FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, October 17, 2015

தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்:-

தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்:- 

பல்துறைப் பயிற்சித்திறம் வாய்ந்த தமிழர்களுக்கு இந்தியாவின் வடநாட்டிலும், உலகெங்கிலும் ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கின்றன... தென் இந்தியாவில் வசிக்கும் தமிழருக்கு "ஹிந்தி" மொழி மற்றும் வடநாட்டு கலாசாரம், காலநிலை, உணவு பழக்க வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த… உரிய படிப்பைப் படித்த பலருக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் திணறுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே....

இந்திய வடமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்களின் குடும்ப தலைமுறையினருக்கு, தமிழ் தாய்மொழியாக, எந்த நேரமும் ஒருவருக்கொருவர் தமிழில் பேசிக்கொண்டிருந்தாலும், தமிழில் எழுத படிக்க என்று வரும்போது  "தெரியாது" என்பது ஏறக்குறைய 75% சதவீதத்திற்கு மேல் இருப்பது, தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள் என்று சொன்னால் அது மிகையாகாது....

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கை, மலேசியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்களின் தற்போதைய தமிழ் தலைமுறையினரின் நிலைமைகூட இப்படித்தான் இருக்கிறது. 

மேலை நாடுகளில் பலர் அங்கு வாழும் தமிழர்களின் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ் கற்ப்பிக்கும் செயலை செய்து போருலீட்டுபவர்களை தற்ப்போது மிக அதிக அளவில் காணமுடிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழை கற்றுக்கொடுக்கும் தமிழாசிரியர்கள் தமிழை உயிர் எழுத்துக்களிலிருந்து  ஆரம்பிக்காமல், புதிய தமிழ் கற்கும் முறை என்கிற "ட" எழுத்தை முதலிலும் அதைத் தொடர்ந்து "ப" பிறகு "ய" பிறகு "ம" என எழுத கற்றுத்தந்து பயிற்சிதருவது வித்தியாசமான பயிற்சி முறை. இப்படிப்படிக்கும் இவர்களுக்கு தமிழ் இலக்கணம் எப்படி புரியும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பழைய தமிழ் கல்வி முறையில், உயிர் எழுத்துக்களிலிருந்து ஆரம்பிக்கும் கல்வி வழியில் இலக்கண சுத்தமாக தமிழ் கற்றுத் தேர்வது கடினம் என்கிற நிலையில் இந்த புதிய தமிழ் கற்கும் முறையில் எங்கே நமது தமிழ் மொழியின் தொன்மை சிறிது சிறிதாக குறைந்துவருகிறதோ? என்கிற ஐயம் ஏற்ப்படுகிறது. 

புது தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற எல்லைகளில் வாழும் தமிழர்களின் இனைய வலைப்பக்கங்கள் 75% ஆங்கிலத்திலும் 25% தமிழ் மொழியிலும் இருக்கிறது, பலர் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் எங்கே தமிழில் எழுதி தவறாகப் போகுமோ? என்று அஞ்சி ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்... பலர் தமிழை கணினியிலும் தமது கைத் தொலைப்பேசியிலும் ஆங்கில எழுத்துக்களில் எழுதி "தமிளிங்கிலீஸ்" என்று தமிழை கொச்சைப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் நிகழ்ச்சியின் அழைப்பிதழ், எதோ ஒரு சிலரின் மொழியின் மீதிருக்கும் பற்றுதலால் தமிழிலும், மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் அச்சடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. 

வாய்ப்புகள் ஒருபக்கம் இருந்தும், உரிய முறையில் பயன்படுத்தமுடியாத வகையிலும், ஒருபுறம் வாய்ப்புகள் இல்லையே என்று ஏங்கும் வகையிலும் தவிக்கும் தமிழர்களுக்கு, நான் சொல்ல நினைப்பது...........இவை அனைத்தும் "தமிழரால் தகர்த்திடவேண்டிய தடைகள்" என்று சொன்னால் அது மிகையாகாது ..........

அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி... புதுதில்லியிலிருந்து........... 
        

Thursday, October 15, 2015

செய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரிப்பு சிரிப்பு.....

