FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, December 30, 2015

ரத்தம் சிந்தா (புத்தாண்டு) புத்தம் புதிதாய் மலரட்டும்....

"ரத்தம் சிந்தா (புத்தாண்டு) புத்தம் புதிதாய் மலரட்டும்"
விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

Sunday, December 27, 2015

சிறந்த தகவல் தொடர்பு துறையின் வலிமை எது?

சிறந்த தகவல் தொடர்பு துறையின் வலிமை எது?

'வாள் முனையே வலிமையுடையது' என்றான் நெப்போலியன்.

'பேனா முனையே வலிமையானது' என்றார் வால்டேர்.

'அறிவு முனையே வலிமையுடையது' என்றார் ஷா.

ஆனால் இவை அனைத்தையும்விட, 'ஒழுக்கமே வலிமையானது' என்றார் வள்ளுவர். 


ஆம்... ஒழுக்கமற்றவனின் வாளோ, பேனாவோ, அறிவோ வலிமை பெறாது. ஒருவேளை இவற்றால் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது! _ இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்.

அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி

....இல்லையென்றால் இயலாமல் இறந்துபோவாய்..

....இல்லையென்றால் இயலாமல் இறந்துபோவாய்..
Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
மனிதனே உன்னுடைய  இறுதிக்காலம் அது மிக மிக குறுகியது ஒரு விழாழக்கிழமை அவனது உடல் நிலை சரியில்லாமல் போனது அதற்க்கு அடுத்தநாளே வெள்ளிக்கிழமை மிகவும் மோசமானதால், அடுத்த நாள்  சனிக்கிழமை அன்று செத்துப்போனான் அதற்க்கு அடுத்தநாள்  ஞாயிறு அன்றே புதைத்துவிட்டார்கள் ஆனால்  மனிதனின் இளமைக்காலம் அந்த ஒரு திங்களில் பிறந்தான், அதன் அடுத்த வந்த வருடத்தின் ஒரு செவ்வாய்க்கிழமையில் பெயர் வைக்கப்பட்டு, நீண்ட பல வருடங்களுக்குப்பிறகு ஒரு புதன் கிழமை அவனுக்கு திருமணமானது ஆகா மனிதனே உன்னுடைய இளமைக்காலம் அது நீண்டது அப்போதே உன்னுடைய கடமைகளை செய்துவிடு ....இல்லையென்றால் இயலாமல் இறந்துபோவாய்....  அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. .......http://youtu.be/OHEKwGe1Xqg

வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும், மதம் மாறத்தயாராக இல்லை....

வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும், மதம் மாறத்தயாராக இல்லை.... 
அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவர் பணியாற்றிய ஆலய நிர்வாகம் வேற்று மதத்தவர்களை அவர்களின் மதத்தில் சேர்க்க முயற்சிக்கும்படி ஆலய மத போதகரை கட்டாயப்படுத்தினார்கள்.  ஆகவே அவர் அருகில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஒரு கோவில் குளக்கரையில் இருந்த அரச மரத்தடி கற்சிலை கடவுளை மக்கள் வணகியபடி இருப்பதை  பார்த்த அந்த மத போதகருக்கு ஒரு யோசனை தோன்றியது, அதன்படி அவர் அங்கு கூடியிருந்த பொது  மக்களைப் பார்த்து "நீங்கள் அனைவரும்  வணகுவது  வெறும்  கற்சிலை அது கடவுள் அல்ல, வேண்டுமானால்  இந்த கற்சிலையும் இதோ  இங்கு அலைந்துகொண்டிருக்கும்  நாயையும் அந்த குளத்துக்குள் தூக்கிஎரிந்தால் எது கரையை வந்து சேர்கிறது என்பதை நீங்களே பாருங்கள் அப்போது புரியும் என்றார்.
   
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் வேறு முறையில் மாற்றி செய்யலாம் என்றார். அதற்க்கு அந்த மத போதகர் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யுங்கள் கற்சிலையில் கடவுள் இல்லை என்றார். 

முதலில் கடவுள் சிலை மீது அந்த உயிர் உள்ள நாயை போடுங்கள், பிறகு நாய் மீது கடவுள் சிலையை போடலாம் பிறகு எது அதன் தன்மை மாறாமல் இருக்கிறது என்று பார்க்கலாம் என்றார். 

இதைக்கேட்ட மத போதகர், தமது போதனை இங்கு செல்லுபடியாகது என தெரிந்துகொண்டு  அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். 


"வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும், மதம் மாறத்தயாராக இல்லை.... !"! (என்றும் நட்புடன்.....கோகி)

தோல்வி அல்ல... வெற்றியே!

தோல்வி அல்ல... வெற்றியே!

விஞ்ஞானி எடிசன், தன்னம்பிக்கை மிகுந்தவர். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட நேர்ந்தாலும், தாமாகவே இயற்பியல், வேதியியல், விவிலியம் ஆகிய நூல்களைக் கற்று, தமது வீட்டிலேயே ஒரு ஆய்வுக்கூடம் அமைத்து, தலைசிறந்த விஞ்ஞானியாக உருவானார்.


