கோகி-ரேடியோ மார்கோனி: "சேவை வரி" :- சேவை என்றால் என்ன?

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, September 7, 2015

"சேவை வரி" :- சேவை என்றால் என்ன?

சேவை வரி :- சேவை என்றால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு செய்யும் தொண்டுக்கு சேவை என்று பெயர் அப்படிப்பட்ட சேவைக்கும் வரி என்பது சரியில் என்பது பலரது வாதம் ... சேவை என்பதற்கு பதிலாக ஆதாய வரி என்று இருந்திருக்கலாமே என்பது ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே.


"ஆதாய வரி" என்பது அர்த்தம் வேறு அது வேறு ஒரு வரி விதிப்பின் கிழ் வருகிறது, இருப்பினும் அரசாங்கம் இந்த சேவை வரி என்பதில் சில பிரிவுகளை ஏற்ப்படுத்தி சில சலுகைகள் அறிவித்துள்ளது குறிப்பிடப்படவேண்டும்.  என்ன இருந்தாலும் சேவைக்கு வரி என்பது சரியில்ல என்றுதான் தோன்றுகிறது. மக்களின் அன்றாட தேவையான உணவு உடை கல்வி இருப்பிடம் போன்ற அனைத்துமே சேவை வரியின் கீழ் வருவது வேதனைக்குரிய விஷயம். கடன் பெற்றால் அதற்க்கு வட்டி கட்டவேண்டும் என்கிற கவலையோடு தற்ப்போது சேவை வரிச்சுமையும் சேர்ந்து சுமப்பது என்பது பல மக்களின் மனங்களில் புகைகின்ற வேதனை எப்போது எங்கு வெடிக்கும் என்று தெரியவில்லை, பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிவரையில் மாணவர்கள் கல்விகற்கும் செலவே மிகவும் சுமையான செலவுதான் இதோடு அந்த செலவுகளும் சேவை வரியின்கீழ் வருவது மிகவும் வேதனையான வரிச்சுமை, அரசு இதற்க்கு வருமான வரிவிதிப்பில் கல்விச் செலவுகளுக்குஆகும் செலவுகளை 80சி யின் கீழ் தள்ளுபடி தருவதாக கூறுவது ஏழை விவசாயி, மற்றும் வருமான வரிக்குட்படாத பல பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளில், மாணவர்களின் வயிற்றில் அடிப்பதுபோலத்தான்... இப்படி பலவிதங்களில் ஆராய்ந்து பார்க்கும்போது மிஞ்சுவது வருத்தம் மட்டுமே. ஆகவே சேவை வரிபற்றிய மேலும் பலரது கருத்துக்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், நீங்களும் இதில் பாதிப்படைந்திருந்தால் உங்களின் ஆலோசனை என்ன? வாருங்கள் இதைப்பற்றி மேலும் அலசுவோம், ஆரோக்கியமான வழியில் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் . தங்களின் மேலான கவனம் இந்தப் பதவில் திருப்பியமைக்கு நன்றிகளுடன் கோகி என்னும் கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி. 
Post a Comment

FREE JOBS EARN FROM HOME