FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, June 30, 2016

உத்தரகண்டில் மீண்டும் பெருமழை… அலக்நந்தா ஆறு உடையும் அபாயம்! கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்டில் மீண்டும் பெருமழை… அலக்நந்தா ஆறு உடையும் அபாயம்! கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு தினங்களாகப் (ஜூன்-30 மற்றும் இன்று  ஜூலை-01) பெய்து வரும் பெருமழையால் வெள்ளப் பெருக்கு அபாயத்தை எட்டியுள்ளது. கடுவாளி என்னும்  மலைவாழ் மக்கள்தான் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

அலக்கநந்தா ஆறு இமயமலைத் தொடரில் உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உயர்ந்த மலைகளின்  வழியாகப் பாயும் ஓர் அபாய ஆறு. பத்திரிநாத்திற்கு அருகவே அமைந்த சமோலி பகுதி ஆற்றில் இன்று வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை எட்டியுள்ளது சென்ற 2013-வருடத்தில் ஏற்பட்ட அபாயம் மீண்டும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே பத்ரிநாத் நகருக்கு மீண்டும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என்று கருதப்படுகிறது. உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேதர்நாதத்துக்கு புனிதப் பயணம் செல்லும் அனைவரையும் மிக அதிக எச்க்கறிக்கை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டுவருகிறார்கள்.    

அலக்நந்தா என்கிற பெரிய நதிக்கு, சரஸ்வதி, டவுளிகங்கா,  மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள். இவைகளோடு பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் கங்கை ஆறாக மிகப் பெரிய நதியாக பெருக்கெடுத்து ஓடும்.

உத்தரகண்டில் இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் கட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டுள்ளது.  அதில் 11 நீர் மின்சார அணைகள் கட்டி முடித்து பயன்பாட்டில் உள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் 25-கும் மேற்பட்ட அணைகள் கட்டுமானப்பணியானது முழுமையாக கட்டி முடிக்காமல் உள்ளது. இப்படி கட்டி முடிக்காமல் இருக்கும் அணைகள் கூட நதிகளில் ஏற்படும் பெருவெள்ளத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இப்படிக்கு கோகி-ரேடியோ மார்க்கோனி- உத்திரகாண்ட திட்டப் பணிமனையிலிருந்து. 

No comments:

FREE JOBS EARN FROM HOME