நாடு முழுவதும் "மாட்டிறைச்சி" செய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரிப்பு சிரிப்பு.....

#என்னப்பா தயாரிப்பாளர் வீட்டின் முன் எல்லாரும் ஏன் இப்படி வரிசையா நிக்கிறாங்க?

தற்ப்போதைய நிலைமைக்கு தகுந்த "மாடுகள் பற்றிய கதையை" திரைப்படமா எடுக்க, கதை வேணும்னு  விளம்பரம் செய்திருந்ததால இத்தனைப்பேர் கதையோட நேரில் வந்திருக்காங்க!!!  (கோகி)



#1. மாட்டுச் சந்தைக்கு போய், மாடு வாங்கப்போறேன்னு சொன்னதால, ஊர் மக்களெல்லாம் என்னை துரத்திக்கிட்டு வராங்க,  ....காவல் துறை ஏட்டைய்யா.... என்னைக்.... காப்பாத்துங்க!!!!! (கோகி)

#2. தேர்தலுக்கு "மாட்டுச் சின்னம்" தரப்பட்டது எங்கள் புதிய கட்சிக்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சி .....இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.... (கோகி) 

#3. என்னங்க உங்க அம்மா என்னைப் பற்றி அக்கம் பக்கம் இருப்பவர்களிடம், இவ எங்க வீட்டு "மாட்டுப் பொண்ணு" என்று சொல்லுவது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை..!!! (கோகி)

#4. நீதிபதி, குற்றம் சாற்றப்பட்டவரிடம்.. நீ ஏன் மாட்டிறைச்சிக்காக  மாடுகளை கொன்றாய் ?  "பசுவதை தடை" சட்டத்தின்படி நீ செய்தது குற்றம் என்பது உனக்குத் தெரியாதா? 

குற்றவாளி கூண்டில் நிற்ப்பவர்:- ஐயா, "பசுவதை தடை" பசு மாட்டுக்குத் தானுங்களே.... நான் இறந்துபோன எருமை மாட்டைத்தான் இறைச்சிக்காக வெட்டினேன்.!!!! (கோகி)

#5. ஆசிரியர்:- வீட்டுப்பாடம் செய்யாம இப்படி எருமை மாடு மாதிரி நிக்கிரையே உனக்கு வெட்கமா இல்லை.

மாணவன்:-.... சார் ரொம்ப மிரட்டாதீங்க,.. மாட்டுக்கறி பற்றிய பாடம் சொல்லித் தரீங்கன்னு போலிசுக்கு போட்டுக்குடுத்துடுவோம்.!!!!!....(கோகி)

#6. அரசு அலுவலக அதிகாரி, அவரது உயர் அதிகாரியிடம்... "சார் அந்த "எ- 5 கிளார்க்-மருது" எந்த வேலையும் செய்யாம எல்லாரையும் மிரட்டிக்கொண்டு காலம் தள்ளுறாரு, இவர வேற எங்கயாவது மாற்றல் செய்துடுங்க"...

அரசு உயர் அதிகாரி:-  இவனையெல்லாம் மாட்டு ஆஸ்பத்திரிக்கு மாத்தினால்தான் சரிபட்டு வருவான். அங்கே பொது மக்கள் இவனை கவனித்துக்(கொள்வார்கள்).....(கோகி)    

#7. டீ கடையில் ஒருவர்:- தொலைக்காட்சியில் செய்தி பார்க்கையில், ஏம்ப்பா மாட்டுக்கறி  கிலோ ஒரு  60/70 ரூபா இருக்குமா?,...... அந்த குடும்பத்துக்கு அரசு 5 இலட்சம் தந்தாங்கன்னா ... பிரதமர் காப்பீட்டுக்கு கூட 2 லட்சம் தானுங்களே!!.... சும்மா வேலைவெட்டி இல்லாதவங்க  இத பத்தி யோசிக்க மாட்டாங்களா????...!!!!!...... (கோகி)....    

