஞர்கள் உலக சாதனை படைத்தனர்.
இந்திய ஹார்மோனிகா  சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் திரு. ராஜேந்திரசிங் பன்கூரா கூறுகையில், ‘‘இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் மவுத் ஆர்கன்  வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற 200 இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் கூடி வாசி்த்தனர். ஏழு இந்தி் பாடல்களை மூன்று நிமிடங்கள் மவுத் ஆர்கனில் வாசித்து கலைஞர்கள் சாதனை படைத்தனர்’’ என்றார். இந்நிகழ்ச்சியை பல நகரங்களிலிருந்து வந்த  ஏராளமானவர்கள் கேட்டு ரசித்தனர்.

திரையிசையில் ஹார்மோனிகா என்னும் மவுத்தார்கன் இசைக் கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் ஹார்மோனிகா இசையின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

பழைய பாடல்கள் வரிசையில்:-
1) 1959 ஆம் ஆண்டு வெளியான "கைதி கண்ணாயிரம்" திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புலவர் மருதகாசி அவர்களின் இந்தப்பாடலில் இசையமைப்பாளர்  கே.வி. மஹாதேவன் அவரால்  "மவுத்தார்கன்" இசைக்கருவியை பாடலிலும்,  படத்தின் பாடல் காட்சியிலும் வருமாறு பாடலை சிறப்பித்திருப்பார்.  பாடல்:- கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும். வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்... பாடலைப் பாடியவர்கள்  பி. சுசீலா அவர்களும், அவருடன் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் பாடியுள்ளனர். https://youtu.be/uso_r4Sz3tM

2) காதலனின்  உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே கவியரசு கண்ணதாசன் சொல்லிவிடுவார். அதற்க்கு மெருகூட்டும் வண்ணன் இசை மன்னர்  விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்கள் பாடலின் ஆரம்பத்திலேயே புல்லாங்குழல் ஊதி ஆரம்பித்து தொடர்ந்து "மவுத்தார்கன்" கிட்டார், வயலின் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். இப்பாடலைக் கேட்கும்போது அந்த நேரத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை
பாடல்:-காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
படம்: பாவ மன்னிப்பு, இசை :-விஸ்வநாதன், ராமமூர்த்தி, பாடல் வரிகள்:- கவியரசு கண்ணதாசன், பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
 https://youtu.be/lEcwt7nnw0U

3) கண்ணதாசனின் வரிகளில், விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில், கவலையில்லாத மனிதன் திரைப்படத்தில் அமைந்த இந்த சோகமான பாடலிலும் மவுத்தார்கன் இசையில் சந்திரபாபு அவர்கள் பாடி நடித்த காட்சிகள் பாடலோடு மிக அருமையாக நமது மனங்களையும் வருடிக்கொண்டு போகும் இந்தப்படத்தில் அமைந்த அனைத்துப்பாடலும் மிக அருமையாக, இதமான பாடலாக மைந்திருக்கும். 
பாடல் பிறக்கும்போதும் அழுகின்றாய், இறக்கும்போதும் அழுகின்றாய்,. ஒரு நாளேனும் கவலையை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே.  https://youtu.be/2Goazija6-k

4) பாடல்:-“வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்” என்கிற இந்தப் பாடலில் மவுத்தார்கன் இசையை மிக நேர்த்தியாக கையாண்ட விதம் இசையரசர்  M.s.விஸ்வநாதன் அவர்களுக்கு கைவந்தக்கலை... இந்தப்  பாடல் இடம்பெற்ற படம் : மூன்று முடிச்சு, பாடல் வரிகள் : கண்ணதாசன், குரல் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & m.s.விஸ்வநாதன்.. இத் திரைப்படத்தில் கமல் ஸ்ரீதேவி இருவரும் காதலில் மயங்கி கிடைக்கும் போது வரும் பாடலாதலால் 13 இடங்களில் 'கள்' என்று போதை தரும் வார்தையைப் பிரயோகித்திருப்பார் கவிஞர் கண்ணதாசன்.(காதலும் போதை தருவதனால் தானோ) https://youtu.be/7Q55nVGOofo