ஒரு முறை எடிசனின் நண்பர் அவரிடம், ''இதுவரை நீங்கள் செய்த பரிசோதனைகள் ஒன்றிலும் வெற்றி பெறவில்லை, எனக்குத் தெரிந்து தோல்வியில் முடிந்த ஆய்வுகள் ஐம்ப...தாயிரம்!'' என்றார்.

உடனே, ''ஐம்பதாயிரம் செயல்முறைகள் செயல் படாதவை என்று நான் திடமாக அறிந்து கொண்டதே, எனக்கு வெற்றிதான்!'' என்றார் எடிசன்.(என்றும் நட்புடன்.....கோகி)

Monday, December 21, 2015

நாடு முழுதும்...இனி டீசல் கார்களை பதிவு செய்ய தடை....சட்டம்....


இனி டீசல் கார்களை பதிவு செய்ய தடை....சட்டம்....

நாடு முழுதும் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது...... உச்ச நீதிமன்றத்தின் (தில்லி மாநில வழக்கின்) தீர்ப்பால் பல சொகுசு வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
  
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டொயோடா, மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.. 

தள்ளுமடல் வண்டி இது... ஒ.எல்.எக்ஸ்(OLX)இல்- தள்ளிவிடுங்க, எண்ணெய் விலை ஒரு 'பீப்'பாய்-டாலர் 30க்கு இறங்கிப்போச்சி மாட்டை விரட்டுங்க (மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கி கட்டுபடியாகல)   ... போற இடம் எங்கப்பா?..... கோகி-ரேடியோ மார்கோனி. 

Friday, December 18, 2015

கடவுள் ....ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார் என்றார்...

கடவுள் ....ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார் என்றார்...
பழைய நினைவுகள் ...எனது அம்மா அழைப்பது கேட்டதும் இதோ வந்துவிட்டேன்... என்று கூறி எதோ படம் வரைந்துகொண்டிருந்தேன் என நினைக்கிறேன்... அம்மா பூஜை அறையில் இருந்தார்... " இந்தாடா ஓடிப்போய் பூஜைக்கு 2 வாழைப்பழம் வாங்கி வந்து தாடா" என்றார், வீட்டிலிருந்து கடைத்தெருவிற்கு ஒரு 600 மீட்டர் தூரம் இருக்கும், நான் எனது வலது காலை உதைத்து, வாயால் வண்டியை கிளப்பி, கடையை நோக்கி ஓடினேன்.................... 

சரியாக 2 வாழைப்பத்துடன் திரும்பும் வழியில் ஒரு குரங்கு என் கையைப் பிடித்து தொங்க ஆரம்பித்து.... எனது கையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை பிடுங்க முயற்சித்தது. பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சட்டேன்று வாழைப்பழத்தோடு இரண்டு கையையும் உயர தூக்கி பிடித்து, மற்றொரு கையால்  ஒரு வாழைப்பழத்தை மட்டும் பிய்த்து அதன் முத்தத்திற்கு முன்னே நீட்டியதும், குரங்கு அந்த ஒரு பழத்தை பெற்றுக்கொண்டு ஓடிவிட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் பலே நல்ல வேலை செய்தாய் எங்கே அந்த குரங்கிற்கு பயப்படாமல் ஒரு பழத்தை தந்து மற்றொரு பழத்தை சாமர்த்தியமாக பறிபோகாமல் தடுத்துவிட்டாயே. நல்ல பையன் என்றார்.   

மீதமிருந்த ஒரு பழத்துடன் வீட்டிற்கு வந்ததும், அம்மா கோபித்துக்கொண்டார். "எண்டா குரங்கிடம் சண்டைபோட்டுவிட்டு வந்திருக்கியே, பேசாம பழத்தை தூக்கி எறிந்துவிட்டு ஓடி வந்திருக்கவேண்டியதானே என்று என்னை கடிந்துக்கொண்டதோடு எனது கையில் இருந்த குரங்கு கீறலுக்கு மருந்து போட்டார். 

அந்த ஒரு பழத்தைவைத்து சாமிக்கு நெய்வேத்தியம் செய்தார். சரியாக பூஜை முடிந்த சமயம் பார்த்து வீட்டின் பின் புற மதில் சுவரில் அந்த குரங்கு உட்கார்ந்து இருந்ததைப் பார்த்த நான் அம்மாவிடம் "அம்மா இதக் குரங்குதான் என் கையிலிருந்த பழத்தை  பிடுங்கியது என்றேன்" 

சற்றும் யோசிக்காமல் அம்மா நெய்வேத்தியம் செய்த அந்த ஒரு வாழைப்பழத்தை வீட்டின் பின்புற சுவற்றின்மீது உட்கார்ந்திருக்கும் குரங்கிடம் தந்தார், குரங்கும் அதை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டது. இதைபார்த்த எனக்கு கோபம் வந்ததால் முகத்தை  உம் மென்று வைத்துக் கொண்டு அமைதியாக எனது அறைக்கு சென்று உட்கார்ந்துவிட்டேன். 

