FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, August 22, 2015

நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையில், காப்பி தயாரிப்பதைப் பற்றிப் பார்ப்போம், நிகழ்ச்சியின் முதலில் காப்பி குடிக்க தருவதுகூட விருந்தோம்பல் போன்று,  காப்பி -என்பது எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சிறப்பம்சமாகவே கருதப்படுகிறது.

காபி தயாரித்தல்தான் ஆண்கள் எல்லோரும் முதலில் கற்கும் அடுப்படி அனுபவம் என்று நான் நினைக்கிறேன்.
ம்...ம் காபி போடுறது மட்டுமா ? புருஷ லட்சணம்..

இக்கரைக்கு அக்கரை  பச்சை
சக்கரைக்கு அக்கறை இச்சை
இதுதான் டபரா டம்பளர் இல்லாமல் வெறுங்கையில் "டி ஆத்துவது"என்பது.

காபி என்றாலே அது பில்டர் காபிதான்!
பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
பில்ட்டர் காபியே காபி மற்றெல்லாம் வெறும்
பில்ட் அப் கொடுத்தவை.

ஒரே நிமிடத்தில் காபி தயார் செய்து, அதை மூன்று நிமிடங்கள் ஆனந்தமாக, ருசித்துச் சாப்பிடலாம்.

காபியில் பாலா? பாலில் காபியா? சிலபேர் சுவருக்கு அடிக்கும் பெயின்ட் போல் திக் காபி பேர்வழி என்று காபி போடுவார்கள். எங்கள் வீட்டில் காபி சாப்பிட அழைக்கும் போது, "வேண்டாம் மாமி" என்று அலறி ஓடிய நண்பன்

ஒருவழியா ....காப்பி ,பேஸ்ட்  அல்லது டபரா-டம்பளர் ,ப்ரஷா?

பெயர்க்காரணம் ...? TUMBLE ஆவதால் அது தம்ப்ளர்?
 டம்பளர் கீழே டம்பள் ஆகாமல் இருக்க டபரா என்று ஒன்று கொடுக்கிறார்களே!

கல்யாணம் பண்ணிப்பார் :- டம்பளர் டபரா செட், தட்டு முதலியன காணாமல் போனாலும் நாம் தான் தண்டம் அழ வேண்டும்....

மண்ணெண்ணெய் ஸ்டவ் காப்பி
மறக்கமுடியாத அந்தக்கால காப்பி

(குமுட்டி)கரியடுப்புக் காப்பி
அது பாட்டி போடும் காப்பி
நாக்கு சுட்டுக்கொண்டு குடித்த ஞாபகம்.

பாட்டி உபயோகித்த பித்தளை பில்டரினால் காப்பிக்கு சுவையும் மணமும் கூடுவது பற்றி யாரோ ஒரு பேப்பர் கூட எழுதியிருப்பதாகக் கேள்வி.

பித்தளை டபரா டம்பளர் சில சமயம் ஒரு மாதிரி வாசனை வரும். எனவே காபி குடிக்க எவர் சில்வர் டபரா டம்ளரே சிறந்தது.

காபியின் பரம பக்குவம் அதில் கலக்கும் சர்க்கரையின் அளவைப்பொறுத்து இருக்கும். அவரவருக்கு சரியான அளவில் சக்கரை போடுவது ஒரு கலை. அது அன்பான அம்மா, மனைவி, அக்கா தங்கை இவர்களுக்கு மட்டுமே தெரியும். இவ்வளவு ஏன்? என் காபிக்கு எவ்வளவு சர்க்கரை என்று என்னை விட என்னுடைய திருமதிக்கு தான் சரியாகத் தெரியும். ஆனா எங்காத்து மாமிக்கு மட்டும் காபி பாயாசம்.

பில்ட்டர் காபி டிகாசன் முதலில் வடிகட்டியபிறகு, இரண்டாவது டிகாசனில் கலக்கு காப்பிக்கு சண்டை மண்டை உடையும்.....

அம்மாவின் specifications-ல் அரைக் கொட்டை, முழுக்கொட்டை, வறுக்க, அரைக்க உபயோகப்படும், சாதனங்களும், முறைகளும், அரைத்த பொடியின் grain size, இவற்றுடன், பில்டரில் போடப்படும் பொடியின் அளவு, குடை எனப் படும் distributor உபயோகம், முதலில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு, அதன் வெப்ப நிலை, அது ஊற்றப் படும் விதம், இவை தவிர, பவுடர் பால், பசும் பால், எருமைப் பால், பதப் படுத்தப் பட்ட பால் இவற்றின் தன்மை கொண்டும், போடப்படும் சர்க்கரையின் அளவு, கலக்கப் படும் விதம் [ஆற்றல், கலக்கல்] நுரை வேண்டுமா வேண்டாமா என்ற வாதங்களை எல்லாம் தாண்டி, அம்மா எப்போ காப்பி தருவா என்று ஏங்க  வைக்கும் பானம் எங்கள் அம்மாவின் காப்பி.

எதுவானாலும் காபி போடறது ஒரு கலைதான்! அது சிலபேருக்குதான் கைவந்த கலையாகிறது!

No comments:

FREE JOBS EARN FROM HOME