இடைக்காலப் பாடல்கள் வரிசையில்
5) திரிசூலம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்  
இந்தப்பாடல் "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா என்கிற இசைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த பாடலும், பாடல் காட்சியும் மிகப்பொருத்தமாக நடிகர்திலகத்தின் நடிப்பில், விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் கவிஞ்சர் கண்ணதாசன் பாடல் வரிகளில் உருவான பாடலைப் பாடியவர்கள் கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம். https://youtu.be/7LyOJWJgSzI


6) மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து 1975 ஆம் வருடம் வெளியான மாபெரும் வெற்றிப்படமாக "நாளை நமதே" படத்தின் முதல் பாடலில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் "மவுத்தார்கன்" வாத்தியக்கருவியை பாடலில் இடம்பெறச்செய்து மிக நேர்த்தியாக இந்தப்பாடலுக்கு இசையமைத்திருப்பார்,  பாடலை இயற்றியவர் வாலி , பாடலை பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்த இந்தப் படமும் பாடலும் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் 
பாடல்: அன்பு மலர்களே நம்பி இருங்களேன்
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்
நாளை நமதே... https://youtu.be/02ouCegMfY8

7) ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இளையராஜாவின் இன்னிசை. இப்படத்தின் பாடலான குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. 
பாடல்:- தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
https://youtu.be/TZ-R2OArfIc


புதிய படப்பாடல்கள் வரிசையில்:-
8) நடிகர் மோகன் அவர்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் எப்போதும் உண்டு. அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு ரசிகர்களின் மனதில் என்றும் நீக்காத இடத்தைப்பிடிக்கும் அந்தவகையில்  "மவுத்தார்கன்" என்னும்  ஹார்மோனிகா இசையில் ஆரம்பித்து கங்கை அமரன் அவர்களின் பாடல் வரிகளில் அமைந்த இந்தப் பாடல் மற்றும் இந்தப் படம் முழுதும் ஒரு வசீகரத்தை கொடுக்கும்  இசைக்கருவியை இளையராஜா அவர்கள் பயன்படுத்தியிருக்கும் விதம் இனிமையான அனுபவம். இந்தப்படத்தையும் இந்தப்பாட்டையும் சிறப்பு செய்த "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா இசைக்கருவி இசைத்த பாடல்களில், இந்தப்பாடலை மிகவும் சிறப்புவாய்ந்த பாடலாக முன்னிறுத்துகிறது 
பாடல்:- நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை.. படம் : குங்கும சிமிழ், இசை : இளையராஜா, பாடலாசிரியர்: கங்கை அமரன், பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்.  https://youtu.be/qjnorxdJ2J8

9) வாலி (1999) படத்தில் வரும் ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ டா ,   என்கிற பாடலில் "மவுத்தார்கன்" இசையைப் இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடலின் மிக அருமையான சூழலில் நேர்த்தியாக இந்த இசையை பயன்படுத்தியிருப்பார்  படத்தில் கதாநாயகனாக (தலை) அஜித் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ். ஜே. சூர்யா அவர்கள்  இயக்கியுள்ளார். https://youtu.be/bmnQo4-iRKg 

10) பாடல் "பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப்பிழைபோலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே"
படம் வேட்டையாடு விளையாடு , ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பு நன்றாக உள்ளதாக பாடலை கேட்ட அனைவரும் இந்தப்பாடலை மனதில் முனுமுனுக்க அரம்பித்தனர்.. அப்படிப்பட்ட  அந்தப் பாடலை சிறப்பான பாடலாக மகுடம் சூட்டவைத்த "மவுத்தார்கன்" ஹார்மோனிகா இசை அனைவரது அடிமனதில் ஆழ ஊறிப்போன பால்ய காலத்து நினைவுகளை அவர்களுக்கு தெரியாமலே இந்தப்பாடலின்"மவுத்தார்கன்"  இசையினால்  மனதை சுண்டி இழுத்தது என்று சொன்னால், பாடலைக் கேட்ட அனைவருமே தமது பால்ய வயதில் "மவுத்தார்கன்"  ஹார்மோனிகா இசையை வாசித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது .. படத்தில் நடிகர்கள்: கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், இசை: ஹாரிஸ் ஜெயராஜ், இயக்கம்: கௌதம் மேனன், பாடலாசிரியர்: தாமரை, பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ ..https://youtu.be/chcMmxBMKDM

11) சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் அவர்கள் நடித்த படையப்பா படத்தில் "மவுத்தார்கன்" இசையை வைத்து  படத்தின் மிக முக்கிய கட்சியை நகர்த்தியிருப்பார்கள். அந்தப்படத்தில் இந்தப் பாடலில் நடிகர் ரஜினிகாந்த அவர்கள் "மவுத்தார்கன்" வாசித்து நடிப்பதாக இருக்கும் இந்தப்பாடலில்  "மவுத்தார்கன்" இசைக்கருவியின் இசையை A.R ரகுமான் அவர்கள் பாடலுக்கு சிறப்புசேர்க்குமாறு இசையமைத்திருப்பார் "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு, என்பேரு படையப்பா இளவட்ட நடையப்பா"  https://youtu.be/IunsCffBuZU

12)  நான் ஈ படத்தில் வரும் இந்தப்பாடலில்  "மவுத்தார்கன்- (Mouth Orgon)" ஹார்மோனிகா :- இசையும் பாடலோடு சேர்ந்து இழையோடுகிறது ..
பாடல் :-வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.
அட அடடடடா – ஓ ஹோ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பாடலுக்கு இசை : மரகதமணி, இயக்கம் : ராஜமௌலி, பாடியவர்கள் கார்த்திக், சாஹிதி. https://youtu.be/fLsxFTZw63U

இப்படி "மவுத்தார்கன்" என்கிற ஹார்மோனிகா என்னும் இசைக் கருவியின் அற்புதமான இசையை மற்ற வாத்தியத்திற்கு தகுந்தாற்போல் பல பாடல்களில் இசைக்கப்பட்டு, திரைப்படப் பாடல்களை மேலும் மேலும் மெருகு சேர்த்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. காலங்களைக்கடந்த இந்த இசைக்கருவிக்கு ரசிகர்களின் மத்தியில் என்றைக்கும் நிரந்தரமான ஒரு இடம் இருக்கும் என்பது திண்ணம். 


மவுத்தார்கன், ஹார்மோனிகா வாத்தியக்கருவியில் மேலும் பல திரைப்படப்பாடல்கள் பழைய பாடல் புதிய பாடல் என வரிசைப்படுத்தப்பட்டு எனது சங்கீத சாம்ராஜ்யம் என்கிற முகநூல் பதிவில் கண்டு ரசிக்கலாம். 


இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு என்ற பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "ஷெனாய் அல்லது செனாய்" வாத்திய இசைக் கருவி என்பது நாதஸ்வரம்  போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி. வட இந்தியாவில் திருமணம் போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.

உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். 
ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா, ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும் இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய் வாசித்தார்.

திரையிசையில் ஷெனாய் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம்.  
பண்டைய திரைப்படப் பாடல்களில் ஷெனாய் இசையை அதிகமாக துயரமான, சோகமான பாடல்களுக்கே அதிகம் பயன்பட்டுள்ளதாக தெரிகிறது ....  

செனாய் / ஷெனாய் வாத்திய இசைக்கருவியின் இசையில் இணைந்து ஹிந்துஸ்தானி இசையில் அமைந்த சிறந்த தமிழ் திரைப்படப் பாடல்களின்  இனிய இசையை   நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

1) இந்தப்பாடலில் பல இசைக்கருவிகளுக்கு இடையே ஷெனாய் இசைக்கருவியின் இசை மிக அருமையாக கலந்து பாடலை சிறப்பு செய்திருக்கும்.  பாடல்:- மதுரா நகரில் தமிழ்ச் சங்கம் அதில் மங்கல கீதம் முழங்கும் கவி மன்னவர் காவியம் பொங்கும் அதைக் காதலர் உள்ளம் வணங்கும்..
திரைப் படம்: பார் மகளே பார்,  பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா மற்றும் குழுவினர், இசை எம் எஸ் விஸ்வநாதன், நடிப்பு: முத்துராமன் – விஜயகுமாரி. https://youtu.be/vvJDcqvvVA0 