எனக்குப் பின்னால் வந்த என் அம்மா மெல்ல என்னை அணைத்தபடி பேசினார்.... என்ன பேசியிருப்பார்? உங்களால் சரியாக யூகிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்...   என்ன சொன்னார் என்று அடுத்தப் பதிவில் தொடரும்...   அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

என் செல்ல கண்ணில்லையா, அம்மா சொல்வதைக் சமத்தாக கேளு....முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும், நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். 

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.

கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிடச் செய்தார்.

நோய்களை பரப்பும் இவ்வகை வாழைப்பழங்கள் உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.

மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது. மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குப் போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன. பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும். செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும். 

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

இப்ப நீயே சொல்லு, கடவுள் ஆஞ்சநேயர் வடிவில் வந்து நம்மை காப்பற்றியுள்ளார். அந்த பழம் நாம் தின்பதற்கு இல்லை என்பதை நமக்கு சொல்லி நம்மை காப்பாற்றியிருக்கிறார் என்றார்...... 


பாடல்:- பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா...!!! https://youtu.be/KDNSM0RyUa8 

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். வாழைப்பழம் வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்! நண்பர்களே.... 
விழித்திருங்கள், 
செழித்திருங்கள்... 
நட்புடன் ரேடியோ -கோகி.   

Wednesday, December 16, 2015

"முட்டாள்களுக்கு" நான் வழிவிடுவதில்லை?????

நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் பிரதமரான சர் "வின்ஸ்டன் சர்ச்சில்" அவர்கள் ஒரு முறை,  ஓர் ஒற்றையடி பாலத்தை கடக்கமுயன்றார். அப்போது அதே ஒற்றையடி பாலத்தின் மறு முனையில் ஓர் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரும் பாலத்தை கடக்க முயன்றார்.

செல்வந்தருக்கு வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி நன்கு தெரியும், தனது  பெயரைக்கூட சரியாக எழுத தெரியாத" சர்ச்சில்" படித்த பள்ளியிலேயே கடைசி மாணவன் என்பதால்....  பாலத்தை கடக்க முயன்ற செல்வந்தர் வின்ஸ்டன் சர்சினைப்பார்த்து "முட்டாள்களுக்கு" நான் வழிவிடுவதில்லை ஆகவே வழியைவிட்டு விலகி நில் என்றார். 

அதற்க்கு வின்ஸ்டன் சர்ச்சில் சமயோசிதமாக யோசித்து "முட்டாள்களுக்கு" - நான் வழிவிடுவதுண்டு" என்று கூறி,  வழிகேட்ட செல்வந்தரை முட்டாளாக்கினார்.  தனது பள்ளிப்படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத சர்ச்சில் பின்னாளில் சிறந்த பேச்சாளராகவும், இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே என்றும் பெயர் பெற்றார். 

ஆகவே நாம் எப்போதும் எதற்கும் (சமயோசிதமாக யோசித்து) சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது சொல்லும் செயலும் இருக்குமாறு நம்மை நாமே பார்த்துக்கொள்ளப் பழகவேண்டும்.  (என்றும் நட்புடன்.....கோகி-ரேடியோ மார்கோனி)

தன்னம்பிக்கையின் இடம் எது? !!!!

தன்னம்பிக்கையின் இடம் எது? !!!!  
சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும் பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர். சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து “இது என்ன பழம்” என்றார். “சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு “இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார். “இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும் பெரிதாக்கிக் காட்டுகிறது. பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை சொன்னார் மருத்துவர். (என்றும் நட்புடன்.....கோகி)

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?????????????????

ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர-நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார்.
......புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய்... என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.... நேர-நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார்…… 

“உன் ஓய்வு நேரத்தை, மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்”. (என்றும் நட்புடன்.....கோகி-ரேடியோமர்கோனி.)

Sunday, December 13, 2015

உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It's gone)..எங்கே நமது வலைப்பதிவர் கையேடு? உடனே தேடி எடுக்கவேண்டும்....


