கோகி-ரேடியோ மார்கோனி: தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்:-

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, October 17, 2015

தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்:-

தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்:- 

பல்துறைப் பயிற்சித்திறம் வாய்ந்த தமிழர்களுக்கு இந்தியாவின் வடநாட்டிலும், உலகெங்கிலும் ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன... தென் இந்தியாவில் வசிக்கும் தமிழருக்கு "ஹிந்தி" மொழி மற்றும் வடநாட்டு கலாசாரம், காலநிலை, உணவு பழக்க வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த… உரிய படிப்பைப் படித்த பலருக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் திணறுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே....

இந்திய வடமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்களின் குடும்ப தலைமுறையினருக்கு, தமிழ் தாய்மொழியாக, எந்த நேரமும் ஒருவருக்கொருவர் தமிழில் பேசிக்கொண்டிருந்தாலும், தமிழில் எழுத படிக்க என்று வரும்போது  "தெரியாது" என்பது ஏறக்குறைய 75% சதவீதத்திற்கு மேல் இருப்பது, தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள் என்று சொன்னால் அது மிகையாகாது....

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கை, மலேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்களின் தற்போதைய தமிழ் தலைமுறையினரின் நிலைமைகூட இப்படித்தான் இருக்கிறது. 

மேலை நாடுகளில் பலர் அங்கு வாழும் தமிழர்களின் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ் கற்ப்பிக்கும் செயலை செய்து போருலீட்டுபவர்களை தற்ப்போது மிக அதிக அளவில் காணமுடிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழை கற்றுக்கொடுக்கும் தமிழாசிரியர்கள் தமிழை உயிர் எழுத்துக்களிலிருந்து  ஆரம்பிக்காமல், புதிய தமிழ் கற்கும் முறை என்கிற "ட" எழுத்தை முதலிலும் அதைத் தொடர்ந்து "ப" பிறகு "ய" பிறகு "ம" என எழுத கற்றுத்தந்து பயிற்சிதருவது வித்தியாசமான பயிற்சி முறை. இப்படிப்படிக்கும் இவர்களுக்கு தமிழ் இலக்கணம் எப்படி புரியும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பழைய தமிழ் கல்வி முறையில், உயிர் எழுத்துக்களிலிருந்து ஆரம்பிக்கும் கல்வி வழியில் இலக்கண சுத்தமாக தமிழ் கற்றுத் தேர்வது கடினம் என்கிற நிலையில் இந்த புதிய தமிழ் கற்கும் முறையில் எங்கே நமது தமிழ் மொழியின் தொன்மை சிறிது சிறிதாக குறைந்துவருகிறதோ? என்கிற ஐயம் ஏற்ப்படுகிறது. 

புது தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற எல்லைகளில் வாழும் தமிழர்களின் இனைய வலைப்பக்கங்கள் 75% ஆங்கிலத்திலும் 25% தமிழ் மொழியிலும் இருக்கிறது, பலர் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் எங்கே தமிழில் எழுதி தவறாகப் போகுமோ? என்று அஞ்சி ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்... பலர் தமிழை கணினியிலும் தமது கைத் தொலைப்பேசியிலும் ஆங்கில எழுத்துக்களில் எழுதி "தமிளிங்கிலீஸ்" என்று தமிழை கொச்சைப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் நிகழ்ச்சியின் அழைப்பிதழ், எதோ ஒரு சிலரின் மொழியின் மீதிருக்கும் பற்றுதலால் தமிழிலும், மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் அச்சடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. 

வாய்ப்புகள் ஒருபக்கம் இருந்தும், உரிய முறையில் பயன்படுத்தமுடியாத வகையிலும், ஒருபுறம் வாய்ப்புகள் இல்லையே என்று ஏங்கும் வகையிலும் தவிக்கும் தமிழர்களுக்கு, நான் சொல்ல நினைப்பது...........இவை அனைத்தும் "தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்" என்று சொன்னால் அது மிகையாகாது ..........

அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி... புதுதில்லியிலிருந்து........... 
        

Post a Comment

FREE JOBS EARN FROM HOME