2) இந்தப்பாடலில் செனாய் இசை பாடலோடு பின்னிப்பிணைத்திருக்கும் அழகே தனி அந்த இசையை மட்டும் தனித்து உணர்ந்து ரசிக்கும்போது அதன் இனிமை மிக ரம்மியமானது.. பாடல்வரிகளோடும் பாடலின் காட்சிகளோடும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு இசைக்கோர்வை இந்தப்பாடல். பாடல்:- மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் - நீயும் அச்சத்தோடு விலகி... பாடலின் திரைப்படம்: சாரதா (1962) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன், இசை: கே.வி. மஹாதேவன். https://youtu.be/_WqwmxjP1R0

3) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
திரைப்படம்: பாலும் பழமும் (1961), பாடியவர்:டி.எம்.எஸ்- பி.சுஷீலா,  இசை :எம்.எஸ்.விஸ்வநாதன், வரிகள்: கவிஞர் கண்ணதாசன்.  https://youtu.be/AtrOLDpmaT8


4) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது - எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது. பாடல் இடம்பெற்ற படம்:- நினைத்ததை முடிப்பவன் (1975), பாடலை இயற்றியவர் கவிஞ்சர் கண்ணதாசன், இசை எம் எஸ் வி அவர்கள், பாடலைப்  பாடியவர்  டி.எம். எஸ்  அவர்கள்,  https://youtu.be/csBahBsXvaA


4) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் (உன் பேர்...) திரைப்படம் : மின்சாரக் கண்ணா, இசை: தேவா, பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன். பாடலை இயற்றியவர்  நா.முத்துகுமார்.  https://youtu.be/PxSiOkrTSdM


5) ஷெனாய் இசைக்கருவியின் இசை பாடல்:- இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா,  அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா.. திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,   இசை: டி.இமான், பாடல் வரிகள்: யுகபாரதி, பாடியவர்:-ஜெயமூர்த்தி.  https://youtu.be/33-EhS2zclI


....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்.... கோகி-ரேடியோ மார்கோனி.


Tuesday, March 7, 2017

கஞ்சிரா:- திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-21 / 108 (Episodu-21 of 108), :-

கஞ்சிரா:- திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-21 / 108 (Episodu-21 of 108), :-

நமது தமிழ் திரைப்படப் பாடல்களில் ஒரு பாடல் முழுவதும் "கஞ்சிரா" இசைக்கருவியை இசைக்கச் செய்து அனைவரும் விரும்பும் சிறந்த பாடலாக இயற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அவர்கள். இந்தப் பாடலைப் பாடியவர்  பாடகி சித்ரா அவர்கள், " சாமி" படப்பாடலான.....

பாடல் :-இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?

நிகழ்ச்சிப்பதிவில் ஒரு கூடுதல் செய்தி:- 
ஒரு கை ஓசை சாத்தியமா? சாத்தியம்தான். விரல்கள் ஒத்துழைத்து நீங்கள் கஞ்சிரா வாசிப்பவராக இருந்தால். அரிய உயிரினமான உடும்பின் தோலால் செய்யப்படுவது கஞ்சிரா என்னும் வாத்தியம். 
ஸ்ருதி சேர்க்க முடியாத வாத்தியம். பேஸ், ஷார்ப் இரண்டு நிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய வாத்தியம்.

பிரபலமாக இல்லாத இந்த வாத்தியத்தை வாசிக்க ஆண்களே யோசிக்கும்போது பெண்கள் வாசிக்காததில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த வாத்தியத்தைத் தன்னுடைய விருப்ப வாத்தியமாகத் தேர்ந்தெடுத்து, கர்நாடக இசை மேடைகளில் பக்கவாத்தியம் வாசித்துவருபவர் கிருஷ்ணபிரியா. அதிலும் இடக் கையால் இவர் வாசிப்பது இன்னும் விசேஷம்.

மறைந்த கிளாரினெட் மேதை கிருஷ்ண பகவான், இவரின் பாட்டனார். இவருடைய தந்தை ரமேஷ்பாபு வயலின் வித்வான். இவருடைய அக்கா விஜயவாஹினியும் இளைய சகோதரர் திலீப் கிருஷ்ணாவும் கீ போர்ட் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள்.

