கோகி-ரேடியோ மார்கோனி: உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு)

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, August 15, 2015

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு)

வானொலியின் "கதையும் பாடலும" நிகழ்ச்சிக்கு நான் உருவாக்கிய (32-வார தொடர்) எனது முதல் விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சி தயாரிப்பு..... 2003 ல் நான் எழுதிய இந்த தொடர் 2010 ஜூலை மதத்தில் தொடங்கிய எனது இந்த வானொலி தொடரின் ஏழாவது பகுதி, வானொலி நிலையத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க புதுப்பட பாடல்களை எனது கதையின் இடையில் பொருத்தி (அந்த வருடத்தின் ஆகஸ்ட் 15 ஞாயிறு அன்று) ஒலிபரப்பான   நிகழ்ச்சி இது.....நிகழ்ச்சி தலைப்பு  "உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை - சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு -கதாநாயகியின், தங்கையின் கதை தொடக்கம்-பள்ளிக்கூடம்.) (13 -பாடல்கள் )

 "உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்" இந்த பாடல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது சிறிது ஒலிபரப்பாகும். தொடர்ந்து கதையை கனடா பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் வாசிப்பார் கதையின் இடையில் பாடல்கள் வரும்.
  
# நானும் (சுந்தர வடிவேல்) எனது நண்பனும் (கிருஷ்ணனும்) எப்போதும் இணைந்தே இருப்போம். 2 ம் வகுப்பிலிருந்து நண்பர்கள், ஒன்றாகவே படித்து வருகிறோம், தற்போது 12 ம் வகுப்பில் படிக்கும் எங்களுக்கு அது முக்கியமான வருடம் என்பதாலும் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் கல்லூரியில் நாங்கள் எதிர்பார்க்கும் பாடப் பிரிவில் இடம் கிடைக்கும் ஆகவே படிப்பில் அதிக கவனம் வைத்து படித்துவந்தோம்.
பாடல்:-1. முஸ்தப்பா முஸ்தப்பா... (#song-Mustafa Mustafa dont worry  - Kadhal Desam).

அன்று எங்களது  பள்ளியின் கால அட்டவணைப்படி முதல் வகுப்பு தமிழ்... மாணவ மாணவியர் அனைவரும் தமிழ் ஐயா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்...... இன்று அரையாண்டு பரிட்சை விடைத்தாள்கள் அனைத்து மாணவர்க்கும் வகுப்பில் வழங்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பில், ....பின் வரிசையில் ஒரு சிலருக்கு ஏன்டாப்ப பள்ளிக்கு வந்தோம் என்றும், மற்றும் பலருக்கு சற்று பயம் கலந்த இறுக்கமான சுழலில் இருப்பது போல்... அமைதியாக  ஆசிரியரின் வருகைக்காக காத்திருந்தோம். பாடல் 2. நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது (Nanbane Enathuyir Nanbane-படம் சட்டம்)

நானும் எனது நண்பனும் எப்போதும் இணைந்தே இருப்போம், நாங்கள் உட்காருவது வகுப்பின் முதல் வரிசை, வகுப்பின் பாதியளவு மாணவிகளின் வரிசைக்கு அடுத்த சற்று  இடைவெளிவிட்டு   எங்களின் வரிசை ஆரம்பம்,  நாங்கள்  தேர்வை  நன்கு எழுதி இருந்ததால் மிகுந்த மகிழ்ச்யுடன் ஆசிரியரின் வருகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தோம், எங்களுக்கு முதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் அவ்வப்போது மாணவிகள் பக்கம் கண்கள் திரும்பிப்பார்க்க, முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.ஸ்டைலாக சற்று சட்டை காலரை  உயர்த்தலாமா? வேண்டாம்..வேண்டாம்...முதலில் விடைத்தாள் கையில் வரட்டும் பிறகு பார்த்துகொள்ளலாம். இந்த மாணவிகள் ரொம்ப மோசம், விடைத்தாளில் ஏதாவது ஒரு மதிப்பெண்  குறையை காண்பித்து, ஆசிரியரிடம் அழுது மன்றாடி தமது மதிப்பெண்களை சற்று உயர்த்திக்கொண்டு அதனால் முதலிடத்திற்கு முன்னேரிவிடுகின்றனர்... இருக்கட்டும், இந்தமுறை நாமும் முயற்சிப்போம், முதலிடம் நமக்குதான்........ பாடல் 3. மனமே நலமா, உந்தன் மாற்றங்கள் நிஜமா? .(Song-MANAMAE NALAMA. ... AUTOGRAPH)... 