உத்தியோகமும், சம்பளமும் போயேபோச்சு..(It's gone)..எங்கே நமது வலைப்பதிவர் கையேடு? உடனே தேடி எடுக்கவேண்டும்..............
கையில் வெறும் ரூபாய் 3000/- மட்டுமே மிச்சமிருந்தது. வேலை செய்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள், உத்தியோகமும் இல்லை, சம்பளமும் இல்லை (It's gone)போயேபோச்சு...... மாதாமாதம் செலவு செய்யவேண்டிய 5-ம் தேதி வருவதற்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது, வழக்கமாக ஒவ்வொரு மாத வீட்டுச் செலவு, வாடகை செலவு உட்பட குறைந்தபட்சம் ருபாய் 25,000/- தேவை. .... எப்படி? எங்கிருந்து பணம் புரட்டுவது?.... என்கிற மனக்குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன்........ மனக்குழப்பம் என்றாலே எனக்கு இந்தப் பாடல் ஞபகம் வரும். " மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா... வாழ்க்கையில் நடுக்கமா?"          
நான் வீட்டின் உள்ளே வருவதைப் பார்த்த என் மனைவி எனக்கு மேலும் எரிச்சலூட்டும் வகையில் குழந்தைகளிடம்...... "அப்பா ஆபிசிலிருந்து வந்தாச்சு... அப்பாகிட்ட ... 'வீடு வாங்கப் போகலாம் வாங்க' என்று கூறுங்கள்..... அப்போதுதான் குழந்தைகள் நச்சரிப்பு தாங்காமல், வங்கிக் கடனாவது வாங்கி, சொந்தமாக ஒரு வீடு வாங்குவார்... இந்த வாடகை வீட்டுத் தொல்லை தாங்கமுடியவில்லை" என குழந்தைகளை தூதுவிட்டுக்கொண்டிருந்தார்..... எங்கோ வானொலியில் இந்தப் பாடல் வழிந்தோடியது,.... பாடல் :- "தள்ளுமடல் வண்டி இது தள்ளிவிடுங்க, எண்ணெய் விலை ஏறிபோச்சு மாட்டைப் பூட்டுங்க... போற இடம் எங்கப்பா? போனப்புறம் சொல்றேம்ப்பா?" ... 

சட்டேன்று குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை வந்தது.... எங்கே அவர்களுக்கும் இப்படி என்னைப்போல வேலை செய்யும் நிறுவனம் மூடுவிழா கண்டு, என்ன செய்வது என்று, கையை பிசைந்துக்கொண்டு...திக்குத்தெரியாமல் நிற்கவேண்டுமா? ஆகவே குழந்தைகள் இருவருக்கும் எனக்கு ஏற்ப்பட்ட இக்கட்டான, இப்படிப்பட்ட பிற நிறுவனங்களில்  வேலை வாய்ப்பை சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல்... அவர்கள் தனது சொந்தக்காலில் நிருக்கும்படி  ஒரு நல்ல சுய தொழிற் பயிற்சிக் கல்வி அறிவைத் தரும் பாடப் பிரிவில் சேர்த்து படிக்கவைக்கவேண்டும்... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்..... அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பசங்க இருவருக்கும் காலாண்டுக்கான பள்ளிக்கூட கட்டணம் வேறு கட்டவேண்டியிருந்தது. இந்த நிலையில்தான் ஏதோ இழுத்துப் பிடித்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிறுவனம், மேலும் தாக்குப்பிடிக்கமுடியாமல் கடன் கொடுத்த வங்கி நிறுவனமே,  நான் பணியாற்றிக்கொண்டிருந்த எனது நிறுவனத்திற்கு மூடு விழா செய்தது. நீதிமன்றம் முடிய கதவின் பூட்டிற்கு அரக்கு சீல்வைத்தாலும், வேலையை விடமாட்டேன் என சிலர் பூட்டிய கதவின் அருகேயே காத்துக்கிடந்து....தினமும் வருகைப் பதிவேடு பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள்.................... பக்கத்து டி கடையின் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது - "மாடி மேலே மாடி கட்டி...கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே... ஹலோ ஹலோ கமான் கமவுட்.. சீமானே... விஸ்வநாதன் வேலை வேணும்...." 

பொதுவாக மனைவியிடம்  வீட்டிற்குள் வந்ததுமே மனதில் உள்ள எல்லா கஷ்டங்களையும் கொட்டித் தீர்க்கக் கூடாது. அப்படிச் செய்வதால் சிலநேரம் நமக்கு மனபாரம் குறையலாம்... ஆனால் பல நேரங்களில் நமது மனபாரம் இரட்டிப்பகிவிடும். காரணம் மனைவியின் பங்குக்கு அவரும் சேர்ந்து...."என்னங்க இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறீங்க!!!!! உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை????, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்னசெய்வது????, கொஞ்சமாவது யோசித்துப்பார்த்தீர்களா????.."... இப்படி இன்னும் பல கொக்கியை ???? நம் மனதில் மாட்டிவிட்டு, அதைப்பிடுத்துக்கொண்டு தொங்குவார்..... ஆகவே அமைதியாக உடுப்புக்களை மாற்றிக்கொண்டு,.. குளியலறைக்கு சென்று கை,கால் கழுவி முகம் துடைத்தபடி.....நிதானமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு........ இரவு படுக்கைக்கு செல்லும்போது பேசலாம் என்று முடிவுசெய்துகொண்டு ... இரவுநேரம் வானொலி கேட்க எனது கைத் தொலைப்பேசியில் பண்பலை அலைவரிசையில் தொட ... சட்டேன்று இந்தப்பாடல் ஒலித்தது "அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா அவ த்துக் காரர் சொல்லுறத கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணாச் சேர்ந்துக்கறா... ஆனா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு புடவையா வாங்கிக்கறா, பட்டுப் புடவையா வாங்கிக்கறா"…....

