கோகி-ரேடியோ மார்கோனி: இன்று World Autism Awareness Day.ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும்- NIMHANS & VIMHANS.

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 1, 2016

இன்று World Autism Awareness Day.ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும்- NIMHANS & VIMHANS.

ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day.... ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும், இந்தியாவின் சிறந்த மற்றும் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான "மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS-National Institute of Mental Health and Neuro Sciences) பெங்களூரில் அமைந்துள்ளது." இதைப்போலவே மற்றொன்று புது தில்லியில் இருக்கும் "விம்ஹான்ஸ்"(VIMHANS -Vidyasagar Institute of Mental Health, Neuro & Allied Sciences) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப்பார்த்த என்னுடைய அனுபவம், என் மனதை நெகிழவைத்த அனுபவமும்கூட.............. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் சராசரி நோயாளிகள் போல இருந்தாலும் சிறு அளவிலான மூளைக் குறைபாடு அல்லது நரம்பியல் குறைபாடு உடையவர்கள்’ என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னபிறகுதான் தெரிந்தது................ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day என்று ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட நாள். கோகி-ரேடியோ மார்கோனி.  


அப்போது 1985-87, நான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (நான் படித்த அதே பள்ளியில்) பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். முன்பு நான் மாணவனாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு மேல்நிலைக்கல்வி "தாவரவியல்" ஆசிரியராக இருந்தவர்................................. " திரு ந.கிருஷ்ண சுவாமி சார் (சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்) என்னிடம் 15 நாட்கள் விடுப்பில் அவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூருவுக்கு சென்றுவர உடன் உதவிக்கு வருமாறும், அதற்குத்தேவையான திட்டமிடவேண்டும் என்று என்னுடைய உதவியை கேட்டபோது, பள்ளி கலைக்கல்வி நாடகக்குழு நிகழ்ச்சி தயாரிப்பில் உதவியாக இருந்த எனக்கு "மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட..... 

ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவும், செயல் திறனும்  அவசியம் தேவை....... மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறைக்கு..... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  http://programmedirector.blogspot.in/2015/11/blog-post_21.html
Post a Comment

FREE JOBS EARN FROM HOME