தமிழ் ஐயா (ஆசிரியர்) வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று  வணக்கம் சொல்லி அமர்ந்தோம், வகுப்பை ஒரு முறை சுற்றிப்பார்த்த ஆசிரியர், நான் இன்னும் உங்களது அரையாண்டு விடைத்தாள்களை திருத்தவில்ல என்றார்..... அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சு வெளிவந்தது. அப்போது ஆசிரியர் எனது நண்பன் கிருஷ்ணனை அழைத்து  எங்கள்  வகுப்பின் அரையாண்டு விடைத்தாள் கட்டை அவனிடம் தந்து, உங்கள்  வகுப்பின் அனைத்து விடைத்தாள்களையும் நியே திருத்தி, சரியான மதிப்பெண் வழங்கி, நாளைக்குள் திரும்ப என்னிடம் ஒப்படைக்கவேண்டும், உனது நண்பன் வடிவேலையும் உனக்கு உதவியாக சேர்த்துக்கொள் என்று கூறி, அவர் அந்தப்பளியின் உதவி தலைமை ஆசிரியராக இருந்ததால், பள்ளியின் முக்கிய அலுவலக வேலை இருப்பதாக கூறி, உடனே வகுப்பை விட்டு சென்றுவிட்டார். (செல்வதற்கு முன் எங்களிடம்  "கவனமாகவும் வகுப்பில் ஒருவரும் குறை சொல்லாத அளவில் சரியாக விடைத்தாள்கள்  திருத்தப்படவேண்டும்  என கட்டளையிட்டார் ) பாடல் 4. #படம் : கர்ணன் இசை : விசுவனாதன் ராமமூர்த்தி, பாடலை இயற்றியவர் : கண்ணதாசன் பாடல் "என்னுயிர் தோழி கேளொரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி.."

!!!!அவ்வளவுதான் வகுப்பில் அனைவரது கண்களும் எங்கள் பக்கம்  திரும்ப,  நாங்கள் மிகப்பெரிய உருவம் பெற்றதுபோல்...(விஸ்வரூபம்)... காற்றில் மிதக்கலானோம். எங்களுக்கு இப்படி ஓர் வாய்ப்பா? சற்றுநேரம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... திக்குமுக்காடிப்போனோம். பாடல் 5.(song-Indha Nimidam -Movie Pallikoodam) இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா, இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொட...ராதா.... 

அரையாண்டு விடைத்தாள் கட்டு எங்கள்  கையில் வந்தபோது மிகப்பெரிய பொறுப்பு வந்துவிட்டதுபோல் உணர்ந்தோம்.  சில மாணவிகள் எங்கள் பக்கம் ஓடி வந்து,  நாங்கள் "கோனார் தமிழ் உரைநடை" பாட நூலின்படி தேர்வு எழுதிள்ளோம், ஆகவே நீங்கள் எங்களது விடைத்தாள்களை இதைபார்த்து படித்து திருத்துங்கள் என்றார்கள்.... இன்னும் சிலர் வேறு பல உரைநடை விடைத்தாள் நூலையும் தந்து கவனமாக திருத்தும்படி கூறினார்கள்..... கையிலும், மனதிலும் மிக அதிக கணம்...... நிரம்பியது போல் உணர்தோம்...... (அன்று இரவுமுழுதும்  தூங்காமல் (கண்ணில் விளக்கெண்ணை தடவிக்கொண்டு என்பார்களே... அதுபோல) பெருமுயற்சியின் விளைவாக ஏற்றுக்கொண்ட பணியை விடியற்காலை 3 மணியளவில் முடித்தோம்.)
பாடல் 6. தோழா   தோழா  தோள்கொடு  கொஞ்சம்  சஞ்சிகனும் -  (singer சித்ரா, Movie-Paandavar Bhoomi)
  
மறுநாள் திருத்திய விடைத்தாள் கட்டுக்களுடன்,  சரியாக பள்ளிமனியாடிக்கும்போதுதான் வகுப்புக்குள் நுழைந்தோம். வழக்கம்போல ஆசிரியர் தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று  வணக்கம் சொல்லி அமர்ந்தோம்.  தமிழ் அய்யா அழைப்பதற்கு முன்பே நாங்கள் அவரிடம் சென்று திருத்திய விடைத்தாள்களை தந்தோம். பாடல் 7. ஒரு நண்பன் இருந்தான் ("Oru Nanban Iruntha" from movie "Enakku 20 Unakku 18") 

ஆசிரியர் ஒவொருவராக பெயர் கூறி அழைத்து அவரவர் விடைத்தாள்களை வழங்கினார். எங்களது பெயர் கூப்பிட்டதும் நாங்களும் எங்களது விடைத்தாளை பெற்றுக்கொண்டோம்.  நாங்கள் எங்களுடைய விடைத்தாளை திறந்து பார்க்காமல் மற்றவர்களின் முகங்களைத்தான் பார்த்தவண்ணம் இருந்தோம்.  பெற்றுக்கொண்ட அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது  ( மதிப்பெண்களை வாரி வழங்கியிருப்பதால் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்) பாடல் 8. ஓ நண்பனே நண்பனே....(actor vikaram-Movi Dhil-Oh Nanbane Nanbane) 