புகழ்பெற்ற கஞ்சிரா வித்வான் மாயவரம் சோமசுந்தரத்திடம் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆறு ஆண்டு பயிற்சிக்குப் பின், தமிழ்நாடு இசைக் கல்லூரியில் சேர்ந்து, கஞ்சிரா வாத்தியக் கலைமணி என்னும் பட்டயத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது திருவல்லிக்கேணி சேகரிடம் பயிற்சியைத் தொடர்ந்துவருகிறார்.

கர்நாடக இசை மேடைகளில் வீணை வித்வாம்சினி பானுமதி, மாண்டலின் கலைஞர் அரவிந்த் பார்கவ், காஷ்யப் மகேஷ், சைந்தவி, சாருலதா, ஸ்மிதா ஆகியோருடன் இணைந்து கஞ்சிரா வாசித்திருக்கிறார். பெண் தபேலாக் கலைஞரான அனுராதா பால் அவர்களுடன் இணைந்து ஜூகல்பந்தியும் வாசித்திருக்கிறார்.

சென்னையின் முக்கிய சபாக்களிலும், திருவையாறு, செம்பை விழாக்களிலும், மும்பையின் பிரபல சபாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், முன்னணி தொலைக்காட்சிகளிலும் பிரபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆடியோ ஆல்பங்களிலும் இவருடைய கஞ்சிரா ஒலித்திருக்கிறது. நன்றி தி இந்து நாளிதழ் திரு ரவிக்குமார் அவர்களின் தொகுப்பு கட்டுரையிலிருந்து.

"கஞ்சிரா":-திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- பகுதி-21 / 108 (Episodu-21 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்"(https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம். மறந்துவிடாதீர்கள் 21வது பதிவாக "கஞ்சிரா": இசைக்கருவியை வாசித்து உருவான திரைப்படப் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

Saturday, March 4, 2017

"உறுமிமேளம்" திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-02 / 108 (Episodu-02 of 108) :-

"உறுமிமேளம்" திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-02 / 108 (Episodu-02 of 108) :-  

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  பகுதி-02 / 108 (Episodu-02 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   
நமது திருவிழா கோவில் விஷேசங்கள் என்றுமே நம்முடைய பாரம்பரிய நடனங்களும் வாத்தியங்களும் இல்லாமல் ஆரம்பிக்கப்படுவதும் இல்லை; பாரம்பரிய இசைக்கருவிகள் இல்லாமல் நிகழ்ச்சி களைகட்டுவதும் இல்லை. திருவிழா என்றாலே இளையோர் முதல் பெரியோர் வரை குடும்பமாகக் கலந்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் கருத்துப் பரிமாற்றத்தை நடத்துவதும்தான் வழக்கம். நம் அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு திரையிட்டுக் காட்டி நம் வாழ்க்கைச் சக்கரத்திற்கு இந்த பாரம்பரிய பிடிமானம்தான் அச்சானி என்பதையும் உணர்த்தும் வேளையில்,  இந்த திருவிழா வைபங்கள்தான் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது.
நம்முடைய நாட்டுப்புற கலைகளில் முக்கிய வாத்தியம் இந்த "உறுமி மேளம்". விலங்குகள் உறுமுவதைப் போன்று ஒலியை எழுப்பக் கூடிய இசைக்கருவி என்பதால் உறுமி என்று பெயர் வந்திருக்கலாம். இது இருமுகங்களைக் கொண்ட தோல் இசைக்கருவி ஆகும். இக்கலையின் ஜனனம் என்னவோ தமிழகமாக இருந்தாலும் இதன் பயணம் என்பது மலேசிய இளைஞர்களின் ஈடுபாட்டில் வெகுதூரத்திற்கு நீடிக்கின்றது, காவல் தெய்வங்களை வணங்குவதில் முக்கிய இடம் வகிக்கும் இந்த உறுமிமேளம் மலேசிய வைபவங்கள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இசைக் கருவி. தமிழகத்திலும் பெரும்பாலான கோயில்களில் உறுமி மேளக் குழு இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலான அம்மன் பாடல்களில் உறுமிமேளம் பயன்படுத்தப்படுகிறது, தமிழ்த் தெய்வம் முருகப்பெருமானின் கோவில் திருவிழா, முருகன் பாடல்கள், ஐயப்ப பாடல்கள் என பல்வேரு ஆன்மீக பாரம்பரிய நிகழ்ச்சியில் உறுமிமேளம் வாசிக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் பகுதி நேரமாக இக்கலையையை நடத்தி வந்தாலும் அனைத்து திருவிழாக்களின் உயிரோட்டம் இந்த உறுமிமேளம் என்று சொன்னால் அது மிகையாகாது. 
உறுமிமேளம் மிக அதிக சப்தத்தைக் கொண்ட இசைக்கருவி என்பதால் வெளிநாடுகளில் இந்த இசையை இசைப்பதற்கு தடைவித்தித்து குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இசைக்கலாம் என  சில விதிமுறைகளையும் வகுத்திருக்கிறார்கள்.  
திரையிசையில் உறுமிமேள  இசைக்கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் உறுமிமேளத்தின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