அனைத்து சமையலறை வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி மெல்ல பேச ஆரம்பித்தாள்..."என்னங்க ஆச்சு எதுவும் பேசாம, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல"... என்றாள்.   விவரம் சொன்னதும் ... இதமாக என் மனதிற்குள் பல கொக்கியை ???? மாட்டித் தொங்கினாள்...... மனம் கனமாகி தானாக அதன் (மைண்ட் வாய்சில்) உல் மனதுக்குள் பாடல் ஒலித்தது .... "நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி -அதில் வாழ்வதில்லை நீதி......."

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சில விசயங்களை நின்று நிதானமாக அசைபோட வேண்டியிருக்கிறது..... எப்படி சம்பாதிக்கின்ற ஆண்களுக்கு அலுவலகப் பிரச்சனைகளோ, அதேபோலவே வீட்டை நிர்வகிக்கும் மனைவிக்கும் பல அன்றாட வீட்டுப் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பல இல்லத்தரசிகள் பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொள்ளாமல் தானும் பயந்து தனது கணவணனின் பதற்றத்தை பெரிதாக்கிவிடுகிரார்கள். அதனால் தான் பல கணவன்மார்கள் தமது மனைவியிடம் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசித் தீர்த்துக்கொல்வதில்லை. பொதுவாகவே அனைத்துத் திருமணமான மேலான கணவன்மார்களின் மனதில் அவர்களின்   மனைவிக்கென்று தனி மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். இருந்தும் இப்படித்தான் பொய்க்கோபம் கொண்டு.... ஊடல்... கூடல் எல்லாம் இருந்தால்தான் அது சிறந்த இல்லறவாழ்க்கையாக இருக்கும்..... அதாவது "இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா" என்று பிரச்சனைகளை எளிமைப்படுத்த தெரிந்து வைத்திருக்கவேண்டும்..... அதைவிடுத்து எதிரும் புதிருமாக சண்டைப்போட்டால் வாழ்க்கை வண்டி எப்படி ஓடும்....... கவியரசரின் கூற்றைப்போல சரியான நேரம்பார்த்து வானொலியில் மிதந்து வந்த அந்தப் பாடல்    :-  "நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே, என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது, இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது, இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது.... பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?"  

எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை... விழித்தெழுந்தபோது  குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர்... மனைவி சமயலறையில் எதோ செய்துகொண்டிருந்தாள்..... வழக்கம் போல பல்தேய்த்து...காப்பிகுடித்து ........ "எதையாவது செய்" என்று மனது துடித்துக்கொண்டிருந்தது,  என்ன ஆகுமோ என்கிற பயம்தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை நினைத்தபோது... பள்ளிப் பருவத்தில் எனது ஆசிரியர் கூறியது ஞபகம் வந்தது....மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பயம் என்பது துளிகூட கிடையாது என்பதை சில வீர வரிகளில் எடுத்துக்கூறினார்... 

"எங்கே நமது தலை வேட்டப்பட்டுவிடுமோ என்பதுதான் பயத்தின் உச்சகட்டம், அப்படி வெட்டப்ப்படும்வரை நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை.... அப்படியே வேட்டுபட்டாலும் அதன் பிறகு நீ அங்கு இருக்கப்போவதில்லை....ஆகவே எதற்க்காக பயப்படவேண்டும்"...... "மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?" என்று ஒரு வீர பாடம் ஒன்றை சொன்னது இன்னமும் என் நினைவுகளில் ஓடிக்கொண்டிருந்தது... "மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்...... ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை", "அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!"... என்கிற, இது போன்ற பல வாக்கியங்கள் நமது மூலைக்கு,  காச்சிய இரும்பை சமட்டியால் அடித்து வளைத்து உறுதிப்படுத்தும் வார்த்தைகள். நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்! உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!........  உங்களின் கண்கள் கண்ணீரால் உங்களை காட்டிக்கொடுத்தாலும், உங்களின் அழகிய புன்னகையை உதிர்த்து அதை எதிர்கொள்ளுங்கள்!.... ஆகவே கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கவலைப்படுவதை விடுத்து அடுத்து என்ன செய்யவேண்டும் என காரியத்தில் கண்ணாக இருக்க கணினியை நோக்கி ஓடினேன்.....   மடிக்கணினியை திறந்து இணையத்தில் இணைந்து.... முதலில் வேலைதேட மனசு நினைத்தாலும் எனது கை அந்தக் குறிப்பிட்ட இனைய பக்கத்தை சொடுக்கியது, மெல்ல அந்த இனைய  முகப்புப் பக்கத்திற்கு வந்தேன்......இனைய வானொலியில் பாடலைக்கேட்க மனம் விரும்பியதால்.... பாடலைக் கேட்டபடி கணினியில் எனது பணியைத் தொடர்ந்தேன் .....பாடல்:- "வாழும் வரை போராடு வழியுண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே!"........ 