#8. இனி மாட்டுப் பிறவி எடுத்தா இந்தியாவில்தான் பிறக்கணும்.....(கோகி) 

#9. மாட்டுக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா "பசு வதை" சட்டம் பாயும்னு இனி யாரும் நம்மள பயமுறுத்த முடியாது!!!!  (கோகி) 

#10.நான் அப்பவே சொன்னேன் மாட்டு லோன் எல்லாம் வேண்டாம் என்று......(கோகி) 

#11. மாட்டுக்கும், கொழிக்கும் பயப்படுற அளவுக்கு ஆட்டுக்கு பயப்படுற காலம் எப்போ வரும்? (கோகி).

#12. அந்தணர்:- தானமா?  அதுவும் கோதானமா??? வேண்டாவே வேண்டாம்... அந்த மாட்டுக்கு ஏதாவது ஆனா,  ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா  சேர்ந்து  என்ன அடிச்சு போட்டுடுவா!!!!! ....(கோகி)

Thursday, October 8, 2015

"நிதான மந்திரம்" நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய "மந்திரம்"

"நிதான மந்திரம்" நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய  "மந்திரம்" 


"நிதானம்", (நிதானமே பிரதானம்)  என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?  

இந்த மந்திரம் உங்களுக்காக, நீங்கள் நினைவில் வைத்து சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல்லாகும். 

"நிதானம் என்பது வேகத்தோடு சம்மந்தப்பட்ட சொல்லாக இருந்தாலும், நான் இங்கு குறிப்பிட வந்தது உடல் நலம், அது சிறப்பாக இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க முடியும். 

அதாவது ஒவ்வொரு முறையும் நாம் நமது உணவை உட்கொள்ளும்போது நமக்கு நாமே நினைவில் நிறுத்தி சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல் இது. 

இந்த அவசர யுகத்தில் அவசர அவசரமாக சரியாக மென்று தின்று விழுங்காத உணவுப்பழக்கத்தினால் செரிமானம் கேட்டு, உடல் நலத்தோடு மனநலமும் கெட்டுப்போவதால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு ஒரு அளவு என்பது இல்லை. அது எப்படிப்பட்ட இழப்புக்களை உருவாக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.  ஆகவே ஒவொரு முறையும் நாம் நமது உணவை சாப்பிடத் தொடங்கியது முதல் உணவை உண்டு முடிக்கும்வரை இந்த "நிதானம்"....(நிதானமாக உணவை நன்கு மென்று விழுங்கவேண்டும்)  என்கிற மந்திரத்தை நினைவில் நிறுத்தி செயல்படவேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம். 

* உணவை நன்கு கடித்து மென்று சிறிது சிறிதாக விழுங்கவேண்டும். 

*சாப்பிட்டு முடிக்கும்வரை, இடையில் அவசியம் தேவை ஏற்ப்படாத நிலையில்,  தண்ணீர் பருகுவதை தவிர்க்கவேண்டும். சாப்பிட்டு முடித்தபிறகு தண்ணீர் பருகவது செரிமானத்திற்கு சிறந்தது.  

*வாயை மூடி பிறகு உணவை மென்று விழுங்கவேண்டும், வாயை திறந்தபடி மெல்லுவதால், உணவோடு காற்றும் சேர்ந்து விழுங்கப்படுவதால் வயிற்றில் வாயுத் தொல்லைகள் ஏற்ப்பட்டு, செரிமானமும் அதோடு தூக்கமும் கெட்டுப்போகும்.  

*பேசிக்கொண்டே சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், அப்படி செய்வதால் உணவின் சுவை தெரியாமல் நமது கவனம் திசை திருப்பப்படுவதால், உண்ணும் உணவை செரிக்கத் தேவையான உமிழ் நீர் சுரப்பி தனது வேலையை செய்யாமல் நாம் சாப்பிடும் உணவை கேட்டுப்போகச் செய்யும். ஆகவே நாம் உண்ணும் உணவே விஷமாக மாற வாய்ப்புகள் உள்ளது.

*சாப்பிடுபவரின் கவனம் சிதறாமல், உணவை சுவைத்து ரசித்து உண்ணும் வகையில் மன நிலை இருக்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். 

*உணவை சுவையாக சமைப்பதைவிட, மகிழ்ச்சியாக சாப்பிடும்படி பரிமாறுவது சிறந்தது.    