பழைய திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-
உறுமிமேளம் என்று சொன்னாலே உடனே இந்த திரைப்படப்பாடல் நமது நினைவில் வந்துபோகும் .. உறுமி மேளத்தின் உறுமுகின்ற குரலாக TMS அவர்களின் குரலும்,  அந்த சிம்மக்குரலுக்கு இணையான நடிப்பில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பதும் மிகவும் அருமை. அந்தக் காலத்தில் பெரிய ஹிட் பாடலாகக் கருதப்பட்ட பாடல் இது. 
1). பாடல்:- கேட்டுக்கோடி உறுமிமேளம் 
போட்டுக்கோடி கோபதாபம் 
பார்த்துக்கோடி உன் மாமன்கிட்ட 
பட்டிக்காட்டு ராகம் பாவம்
https://youtu.be/ev5G35lzX3M
படம்:- பட்டிக்காடா பட்டணமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரு.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடல் வரிகள் : கண்ணதாசன். 

அனைத்து அம்மன் பாடல்களிலும் உடுக்கை மற்றும் உறுமி மேளத்தின் பங்கு நிச்சயம் இருக்கும் என்று எளிமையாக சொல்லிவிடலாம் .. 
2) பாடல்:- அம்பிகையே ஈஸ்வரியே 
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட 
குங்குமக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி ..
பாடியவர்: TM சௌந்தரராஜன், கண்ணதாசன் வரிகள்.இசை எம் எஸ் விஸ்வநாதன் https://youtu.be/LPc8fMN4094

"உறுமிமேளம்,  உறுமி கேட்கும்.... மாடு தலையாட்டும் என்பார்கள்",  "பட்டணத்தில் பூம் பூம் மாடு; கிராமத்தில் பெருமாள் மாடு என்பார்கள்",. பூம்  பூம் பூம் மாட்டுக்காரர் தனது மாட்டை பலவண்ண துணிகளால் அலங்கரித்து அந்த மாட்டுக்கொம்பிற்கும் வண்ணம்பூசி, உறுமிமேளத்தின் ஓசைக்கேற்ப பூம் பூம் மாட்டை தலை ஆட்டச் செய்வார். தற்போதைய நகரத்தில் வசிக்கும் புதிய தலைமுறையினருக்கு கிராமத்து வேடிக்கைகள் எல்லாம் திரைப்படப்பாடல்களில் மட்டுமே கண்டு கேட்டு ரசிக்க முடியும்.
  

3) பாடல்:-  பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும்டும் மேளம் தட்டி சேதி சொன்னாண்டி, அரிசிபோட வெளியில்வந்த பொண்ண பார்த்தாண்டி அடுத்த மாசம் கண்ணாலத்துக்குத் தேதி சொன்னாண்டி...டும்டும்டும் ....டும்டும்டும். 3) படம் : அதே கண்கள்(1967) குரல் :P.சுசீலா குழுவினர், பாடல் : கண்ணதாசன், திரு.வேதாவின் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது இப்படத்தில். ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/YEHvmgoYrOo 

இடைக்கால திரைப்படப் பாடல்களின் வரிசையில்:-
@ கிராமப்புற கலைகளில் "கரகாட்டம்" மிக முக்கிய பங்கை வகிக்கிறது அப்படிப்பட்ட கரகாட்டத்தில் "உறுமிமேளம்" மிக மிக  முக்கியப்பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதோ இந்தப்பாடலில் இளையராஜா அவர்கள் இனிவரும் புதிய தலைமுறையினரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக அருமையாக கிராமியக்கலைக்கு உயிரூட்டியிருக்கிறார்.  

