FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, January 26, 2017

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது... ....

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...  

ஒரு நாள் குருகுலத்தில் "ஜென்" குருக்களில் முதன்மையானவர் என்று கூறப்படுகிறது "கன்பூசியஸ்" என்ற குருவானவர், தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து சில அறிவுரைகளைக் கேட்டான்.

‘"ஒருவரது ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், எது எது தேவை?’.

‘ஆட்சி சிறப்பாக அமைய மூன்று விஷயங்கள் முக்கியம். 
முதல் தேவை.. போதிய உணவு இருப்பு. 
இரண்டாவது மக்களின் பாதுகாப்புக்கு பலமான ராணுவம். மூன்றாவது, மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருக்க வேண்டும். 

இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றிருப்பதே சிறப்பான அரசு  நிர்வாகம்’ என்றார் குரு.

மாணாக்களிடமிருந்து மீண்டும் கேள்வி.. ‘இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால், முதலில் விட வேண்டியது எது?’

குரு :- ‘ராணுவம்’

மாணவர் :- ‘இரண்டாவதாக ஒன்றை விட வேண்டும் என்றால்..?’

குரு :- ‘உணவு இருப்பு’

மாணவர்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.!!! சாப்பிடாமல் எப்படி????.... அவர்களின் ஆச்சரியத்தைக் கண்ட குரு,  அதற்கான விளக்கத்தை அளிக்க முன்வந்தார்.

‘மாணவர்களே! உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிய நேரிடும். மனித சமுதாயத்திற்கு இதுபோன்ற நிலை பலமுறை வந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் மனித சமுதாயம் அதில் இருந்து மீண்டிருக்கிறது. ஆனால் ஒரு அரசின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், அந்த நாட்டின் நிலை அதோகதியாகிவிடும்’ என்றார் கன்பூசியஸ்- குரு.

மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். 

குருவின் அறிவுரை மாணவர்களின் மண்டைக்குள் புகுந்துவிட்டது..., 
ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...   ஓட்டுப்போட்ட  உங்களுக்குத் புரிந்ததா? 

"வால் மட்டும்... இன்னும் உள்ளே நுழையவில்லை"

..... கோகி-ரேடியோ-மார்கோனி..... 

Friday, January 20, 2017

வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

"வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா????

வாசகர் வட்டம் நிகழ்ச்சியில்  "நீங்களும் கதை எழுதலாம்" என்கிற தலைப்பில்.பேசிக்கொண்டிருந்தேன் ."தினமும் தூங்கப் போகும்போது ஒரு சிறு நோட்டுப்புத்தகத்தையும் அதோடு ஒரு பென்சில் ஒன்றையும் தயாராக உங்களின் படுக்கையின் தலையணைப்பகுதியில் வைத்துவிடுங்கள்... சரியாக விடியற்காலையில் உங்களது ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளை, காலையில் எழுந்தவுடனே குறிப்பெடுத்து வைத்துவிடுங்கள். (குறிப்பெடுக்காவிட்டால் நீங்கள் கண்ட கனவு மறந்துபோகும்) அதன் பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்கள் எழுதிவைத்த குறிப்புக்களை ஒன்று கோர்த்து ஒரு கதையாக எழுதலாம் ... கதை எழுதுவதற்கு இதுவும் ஒரு எளியமுறை, இதைப்போலவே பிரபல எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களும் மற்றும் பல சிறந்த கதாசிரியர்களும் இப்படித்தான் தமது கனவுகளில் வந்த பல விவரங்களைக் கொண்டு சிறந்த படைப்புக்களைத் தந்திருக்கிறார்கள்... என தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ....  

"எனக்கும் கதை எழுதணும் ஆசையா இருக்கு!!! நான் ஒரு கதை  புத்தகம் எழுதணும்னா, அந்தப் புத்தகம் எத்தனை பக்கங்கள் கொண்டதாக இருக்கணும்.????." என்று கேட்ட அந்த இளம் வயது சிறுமியைப் பார்த்தபோது முதலில் சிரிப்புதான் வந்தது... இந்த அளவிலாவது தைரியமாக எழுதணும்... என்று தனது ஆசையை வெளிப்படுத்தியதே, ஒரு தொடக்கத்தின் பெரிய வெற்றிதான்...  அன்றய நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட அவரையே சிறந்த விமர்சகராக முன்னிறுத்தி .. "நீங்களும் கதை எழுதுவது எப்படி" என்று விரிவாக விலக்கிக் கூறினேன் ...

ஒரு கோவிலில் பூசாரி ஒருவரை தேடி வந்த  பக்தனிடம்,  பரிகார பூசை பற்றி கூறிக்கொண்டிருந்தபோது... பக்தன் கேட்டான் ..."சாமி எத்தனை பழம் வைத்து நெய்வேத்தியம் செய்யவேண்டும் என்று..."  

எத்தனை முறை பூசை செய்தால் எனக்கு நல்லது கிடைக்கும்..என்று கேட்காமல் ... பிரசாதம் தின்பதிலேயே குறியாக இருந்த அவனின் மனநிலையை புரிந்துகொண்ட அந்த பூசாரி சிரித்துக்கொண்டார்.....

அதுபோலத்தான் கதை எழுத எத்தனைப் பக்கங்கள் எழுதவேண்டும் என்று கேட்பது.........  இருந்தாலும் இன்றுவரை சாதனையாக ஒரு பழைய புத்தகம், அதுவும் 1970கலீல் வெறும் 4 பக்கங்களே கொண்ட புத்தகம் அது, பல இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா???? 