....அந்த இணையதள நிறுவனத்தை தொடர்பு கொள்ள முகவரியை தேடி..... தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ரூபாய் 15000/- ஆகும் என்றார்கள், தொடர்ந்து பேசியதில் இறுதியில் ருபாய் 2000/- வெறும் 3 பக்கங்களில் பிறகு ஒவ்வொரு மாதமும் ருபாய் 5000/- கட்டணம் என்று பேசி முடிவானது... நேரில் வருவதாகக் கூறி... மடிக் கணினியைக் கூட மூடாமல் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.  ....."ஏங்க.. ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வெளியில் செல்லுங்கள்"... என்று என் மனைவி கூறியது காதில் விழுந்தும், விழாததுபோல..... வேகமாக வீட்டைவிட்டு வெளியில்வந்து... வாகனம் பொருந்தி....அடுத்த அரைமணியில் அவர்களின் அலுவலகத்தில் இருந்தேன். வழியில் வாகனத்தில் செல்லும்போதும் பண்பலை வானொலி நிகழ்ச்சியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது ....  "சென்று வா மகனே ! சென்றுவா ! - அறிவை...வென்று வா மகனே ! வென்று வா !....அறிவுலகம் உன்னை அழைக்கின்றது - ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது....." 

மனதிற்குள் ஒரு ஆர்வம் வந்துவிட்டால், கால நேரம் கடந்து, எத்தனை உயரமானாலும் எட்டிப்பிடிக்கும் சக்தி கிடைத்துவிடுகிறது. அதனால்தான் கஷ்டப்பட்டு உழைக்காமல் இஷ்டப்பட்டு உழைத்தால் கிடைக்கும் பலனுக்கு ஈடு இணை இல்லை என்பதை அதன் அனுபவத்தால் மட்டுமே உணரமுடிகிறது. பலநாட்களாக இணையத்தில் எனது எண்ணங்களை விதைத்து அறுவடை செய்து காட்டவேண்டும் என்கிற அந்த எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால், இணையத்தில் ஒரு பெரிய வாய்ப்பை உருவாகவேண்டும் என பல விவரங்களை எனது மின்னஞ்சல் பெட்டியில் சேர்த்து வைத்திருந்தேன். (எங்கொ வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த அந்தப் பாடல் எனது காதுகளில் நுழைந்தது :- ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன்.....).

கையில் இருந்த ருபாய் மூவாயிரத்தில் ருபாய் 2000/- கட்டணமாக செலுத்தி,  இணையத்தில் தேவையான பதிவு முறைகளை முடித்து, என்னுடைய சொந்த இனைய பக்கத்தை வடிவமைத்தேன். அதன் முகப்புப் பக்கத்தில்...முன்பே நான் உருவாக்கி வைத்திருந்த எனது கூகள் விளம்பர (கூகள் ஆட்சென்ஸ்-Google Adsense) கணக்கை இணைத்தேன்.  மேலும் (Paypal) பே-பால் மற்றும் (E-Commerce & On line Payment Gate Way) என்கிற வங்கியின் இனைய வழிப் பணப் பரிவர்த்தனைகளுக்கான H.T.M.L என்கிற கணினி மென்பொருள். (Click)சொடுக்கு (Button)பொத்தான்களை நிறுவி எனது இணையப்பக்கம் தயாரானது. வெற்றி பெற்ற பெருமிதம்... கைகளுக்கு நன்றி சொன்னேன்.... இந்தக் கைகள் என்னவெல்லாம் ஜாலம் செய்கிறது.... அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, நமது வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிறது... இப்படி மனம் நினைத்துக்கொண்டிருக்கையில் வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது.....  "உழைக்கும் கைகளே,.... உருவாக்கும் கைகளே,... உலகை புது முறையில்,.... உண்டாக்கும் கைகளே.... உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)"          

        
இப்படித்தான் சில வேளைகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்போது,  நேரம் போனது தெரியவில்லை. தொலைப்பெசியைப் பார்த்தபோது,  தொலைபேசி மனியாடிக்காமல் ஓசை குறைக்கப்பட்டு இருந்ததால்  அதில் வீட்டிலிருந்து பல அழைப்புக்கள் வந்திருந்தது தெரிந்து, உடனே வீட்டிற்கு தொடர்புகொண்டு பேசியபோது.... என் மனைவி சற்று கலவரப்பட்டு.... வேலை போய்விட்டதால் கணவருக்கு என்ன கோபமோ?, எங்கு போனாரோ?.... என  மறு முனையில் அழாதகுறையாக..... "என்ன ஆச்சுங்க?? எங்கே இருக்கீங்க???" என்று என் மனம் நிறைய கொக்கியை ???மாட்டினார்......... ஏம்ப்பா கோகி- ரேடியோ மார்கோனி... சூழ்நிலைக்குத் தகுந்த ஒரு பாட்டைப் போடுப்பா ...." நினைந்து  நினைந்து நெஞ்சம் உருகுதே....நீங்கிடாத துன்பம் பெருகுதே" ..... :(திரு. ஜி. ராமநாதன் அவரோட இசையப்பில் வந்த அழகான பாடல் இது... படம் -சதாரம்) ...  