4) பாடல்:- மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு,  படம் : கரகாட்டக்காரன் (1990), இசை : இளையராஜா, பாடியவர் : பாலசுப்ரமணியம், வரிகள் : கங்கை அமரன். https://youtu.be/Ns9N03f_DdM

5) பாடல்: அம்மன் கோவில் கும்பம் இங்கே ஆடிவரும் நேரமடி .. திரைப்படம் :- அரண்மனைக்கிளி1993, இசை இளையராஜா, பாடல் முத்துலிங்கம், பாடியவர் சொர்ணலதா, மின்மினி https://youtu.be/-LRLXF2j1ps

6) பாடல்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
திரைப்படம்: கரகாட்டக் காரன்(1990), பாடியவர்: மலேசியா வாசுதேவன், சித்ரா, இயற்றியவர்: கங்கை அமரன், இசை: இளையராஜா. https://youtu.be/HfOSajWi6Bc

7) பாடல்:- பல்லாக்கு குதிரையில்  படம்:-பெரிய  வீட்டு பண்ணைக்காரன், பாடியவர் மலேஷியா வாசுதேவன் இசை இளையராஜா  https://youtu.be/CNkmu89TpzI

இதைப்போல  இளையராஜா அவர்களின் இசையில் மேலும் பல பாடல்களில் உறுமிமேளத்தின் இசையையும் இணைத்து மெருகேற்றியிருக்கிறார்.  

தற்கால புதிய பாடல்களின் வரிசையில்:- 
8) பாடல்:-  தூள் படத்தில் ‘மதுரை வீரன் தானே’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் சிறந்த பெயரைப்பெற்ற  நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அவர்ளின் பாடல் “ஏய் சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி…” இந்தப்பாடலில் இசையமைப்பாளர் வித்தியாசாகர் அவர்கள்  "உறுமிமேளம்" இசையை மிகவும் இனிமையாக பாடலை கிராமிய மனம் கமழ இசையமைத்திருப்பார் https://youtu.be/2r7NdhBFzpo

9) பாடல் ஆளுமா டோலுமா,   வேதாளம் படத்தின் “ஆளுமா டோலுமா" என்ற ப்ரோமோ பாடல் அனிருத்தின அதிரடி இசையில் பாடலில் உறுமிமேள இசையும் சேர்த்து இசைக்கப்பட்டது. https://youtu.be/Rw2gP-L60N0
  
10) பாடல்:- அடி குத்துல குத்துறா என்கிற இளையராஜா இசையமைத்த தாரை தப்பட்டை பட பாடலில் உறுமிமேள இசையும் சேர்ந்து பயணிக்கிறது ...https://youtu.be/p-ld6emmmPw

மேலும் பல புதுப்பட குத்துப் பாடல்களில் "உறுமிமேள" இசையும் சேர்ந்து இசைக்கப்பட்டிருக்கிறது.  

இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "மவுத்தார்கன்- (MouthOrgon)" என்று அழைக்கும் வாய் உதடுகளின் நடுவில் வைத்து ஊதும் துளை இசைக்கருவி  பற்றிய சிறப்பு பகுதியையும்..., 

திரையிசையில் மவுத்தார்கன் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம். 

அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறும் உங்கள் நண்பன் கோகி-ரேடியோ மார்கோனி.

இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர் காலம் பகைவர்களே ஓடுங்கள் புலிகளிரண்டு வருகின்றன...
https://youtu.be/7LyOJWJgSzI

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை 
https://youtu.be/qjnorxdJ2J8
....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்.... கோகி-ரேடியோ மார்கோனி.

FREE JOBS EARN FROM HOME