FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 8, 2016

இந்த வருடமும் தமிழை ஓரம்கட்டிய தேர்வாணையம்.....!!!!-"சொல்லாதே யாரும் கேட்டால்"..

"சொல்லாதே யாரும் கேட்டால்".....

உயர்கல்வியில் தமிழை ஓரம்கட்டிய மத்தியத் தேர்வாணையம்.....!!!! 
ஐ. ஏ .எஸ்  என்ற இந்திய அரசின் சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வெழுதியவர்களில், ஒரு மாநில மொழியில் தேர்வை எழுத குறைந்தபட்சம் 25 நபர்கூட தேறவில்லை என்றால், அந்த மாநிலத்தில் தாய்மொழிக் கல்வியே இல்லையோ? என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த அப்பட்டமான உண்மையை இந்தவருடமும் இந்திய மத்திய தேர்வாணையம் அம்பலப்படுத்தியிருக்கிறது. 

தற்போது திசம்பர் 3ம்-திகதி முதல் நடந்துகொண்டிருக்கும் ஐ. ஏ .எஸ்  என்ற இந்திய அரசின் சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வில்,  தமிழ்நாட்டில் பட்டப்படிப்புவரை தமிழ் மொழியில் படித்து,  தமிழில் ஐ. ஏ .எஸ் இறுதித் தேர்வை எழுத குறைந்தது 25 நபர்கள்கூட தேறவில்லை  என்கிற அவலநிலை தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாகக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஆங்கில வழியில் இந்தத் தேர்வை எழுதி வெற்றிபெறுகிறார்கள். தமிழ்மொழியல்லாத வேறுபல மாநிலங்களில் வசிப்பவர்கள், அவர்களின் அந்தந்த மாநில மொழியில் இந்த தேர்வை எழுதி வெற்றிபெறுகிறார்கள். பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சிசெய்தவர்கள்... தமிழகத்தின், தமிழ்வழிக்கல்வியின் மேம்பாட்டுக்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.... 

"உரிமையோ உரிமை என்று ஊர் எங்கும் மேடை போட்டால் 
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன?????" 

"சொல்லாதே யாரும் கேட்டால் ... எல்லோரும் தாங்கமாட்டார்....."

FREE JOBS EARN FROM HOME