அடித்துப் பிடித்து...ஓடோடி வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் மகிழ்ச்சியான செய்தியை சொன்னதும் " நீங்க ரொம்ப மோசமான ஆளுங்க,  உங்களைக் காணும் என்று எவ்வளவு பயந்துவிட்டேன்  தெரியுமா?..." என்று கண்களில் நீர் தளும்ப என் கைகளை ஆறுதலாக பிடித்து... அவளது நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்..... எத்தனை வயதானால் என்ன தினம் தினம் கணவன் மனைவி இருவரும் புதிதாக திருமணமான தம்பதிகள் போல.... பிறகென்ன வானொலியில் பாட்டுதான்..... வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற படத்தில் " ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..... ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது...... நாளை வருவது கல்யாணம், இன்று வெள்ளோட்டம்....இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்.....  https://youtu.be/3TLmnL2QQqU

"என்னால் நம்பமுடியவில்லை... இத்தனை வேகமாக ஆரம்பித்த முதல் வாரத்திலேயே எனது வங்கிக் கணக்கிற்கு ருபாய் 50,500/- கிடைத்திருப்பது குறித்து பெருமையாக இருந்தது.. எதோ சொல்லுவார்களே "வயறு காய்ந்த மாடு கம்பங் கொல்லையில புகுந்த மாதிரி".... என்பதுபோல மனம் பரபரப்பானது.... பெருமையை ஊர் அறிய தெரியப்படுத்த மனம் உணர்சிவசப்படலானது ... அடுத்தது .... அனைவருக்கும் தெரியப்படுத்த.... எங்கே நமது வலைப்பதிவர் கையேடு?..... உடனே தேடி எடுக்கவேண்டும்.......என்னைவிட என் மனம் ஒரே நேரத்தில் என்வீட்டின் வெவ்வேறு  இரண்டு அறைகளில் என் நினைவுகளை, விரட்டித் தேடியது......வழக்கம்போல வானொலியில் பாடல் ஒலித்தது... "சத்தியம்.... இது சத்தியம்.... எல்லாம் வல்ல இறைவனின் ஆணை, சொல்லப் போவது யாவையும் உண்மை, சத்தியம்... இது சத்தியம்".........   

அடுத்தது..... நமது வலைப்பதிவர்கள் கையேட்டில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய இனைய முகவரியை தந்து, ...... நீங்களும் கைநிறைய சம்பாதிக்க வேண்டுமா? பலருக்கும் பொருலீட்டித்தரும் வகையில் அமைக்கப்பட்ட எனது இணையப்பக்கம்... கைநிறைய அள்ள அள்ள குறையாத ஒரு அட்சயப் பாத்திரம் என்பதை தெரியப்படுத்தி நானும் பயன்பெறவேண்டும் என்பதால்..... அதற்காக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பும் வேலையை தொடங்கினேன்....இனைய வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பாடல் ஒலித்தது "நான் அனுப்புவது கடிதம் அல்ல,.... "உள்ளம்".... அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல ...."எண்ணம்"... உங்கள் உள்ளமதைக் கொள்ளை கொள்ள...... நான் அனுப்புவது கடிதம் அல்ல"..... 

எனது இணையபக்கத்தின் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம். முதலில்  நீங்கள்  செய்யவேண்டியதெல்லாம், என்னுடைய இணையதளத்திற்குள் நுழைந்ததும், முகப்புப் பகுதியிலிருக்கும், "புது கணக்கு தொடங்க" என்கிற பொத்தானை (கிளிக்)/சொடுக்கியபிறகு தோன்றும் விண்ணப்ப படிவத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை குறிப்பிட்டு உங்களுக்கே உரிய  உங்கள் கணக்கின் உல் நுழைவதர்க்கான் "பெயர்" மற்றும் "கடவுச் சொல்" போன்றவற்றை தனியாக குறித்துவைத்துக்கொண்டு,  உங்களது பெயரில் ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும்.  