ஆகவே நிறுத்தி நிதானமாக மென்று விழுங்கவேண்டும் என்கிற இந்த "நிதான" மந்திரத்தின் தன்மையையும் அதன் சக்தியையும் நீங்களும் உணர்வீர்கள் என்றால், உங்களுக்கும் அது   மிகப்பெரிய பயனை பெற்றுத் தரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.  

விடாமல் முயலுங்கள், ....
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் ! நன்றி. 
அன்புடன்.... கோகி என்னும் கோபால கிருஷ்ணன் -ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து........... 

Wednesday, October 7, 2015

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???


ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 5 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார். நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை... 


கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது, இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்...



கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா! 



உங்களை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்று கேட்டால், நீங்கள் 100% சதவீதம் என சொல்ல தயங்கி 99% சதவீதம் என்று கூறுவீர்களானால்... உங்களின் மதிப்பெண் "99" என்பது  உங்களுக்குத்தான் "99" என்று தெரியும், அதுவே உங்களின் எதிரில் இருப்பவர்களுக்கு "66" என்று தெரியும். ஆகவே இனி உங்களை நீங்கள் 66 என்று மதிப்பிட்டு, நூறு சதவீதத்தை எட்டுவதற்கு மேலும் நிறைய கற்றுக்கொள்ள நினைத்தால் அதுவே மற்றவர்களின் பார்வையில்  "99" என உங்களின்  மதிப்பை உயர்த்திக் காட்டும்.........அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

Tuesday, October 6, 2015

"டெங்கு" என கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவர்கள், ஒரு ஸ்பெஷல் ரிபோர்ட்:

"டெங்கு" என வீண் பயம் பீதி வேண்டாம்!!!! வைரஸ் காச்சலாகவும் இருக்கலாம்.:- பயத்தைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவமனைகள், ஒரு ஸ்பெஷல் ரிபோர்ட்:-

புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட மாநிலப் பகுதியில் அமைந்திருக்கும் பல (பிரபல) தனியார் மருத்துவமனையில், பொதுமக்களின் பயத்தையும் படபடப்பையும் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவ வியாபாரக்கூடமாக  மாற்றப்பட்டுள்ளது. 

எனது மகனுக்கு ஜுரம் என்று கல்லூரியிலிருந்து தொலைபேசி வந்தபோது நானும் முதலில் இப்படி பயமும் பதற்றமும் அடைந்தேன், கல்லூரி பேரூந்திலிருந்து இறங்கிய எனது மகன் மிகவும் சோர்ந்து களைப்படைந்து காணப்பட்டான். உடனே எனது வீட்டின் அருகே இறுக்கும் அந்த பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். சிறப்பு மருத்துவர் ஒருவர் உடனே இரத்த பரிசோதனை செய்யும்படி  அந்த மருத்துவமனையில் அமைந்திருந்த இரத்த பரிசோதனைக் கூடத்திற்கு செல்லுமாறு ( FBC-Full blood count ) எப். பி. சி -என எழுதி அனுப்பினார். நிறைய கூட்டம் நிரம்பி வழிந்தது, வந்திருந்த அனைவருமே ஜுரத்திர்க்கான இரத்த பரிசோதனை செய்ய காத்திரூந்தனர். அந்த தனியார் மருத்துவமனையில் வந்த கூட்டம் அனைத்திற்குமான இரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் அங்கு பரிசோதித்த அனைவரையும் அந்த தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க விழைந்ததை பார்த்தபிறகு எனக்கு சிறிது சந்தேகம் ஏற்ப்பாட்டது சரியாகவே இருந்தது. 

எனது மகனின் இரத்த பரிசோதனை முடிவை பார்த்த மருத்துவர் இரண்டு இடங்களில் வட்டமிட்டு மகனின் இரத்தத்தில் சிலவகையான இரத்த தட்டுக்கள் குறைவாக இருப்பது "டெங்கு" நோய்க்கான அறிகுறியாகவும் இறக்கலாம் ஆகவே உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்குமாறு கூறினார்.  நல்லவேளையாக நான் டெங்கு ஜுரத்திர்க்கான இரத்த பரிசோதனைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதாக கூறி அதற்க்குண்டான இரத்த மாதிரியை தந்துவிட்டு மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன், அப்போது எனக்கு மிகவும் பழக்கமான ஒரு குடும்ப மருத்துவர் அந்த மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் விவரம் கூறினேன் உடனே அவர் மருந்து குறிப்பு சீட்டில் ஒவ் ஒரு நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை "எலக்ட்ரால்"ORS-என்னும் உடனடி சக்தியைத் தரக்கூடிய பல்வேறு வைடமீன்கள் அடங்கிய பானத்தைக் (தற்போது இது ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பானமாக, மாஜா-மாம்பழ ஜூஸ் போல டப்பியில் குழலை சொருகி உடனே குடிக்கலாம்)  குடிக்கவேண்டும் என எழுதித்தந்தார்.  

