FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, September 23, 2016

அருள்வாக்கு:- ஸ்ரீ ஆதி சங்கரரும்... ஸ்ரீ முத்துச்வாமி தீட்சதரும் ....

அருள்வாக்கு:- ஸ்ரீ ஆதி சங்கரரும்... ஸ்ரீ முத்துச்வாமி தீட்சதரும் ....

"பக்த ப்ரஹாலாதா" திரைப் படத்தில் வரும் - "லக்ஷ்மி  வல்லபா" என்ற பாடலைக் கேட்க்கும் பொது....https://youtu.be/KQGocOpsn2w

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய....லக்ஷ்மி- கனகதாரா அஷ்டோத்தரத்தில்......"ஸ்ரீ சங்கர சரிததத்தின் ஐந்தாவது பகுதியியும்" நாம் பார்க்கும்போது மஹாவிஷ்ணுவுக்கே உரிய அசாதாரண நாமாவளியான "புருஷோத்தமன்" என்பதைச் சொல்லி அவருடைய  சக்தியாக மஹாலக்ஷ்மி தாயார்  இருப்பதை "புருஷோத்தம வல்லபாயை" என்று வரும் ...ஸ்ரீ  லக்ஷ்மி- கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடி முடித்ததுதான் தாமஸம்! மஹாலக்ஷ்மி தாயார்  அந்தக் குடிசையைச் சுற்றிப் பாழாயிருந்த அத்ருதி முழுக்க ஸ்வர்ணத்தாலான (தங்கத்தினாலான) நெல்லிக் கனிகளாகவே, ஒரு முகூர்த்த  காலம் மழையாக வர்ஷித்துவிட்டாள்!  அங்கு தங்க நெல்லிக்கனிகள் பளபளவென்று ஒரு பெரிய மலையைப் போன்று மழையாக கொட்டித் தீர்ந்தது..... ஸ்ரீ ஆதி சங்கரர் ஏன் அப்படி லக்ஷ்மி- கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார் என்றால்.....


ஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்சாவிதி தர்மத்தை கடைபிடித்துவந்தார்.  ஒருநாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று, "பவதி பிக்ஷசூந்தேஹி" என்று சொல்லவேண்டும். ஏதாவது பிட்சை போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும். வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான்.... அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பிட்சை போடவில்லை யென்றால் அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான். அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார். 

அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான ஒரு நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. அதுவும் ஒரு பக்கம் சற்று அழுகலான நெல்லிக்கனி அது..... அப்படிப்பட்ட அந்த நெல்லிக்கனியை அன்று  உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்

ஆதிசங்கரர் குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பிட்சையாகப்  போடுவது என்று தெரியாமல் திகைத்தாள். இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது. மூன்றாவது குரலுடன் போய்விடுவார். அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும்.  ஆகவே அந்த ஒரு நெல்லிக்கனியை ஸ்ரீ ஆதிசங்கரருக்குப் பிட்சையாகப் போட்டுவிட்டாள். 

இதனைக் கண்ட ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார். அவர் அந்தப் பாடலைப் பூர்த்தி செய்தபோது அங்கு பொன்மழையாகக் கொட்டியது.

அவதாரக் குழந்தைக்குப் போட்ட ஒரு அழுகல் நெல்லி பழம் அனந்த கோடி மடங்கு தங்கப் பழங்களாகத் திரும்பின!

முதலில் ப்ராம்மண ஸ்த்ரீ கண்ணீர்  தாரைத் தாரையைக் கொட்டினாள். அதைப் பார்த்து ஆசார்யாளின் வாக்கிலிருந்து ஸ்தோத்ர தாரை கொட்டிற்று. அதைக் கேட்டு லக்ஷ்மி கனகதாரையைக் கொட்டி விட்டாள்.

அப்படி அவரின் தவத்திரு மனதிலிருந்து எழுந்த உணர்ச்சிப்பிழம்பாகக் கொட்டிய ஸ்தோத்ரத்துக்குக் "கனகதாரா ஸ்தோத்ரம்" என்றே பேர் ஏற்பட்டது. ' (கனகதாரா) ஸ்தவம்' என்றும் சொல்வார்கள். ஸ்தவம் என்றாலும் ஸ்தோத்ரந்தான்.