எனக்கும் என் நண்பனுக்கும்  சற்று வருத்தமே, காரணம் நாங்கள் திருத்திய விடைத்தாளுக்கு நாங்களே எங்களுக்கு  முதல் மதிப்பெண் போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது என்பதால் இந்தமுறை வகுப்பில் இரண்டாவது மற்றும் முன்றாம் நிலைக்கான மதிப்பெண்தான் பெறமுடிந்தது மேலும் அதிகப்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலை, இருந்தும் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களும் எங்களால் திருத்தப்பட்டது என்கிற பெருமை எங்களின் மனம் முழுவதும் பரவிக்கிடந்தது. பாடல் 9. இனி ஜல்சா பண்ணுங்கடா ....(Movie Name : Chennai 600028 Song : Jalsa Pannungada Singers : Ranjith, Tippu, Premji Amaran, Haricharan & Karthik).

அன்றைய பாட வகுப்பு முடிந்ததும், தமிழ் அய்யா எங்கள் இருவரையும் தனியே வகுப்புக்கு வெளியே  அழைத்துச் சென்று  "கிருஷ்ணா, வடிவேல் நீங்கள் இருவரும் நன்கு படிப்பவர்கள்,  அனாலும் சென்றமுறை நீங்கள் சற்று குறைவான மதிப்பெண் எடுத்து சற்று கவனக்குறைவாக இருந்தீர்கள்,  எனவேதான் உங்களை  வகுப்பின் அனைவரது விடைத்தல்களையும் திருத்தும்படிக்கூறினேன்,  நீங்களும் கவனமாக விடைத்தாள்களை திருத்தியதால் இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்களை மறக்கமாட்டீர்கள்.  மாறாக நான் உங்களுக்கு வினாத்தாளுக்கான விடையை நன்கு மண்டையில் நுழையட்டும் என்று நுருமுறை கட்டாயப்படுத்தி எழுத சொல்லியிருந்தால் நீங்கள்  நிச்சயம் செய்திருக்க மாட்டீர்கள், அப்படி செய்திருந்தாலும் அது உங்கள்  மனதில் பதிந்திருக்காது எனவேதான் இப்படி செய்தேன்" என்று கூறிக்கொண்டே போனார் ... எங்களுக்கு ஆசிரியர்  "கீதையை" உபதேசம் செய்வதுபோல இருந்த்தது, எங்களது பெருமை என்ற மிகப்பெரிய மாய உருவம், அடங்கி , ஒடுங்கி மிகச்சிறிய உருவமாக மாறியதுபோல வெட்கித் தலைக் குனிந்தோம். பாடல் 10.   # வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் Poompuhar - Vaazhkai Enum Odam by K.B Sundarambal

"இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!"  (வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன் சார்ளி சாப்ளினின் இந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!)   பாட்டு 11. :- #வாழ்ந்து  பார்க்கவேண்டும் அறிவில் மனிதராகவேண்டு    TMS & BP SRINIVAS- Sivaji Ganesan & S.S.R - Vaazhnthu Paarkkavendum - Santhi - http://youtu.be/YU-b1hNh0g0

குறிப்பு:- தப்போது 35 வருடங்கள் போயே போச்சு இருந்தும் பழைய ஞாபகங்கள்....இப்போது நான் அந்த நாட்களை நினைத்துப்பார்க்கிறேன்......  பாடல்-12. (மீசைக்கார  நம்ப  உனக்கு  ரோசம்  அதிகம்டா ..அதவிட பாசம் அதிகம்டா )... 

நண்பா உனது நினைவுகளுடன் நமது வகுப்புத் தோழி கீதாவின் தங்கை ராதையையும் நினைத்துப்பார்க்கிறேன். எப்படிப்பட்ட போராட்டங்களுக்கிடையே உன்னுடைய காதல் திருமணம் நடந்தது பாடல்-13. உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே....(தொடரும்) மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுகிறேன் .... 

வாழ்க்கையில் உயர...
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம் !
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.


பின்குறிப்பு:- வானொலி நிலைய நிகழ்ச்சி இயக்குனர் அவர்களுக்கு, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு அதிகமாகவே சில பகுதிகளில் ஒரு சில பாடல்கள் அதிகப்படியாக, கதையோடு அமைந்துவிட்டது, ஆகவே அதிகப்படியான அந்தப் பாடல்களை நீக்காமல் எனது நினைவில் நீக்கமற நிறைந்து இருக்க வேண்டுகிறேன். மேலு நீங்கள் கேட்டுக்கொண்டபடி பழைய பாடல்களை எடுத்துவிட்டு புதிய பாடல்களை புகுத்தியிருக்கிறேன். 
Post a Comment

FREE JOBS EARN FROM HOME