அப்படிப்பட்ட சாதனைப் புத்தகம்தான் "பழைய தமிழ் திரைப்பட பாடல் புத்தகம்"  
ஒரு காலத்துல நான்  பள்ளி கூடத்துல படிக்கும் போது, பள்ளி ஆண்டு விழாக்களில் பாட்டுப் போட்டியில், பாட்டு பாடணும்னா, அதுக்கு இருந்த ஒரே வரப்ரசாத புத்தகம்தான்  "திரைப்பட பாட்டு புத்தகம்தான்". என்னதான் மனப்பாடம் செய்திருந்தாலும், மேடையிலிருந்து கூட்டத்தைப் பார்த்த பதட்டத்தில் அது முடியாதுபோக, கையேடு எடுத்துச் சென்ற பாட்டுப்புத்தகத்தைப் பார்த்து பாடிவிட்டு வந்தது இன்னமும் எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது  

அப்போதெல்லாம் அந்தப் புத்தகத்தின் விலை வெறும் 20 பைசாவுக்கு கடைகளில் கிடைக்கும். சில சாலையோரம் இருக்கும் நடைபாதைக்கடையில் வெறும் 10 பைசாவிற்குக்கூட கிடைக்கும். வெறும் நான்கே பக்கம் கொண்ட அந்த புத்தகத்தில் திரைப்படப் பாடல்களோடு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனமும் விளம்பரமும் இருக்கும்.  

தற்போது கணினியில், இணையம்/வலைத்தளம் என்று வந்துவிட்டதால், இந்தப்புத்தகங்களுக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.  இருந்தும் இன்றும் எங்காவது ஒரு மூலையில் பழைய புத்தகக் கடையில் அல்லது பழைய கால வீட்டின், அலமாரி அல்லது பரண்களின்  மேல் வைத்திருக்கும் பழைய தகர பெட்டிக்குள் அடைபட்டுக்கிடக்கலாம். 

பலலட்சம் பிரதிகளை விற்ற, வெறும் 4-பக்கங்களையுடைய, அந்தக்காலப் பழைய திரைப்படப்  பாடல்களைக் கொண்ட புத்தகங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம். 




அன்றய "நீங்களும் கதை எழுதலாம்"  நிகழ்ச்சி எங்கோ ஆரம்பித்து வேறெங்கோ சென்று முடிந்தது போல இருந்தது ....

என் மனம் இந்தப்பாடலை முணுமுணுத்தது ....
("எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்...
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது" ...)

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி. 

Friday, January 13, 2017

"மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ...


ஞாபகம் வருதே! ...:- நான் பள்ளியில் படிக்கும்போது எனது ஆங்கில ஆசிரியர் கேள்வி கேட்டு விடை தெரியாமல் எழுந்துநிற்கும் மாணவர்களுக்கு "மாட்டுப்பொங்கல் வாழ்த்து" சொல்லி "மாடல்ல மற்றை யவை" என்று கல்விச்செல்வத்தின் அருமையை புரியவைப்பார் ... அதோடு கேள்விக்கு விடைதெரியாமல் "நிற்க அதற்குத் தக" என்று தமிழ்த் திருக்குறளை எடுத்துக்காட்டாக வைத்து ஆங்கில ஆசிரியர் இலைமறைக்காயாகத் திட்டுவார்... அப்போது தெரியவில்லை... இப்போது அதை நினைத்து ரசிக்கமுடிகிறது.  நன்றி கோகி-LAW.

Tuesday, January 3, 2017

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) 5.4 நாமதான் முதல் இடமா????



2016ம் வருட முடிவில்,  உலக நாடுகளின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில்  (Gross Domestic Product)   5.4%.... நாமதான் முதல் இடமா? ...  

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு ... 

இது சரியா?  நம்ம பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பது வரும் பிப்ரவரி மாத பட்ஜெட் வரவுசெலவு கணக்கிற்குப் பிறகு தெரியுமா???


UNESCO-யுனஸ்கோ நிறுவனத்தின் தகவலின்படி உலகளவில் மொத்தம் 44,000+ பதிவுசெய்யப்பட்ட  FM/AM பண்பலை அலைவரிசை மற்றும் இணையவழி & சமுதாய வானொலிநிலையங்கள் இருப்பதாகவும், இதில் FM/AM பண்பலை அலைவரிசையில் 85% சதவீதத்தினர் 25வயதிலிருந்து 54 வயதுடைய ரசிகர்கள் வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரத்தை தந்திருக்கிறார்கள். உலகளவில் விவசாயிகள்தான் அதிகம் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குறைந்த அலைவரிசை கொண்ட கல்லூரி வானொலி நிலையங்கள் செயல்படுவதாகவும் புள்ளிவிவரம் தந்திருக்கிறார்கள்.        

2016 ம் வருடத்தில் உலகத்திலேயே மிக அதிக ரசிகர்களைக்கொண்ட வானொலியாக "சுவீடன் நாட்டின் - வெர்ஜிஸ் பி-2" என்கிற வானொலி முதலிடம் பிடிக்கிறது.  தொடர்ந்து இந்தவருடமும் லண்டன் BBC-Radio வானொலி நிலையம் உலகளவில்  9ம் இடத்தில் உள்ளது.  இதே பி பி சி லண்டன் தமிழோசை வானொலி, உலகிலேயே மிக அதிக தமிழ் ரசிகர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்க்கு அடுத்த இடத்தில் தமிழகத்தின் ரெயின்போ-(வானவில்) பண்பலை வானொலி மிக அதிக தமிழ் ரசிகர்களைக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2016 ம் வருடத்தில் இந்தியாவில் மிக அதிகமானவர்கள் கேட்ட ஒரு வானொலி நிகழ்ச்சியாக  "இந்தியாவின்-மன்கிபாத்" என்கிற பாரதப் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஆதாரம் UNESCO. ORG


FREE JOBS EARN FROM HOME