அன்று இரவு ஜுரத்திற்கு பாராசிட்டமைல் மாத்திரையும் அதோடு அந்த எலக்ட்ரால்/ORS-பானத்தையும் பருகியதில் மறுநாள், ஜுரம் இல்லாமல் நேற்றைப்போல சோர்வாக இல்லாமல், புத்துணர்வாகவும் தெம்பாகவும் இருந்தான். அன்று டெங்கு ஜுரத்திர்க்காக இரத்த பரிசோதனை செய்த முடிவை பார்த்தபோது அவனுக்கு டெங்கு ஜுரம் இல்லை என்பது தெரிந்தது,  முடிவைப்பார்த்த மருத்துவர் டெங்கு ஜுரம் இல்லை ஆகவே டைப்பாய்டு ஜுரமாக இருக்குமோ என்று இரத்த பரிசோதனை செய்யச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையும் செய்துவிட்டு அதன் முடிவிற்காக காத்திருந்தோம். 

மறுநாள்  டைப்பாய்டு ஜுரம் இல்லை என இரத்த பரிசோதனை முடிவு வந்தபோது. அந்த சிறப்பு மருத்துவர் கூறினார் இது எதோ வைரல் ஜுரமாக இருக்கும் என்பதால் அதற்க்குண்டான சோதனைகளை செய்யச்சொன்னார். இதைப்பார்த்த எனது மகன் அங்கேயே சண்டைக்கு வந்துவிட்டான் எனக்குத்தான் இப்போது ஜுரம் இல்லையே வைரல் ஜுரம் இருக்கலாம் என்றால் அதற்குண்டான மருந்து மாத்திரிகளை எழுதித் தரலாமே என்றான். மருத்துவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு மருந்து மாத்திரைகளை எழுதித் தந்தார். 

அந்த தனியார் மருத்துவமனையில் இருந்த இரத்த  பரிசோதனை நிலையத்தின் மீது சந்தேகம் எழுந்ததால், வேறொரு பிரபல இரத்த பரிசோதனைக் கூடத்தில் என் மகனின் இரத்தம் பரிசோதித்தபோது, அந்த குறிப்பிட்ட இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை தேவையான அளவிலும் சென்ற பரிசோதனை முடிவைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. 

எனக்கு என்ன சந்தேகமென்றால். இரத்த பரிசோதனையைக் கூடவா மருத்துவமனைக்கு சாதகமாக அமையுமாறு பரிசோதனை முடிவு என சான்றளிக்கப்படுவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. விவரம் கேட்டபோது அந்த மருத்துவமனையில் இரத்த பரிசோதனைகள் செய்வது வேறு ஒரு பிரபல இரத்த பரிசோதனை செய்யும் குழுமம் என்பது தெரியவந்தது. இதில் கூடவா கொள்ளை லாபம் அடிக்க கூட்டு முயற்சியில் ஈடுபடுவார்கள்.  விவரம் தெரியாத பலர் தமது குழந்தைகளை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் மருத்துவம் என்கிற பெயரில் நிறைய பணம் செலவு  செய்கிறார்கள்.   மருத்துவம் எப்படியெல்லாம் வியாபரமாகிக்கொண்டு போகிறது என்று பார்க்கையில் மனம் பட படக்கிறது. 

இது  குறித்து நிறைய விவரங்கள் தெரியவந்தது நேரமின்மையால் பிறகு வேறு ஒரு பதிவில் தெரிவிக்கிறேன்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.



FREE JOBS EARN FROM HOME