மேலும் மிக எளிமையாக உங்களுக்கு புரியுமாறு கூறுகிறேன். அதாவது நீங்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை (Blogspot.com)என்கிற உங்களது இனைய பக்கத்தில் பதிவு செய்துவிட்டு அந்த இனைய பக்கத்தின் URL-முகவரியை என்னுடைய இனைய தளத்தில் உள்ள உங்களது கணக்கின் கீழ் பொருத்திவிட்டால். உங்களது கதை, கட்டுரை, கவிதையை யாராவது படிக்கும்போது திரையில் தோன்றும் விளம்பரங்களுக்கு கிடைக்கும் தொகையில் பாதி  உங்களது கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது எனது இணையதளத்தில் உங்களது கதை படிப்பதினால் கிடைக்கும் விளம்பரப் பணம் ருபாய் 1000/- என்றால் அதில் பாதி ரூபாய் 500/- உங்களுடைய கணக்கிற்கும், மீதி ரூபாய் 500/- என்னுடைய கணக்கிற்கும் வந்து சேரும். ஆகவே உடானடியாக என்னுடைய இணையதளத்தில் உங்களை இணைத்துக்கொண்டு உங்களின் கதை கட்டுரை கவிதைகளுக்கு சிறப்பான ஒரு பெரிய சன்மானத்தைப் பெற, கீழ்கண்ட எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்......"என் கண்களுக்கு பச்சை விளக்கு தெரிந்தது"..... நிச்சயம் இது வெற்றிகரமான செயலாகவும், அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு நம்மோடு இணைந்து பயனடைவார்கள் என, என் மனம் எதோ சோதனையில் ஒரு சாதனை செய்ததுபோல நிம்மதியாக........ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப்போல.... மின்சார இருப்புப்பாதையில் புகை வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தது .....பாடல்:-"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது...." 

"ஏனுங்க....அட உங்களைத்தான் ...இன்னைக்கு முக்கியமா எதோ உங்க கம்பெனி மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே.... இப்படியா 7 மணி வரை தூங்குவது... சீக்கிரம் எழுந்து ஆபிசுக்கு கிளம்புங்க"...... என்று எனது மனைவியின் குரல் கேட்டு திடுக்கென்று கனவு களைய, சட்டென்று நினைவுக்கு வர குளியலறை நோக்கி ஓடினேன்.... அருமையான கனவு எப்படியும் ஒரு மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சியாக ஏதாவது ஒரு வானொலிக்கு விற்றுவிடலாம்........ உடனடியாக இந்த "வானொலிக் கதையும் பாடலும்" நிகழ்ச்சிக்கு சில விளம்பரதாரர்களைத் தேடவேண்டும்...... நீங்களே சொல்லுங்கள்... இந்தக் கதை, விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு போனியாகுமா?...... நேயர்களே நீங்களும் கூறுங்கள்..... இந்தக் கதையும் பாடலும் நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ஏதாவது குற்றம் குறை இருந்தால் எவ்வளவோ?.... அவ்வளவு குறைத்துக்கொண்டு மிச்சம் மீதியைத் தந்தாள் போதும்........மீண்டும் எங்கோ வானொலியில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது அதைக்கேட்ட குளியறையிலிருந்த எனது மனதும் பாடலை முணுமுணுத்தது  :-  

"துணிந்து நில்,..ஹ ஹ... தொடர்ந்து செல், ..ஹ ஹ ஹ .தோல்விகிடையாது தம்பி..... உள்ளதை சொல்நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி"......... ....


விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்......... 
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்............... 
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்........... 
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி....... 

Thursday, December 10, 2015

ஆகாசவாணி FM ரெயின்போ ஹிந்தி வானொலி-மஹாகவி பாரதியார் பாடலை ஒலிபரப்பியது.

11-12-2015 இன்று காலை 7.30மணி அளவில் நமது ஆகாசவாணி FM ரெயின்போ ஹிந்தி வானொலி  ஒலிபரப்பில் நமது மஹாகவி பாரதியார் பிறந்த நாள் குறித்து விவரங்களை கூறி அவர் எழுதிய  ஒரு பாடலையும் 7.40AM ஒலிபரப்பியது. உத்திராகன்ட் மாநில மலைப்பகுதியில் காலையில் லேசான மழை, மேகமூட்டமாக நல்ல குளிர் காற்று (6 டிகிரிக்கும் கீழ்) வீசிக் கொண்டிருந்த அந்தக் காலை வேளையில் ஒலிபரப்பான மஹாகவி பாரதியாரின் பாடல் இமயமலை அடிவாரத்தின்  எல்லைப் பணியிலிருந்த தமிழக ராணுவ வீரர்கள் உட்பட உத்திராகன்ட் மாநில  திட்டப்பனியிலிருக்கும்  நானும் கேட்டு மகிழ்ந்தேன். மாஹாகவி அவர்களின் புகழ் தமிழகம் மட்டுமல்லாது பலமொழிபேசும் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிறப்பு பெற்றிருப்பது பெருமையடையச்  செய்கிறது......வாழ்க பாரதம்.....    

......................ஜெய ஜெய ஜெய .. பாரத சமுதாயம் வாழ்கவே!.................

FREE JOBS EARN FROM HOME