இதைப்போலவே பிரபல கர்னாடக சங்கீத மகா வித்வான் ஸ்ரீ ஸ்ரீ முத்துச்வாமி தீட்சிதர் (அவர் வாழ்ந்த காலம் -March 24, 1775 – October 21, 1835) அவர்கள் சங்கீதத்தையே தவமாய் தவமிருந்து வாழ்ந்த வித்துவான் அவர்களின் மனதிலிருந்து எழுந்த உணர்ச்சிப்பிழம்பாகக் கொட்டிய ஸ்தோத்திரமும் "ஸ்ரீ லலித்தா சஹஸ்ரநாமம் மற்றும் "ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்தோத்திரம்" என்று போற்றப்படுகிறது. 

சங்கீத மகா வித்வான் ஸ்ரீ ஸ்ரீ முத்துச்வாமி தீட்சிதர்,.. இவர் திருவாரூரில் வாழ்ந்த சமயத்தில்தான் திருமகளின் திருவருளைப் பெரும் சம்பவம் அவர் வாழ்வில் நடந்தது.... அதற்குக் காரணம் அவர் மனைவியின் ஆசை. அந்த ஆசைக்கு காரணம்... அக்கம்பக்கத்து சூழல்.... பொருள் வேண்டிப் பாடுவோர் பலர் இருந்த காலம் அது. இறைவன் அருள் வேண்டி மட்டும் பாடிய பாவாணர்களில் ஒருவர் முத்துச்வாமி தீட்சிதர்.... அவரது மனைவிக்கு நகைகள் மீது ஆசை உண்டாயிற்று. தஞ்சை மன்னனைப் பார்த்து பேட்டி கொண்டால் நிறைய சன்மானமும்  பணமும் கிடைக்குமென்று யோசனையும் தெரிவித்தாள். தீட்சிதரும் தங்கமகளை போற்றிடும் பாடல் ஒன்றை 'லலிதா' ராகத்தில் பாடினார் - "ஹிரண்மயீம் லக்ஷ்மீம்". .........
அன்று இரவு கனக மகள்,.... சர்வாபரண பூஷிதையாய் தீட்சிதரின் மனைவிக்கு தரிசனம் கொடுத்தாள். ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து, இவை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று திகட்டும் படியாக கேட்டாள்.... தீட்சிதரின் மனைவி, அந்த சந்தோஷ செய்தியை அவரின் கணவரான முத்துச்வாமி  தீக்ஷதரிடம் தெரிவித்தாள். அதோடு இனி எனக்கு ஆபரணங்கள் மீது ஆசையே இல்லை என்று கூறினாள்.!!!!! 

இதைக் கேட்டு மகிழ்ந்த தீட்சிதர், தன்னைப் பெருமை படுத்திய வரலட்சுமியை போற்றி, நன்றி கூறி, மற்றொரு துதியைப் பாடினார் - "ஸ்ரீ வரலக்ஷ்மி ஸ்தோத்திரம்" - செல்வங்களை அளிப்பவளும் அழகிய பத்ம பாதங்களையுடையவளும் ரசனைக்கு இருப்பிடமான அம்மா வரலக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம்.... மகிழ்வான புன்னகையும் மங்களமான பொன் நகையும் என் இல்லத்தில் சேர்ந்திருக்க அருள்வாயாக......... 

இப்படி அவர்களது அருள் வாக்குகளை நாமும் கேட்டதினால், நம்முடைய இல்லங்களிலும்..... மகிழ்வான புன்னகையும், மங்களமான பொன் நகைகளும் நிறைந்திருக்கும் அருள் கிடைக்கட்டும்..... 

இப்படிக்கு, 
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி

1 comment:

Test Books Online said...

Thank you for the valuable information. So, if you're looking for Indian Government Jobs, be sure to visit govtjobs.co.in for the latest updates and notifications. Click here to explore our website and start your job search today!

FREE JOBS EARN FROM HOME